Wednesday, March 30, 2011

அப்ரிடிக்கு ஆப்படிச்ச இந்தியா


[யாருகிட்ட பாத்தில்ல நம்ம பவர][என்ன தலைல தலப்பா கட்டிருகரதால தக்காளின்னு நெனச்சியா தக்காளி அது ஒன்னோட மூஞ்சில வடியுது போய் கண்ணாடில பாரு][தலவிழுந்தாலும் சரி பூவிழுந்தாலும் சரி உன்னோட தலைய எடுக்க போறது நான்தாண்டா ]
[சொன்னத செஞ்சுட்டானுங்களோ விடு விடு அடுத்த வேர்ல்டு கப்ல நாம இருப்போம் அப்ப பாத்துக்கலாம்][என்ன கொண்ட வச்ச கொழந்தன்னு நெனச்சியா அப்ரிடி ஒனக்கு ஆப்புடி][பாத்தியா இதுக்குதான் ஆரமிக்கரதுக்கு முன்னாடி ஆடகுடாதுன்னு சொல்லறது இப்பபாரு முடிஞ்சதுக்கு பின்னாடி முன்நூரடி எம்பி குதிசாலும் எவனாவது கேப்பானா][தம்பி நீ இன்னும் வளரனும் பா போ போய் காம்ப்ளான் சாப்புடு][கப்பு மேல கைய வச்ச கொண்டே புடுவன், வறண்டா மும்பைக்கு ]

Monday, March 28, 2011

முதல் படி

"அப்பா எனக்கு வேல கெடச்சுடுச்சு, எங்க காலேஜ் கேம்பஸ் இண்டர்வியுல செலக்ட் ஆகிடன் பா"

"சரி எப்ப வந்து ஜாயின் பண்ண சொன்னாங்க"

"இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கு"

"சரி நீ உனக்கு தேவையானத எல்லாம் ரெடி பண்ணிக்கு, எந்த ஊர்ல கம்பனி இருக்கு"

"கோயமுத்தூர் பா"

"சரி விடு எனக்கு தெரிஞ்ச ஆளுங்க அங்க இருக்காங்க அவங்கள்ட்ட சொல்லி ஒனக்கு தங்க ஏற்பாடு பண்றன்"*********


"முதல் நாள் ராம் அலுவலகத்தில் நுழைகிறான்"

"சார் இது என்னோட அபாய்ன்மென்ட் ஆர்டர்"

"வாங்க ராம், உங்க டீம் லீடர் மிஸ்டர் செந்தில் போய் பாருங்க அவரு உங்கள பாத்துக்குவாரு"

"குட் மார்நிங் சார், ஐ ஆம் ராம்"

"சரி இந்த சீட்ல ஒக்காரு, ஒனக்கு இண்டர்வியு அப்ப கேட்ட ப்ரோக்ராம் ஞாபகம் இருக்கா"

"இருக்கு சார்"

"அத First வொர்க் அவுட் பண்ணி காட்டுங்க"

"முதல் நாள் அவர் சொன்னதை சரி வர முடிக்க முடியாமல் திணறினான் ராம், அவனுடன் படித்து அவனுடன் வேலையில் சேர்ந்தவர்கள் விரைவில் முடித்தனர், அவன் மதில் முதல் முறை நான் தோற்றுவிட்டேன் என்ற எண்ணம் மெல்ல படர ஆரம்பித்தது, ஒரு மாதம் அங்கு எவ்வாறு கோடிங் எழுத வேண்டும் என்று அனைவருக்கும் கற்று கொடுக்கப்பட்டது"

*********
"ஒருமாதம் அங்கு அவர்கள் திறனை பார்த்து அவர்களுக்கான டீம் பிரிக்கப்பட்டது, முதல் தரம் நேரடியாக கிளைன்ட் ப்ரொஜெக்டில் வேலை பார்க்கும் சந்தர்ப்பம், இரண்டாம் தரம் கிளைன்ட் ப்ரொஜெக்டில் வேலை பார்பவர்களுக்கு உதவும் குழு, முன்றாம் தரம் வேலை பார்க்கும் அலுவலகத்தின் உதவும் மென்பொருள் தயாரிக்கும் நிலை"

