Monday, May 30, 2011

இவுக வாக்கப்படாத வாலிபர்கலாம்?

படிக்கனும்ன்னு நெனைக்கறவங்க படத்த க்ளிக்கி படிங்க


[என்னது வாக்கப்படாதவா வாலிபரா, ஆமா வாக்கபட்டா மட்டும் போங்கப்பு இன்னும் எத்தன படம் நடிக்கலாம் எவ்வளவு தேத்தலாம்னு பாருங்க]Saturday, May 28, 2011

நானும் எனது சரக்கும் [1]


இது ஒரு கலீஜ் பதிவு புடிக்காதவங்க அப்புடியே அப்பீட் ஆகிக்கலாம்., சரக்கடிச்சுட்டு சலம்பறத ரசிக்கறவங்க வாங்க பழகலாம்.

நமக்கு சரக்கடிக்கறது சக்கரபொங்கள் சாப்படரமாதிரி நம்ம அனுபவங்கள பத்தின பகுதிதான் இது. நா முதல் முதல்ல சரக்கடிக்க ஆரமிச்சது காலேஜ் ஜாயின் பண்ணி முதல் முறை டூர் போன போதுதான்.முதல் முறை கொடைக்கானல் சும்மா ஜிவ்வுன்னு குளுரு, பசங்க பாதி பேறு சரக்கடிக்க அமௌன்ட் கலக்ட்பன்னானுங்க, நம்ம பைய்யன் என் கிட்ட வந்து மச்சான் உனக்கு என்ன டா பீரா ஹாட்டான்னு கேட்டான்.மச்சி எனக்கு சரக்கடிச்சு பழக்கம் இல்லடான்னு அவன்கிட்ட சொன்ன. என்னைய ஏதோ ஏலியன பாக்கறமாதிரி ஒரு லுக்கு விட்டான் அத இன்ன வரைக்கும் மறக்க முடியாது. அப்பறம் அவன் ஒரு குரூப்ப கூட்டிகிட்டு வந்து மச்சி இது ஒன்னும் தப்பு இல்ல இப்ப அடிக்காம எப்ப நி அடிக்க போற சரி வா இன்னைக்கு நீ பஸ்ட்டுன்றதனால நீ பீர்ல இருந்து ஸ்டார்ட் பண்ணு. ரெண்டு ரூம் ஒவ்வொரு ரூம்ப்லையும் பத்து பத்து பேறு இதுல ஒரு ரூம் எக்ஸ்பீரியன்ஸ் இன்னொரு ரூம்ல எங்களமாதிரி அன்எக்ஸ்பீரியன்ஸ் ஆனா எங்களோட ரெண்டு எக்ஸ்பீரியன்ஸ்ச மட்டும் விட்டுடானுங்க.எங்க ரூம்ல வெறும் பீர் மட்டும் தான் நம்ம எக்ஸ்பீரியன்ஸ் எல்லாருக்கும் பீர பக்காவா கிளாஸ்ல ஊத்தி வச்சுட்டு ஒன்னு சொன்னான். எல்லாரும் அவங்க அவங்களோட கொலச்சாமிய நெனச்சு கும்புட்டு எடுத்து சியற்ஸ் சொல்லிட்டு அடிங்க. எம் பக்கத்துல இருந்த கிளாஸ் பஸ்ட்டு எடுக்கற நன்பன் என்கிட்ட ஒன்னு கேட்டான்.மச்சி இதுல தன்னிகழந்து அடிக்கலாமா இல்ல சோடா கலந்து அடிக்கலாமா. எனக்கும் அதே டவுட்டு தான் நம்ம எக்ஸ்பீரியன்ஸ் மச்சிகிட்ட கேலுடான்னு அவன திருப்பி விட்டன். அவன் அத கேட்ட ஒடனே. எங்கள பாத்து சரக்க யாரும் அடிக்காதிங்க நாங்க வரம்ன்னு சொல்லிட்டு நம்ம எக்ஸ்பீரியன்ஸ் ரெண்டு பேரும் இன்னொரு ரூம் போய்ட்டு தல்லாடிகிட்டு வந்தானுங்க. அவனுங்களோட அந்த மொத்த கும்பலும் வந்தது.

எங்க எல்லாத்தையும் சரக்குல கை வைக்க விடாம ஏதோ சீனியர் ஜுனியர ராகிங் பண்றமாதிரி எங்க எல்லாரையும் பாக்க வச்சு எங்க காசுல வங்கன பீர் அத்தனையும் ஒவ்வோருதனா சப்புகொட்டி குடிக்க ஆரமிச்சானுங்க.

நைட்டு 2 மணி வரைக்கும் எங்கள தூங்க விடல., அத்தன பேரும் மட்டையானதும் எங்க கூட இருந்த நல்ல பசங்க அத்தன பேரும் விட்டுது தொல்லன்னு தூங்க போய்ட்டானுங்க விடாது கருப்பு மாதிரி எனக்கு சரகடிச்சா என்ன பண்ணும்ன்னு தோனுச்சு. என்கிட்டே டவுட்டு கேட்ட கிளாஸ் பஸ்ட்ட தட்டி எழுப்பி அவன தயார் பண்ணி பீர் அடிக்க கணக்கு போட ஆரமிச்சோம். சரி வா பார்ல எவனாவது இருந்தான்னா ஆளுக்கு ஒரு பீர் வாங்கிட்டு வரலாம்ன்னு அவன கூட்டிகிட்டு போன.


வந்தவன் பீர் வாங்க காசுக்கு என்னடா பண்றது அப்புடின்னு கேட்டான். சரின்னு மட்டையான ஒவ்வொருத்தன் பர்ஸ்சயும் சல்லடையா சலிச்சு அதுல இருந்து ஒரு 300 ரூபா தேத்துனோம். பாருக்கு போய் தூங்கிட்டு இருந்த ஒரு ஆள எழுப்பி பீர் இருக்கான்னு கேட்டோம் பீர் ஸ்டாக் இல்ல பான்னு சொல்லிட்டாரு. அண்ணா அண்ணா பசங்கல்லாம் எங்களுக்கு வாங்கனத எங்களுக்கு குடுக்காம அடிச்சுடாங்கன்னு சொல்லி கெஞ்சி கேட்டோம். அதுக்கு அவரு சரி ஒரு நூறு ரூபா எனக்கு குடுத்தா ரெண்டு பீர் ரெடி பண்ணி கொடுக்கரன்னு சொன்னாரு. சரின்ன்னு சொல்லிட்டு பீர் என்ன ரேட்டுன்னு கேட்டோம் 200 ரூபான்னு சொன்னாரு என்னன்னா ட்ரிபுள் மடங்கா சொல்றிங்கன்னு கேட்டதுக்கு நா போய் அடுத்த பார்ல வாங்கிட்டு வரணும். அடுத்த பார் இங்க இருந்து 10 கிலோ மீட்டர் இருக்கும் அப்புடின்னு பிட்ட போட்டாரு. சரின்னு சொல்லிட்டு எங்க கிட்ட இருந்த காசையும் சேத்து 500 ரூபா அவருக்கு கொடுத்தோம்.

