Wednesday, July 28, 2010

என்னவள்

அவளுக்காக :

வாழ்நாள் முழுவதும் ஊமையாக இருக்கலாம் என்னவள் உதடுடன் என் உதடு ஒட்டி இருக்குமே ஆனால்...

நான் ஏசுவாக சிலுவையில் சிறைபட முயலுஹிரேன் என்னை மாலையாக அவள் சுடுவாள் என்று...


அவளிடம் :

கரு நீல அருவியான அவள் கூந்தலில் ஓர் இலையின் சுவடாக உருண்டோட துடிக்கும் என் இமைகள்...

நான் புடவையாக மாற கூடாதா அவள் மேநி எங்கும் ஒட்டி உறவாட...

விட்டுகொடுக்கதான் நினைக்கிறது மனம் அவள் என் கட்டிலை விட்டு போகும் பொது ஆனால் அடைய துடிக்கிறது கண்கள் அவள் முழு பெண்மையை....


அவளோடு :

அவள் ஒற்றை பார்வையில் உயிர் உருகும்
அவள் கற்றை பேச்சில் கன்னம் சிவக்கும்
அவள் முற்றும் துறந்தால் ?
என் முழு கவனமும் மற்றவற்றில் சிதறி அவளிடம் சரணடையதுடிக்கும்....


கற்பனைக்கு எட்டா கன்னி :

வண்ணம் பூசி அலையும் இந்த உலகத்தில்
பவர்ணமி நிலவு போன்ற முகம் உடையவளே
ஏன் கருநீல மேக திரை கொண்டு
முகத்தை மூடி செல்கிறாய்...

உன் திரை விலகி முகம் கண்டேன்
என் கற்பனைக்கு எட்டா கன்னியடி நி

உன் விழியால் என்னை விழுங்கி
இதழ்லால் உயர்மூச்சு கொடுத்தவளே
தேன் சுவைக்கும் உன் இதழை நான் சுவைத்தேன்.

வெள்ளை மலர்களுக்கு மத்தியில் சிரிக்கிறாய் நான் இருக்கும் போது நி இறக்கும் போது
அதே சிரிப்புடன் செல்கிரேன் - பித்தனாய்

இயந்திர தாரகைக்கு

இதயம் இல்லா இயந்திரத்தை நாள் முழுவதும் பார்க்கிறாய் என்னை ஒரு முறை பார்க்க மாட்டாய்யோ...

தட்டி தட்டி தேய்கின்ற உன்கரம் என்னை தடவ கூடாதா...

வெட்டி ஒட்டும் வேலைக்கு நடுவில் என்னை உன் நினைவில் வெட்டாம்மல் ஒட்டுவாயா....

எறும்பு ஊற கல்லும் தேயும் ஆனால் உன்மேல் நான் எறும்பாக ஊறினாலும் உன்கல் இதயம் தேயமருகிறது....

பணம்

ஒரு முறை பிறந்து பல முறை சாகும் வாழ்க்கை - பணதிர்க்காக.

ஒரு முறை தோற்றவனுக்கு பல முறை தோல்வியை பரிசாய் தரும் – பணம்.

விலைக்கு போகும் அறிவு பணம் பண்ணும் பணம்...

கட்ரோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு எவன் சொன்னது பணம் இருந்தால் இருக்கும் இடம் கூட சிறப்பு...

பிச்சைக்காரனுக்கு கூட ஒரு ரூபாய் கிடைக்கும் கையில் திருஓடு ஏந்தினால் ஆனால் பல வருடம் படித்து பட்டம் என்னும் காகிதம் ஏந்தினால் தெருஓடுதான்...

வயிற்று பிழைப்புக்காக வேசியாக கூட ஆகியிருக்கலாம் ஆனால் ஆணாய் பிறந்து படித்து வீனாய் நிர்கின்றனர் பலர் – பணத்திர்காக...

Tuesday, July 27, 2010

எனது பரிணாமம்


[இது யாருன்னு பாக்குறிங்களா அடியேன்தான், எல்லோருக்கும் அவங்களோட சின்ன வயசுள எடுத்துகிட்ட போட்டோ ரொம்ப புடிக்கு எனக்கும்தான்]

[இது நாம திருச்சி NMC(Nehru Memorial College) காலேஜ் படிக்கும் போது போட்டிக்காக சாப்டது, இப்ப எல்லோரும் வடைக்காக அலைறாங்க, நமக்கு அப்பவே என்னோட நண்பர்கள் வாரி வழங்கிட்டாங்க வடைய]

[நாமளும் அந்த பொட்டி தட்ற வேலைக்கு தான் படிச்சது அதாங்க MCA]

[இது கன்யாகுமாரி டூர்போன போது எடுத்தது என்ன என்னவிட பின்னாடி நிக்கறவன் கொஞ்சம் வெள்ளையா இருக்கான்]

[நம்மளையும் நம்ம மக்கள் தூக்கி கொண்டாடிருக்காங்க, 20௦ வருசத்துக்கு முன்னாடி எங்க அப்பா அம்மா என்ன தூக்கனது அதுக்கு பிறகு இங்க தான்]

[இது நாமளும் கலேஜ் கேம்பஸ் இண்டர்வியுள செலக்டாகி மொதல் நாள் கம்பனிகாரைங்க எங்களுக்கு ட்ரீட் வச்ச போது எடுத்தது, ஆப்பு வைக்கறது அடிபோட்டானுங்கன்னு அப்ப தெரியல]

[ஒரு வழியா ரெண்டு வருஷம் அந்த பொட்டி தட்ற பொழப்புல சலாம்போட்டுகிட்டு இருந்தபோது நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு போஸ் கொடுத்தது]

[நொடிய விட வேகமா ஓடன அந்த பொழப்புக்கு கொஞ்சம் கேப் விட்டு இப்ப பஹரின்ல அக்கௌன்டன்ட்டா என்ஜாய் பண்ணிக்கிட்டு இருகன், இன்னும் ஒரு மாசம் தான் பஹரினுக்கு டாட்டா சொல்லிட்டு மறு படியும் பொட்டி தட்ட போகணும், மறுபடியும் அம்மாகையாள சாப்பாடு அதுக்காகவாவது போகணும் இந்தியா]


.

Related Posts Plugin for WordPress, Blogger...