Sunday, May 8, 2011

நீரால் ஆனது உலகம்(WaterWorld)

லாஜிக் பாத்து தான் படம் பாபேன்னு சொல்றவங்க அப்புடியே அப்பீட் ஆகிக்கலாம் இந்த படம் உங்களுக்கு இல்ல அதல்லாம் இல்லாம குருவி படத்த குதுகலமா பாத்தவங்க நாங்க ஜாலியா பாப்போம்ன்னு சொல்றவங்களுக்கு இது ஒரு நல்ல குஜாலான படம்

கடல் பார்பதற்கு எவ்வளவு அழகு அதன் ஆழமும் அடர்த்தியும் அச்சத்தை உண்டாக்கும் என்பதற்கு ஒரு மிக சிறந்த படம் வாட்டர் வோர்ல்ட்.கெவின் காஸ்ட்நர் படத்தின் நாயகன் ஒரு கடல் வாழ் மனிதன்.நம்ம தமிழ் படங்கள் தான் லாஜிகில்லாம எடுக்கறாங்கன்னு சொல்லுவோம் அது மாதிரி தான் இந்த படமும்.இந்த படத்திலும் நிதர்சன வாழ்க்கைக்கு அப்பாற்பட்டதாகதான் காட்டப்படும். ஒரு குறிப்பிட்ட கடல் பிராந்தியத்தில் நிலம் எப்படி இருக்கும் என்று கூட அறியாத ஒரு கூட்டம் வாழ்வதாக காட்டப்படும். அவர்கள் தண்ணீரில் கோட்டை மாதிரி வீடு அமைத்து வாழ்பவர்கள்.ஆனால் அவர்கள் பயன் படுத்தும் மோட்டார் போட்ஸ் நம்ம வில்லு படத்துல டாக்டர் விஜய் ஒரு கப்பலுக்கு அடியிள பூந்து போவாரே ஒரு போட்டுல அது மாதிரி எல்லாம் வச்சுருப்பாங்க(நான்தான் அப்பவே சொன்னேன் லாஜிகெல்லாம் பாக்க கூடாது, இவங்களுக்கு எப்படி இந்த மாதிரி போட்டு எல்லாம்னு கேக்க கூடாது). அது மாதிரி எகே 47 57 எல்லாம் வச்சுருப்பாங்க நம்ம விஜயகாந்து வச்சுருகறது இல்லையா அது மாதிரிதான் இது.

படத்தோட கதை என்னன்னா அந்த கூட்டத்துல எக்குதப்பா மாட்டிருக ஒரு பெண்ணும் அவளோட பையனும் எஸ்கேப் ஆகி தரை பகுதிக்கு வரதுதான் இதுக்கு நம்ம ஹீரோ எப்புடி உதவுறான்றதுதான் கதை.

சிலர் வைரமுத்துவின் தண்ணீர் தேசம் படித்துதிருபீர்கள். கடலுக்குள் மீன் பிடிக்க பயணம் செய்யும் 5 மீனவர்களுடன் ஒரு காதல் ஜோடி ஒரு ஜாலிக்காக போகும் படகு பாதியில் நின்றுவிடும். இரண்டு வாரம் அவர்கள் படும் நரக வேதனையை கவிதை நயத்துடன் அழகாக சொல்லி இருப்பார். அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்ன்னு பாக்குறிங்களா ஒன்னும் இல்ல ரெண்டுவாரம் அவர்கள் தண்ணில இருக்கறது எவ்வளவு கஸ்ட்டம் ஆனா இந்த படத்துல புல்லா தண்ணில இருக்கறமாதிரி எடுத்துருப்பாங்க.

நம்ம ஹீரோவுக்கு கடல்ல ஒரு பிளாஸ்டிக் பேக் கிடைக்கும் நீங்க நெனைக்கலாம் அது தங்கமோ வைரமோன்னு அதுதான் இல்ல அது குள்ள மண்ணு இருக்கும். களிமண்ணா செம்மண்ணான்னு கேக்காதிங்க எதோ ஒரு மண்ணு. இப்ப நம்ம ஹீரோ அத அந்த கூட்டம் தங்கிருக்க கோட்டைக்கு போய் வித்து காசு வாங்குவாறு.