ஒரு 1 ஹவர் கழிச்சு வாங்கன்னு சொல்லிட்டு அவரு போயிட்டாரு. 1 ஹவர் கழிச்சு வந்தவரு ரெண்டு பீர் பாட்ளோட வந்தாரு. சரின்னு சொல்லிட்டு அத வாங்கிட்டு போய் நானும் என்னோட நண்பனும் அடிக்க ஒக்காந்தோம். ஓப்பனற எடுத்து ஓபன் பண்ண ட்ரை பண்ண. ரெண்டு பீறும் ஓபன் ஆகி இருந்தது. சரி அவரே ஓபன் பண்ணி கொண்டு வந்துடாருன்னு சொல்லி கிலாஸ்ல ஊத்திட்டு என்னோட நன்பன பாத்தன். அவன் மறுபடியும் என் கிட்ட கேட்டான் மச்சி தண்ணி மிக்ஸ் பண்ணி அடிக்கலாமா சோடா மிக்ஸ் பண்ணி அடிக்கலாமாடான்னு. சரி மொத வாட்டி அடிக்கிறோம் ரொம்ப போத ஏறிடும்ன்னு சொல்லி நாங்களும் தண்ணி மிக்ஸ் பண்ணி அடிச்சோம்.
ஆனா மொத ரவுண்டு போகும் போதே எனக்கும் என்னோட நண்பனுக்கும் செம்ம காட்டமா இருந்தது. என்னடா கசக்குதுன்னு சொல்லிட்டு அவன பாத்தேன். பாதி பீர் அடிச்சதும் அவன் மட்டையாகிட்டன். சரி வாங்கனத வேஸ்ட் பன்னகூடாதுன்னு அதையும் சேத்து அடிச்சுட்டு படுத்தவன் தான் மறாவது நாள் நா எழுதிரிக்கவே இல்ல.

மறாவது நாள் நைட்டு தான் எழுந்திரிச்சேன். என்ன பாத்து என்னோட கிளாஸ் பஸ்ட்டு பிரண்டு என் கிட்ட வந்து மச்சி நேத்து நாம அடிச்சது பீர் இல்லடா குதரைக்கு ஊத்தர ரம்முடான்னு சொன்னா.நா அவன பாத்து சரி நடந்தது நடந்து போச்சு விடு பர்ஸ்ல இருந்து ஒரு 500 ரூபா எடுத்து அவன்கிட்ட கொடுத்தேன். அத பாத்துட்டு டே சாமி நா வரலடா சாமின்னு ஓடபாத்தான். அவன புடிச்சு நிறுத்தி டே நமக்காக ரெண்டு பீர் வாங்கிட்டு வரன்னு சொல்லி ரெண்டு புள் வாங்கிட்டு வந்தாரு நெனச்சு பாரு ஒரு புள்ளு 250 ரூபான்னாலும் 500 ரூபா வந்துருக்கும் அது மட்டும் இல்லாம 10௦ கிலோ மீட்டர் வரைக்கும் போயிட்டு வந்துருக்காரு அவரு பாவம்டா அவருகிட்ட இந்த பணத்த குடுத்துடு எனக்கு தலசுத்துது முடிஞ்சா ஒரு கட்டிங் கெடைக்குமான்னு கேட்டுட்டு வான்னு சொல்லிட்டு படுத்தேன்.

முதல் முறை முழு திருப்தியுடம் தூங்கினேன்.

Wednesday, May 25, 2011

நெருப்பின் நரகம்

ரவீந்தர் வடபழனியில இருந்து பைக்குல அடையார் வந்தான். அவன் பின்னாடி அவனோட பக்கத்துக்கு வீட்டு பாட்டி உக்காந்து இருந்தது. பாட்டிக்கு உடம்புக்கு முடியல அதனால ஹாஸ்பிட்டல்ல காட்ட போனான். அங்க பாட்டிக்கு ஸ்கேன் எடுக்கணும் ஒரு 1 மணி நேரம் ஆகும்னு சொன்னங்க. ஒடனே வெளிய வந்து பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்து டி கடைல ஒரு தம்மு வாங்கி பத்த வச்சான். அப்ப வடபழனிக்கு போற பஸ் வந்தது அதுல நமீதா மாதிரி நச்சுனு ஒரு பொண்ணு நின்னுக்கிட்டு இருந்தா. அவள பாத்ததும் கைல உள்ள சிகரட்ட கீழ போட்டுட்டு பஸ்சுல ஏறினான், உடனே கண்டக்டர் அவன பாத்து வேகமா வந்தான், சார் இது லேடிஸ் ஒன்லி கீழ இறங்குங்க என்றான், ஒன்னும் புரியாம தலைள கைய வச்சுக்கிட்டு கீழ இறங்கினான்.

இறங்கினவன பாத்து பலபேர் சிரிச்சாங்க, உடனே அவ அவன பார்த்தா ஒரு நிமிசத்துல ரண்டு மின்னல் சேர்ந்து அவன தாக்கன மாதிரி இருந்துசு அவனுக்கு, அவனுக்கு என்ன பன்றதுன்னு புரியல உடனே அவன் அவள பாத்து "நான் உன்கிட்ட பேசனும்னு" வாயால சைகையில சொன்னான். அவளுக்கு ஒன்னும் புரியல உடனே கீழ இறங்கி வந்துட்டா, அவன் முன்னாடி வந்து நின்னா.

"என்ன சார் எதோ சொன்னிங்க".

"உங்கள பாத்ததும் மனசுக்கு புடிச்சுப்போச்சு அதனாள தான் லேடிஸ் பசுன்னுகூட பக்கமா ஏரிட்டேன் ரொம்ப அவமானமா போச்சு, எம் பேரு ரவிந்தர் கல்யாணம்னு பன்னா உன்னதான் பன்னனும் நினைக்குரன்".

"அட பாவி இப்பதான் என்ன பாத்த அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் போயிட்ட என்ன தைரியம் உனக்கு".

"தைரியம் தான் அதோட ஒரு குட்டி அதிஸ்ட்டமும் இருக்கு பின்ன நா வாயல சைகையிள சொன்னத புரிஞ்சிகிட்டல அப்பத்தான் முடிவு பண்ணின நீ தான் என்னோட
wife come lovernu ".

"சரி நி பாக்க அழகாத்தான் இருக்க பட் என்ன பத்தி நி கொஞ்சம் தெரிஞ்சிக்கோ, எம் பேரு அமுதா. நான் MCA பைனல் இயர் படிக்குரேன், நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு எனக்கு ஒரு ஆச இருக்கு கல்யாணம் பன்னா ஒரு பெரிய கம்பனில சாப்ட்வேர் இஞ்சநியர தான் கட்டிக்கணும் நினைக்குரேன், நீ என்ன பன்ற?".

"இப்ப வரைக்கும் சும்மாதான் இருக்கன், நீ சொல்லிட்டல இனிமேல் சாப்ட்வேர் இஞ்சநியரா ஆஹரதுதான் என் முதல் வேல".

"பிள்டப்ளாம் இருக்கட்டும் மொதல்ல சொல்லு நி என்ன படிச்சுருக்க".

"நா BE மெக்கானிக்கல்".

"மெக்கானிக்கல் படிச்சுட்டு சாப்ட்வேர் இஞ்சநியரா".

"ஏம்மா! படிச்சா அந்த வேலைக்கு தான் போகணும்னு எழுதி வச்சுருக்கா என்ன".