"ராமிற்கு கிடைத்தது மூன்றாம் தரம் இருந்தும் அவன் மனதில் நாம் சரிவர வேலை கற்றுக்கொள்ளவில்லை என்ற எண்ணம் இருந்ததால் அவனது நிலை கண்டு மனம் வருந்த வில்லை"

"ராமின் டீமுடன் ப்ராஜெக்ட் மேனேஜர் ஒரு கலந்துரையாடல் நடத்தினார், ஒரு புது ப்ராஜெக்ட் டிசைன் செய்யப்பட்டது, அதனை அனைவருக்கும் விளக்கப்பட்டது. ராமை அழைத்து அதில் ஒரு பகுதி வேலை பற்றி எடுத்து கூற சொன்னார்கள்"

"அவனால் மற்றவர் முன் பேசுவதர்க்கு தயங்கிய நிலையில் அவனை அனுப்பிவிட்டு அந்த வாய்ப்பை அடுத்தவருக்கு கொடுக்கப்பட்டது"

"ராமிற்கு அதில் ஒரு சிறு பகுதி மட்டும் கொடுக்கப்பட்டது, அவன் அதனை சரியாக முடித்த பிறகு அதனை ஒப்படைக்காமல் தனது டீமில் இருந்த மற்றவர்கள் வேலை மீது கவனம் இடம் மாறியது, அவர்களுக்கு உதவும் நோக்கில் அவர்களின் சிக்கல்களை ஆராய்ந்து அதற்க்கான திருத்த முயற்சிகளில் ஈடுபட்டான்,அவனோடு சேர்ந்து அவனது டீம் அவர்களுக்கு கொடுத்த வேலை முடிக்கப்பட்டது"

"மூன்று மாதம் ராமின் வேலை நன்றாக இருந்த காரணத்தினால் அவனை நேரடி கிளைன்ட் ப்ராஜெக்ட் டீமிர்க்கு மாற்றப்பட்டான்"

*********


"சில நாள் அந்த டீம் அவன் வருகையை பார்த்து ஒட்டாமல் இருந்தனர்"

"அவனுக்கு ஒரு பது ப்ரோக்ராம் கொடுக்கப்பட்டது புது மென்பொருள் துணையுடன்"

"5 நாட்கள் அதனை எவ்வாறு தொடங்குவது என்று தெரியாமல் திணறிகொண்டு இருந்தான்"

"அவனுக்கு ப்ராஜெக்ட் லீடரிடம் இருந்து அழைப்பு வந்தது"

"ராம் 5 நாளா அந்த ப்ரொஜெக்ட்ல இருக்கீங்க என்ன பண்றீங்க"

"சார் இது எனக்கு புதுசு எனக்கு டீம் லீடர் இத பத்தி வெளக்கமா சொல்ல மாற்றாரு"

"சரி நீங்க போங்க"

"ஒரு மணி நேரம் போன பிறகு அவனது டீம் லீடர் அவன் அருகில் வந்து அதனை விளக்கி விட்டு கோபத்துடன் சென்றார்"

"அன்றில் இருந்து அவனுக்கு மட்டும் கொடுக்கும் வேலையின் அளவு கூட்டப்பட்டது அதற்க்கான கொடுக்கப்பட்ட நேர அளவு குறைக்க பட்டது"

*********


"ஒரு வாரம் போன பிறகு அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை நிலுவையில் இருந்ததை கண்டு அவன் அருகில் டீம் லீடர் வந்தார்"

"என்ன ராம் என்ன இன்னும் முடிகலையா"

"சார் இன்னும் டைம் வேனும், மினிமம் 5000 லைன்சுக்கு மேல கோடிங் போகுது 2 டேஸ் டைம் எக்ஸ்டன் பண்ணுங்க சார்"

"நீங்க ப்ரோக்ராம் பண்றதுல புலின்னு கேள்வி பட்டன்"

"சார் அதல்லாம் ஒன்னும் இல்ல சார் எதோ எனக்கும் கொஞ்சம் தெரியும்"

"ஓ அப்ப நீங்க ப்ரோக்ராமிங்க்ள புலி, என்ன கொட்ட எடுத்த புளியா இல்ல கொட்ட எடுக்காத புலியா?"