அப்பறம் குடிக்கரதண்ணி அடிக்கரதண்ணி எல்லாம் பர்ச்சேஸ் பண்ணுவாரு. அங்க குடிக்கற தண்ணி விக்கறவங்க தான் நம்ம ஹிரோயின். ஹிரோயின் அந்த மண்ணு எப்புடி கெடச்சுது எந்த பக்கம் கெடச்சுதுன்னு பிட்டபோடுவா எதுக்கு எஸ்கேப் ஆகாரதுக்குதான். எதுவும் சொல்லாம அங்க இருந்து கெளம்ப பாப்பாரு நம்ம ஹீரோ அப்ப அங்க இருக்கற ஒருத்தன் ஹீரோவோட காத பாப்பான். நம்ம ஹீரோ ஒரு அதிசய பிறவி அவரு ஒரு கடல் மீனுக்கு பொறந்த மனுஷன் (சொன்னேன் இல்ல லாஜிக் பாக்க கூடாது). அந்த கூட்டத்தின் தலைவன் ஹீரோவ கொல்றதுக்கு ஏற்பாடு பண்ணுவாரு எப்புடி தெரியுமா கடலுக்கு நடுவுல ஒரு கூண்டு மாதிரி கட்டி அதுல எரும சாணியோ என்ன எளவோ அத கொலகொலன்னு மெதக்க விட்டு அதுல முக்கவச்சு சாகடிகர்துதான் ப்ளான். நம்ம ஹீரோயின் அந்த கூண்டுல இருந்து நம்ம ஹீரோவா தப்பிக்க வைப்பா அதுக்காக அவளையும் அவ பையனையும் அந்த கூட்டத்துல இருந்து காப்பாத்தணும் இதான் டீலிங். நம்ம ஹீரோயின்னுக்கு ஏற்கனவே ஒரு வயசான சைண்டிஸ்ட் உதவி பண்ணுவாரு அங்க இருந்து தப்பிகரதுக்கு ஒரு பேராசூட் ரெடி பன்னிருபாறு. கடைசி சமயத்துல அவரு மட்டும் அதுல எஸ் ஆகிடுவாரு.அந்த கூடத்துல இருந்து தப்பிக்கற சீன் ஹாலிவுட் படத்துகே உரிய செம த்ரில்லிங்கா இருக்கும்.

தப்பிச்சவங்கள புடிக்கறதுக்கு அந்த கூடத்தின் தலைவன் தொரத்துவான் எப்புடி தெரியுமா நம்ம டைடானிக் மாதிரி ஒரு பெரிய கப்பல் அதுல கூட்டத்தோட போவான். நீங்க நெனைக்கரமாதிரி கப்பல் சூப்பராலாம் இருக்காது ராபிச்சகாரன் பிச்ச எடுக்கற தட்டுமாதிரி இருக்கும் அந்த கப்பல். எஞ்சின்லாம் இருக்காது அதுல இருக்க அடிமைகளை கப்பலுக்கு அடியிள ஒக்கார வச்சு துடுப்பு போடா சொல்லுவாங்க.

இதுல நெறைய பைட் சீன்லாம் செம கலக்கலா இருக்கும். நம்ம ஹீரோ கையித்த புடிச்சுகிட்டு சும்மா குருவி பட விஜய் கணக்கா கப்பலுக்கு மேளையும் கீளையும் பறப்பாரு பாக்கவே சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்.

தப்பிச்சு போறப்ப பசிக்குமே அப்ப நம்ம ஹிரோ ஒரு கிரேட் சாகசம் பண்ணுவாரு. அது என்னாதுன்னா ஒரு பெரிய திமிங்கலம் அது வாய்குள்ள ஒரு கத்தியோட போய் கொடாஞ்சிகிட்டு வந்து ஒரு பார்ட்ட பிச்சு பிறை பண்ணி கொடுப்பாரு (மறுபடியும் சொல்றன் லாஜிக் பாக்க கூடாது).