"அப்படிலாம் ஒன்னும் இல்ல, சரி இன்னும் ஒரு வருஷம் இருக்கு என்னோட படிப்பு முடிய அதுக்கு அப்பரமா பாக்கலாம்".

"சரி நான் எப்படி உன்ன contact பண்றது".

"amuthaa1984@gmail.com இது என்னோட மெயில் ID , சரி ஒரு வருஷம் பிறக்கு என்ன contact பன்னு நி சாப்ட்வேர் இஞ்சநியரா இருந்தா".

சில மாதங்கள் போனது ரவீந்தர் வடபழனி NIIT - ல சேர்ந்து PGDCA பண்ண ஆரமிச்சான், 6 மாசம் அவன் அந்த கோர்ச முடிக்கரப்ப செண்டர்ல ஒரு job offer ஏர்ப்பாடு பன்னாங்க அதுல அவனும் கலந்துகிட்டான். அதுல பல பெரிய கம்பனிலாம் வந்துருந்துச்சு HCL , Infosys , wipro இன்னு பல கம்பனி ஏன்னா அது NIIT தொடங்கி 25 ஆவது ஆண்டு அதனால அதோட owner எல்லா கம்பனியோட பேசி அதர்க்கு ஏர்பாடு பன்னியிருக்காரு. அது அவனுக்கு கெடச்ச அதிஷ்டம்

அவன் BE படிச்சதால நல்ல மேக்ஸ் பவர் அவனுக்கு அதனால பஸ்ட் ரவுண்டுல சுலபமா செலக்ட் ஆஹிட்டான். செகண்ட் ரவுண்டு

ஒரு பெரிய ஏசி ரூம் அது அவனுக்கு புதுசு இல்ல ஆனா அந்த ரூம்ல நாலு பேரு கோட்டும் சூட்டுமா உக்காந்துருக்கும் போது அவனுக்கு சின்னதா ஒரு பயத்த உண்டாக்குச்சு. உள்ள போனான். பயோ டேட்டா பாத்துட்டு சில விஷயங்கள் அவன் படிச்சத பத்தி கேக்க ஆரமிச்சாங்க சாதரணமா பீட்டர் இங்க்ளிஷ்ள கத உட்டான். என்ன ஒரு வில்ல தனம் அவன் ரெண்டாவது ரவுண்டும் செலக்ட் ஆஹிட்டான்.

மூணாவது ரவுண்டு அதாங்க HR இந்த சொந்த கத சோக கதைல்லாம் கேப்பாங்கலே அந்த ரவுண்டுதான் போனான்.

வெள்ளையா பாக்க சும்மா அரபிய குதர கனக்க ஒரு பிகரு ஒக்காந்து இருந்துச்சு., அத பாத்ததும் அவனால கண்ட்ரோல் பன்ன முடியல என்னதான் லட்சிய வெறியோட ஒடனாலும் பசின்னு வந்தா சாப்ட்டு தான அஹனும்.

அவன பாத்து அது கத கேக்க ஆரமிச்சது.

"சொல்லுங்க ஒங்க native எது".

"இங்கதாங்க வடபழனி".

"மெக்கானிக்கல் படிச்சுட்டு எதுக்கு சாப்ட்வேர் choose பன்னிங்க".

"இல்லைங்க machine-ன கைல வேல வங்கறத விட brain-ல வேல வாங்கறது எனக்கு புடிச்சிருக்கு அதனாலதான் இந்த பீல்ட செலக்ட் பன்ன".

"சரி சாப்ட்வேர் கோர்ஸ் ஒரு ஆறு மாசமாத்தான் படிசுருக்கிங்க, கம்பனி இருக்கரது மதுரைல நீங்க அங்க வருவீங்களா".

"இல்ல நான் சென்னைல மட்டும் தான் வேல பாப்பேன், சொன்னவன் சடார்னு எழுந்தான்".

"ஒரு நிமிஷம், ட்ரைனிங் - ல மட்டும் அங்க இருங்க நீங்க நல்லா பர்பாம் பண்ணா உங்களுக்கு சென்னை கம்பனில டிரான்ஸ்பர் கொடுக்குரோம்".

"சரி என்னைக்கு வந்து join பன்னனும்".

இவன் கைல offer letter வாங்கிட்டு வெளிய வந்தான். அப்பத்தான் அமுதா அதே NIIT - ல project பண்றதுக்கு name register பன்னிகிட்டு இருந்தா.

அமுதாவ NIIT செண்டர்ல பாப்பான்னு அவன் நெனைக்கல, அவனுக்கு கெடச்ச அந்த job offera அவகிட்ட காட்டி I love you சொல்ல முடிவு பன்னி போனான். அமுதாவ பார்த்து ஹாய்னு சொன்னான். அமுதா அவன பார்த்ததும் ஒரு நிமிஷம் பிரீஸ் ஆஹி நின்னா. அப்பறம் NIIT ல வேல பாக்கற ஸ்டாப் Hellow மேடம்னு சொன்னதும் அவ கைல இருந்த அப்ளிகேசன அவங்க கிட்ட கொடுத்துட்டு இவன பார்த்து வந்தா.

"என்ன NIIT யாராவது இங்க படிக்கராங்களா?".

"அதலாம் ஒன்னும் இல்ல நான் தான் இங்க படிக்க வந்தேன்".

"என்ன நான் சொன்னதுக்காக முயற்சி செய்றியா".

"இல்ல நி சொன்னத செஞ்சு முடிசுட்டன், இத பாரு என்னோட job offer letter".

"கொஞ்சம் பொரு நான் சொன்ன ஒருவருஷ டைம் முடியல".

"சரி கீழ கொஞ்சம் வரியா".

"எதுக்கு?".

"காபி சாப்டதான்".

"என்ன வேல கேடச்சுதுக்கு ட்ரீட்டா".

"அப்படிதான் வச்சுக்கு வரியா".

"அமுதா கைல இருந்த செல்போன் அடிச்சுது., அமுதா அத ஆன் பன்னி பேச ஆரமிச்சா
ஹாய் எங்க இருக்க ......... சரி கீழயே இருங்க நான் வரன்".

"எனக்காக கீழ என்னோட friends வெய்ட்பன்ராங்க அவங்களையும் கூட்டிட்டு போலாமா".

"புல்லையாருக்கே தேங்கா உடைக்குரேன் மூஞ்சூறுக்கு கொளுகட்டதான வா".

"டாய் ...."

"சாரிமா! வா போலாம்".

கீழ போனதும் பைக்குள நாலு பசங்க சும்மா MGR கணக்கா நின்னுகிட்டு இருந்தானுங்க,
அவனுங்கள பாத்து இவ ஹாய் ராம் , குமார் ,... சொல்லிட்டு அவங்க கிட்ட போனா.

இவன் நெருப்புல மாட்டுன எலி மாதிரி நின்னான்....

அமுதா அந்த நன்கு நண்பர்பகளையும் பார்த்துகிட்டு ஹாய் டானு கை ஆட்டிகிட்டு போனாள்.,

"என்னங்கடா இத்தனைபேரும் கூட்டமா?".

"உன்ன பிக்கப் பன்னத்தான் வந்தோம், அப்பறம் யாரு புதுசா நம்ம frienda?".

"இல்ல டா நான் சொன்னல்ல அந்த அடையார் பஸ் பார்ட்டி இது தான்".

"ஹலோவ் பாஸ் என்னபன்ரீங்க".