"அவனது இயலாமையை நினைத்து தலை கவிழ்ந்து நின்றான்"

*********


"சில நாள் சென்ற பின் அவனது டீமில் அவன் அருகில் இருபவனின் வேலை நிலையை விமர்சித்து கொண்டு அவனது டீம் லீடர் அவனை நோக்கி, ராம் என் மூஞ்சிய உம்ன்னு வச்சுரிகிங்க டெய்லி ஒங்கள தான் திட்றன் இன்னைக்கு இவர திட்றன்ல பாத்து சிரிங்க சார் சிரிங்க"

"சார் மத்தவங்க கஷ்ட்ட படறத பாத்து சந்தோஷ படற ஆள் நா இல்ல சார்"

"அதற்க்கு மேல் எந்த வார்த்தையும் பேசவில்லை"

"அன்றில் இருந்து அவனுக்கு எந்த வேலையும் கொடுக்க பட வில்லை, சரியாக 10 நாள் போன பிறகு ப்ராஜெக்ட் லீடர் அவனை அழைத்தார்"

"கடந்த 4 மாசமா உங்களோட பர்பார்மன்ஸ் சரியில்ல உங்களோட லாஸ்ட் 10 டேஸ் அப்ட்டேட் ரொம்ப வீக், உங்க டீம்லீடர் நீங்க வேணாம்ன்னு ரிபோர்ட் கொடுத்துருக்காரு, அதனால் உங்கள இந்த வேலைல இருந்து அனுபறதா முடிவு பண்ணிருகோம் வி ஆர் சாரி, அக்கௌன்ட் டிபார்ட்மண்டல உங்களோட பேலன்ஸ் செட்டுல்மன்ட் தயாரா இருக்கு வாங்கிக்குங்க, சம்பாரிகரதுக்கு சாப்ட்வேர் ஜாப் தவிர நெறைய இருக்கு நீங்க கெளம்பலாம்"

*********


"சரியாக 8 மாத வேலை அனுபவம்"

"அதனை தொடர்ந்து பல கம்பனிகளில் இன்டர்வியுவ் அட்டன் பண்ணினான் அவனது சிவியில் 8மாதம் அனுபவம் அவனது மதிப்பை குறைத்து காட்டியது எதற்க்காக வேலையை விட்டீர்கள் என்ற கேள்வி இன்றும் அவனை துரத்துகிறது"

வாழ்க்கையில் முதல் படி கடபவர்கள் தனக்கு மேல் உள்ளவர்களுக்கு அடங்கி போனால் தான் அடுத்த படிக்கு அடி எடுத்து வைக்க முடியுமா?

திறமை இருந்தும் பாதியில் வேலை இழந்தவர்களை தரகுரைவாகத்தான் மதிபிடுவார்களா? என்ன செய்வது

Thursday, March 24, 2011

பான்டிங்கு பாடை கட்டிய இந்தியா[அப்பா நூறடிக்கள 50 தான், அதான் ஜெயிச்சுட்டமோ இனிமே இதையே பாலோ பண்ணனும்]


[இருட்ட குள்ளயே நெனச்சன் எனக்கு இடி விழும்ன்னு]


[சச்சின எடுத்தா சரண்டர் ஆகிடுவாங்கன்னு பாத்தா வருஷ கட்டி வந்தது அடிகரானுங்கலே இன்னும் பயிற்ச்சி வேணுமோ]

[ம்ம்ம் இவனுங்க தேர மாட்டானுங்க நாம நடைய கட்ட வேண்டியது தான்]

[இனிமே இந்த காது என்ன ஆக போகுதோ போரவரனுக்கு எல்லாம் இது பொருட்காட்சியாக போகுது, இனி இந்த காது கேக்காது]