கடைசியா இவங்க அந்த கூட்டத்துல மாட்டிகுவாங்க அப்ப அந்த சைண்டிஸ்ட் இவங்க இருக்கற பக்கமா பேராசூட்டுல வருவாரு இவங்க அதுல ஏறிருவாங்க. அந்த பைய்யன் தவறி மறுபடியும் தண்ணிக்குள்ள விழுந்துடுவான். அவன போட்டு தள்ள மோட்டார் போட்டுள மூணு பேறு அந்த பையன நோக்கி எதிர் எதிர் திசைல வந்து மோதரமாதிரி வருவாங்க. நம்ம ஹீரோ குஷி படத்துல நம்ம டாக்டர் மொட்டு ஒன்று மலர்ந்தது பாட்டுல காலுல கைத்த காட்டிகிட்டு குதிபாரே அது மாதிரி ஒரே ஜம்பு அந்த பையன சும்மா அல்வா மாதிரி அள்ளிகிட்டு வந்துருவாரு வரவனுங்க முட்டி மோதி வெடிச்சு பஸ்ப்பமாகிடுவானுங்க. அப்பறம் நம்ம ஹீரோ ஹிரோயின் எல்லாம் ஒரு வழியா தரை இருக்கற பகுதிக்கு வந்துடுவாங்க அவ்வளவுதான் படம்.

படத்தோட டைரக்டர் கெவின் ரெநால்ட்ஸ், கெவின் காஸ்ட்நர்(ஹீரோ)

சும்மா சொல்லகூடாது படத்துல கேமரா பட்டைய கெளப்பும்

படத்த பாக்கனும்னு ஆசபடரவங்களுக்கு அதன் சுட்டி
WaterWorld
12 comments:

 1. இன்னைக்கு ஆபீஸ்ல ஆணி கம்மியோ...? ஏழெட்டு பதிவு வருது....

  ReplyDelete
 2. //
  சும்மா சொல்லகூடாது படத்துல கேமரா பட்டைய கெளப்பும்//

  பின்னே நமக்கு அதுமட்டும்தானே தெரியும்...

  ReplyDelete
 3. ஆமா ஆமா ஆணி எல்லாம் புடிங்கியாச்சு அதான் இங்க கொஞ்சம் புடிங்கிகிட்டு இருக்கன்

  ReplyDelete
 4. சகோ, விமர்சனம் அருமை, அத்தோடு சுட்டியையும் தந்திருக்கிறீர்கள். படம் பார்த்த பின்னர் தான் மேலதிக விடயங்களைப் பகிர முடியும்.

  ReplyDelete
 5. நா சும்மா ஜாலிக்காகத்தான் விமர்சணம் எழுதினேன் உண்மையில் படம் பட்டாசா இருக்கும் பாருங்க நிரூபன்!

  ReplyDelete
 6. நன்றி பாஸ்! சுட்டியையும் தந்ததற்கு! தண்ணீர்தேசம் வாசித்திருக்கிறேன்! :-)

  ReplyDelete
 7. ஜீ... இன்னைக்கு காலைல உங்க பதிவ படிச்சன் பலருக்கும் அவர்கள் எழுதும் முக்கியம் என்று தோன்றும் பதிவு பலரை சென்றடைவது இல்லை வருத்தம் தான்.

  தண்ணீர் தேசம் குறு நாவல் தான் ஆனால் அழகான ஒரு காதல் கதை வைரமுத்துவின் வரிகளுக்காக மறுபடியும் படிக்கலாம்

  வந்தமைக்கு நன்றி ஜீ...!

  ReplyDelete
 8. நண்பரே அந்த படத்தில், எதிர்காலத்தில் உலகமே தண்ணீரால் சூழப்பட்ட பிறகு மக்கள் எப்படி வாழ்வார்கள் என்பதை காட்டுவதாக இருக்கும். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இந்த படம் வந்தபோது ஹாலிவுட்டிலேயே அதிக செலவு செய்து எடுத்த படம். படம் சூப்பர் டூப்பர் பிளாப்.

  ReplyDelete
 9. ஹிட்டோ பிளாப்போ படம் பாக்க சும்மா குஜாலா இருக்கு

  ReplyDelete
 10. படம் படுபயங்கரமான பிளாப்புன்னு கேள்விபட்டேன் .. அதனால இன்னும் பார்க்கவில்லை ...

  ReplyDelete
 11. நம்ம டாக்டர் நடிச்சு வருசகட்டி வந்த 6 மெகா ப்ளாப்பையே பஞ்சு டைலாக்காக பாக்கறோம் அது மாதிரி ஏன் ஒரு இங்கிலீஷ் ப்ளாப் படத்த பாக்க கூடாது

  ReplyDelete
 12. இன்னைக்கு டாக்டர் விஜய் உன் வாயில தூக்கி வச்சிட்டாரா. இப்ப அவர் மூத்தரத்த வாங்கி குடி

  ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...