"இன்னைக்கு தான் சாப்ட்வேர் கம்பெனில வேல கெடச்சது".

"அட கையகொடுங்க பாஸ் எப்படியோ சொன்ன மாதிரி முடிசுட்டிங்க அப்பரம் டிரீட்டு?".

"வாங்க காபி சாப் போலாம்".

"அட இருங்க பாஸ் புதுசா வேல கெடசுருக்கு அதுமட்டுமா நம்ம அமுதாவ வேற கரக்ட் பண்ணிருக்கிங்க அப்பரம் என்ன இது சின்ன புள்ள தனமா, வாங்க பாஸ் பப்புக்கு போலாம்".

"இல்ல வேனாம்".

"என்ன அமுதா பால்குடிகிற புள்ளைய போய் கவுத்துட்ட நி சொல்லு அமுதா".

"என்ன வாங்க போலாம்".

அவளிடம் இருந்து அந்த வார்த்தை வரும் என்று அவன் நினைக்கவில்லை.என்ன போலாமா என்று அமுதா அவனை அழைக்க பதில் எதுவும் சொல்லாமல் பைக்கை உதைதான்.அவனுக்கு முன்னதாக அந்த நான்கு நல்லவர்களும் பைக்கை முருக்கினார்கள்
அமுதா அவன் பின்னால் உட்கார்ந்து மகாபல்லிபுரம் ரெஸ்டாரன் ஒன்றுக்கு பறந்தார்கள்.

"என்ன அமுதா பேசறதுக்கு ஒரு வருஷம் டைம் சொன்ன இப்ப".

"அதவிடு நாம இப்ப எங்க போரம் தெரியும்மா".

"ரெஸ்டாரன் தான இல்ல பின்ன எங்க காட்டேஜ்க்கு".

"என்ன காட்டேஜா அமுதா நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்".

"பேசலாம் வா".

அந்த நான்கு பேரையும் பின் தொடர்ந்து ரவீந்தர் பைக் பறந்தது.மணல் பங்கான அந்த ரோடு ஒரு தனி பாதை பிரிந்தது அதில் அந்த நான்கு நபர்களின் வண்டி நுழைய இவனது வண்டியும் அவர்களை பின்தொடர்ந்தது.ஒரு தனி பங்களா காட்சி அளித்தது.

"என்ன அமுதா இதானா".

"இதான் எப்படி இருக்கு".

"என்ன அமுதா நி இவ்வளவு பெரிய ஆளா".

"உங்க அப்பா என்ன பன்றாரு?".

"சொல்றன் வா...".

காட்டேஜ் கதவு திறந்தது.
"என்ன அமுதா இப்பவாவது சொல்லு உங்க அப்பா என்ன பண்றாரு?".

"சொல்றன் வா உள்ள போலாம்".

அந்த பெரிய காட்டேஜ நோக்கி உள்ள போனார்கள்.போனதும் உள்ள ஒரு 50 வயது பெரியவர் சும்மா கைல சாம்பெயின் உடன் ஜலக்ரீடைல இருந்தார்.அந்த நான்கு நல்லவர்களும் அவரை பார்த்து ஹாய் அங்குள் சொல்லி போனார்கள்.

"அங்குள் நம்ம அமுதா ஒரு பால்குடிக்கிற பப்பாவ கரக்ட்பன்னி கூட்டிகிட்டு வரா பாருங்க".

"அப்பா இது ரவீந்தர்".

"வாங்க தம்பி உக்காருங்க தம்பி என்ன பன்ரிங்க"

"இப்பதான் சாப்ட்வேர் கம்பனில வேலைக்கு சேர்ந்தேன்".

"சரி என்னோட பொண்ணு சொன்னத முடிசிடிங்க இப்ப நான்சொல்றத செய்வீங்களா?".

"சாரி சார் நான் ஒங்க பொண்ண மட்டும்தான் லவ் பன்றன்".

"அட அது இல்ல தம்பி நான்சொல்றத கேளுங்க".

எம் பேரு சண்முகசுந்தரம் நான் கோயம்புத்தூர்ல ஒரு மில் ஓனரா இருக்கேன்,
இது என்னோட ஒரே பொண்ணு அவ ஆசைக்கு நான்குருக்க வந்ததே இல்ல.
இப்ப அவ உன்ன ஆசபடுரா சரி ஆனா எனக்கு வரமாப்புள. ஒரு சாதாரண மாச கூலியா இருக்கறத நான் விரும்பல. நா ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஓப்பன் பண்றன் அதுக்கு நீங்கதான் MD. சரின்னு சொன்னா என்னோட பொண்ண உங்களுக்கு கொடுக்கறதுல எந்த வருத்தமும் இல்ல.

"ரவீந்தர், மஞ்ச தண்ணி ஊத்தன ஆடு மாதிரி தலை ஆட்டினான்".

-சுபம்.

ரிப்பீட்டு


Monday, May 23, 2011

இயந்திரதிர்க்கும் இதயம்உண்டு [Wall-E]

மனிதனுக்கு மட்டும் தான் உணர்ச்சிகள் உண்டு என்பதை அடித்து உடைத்து எங்களால் மனிதனின் அத்தனை உணர்வுகைளும் காட்ச்சிகளாக இயந்திரங்களுக்கு கொடுக்க முடியும் என்று நிருபிக்க பட்டது Pixar என்னும் நிறுவனத்தின் கால் பதிப்புக்கு பிறகுதான்.

Pixar-ன் பல படைப்புகளில் Wall - E இதுவும் ஒன்று, நம்ம தமிழ் படத்துல எந்திரனுக்கு உயிர் கொடுக்க சூப்பர் ஸ்டார் தேவ பட்டார், ஆனா எங்களுக்கு எந்த சூப்பர் ஸ்டாரும் தேவ இல்ல இங்க நாங்கதான் சூப்பர் ஸ்டார்ன்னு சொல்லாம சொல்றாங்க நம்ம Pixar.Wall - E கதை என்னான்னா இன்னும் பல வருடங்கள் கடந்த பின்னர் பூமி மனுசங்க வாழ்றதுக்கு தகுந்த இடம் இல்லன்னு வானத்துல ஒரு சேட்ளைட் ஷிப் உருவாக்கி மக்கள் எல்லாம் அந்த ஷிப்ல போய் தங்குகிறாகள், பூமி எண்பது ஒன்று இருபதையே மறந்து விடுகிறார்கள் . அப்ப பூமில இருக்கற குப்பைகளை சுத்தம் பண்ண மனுசனால் படைக்கப்பட்ட ஒரு ரோபாட்(Wall - E) மட்டும் அதனுடைய வேலையை செய்துகிட்டு இருக்கு. பல வருடம் கடந்த பின்னர் உலவுபாக்க அனுப்பி வைக்க பட்ட ஒரு ரோபாட் பூமிக்கு வருது அதன் பெயர் EVE . அதனை பார்த்ததும் நம்ம Wall - E தனக்கு ஒரு துணை கிடைத்ததாக எண்ணி அதனுடன் உறவாடும். Wall - E தனது நட்பின் அடையாளமாக EVE-க்கு பூமில விளைஞ்ச ஒரு செடிய கொடுத்ததும் EVE தான் தேடிவந்தது அதுதான் என்று தெரிந்து அதனை தன்னுள் மறைத்து தனது செயல்களை இழந்து ஜடம்மாக மாறும் மற்றும் மனிதர்களுக்கு அந்த செய்தியை அனுப்பும். அப்ப EVE-வை எடுத்து செல்ல விமானம் வருகிறது. Wall - E அந்த விமானத்துடன் செல்லும். Wall - E மனிதர்கள் கொண்டு சென்ற தனது துணையாக கருதும் EVE-வை மனிதர்கள் இடமிருந்து மீட்டதா மனிதர்கள் மறுபடியும் பூமிக்கு வந்தார்களா என்பதுதான் கதை.