[விட்ரா சுனா பானா வாங்கன அந்த 3 வெங்கல கப்ப வச்சு வாழ்ந்துகுவோம்]

[எப்புடியோ பாட கட்டிட்ட அப்புடியே தார,தப்பட்ட,சங்குக்குகள்ளாம் சொல்லியனிப்பிறு]

Sunday, March 20, 2011

அவள விடமாட்டேன்

"ரவி இன்னைக்கு நா அவள பாத்தே ஆகணும்டா நீ வரியாடா"

"டே சிவா நீயும் அவள விடாம தொரத்திகிட்டு தான் இருக்க ஆனா அவ ஒன்ன ஒரு வாட்டி கூட மதிச்சதே இல்ல இந்த மானம்கெட்ட பொழப்பு தேவதானா?"

"இல்ல டா இன்னைக்கு அவள நா சம்மதிக்க வச்சு காட்ரண்டா, இன்னைக்கு ஒன்னு அவ என்னோட பேச்ச கேட்டாகனும் இல்ல அவள..... நீ வா பாத்துக்கலாம்"

**********


"மச்சி எங்கடா அவ இன்னும் காணும், என்ன நீ வருவன்னு தெரிஞ்சி எஸ் ஆகிட்டாலா"

"வருவாடா, மவளே வரட்டும் அவள"

"மச்சி அங்க பாருடா அவ வராடா, டே என்ன டா எவனோ ஒரு பார்டிகார்டோட வராளாற்றுக்கு"

"எவன் வந்தா எனக்கு என்ன நீ இருடா நா போய்ட்டு வரன் எதுக்கும் வண்டிய ஸ்டார்ட் பண்ணி வை"

**********


"ஹாய், என்ன தெரியுதா"

"தெரியுது சொல்லுங்க"

"செல்வி இவன் யாரு, ஹே மிஸ்டர் என்ன தனியா வர பொண்ணுகிட்ட தகராறு பண்றியா"

"விடுங்க குமார், என்ன வேனும் சீக்கிரம் சொல்லு"

"உன்கிட்ட தனியா பேசனும்"

"குமார் நீங்க போங்க நா வரன்"

"பையன் ஏதாவது பம்பனான்னா மிஸ்டுகால் கொடு வந்து பிரிச்சு மேஞ்சர்றன்"

"ஒன்னும் ஆகாது நீங்க போங்க நா கொஞ்ச நேரத்துல வரன்"

**********


"அதுவந்து நா உன்ன ரொம்ப நாளா பாலோ பண்றன்""அதுதான் தெரியுமே, இப்ப என்ன 'ஐ லவ் யு' சொல்லனுமா"

"இல்ல உன்கூட படிகாரள விமலா அவள கரக்ட் பண்ணனும் அதுக்கு"

"அது சரி, அதுக்கு தான் குட்டி போட்ட பூனை மாதிரி என்ன சுத்தி சுத்தி வந்தியா"

"புள்ளையார கரட் பண்ணனும்னா மூஞ்சூற தான மொதல்ல கரட் பண்ணனும்"

"என்னது மூஞ்சூற..."

"சாரி! சாரி! நீ ஒரு பாலமா இருந்து அவகிட்ட என்னோட லவ்வ சொல்லகூடாதா? "

**********


"அவளும் உன்ன நெனச்சு உன்னோட friendu ரவி பின்னாடி இப்பவரைக்கும் சுத்திகிட்டு தான் இருக்கா இன்னிக்கு தான் உன்கிட்ட லவ் சொல்லலாம்ன்னு அவன் கிட்ட பிட்ட போட்டு கிட்டு இருக்கா திரும்பி பாரு"

"அந்த பக்கம் விமலா ரவியிடம் கெஞ்சி கொண்டு இருந்தால்"

கெடைகறது கெடைக்காம இருக்காது கெடைக்காம இருக்கறது கெடைக்காது


சிகரம் தொட்ட மனிதர் - சுஜாதா

writer sujatha from guru on Vimeo.
.

Related Posts Plugin for WordPress, Blogger...