EVE உடன் செல்லும் Wall - E அங்கு இப்பொழுதைய மனிதர்களை பார்க்கும் பொழுது ரொம்ப பரிதாபமாக இருக்கும்,ஏன் என்றால் அங்கு இருக்கும் அனைவரும் உடல் உழைப்பு இல்லாமல் குண்டாகியிருப்பாங்க. மனிதர்கள் தங்கியிருக்கும் அனைத்தும் இயந்திரமயமானது, அவர்கள் ஒரு வேலை கூட செய்ய தேவை இல்லை, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சோபா இருக்கும் எங்க போகுனும்னாலும் அது அந்த இடத்துக்கு பறந்தே கூட்டி செல்லும், குளிக்கறதுல இருந்து ட்ரஸ் மாத்தறது வரைக்கும் எல்லாமே இயந்திரத்தின் உதவியுடன்தான், அது மட்டும் இல்லாமல் எல்லா இயந்திரங்கள் கட்டுப்பாடும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் கீழ் செயல்படும்.

பூமியில் இருந்து கொண்டுவரப்பட்ட EVE-வை ஷிப்பின் கேப்டனிடம் எடுத்து செல்லபட்டதும். அது எடுத்துவந்த அந்த செடியை பார்த்து இது எங்க இருந்து வந்ததுன்னு கேப்டன் கேட்கும்போது பூமின்னு கம்ப்யூட்டர் சொல்லும், பூமினா என்னன்னு நம்ம கேப்டன் கூகுள்ல தேடுவாறு அப்ப அது பூமிய பத்தன எல்லா விளக்கங்களையும் துப்பும் விடியோ வடிவில். சரி மறுபடியும் அங்க போகலாம்ன்னு முடிவெடுத்து இயந்திரங்களுக்கு ஆடர் கொடுப்பாரு கேப்டன், அப்பத்தான் நம்ம சூப்பர் கம்ப்யூட்டர் சூப்பரா ஆப்பு வைக்கும். உங்கள கட்டுபடுத்துவது நாங்க தான் எனக்கு நீ ஆடர் கொடுக்க முடியாதுன்னு கேப்டனை ஹவுஸ் அரஸ்ட் பண்ணிரும் சூப்பர் கம்ப்யூட்டர்.

கேப்டனின் நிலை கண்டு அவருக்கு Wall - E உதவும் பொழுது எதிர்பாராத விதமாக தனது உடல் பாகங்களை சிதைவடையும் சூழல் உண்டாகும். அப்பொழுது கேப்டன் முதல் முறையாக தன் இருகையில் இருந்து எழுந்து ஆட்டோமாடிக் சிஸ்டத்தை அணைக்கும் இடம் உணர்ச்சிமயமாக இருக்கும். மறுபடியும் கேப்டனின் உத்தரவின் படி பூமியை அடைந்ததும்.EVE Wall - Eக்கு அதன் உதிரிபாகங்களை அதன் இருப்பிடத்தில் இருந்து எடுத்து மாற்றும்.Wall - Eக்கு உயிர் வந்தவுடன் அது தனது பழைய வேலையான குப்பைகளை சுத்தம் செய்யபோகும்,Wall - E அதன் பழைய நியாபகங்களை இழந்து இருக்கும். Wall - Eக்கு திரும்ப பழைய நியாபகம் வந்ததா மனிதர்கள் பூமியில் என்ன செய்தார்கள் என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்


இந்த படத்தை பார்க்க நினைக்கும் ஆர்வளர்களுக்கு அதன் சுட்டி
Wall-E


இந்த படத்தை எடுத்த Pixar-ன் முழு விவரம் அக்கரைச்சீமை புகழ் ஹாலிவுட் பாலாவின் படைப்பு மின்புத்தகமாக Pixar Story.pdf

ஏனோ இப்பொழுது ஹாலிவுட் பாலா எழுதுவது இல்லை அவரின் எழுத்துக்கள் மிகவும் ரசனையான ஒன்று ஒரு நல்ல எழுத்தாளன் பதிவுலகை விட்டு சென்றது எனக்கு மட்டும் அல்ல அவரின் பல நண்பர்களுக்கும் இழப்புதான்.


Wednesday, May 18, 2011

கொல்லாமல் கொன்றுபுதைத்தாயே

திருச்சி சத்திரம் பஸ்டாப்ப மறக்க முடியாது, கைல காசு இல்லனாலும் மனசுல ஜெயிச்சுடுவோம்னு நம்பிகையோட இருந்த நாட்கள். ஜூலை 13, 2009 எஸ் அன்னைக்குதான் நா அவள முதல் முறை பார்த்தன், ஸ்ரீரங்கம் பஸ்க்காக நின்னுகிட்டு இருந்தா மஞ்சள் சுடிதார் அந்த கலருக்கு மேட்சிங்கா ஒரு பொட்டு, ரெண்டு சின்ன உஞ்ஜல் மாதிரி அவ காதுல தொங்கிட்டு இருந்த அந்த ஜிமுக்கி இப்ப நெனச்சாலும் மனசு கஷ்ட்டமா இருக்கு.அவள பாத்ததும் எனக்கு அவளபத்தி தெரிஞ்சுகனும்ன்னு உள்ளுக்குள்ள ஓர் எண்ணம் ஓடிகிட்டு இருந்துச்சு, அவ பஸ்சுல ஏறனதும் அந்த பஸ்ல என் கால் என்ன அறியாம இரும்புல மாட்டன காந்தமா அவபின்னாடி என்ன இழுத்துகிட்டு போச்சு. இதுக்கு முன்னாடி பெருமால பாக்கறதுக்கு நா விருப்பபட்டு போனது இல்ல, என்ன பண்ண அவ அவர பாக்க போகும் போது கொள்ளையடிச்சுட்டு மாட்டன கைதி மாதிரி எதுவும் பேசாம அவ பின்னாடி போக வேண்டியதா இருந்துச்சு.

கூட்டத்துக்கு நடுவுல அவ அந்த பெருமாளுக்காக காத்து இருக்கும் போது நா அவளுக்காக அந்த மனித புழுக்களுக்கு நடுவில் புழுவாக நெளிஞ்சிக்கிட்டு இருந்தன், பெருமால பாத்த சந்தோசம் அவளுக்கு அவள பாத்த ஆனந்தம் எனக்கு, அவ அந்த கூட்டத்துல இருந்து மறைந்த போது இரண்டு கண்ணும் இருந்து நிரகுருடான நிலை எனக்கு.

என்னோட நிலைமை அப்ப சிவன பாக்க பெருமாள் இருக்கும் இடத்துல சுத்தன மாதிரி இருந்துச்சு, விடாமுயர்ச்சி விஸ்வரூப வெற்றிக்கு அடையாளம் அவள அந்த கூட்டத்துல மறுபடியும் காண முடிஞ்சது குவியமிலா ஒரு காட்சிப்பேழையாக. அப்ப அடிச்ச அந்த கோவில் மணி என்னோட வாழ்க்கைக்கு அடிச்ச ஆலையமணியா காதுல விழுந்துச்சு, மறுபடியும் அவள மிஸ்பண்ண கூடாதுன்னு அவகிட்ட போய் நா உன்ன காதலிக்கரன்னு சொல்ல ஒரு நொடி தைரியம் எப்படி எனக்கு வந்ததுன்னு ஆச்சரியமாத்தான் இருக்கு.

அவகிட்ட போய் எம் பேரு சிவான்னு சொல்ல வாய் எடுத்தேன் என்ன எங்கையோ இருந்து ஒரு குரல் டே சிவான்னு கொக்கரித்தது, இதுக்கு முன்னாடி அந்த கொடூரமான குரல் எனக்கு பல நாள் பழக்க பட்ட ஒன்றுதான். ஆமா என்னோட அப்பாவோட குரல். அய்யோ இந்த ஆள் இங்க எங்கடா வந்தான்னு நா பம்ப ஆரமிச்சா அவரு என்ன பாத்து பதறிபோய் வர மாதிரி இருந்துச்சு. சரி நாம இன்னைக்கு மாட்டனம்ன்னு முடிவு பண்ணி முழிச்சுகிட்டு இருந்தன்.

என் கிட்ட வந்த என்னோட அப்பா, டே இங்க என்ன டா பண்ற அதுவும் கோவில்ல. அதுவந்துபான்னு நா அரமிக்கரதுக்கு முன்னாடி. என்னோட அந்த தேவதை, அப்பா அம்மா வீட்டுல உங்களுக்காக கத்துகிட்டு இருக்காங்க இன்னிக்கு உங்க கல்யாண நாள் அதான் கோவில்க்கு வந்தன் சொன்னா.


டே தகப்பா என்ன கொன்னுடியேடா தகப்பான்னு கத்தனும் போல இருந்துச்சு.

"அதுக்கு எங்கப்பா, நீ போ மா உங்க அப்பா உங்க அண்ணனோட வீட்டுக்கு வராருன்னு உங்க அம்மாகிட்ட சொல்லு".

"அப்பா இவருதான் அண்ணனா, அண்ணா அப்பாவோட வீட்டுக்கு வாங்கன்னா, அம்மா உங்கள பாக்கனுன்னு ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்காங்கன்னு சொல்லிட்டு ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு சிறகடிச்சு பறந்தா".


கொஞ்சம் தூரம் போய் என்ன மறுபடியும் பாத்து அண்ணா வரும்போது எனக்கு பூ வாங்கிட்டு வாங்கண்ணான்னு சொன்னா பாருங்க, அப்ப தோனுச்சு என்ன கொல்லாமல் கொன்னு புதைச்சுடான்னு.

[மனசாட்சி] டே தகப்பா இது நியாயமாடா!
Tuesday, May 17, 2011

அஞ்சாசிங்கம் ஆலினால் அழகுராஜா


[ஓட்டு போட்டன்னு சொல்லாதிங்கடா ஓட்ட வித்தன்னு சொல்லுங்க]
[இனிமே எல்லாரும் அம்மா தாயேன்னு சொல்லாதிங்கடா மம்மி டாடின்னு சொல்லுங்க அஞ்சு பத்து கூட கெடைக்கும்]
[அண்ணா காத்துன்னு பாக்காம, மழைன்னு பாக்காமா கஷ்ட்டப்பட்டு சம்பாரிச்சாதுன்னா நெரவிராதிங்கண்ணா அது நா இல்லைங்ணா, அது நா இல்லைங்ணா]
[குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா தம்பி தெரிஞ்சு நடந்துகொள்ளடா]
[மம்மீ'ஸ் நாக்குமுக்கு]
[கேப்டன்'ஸ் நாக்குமுக்கு]

Friday, May 13, 2011

அம்மாவுக்கு ஆட்சி ஐய்யாவுக்கு ஆப்பு

ரெடி ஸ்டார்ட் டார்கெட் பிக்ஸ்[முதல் ஆப்பு]
ரெண்டாவது ஆப்பு[மூணாவது ஆப்பு][இது கொசுறு]
Wednesday, May 11, 2011

ஒஸ்தி என்கிட்ட போடாத குஸ்தி


[சும்மா வந்தாலும் நா ரத்தகரையோட தான் வருவேன் @ சிம்பு # அது எங்க ரத்தம் சாமியோ]
[இந்த சிரிப்பு ஒன்னு போதும்பா படம் சில்வர் ஜுபிலி போகும் @ சிம்பு # இதுக்கு நாங்க அழுவறதா இல்ல சிரிக்கறதான்னு தெரியல?]
[ஆசிட் தொட்டு அழிச்சாலும் இது இனிமே போகாது @ டிஆர்# பரவா இல்லப்பா என்ன இருந்தாலும் நா ஓம் புள்ளையாச்சே @ சிம்பு # நீ என் இனமடா @ டிஆர்]
[அப்பா ஒரு பூவுக்கே பூ கொடுக்கறாங்க பாத்தியா @ சிம்பு # நா பூவா இல்ல பூதமா? @ டிஆர்]
[நா போலீசா இல்ல வாட்ச்மேனா? @ சிம்பு # தெரியலையே பா ஒரு கோட்டார் சொல்லன் @ டிஆர்]
[கடவுள் இருக்காருடா @ சிம்பு # சாத்தான் வேதம் ஊதுது]
[பெருமாளே எப்புடியாவது இந்த படத்த 100 நாள் ஓடவச்சுடு அப்புடி இது நடந்துச்சுன்னா திருப்பதிக்கு எங்கப்பாவ கூட்டிகிட்டு வந்து ஒனக்காக சேவ் பண்ண சொல்றன் @ சிம்பு # எழுமலையானே வெங்கட்ற்றமனா கோவிந்தா!! கோவிந்தா!!]

Monday, May 9, 2011

வில்லன்னா இவன்தாண்டா வில்லன்(Dark Knight)


ஒரு படத்த வில்லனுக்காக பாத்ததுன்னா அது இந்த படத்த தான். இதுல ஹீரோவ ஒரு டம்மி பீசு மாதிரி தான் கடைசி வரைக்கும் காட்டுவார்கள்

நாம பல பேட்மேன் சீரிஸ் படம் பாத்துருப்போம் இது பேட்மேன் சீரிஸ்ல கடைசியா வந்த படம் தி டார்க் நைட். நம்ம தமிழ் படத்துல எந்த ஒரு வில்லன்னும் சும்மா ஏய் ஏய்ன்னு கத்தி கத்தி நம்ம காத கிழிக்காம விட மாட்டானுங்க. இப்ப நம்ம டாக்டர் கூட வில்லனுக்கு நா கொரச்சலான்னு அவரும் ஒருபக்கம் dtts மிக்ஸ் பண்ணி சும்மா வாழு வாளுன்னு கத்திக்கிட்டு இருக்காறு விடுங்க அதல்லாம் நாமா பண்ண பாவம் அனுபவச்சுதான் ஆகணும்.சரி இந்த படத்த பத்தி பாப்போம்.இந்த படத்தோட கத என்னென்னா கவுதம் சிட்டில நடக்கற பல அனியாயங்கள பேட்மேன் துணையோட போலிஸ் தடுக்குது. அங்கு புதிதாக உருவெடுத்திருக்கும் ஜோக்கர் என்னும் பைத்தியக்காரன் அந்த நகரத்தில் உள்ள சமூக விரோதிகளுக்கு உதவியாக பேட்மேனை அழிப்பதற்கு வருகிறான்.ஜோக்கர் பேட்மேனை கவுதம் சிட்டியை விட்டு போக வேண்டும் இல்லை என்றால் அந்த நகரத்தில் உள்ள மக்கள் பலரையும் கூட்டம் கூட்டமாக கொல்வேன் என்று மிரட்டுகிரான் அவனிடம் இருந்து மக்களை காப்பாற்றினாரா சமூக விரோதிகளை பிடித்தாரா என்பதுதான் படத்தின் கதை.

படம் ஒரு பேங் கொள்ளைல ஆரமிக்கும். முகமூடி அணிந்த சிலர் பல இடங்களில் இருந்து இனணந்து கொள்ளையடிக்க வருவார்கள். கொள்ளையடித்த பின் வந்தவர்களில் ஒருவன் மற்ற அனைவரயும் போட்டு தள்ளி கொண்டு இருப்பான் கடைசி ஒருவனை கொல்ல முயலும் பொழுது அவன் உசாராகி அவனை கொல்ல துப்பாக்கி எடுப்பான்.அப்ப அவன் கேப்பான் இந்த பேங்க கொள்ளையடிக்க ப்ளான் போட்டு கொடுத்த ஜோக்கர் எல்லாரையும் கொல்ல சொல்லிடான் இல்ல இப்ப ஒன்ன கொல்ல போறன் இந்த பணம் எல்லாம் எனக்குதான் என்று சொல்லுவான் அதற்க்கு அனைவரயும் போட்டு தள்ளியவன் சொல்லுவான் அடுத்தது போட்டு தள்ள சொன்னது ஒன்ன இல்ல டிரைவரன்னு சொல்லும் போது ஒரு பஸ் அந்த பேங்க்கதவ ஓடச்சுகிட்டு வந்து துப்பாக்கி நீட்டியவனை நசுக்கும். வண்டில இருந்து இறங்கி வந்த டிரைவர் ஹைய்யோ எவ்வளவு பணம் என வாய் பிளக்கும் போது அவனையும் போட்டு தள்ளுவான். அங்க இருக்கற பேங் அதிகாரி இந்த மாதிரி மனசாட்சி இல்லாம கொல்றியே உன்னையும் அந்த ஜோக்கர் கொல்ல போறான் போ என்று சொல்லும் போது அவனிடம் வந்து அது முடியாது அந்த ஜோக்கரே நான்தான் என்று சொல்லி அவன் வாயில் வெடிகுண்டு வைத்து வண்டியுடன் செல்வான் ஜோக்கர்.


ஜோக்கர்


அந்த நகரத்தில் பல சமூக விரோதிகள் அவர்கள் கொள்ளையடித்த பணத்தை நம்ம ராசா மாதிரி ஒரு பினாமி மூலம் ஹாங்காங்கு கடத்தி விடுவார்கள். அவைர்களிடம் வந்து ஜோக்கர் ஒங்க பணம் பரி போக போகுது அத தடுக்கணும் நா பேட்மேன போட்டு தல்லன்னும்ன்னு சொல்லுவான். அவனை முதலில் கிறுக்கன் என்று அனைவரும் விரட்டுவார்கள். அப்ப ஒருவன் ஒன்னைய இப்பவே கொல்ரன் பாக்குரியான்னு கிட்ட வருவான் அப்ப ஒரு பென்சில மேஜை மீது தலைகீழாக வைத்து ஜோக்கர் நா இந்த பென்சில மறையவைக்குரன் எல்லாரும் மேஜிக் பாருங்கன்னு சொல்லி வரவன மடக்கி அந்த பென்ச்சில்ல மூஞ்சியைவைத்து ஒரே அலுத்து ஆள் அம்பேல். அங்க இருந்து ஜோக்கர் எஸ்கேப்

பேட்மேன் அந்த ப்ரோகரை பிடித்துவிடுவார். அந்த சமூக விரோதிகள் ஜோக்கரை அழைத்து பேட்மேனை போட்டு தள்ள சொல்லுவார்கள் அதற்க்கு என்ன வேண்டும் என்று கேட்பார்காள் கொள்ளையடித்த பணத்தில் பாதி வேண்டும் என்று சொல்லவான் ஒத்துகொள்வார்கள். அந்த நகரத்தில் ஒரு பத்திரிக்கை நிருபர் அந்த சமூக விரோதிகளை பற்றி விவரம் சேகரிக்கும் பொழுது பேட்மேன் யார் என்பதை அறிந்துகொள்வார். நம்ம ஜோக்கர் பேட்மேன் யாரு யாரு என கேட்டு நகரத்தில் உள்ள ஒவ்வொருவராக கொல்வான். பேட்மேன் இந்த நகரத்தை விட்டு போக வேண்டும் என்று சொல்வான் ஜோக்கர். அதன் படி பேட்மேன் நான் யார் என்பதை அறிவிப்பதாக கூருவார். பேட்மேனை காப்பாற்ற அந்த தினத்தில் அந்த பத்திரிக்கை நிருபர் நான்தான் பேட்மேன் என்று அறிமுகபடுத்தி கொண்டு அங்க இருந்துகிலம்புவார்.

பேட்மேன் யார் என்பது தெரிந்ததும் ஜோக்கருக்கு பாதி பணத்தை அந்த சமூக கும்பல் குடுக்கும். அந்த பணத்தின் மேல் ப்ரோக்கரை ஒக்கராவச்சு சின்ன மல மாதிரி இருக்கும் அந்த பணத்த எரிப்பான். பணத்த எரிக்கரத பாத்து ஒருத்தன் கத்துவான் அப்ப எண்டா பணம் பணம்ன்னு அலைறிங்க இப்ப இந்த சிட்டுக்கு தேவ ஒரு நல்ல வில்லன் அது நான்தான் சொல்லி எல்லா சமூக விரோதிகளையும் போட்டு தள்ளுவான் ஜோக்கர்.

எதேச்சையாக ஜோக்கர் பேட்மேன் இடம் மாட்டி விடுவான் அவனை விடுவிக்க அவனது ஆட்கள் அந்த நிருபரையும் நிருபரின் காதலியையும் வேறு பகுதிக்கு கடத்தி பாம் வைத்து மிரட்டுவார்கள். நிருபரை காப்பாற்ற பேட்மேன் செல்லும் பொழுது போலிஸ் நிருபரின் காதலியை காப்பாற்ற செல்லும் தவறுதலாக நிருபரின் காதலி இறந்து விடுவார். நிருபர் பாதி வெந்த முகத்துடம் hospital ல இருப்பார். அந்த சமயத்தில் ஜோக்கர் தப்பிவிடுவான். ஜோக்கர் நிருபரை கடத்தி ஒன்னோட காதலியின் மரணத்துக்கு பேட்மேன் மற்றும் போலீஸ்தான் காரணம்ன்னு சொல்லி பழிவாங்க அவன தயார்படுத்தி அனுப்பிருவான்.

இறுதியாக போலீஸிடம் ஜோக்கர் நகரம் முழுவதும் பாம் வைத்திருபதாக கூற அந்த நகரத்தை விட்டு மக்களை கப்பல் மூலம் வேறு ஒரு நகரத்துக்கு மாற்றுவார்கள். அதுபோல் அந்த நகரத்தின் கைதிகள் அனைவரையும் வேறு ஒரு கப்பல் மூலம் மாற்றுவார்கள். ஜோக்கர் அந்த இரண்டு கப்பலிலும் பாம் வைத்து அதன் கண்ட்ரோல்களை கைதிகள் கப்பலில் நகரமக்களின் கண்ட்ரோல்லும், நகரமக்கள் கப்பலில் கைதிளின் கண்ட்ரோல்லும் கொடுத்து ஒரு கப்பலில் உள்ளவர்கள் மட்டும் தப்பிக்கலாம் முதலில் கண்ட்ரோலை ஆழுத்துபவர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு என்று அறிவிப்பான்

எந்த கப்பல் வெடித்தது என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தை இயக்கியது Christopher Nolan.

படத்தை பார்க்க விரும்பும் ஆர்வலர்களுக்கு அதன் சுட்டி
Dark Knight
Sunday, May 8, 2011

நீரால் ஆனது உலகம்(WaterWorld)

லாஜிக் பாத்து தான் படம் பாபேன்னு சொல்றவங்க அப்புடியே அப்பீட் ஆகிக்கலாம் இந்த படம் உங்களுக்கு இல்ல அதல்லாம் இல்லாம குருவி படத்த குதுகலமா பாத்தவங்க நாங்க ஜாலியா பாப்போம்ன்னு சொல்றவங்களுக்கு இது ஒரு நல்ல குஜாலான படம்

கடல் பார்பதற்கு எவ்வளவு அழகு அதன் ஆழமும் அடர்த்தியும் அச்சத்தை உண்டாக்கும் என்பதற்கு ஒரு மிக சிறந்த படம் வாட்டர் வோர்ல்ட்.கெவின் காஸ்ட்நர் படத்தின் நாயகன் ஒரு கடல் வாழ் மனிதன்.நம்ம தமிழ் படங்கள் தான் லாஜிகில்லாம எடுக்கறாங்கன்னு சொல்லுவோம் அது மாதிரி தான் இந்த படமும்.இந்த படத்திலும் நிதர்சன வாழ்க்கைக்கு அப்பாற்பட்டதாகதான் காட்டப்படும். ஒரு குறிப்பிட்ட கடல் பிராந்தியத்தில் நிலம் எப்படி இருக்கும் என்று கூட அறியாத ஒரு கூட்டம் வாழ்வதாக காட்டப்படும். அவர்கள் தண்ணீரில் கோட்டை மாதிரி வீடு அமைத்து வாழ்பவர்கள்.ஆனால் அவர்கள் பயன் படுத்தும் மோட்டார் போட்ஸ் நம்ம வில்லு படத்துல டாக்டர் விஜய் ஒரு கப்பலுக்கு அடியிள பூந்து போவாரே ஒரு போட்டுல அது மாதிரி எல்லாம் வச்சுருப்பாங்க(நான்தான் அப்பவே சொன்னேன் லாஜிகெல்லாம் பாக்க கூடாது, இவங்களுக்கு எப்படி இந்த மாதிரி போட்டு எல்லாம்னு கேக்க கூடாது). அது மாதிரி எகே 47 57 எல்லாம் வச்சுருப்பாங்க நம்ம விஜயகாந்து வச்சுருகறது இல்லையா அது மாதிரிதான் இது.

படத்தோட கதை என்னன்னா அந்த கூட்டத்துல எக்குதப்பா மாட்டிருக ஒரு பெண்ணும் அவளோட பையனும் எஸ்கேப் ஆகி தரை பகுதிக்கு வரதுதான் இதுக்கு நம்ம ஹீரோ எப்புடி உதவுறான்றதுதான் கதை.

சிலர் வைரமுத்துவின் தண்ணீர் தேசம் படித்துதிருபீர்கள். கடலுக்குள் மீன் பிடிக்க பயணம் செய்யும் 5 மீனவர்களுடன் ஒரு காதல் ஜோடி ஒரு ஜாலிக்காக போகும் படகு பாதியில் நின்றுவிடும். இரண்டு வாரம் அவர்கள் படும் நரக வேதனையை கவிதை நயத்துடன் அழகாக சொல்லி இருப்பார். அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்ன்னு பாக்குறிங்களா ஒன்னும் இல்ல ரெண்டுவாரம் அவர்கள் தண்ணில இருக்கறது எவ்வளவு கஸ்ட்டம் ஆனா இந்த படத்துல புல்லா தண்ணில இருக்கறமாதிரி எடுத்துருப்பாங்க.

நம்ம ஹீரோவுக்கு கடல்ல ஒரு பிளாஸ்டிக் பேக் கிடைக்கும் நீங்க நெனைக்கலாம் அது தங்கமோ வைரமோன்னு அதுதான் இல்ல அது குள்ள மண்ணு இருக்கும். களிமண்ணா செம்மண்ணான்னு கேக்காதிங்க எதோ ஒரு மண்ணு. இப்ப நம்ம ஹீரோ அத அந்த கூட்டம் தங்கிருக்க கோட்டைக்கு போய் வித்து காசு வாங்குவாறு.

அப்பறம் குடிக்கரதண்ணி அடிக்கரதண்ணி எல்லாம் பர்ச்சேஸ் பண்ணுவாரு. அங்க குடிக்கற தண்ணி விக்கறவங்க தான் நம்ம ஹிரோயின். ஹிரோயின் அந்த மண்ணு எப்புடி கெடச்சுது எந்த பக்கம் கெடச்சுதுன்னு பிட்டபோடுவா எதுக்கு எஸ்கேப் ஆகாரதுக்குதான். எதுவும் சொல்லாம அங்க இருந்து கெளம்ப பாப்பாரு நம்ம ஹீரோ அப்ப அங்க இருக்கற ஒருத்தன் ஹீரோவோட காத பாப்பான். நம்ம ஹீரோ ஒரு அதிசய பிறவி அவரு ஒரு கடல் மீனுக்கு பொறந்த மனுஷன் (சொன்னேன் இல்ல லாஜிக் பாக்க கூடாது). அந்த கூட்டத்தின் தலைவன் ஹீரோவ கொல்றதுக்கு ஏற்பாடு பண்ணுவாரு எப்புடி தெரியுமா கடலுக்கு நடுவுல ஒரு கூண்டு மாதிரி கட்டி அதுல எரும சாணியோ என்ன எளவோ அத கொலகொலன்னு மெதக்க விட்டு அதுல முக்கவச்சு சாகடிகர்துதான் ப்ளான். நம்ம ஹீரோயின் அந்த கூண்டுல இருந்து நம்ம ஹீரோவா தப்பிக்க வைப்பா அதுக்காக அவளையும் அவ பையனையும் அந்த கூட்டத்துல இருந்து காப்பாத்தணும் இதான் டீலிங். நம்ம ஹீரோயின்னுக்கு ஏற்கனவே ஒரு வயசான சைண்டிஸ்ட் உதவி பண்ணுவாரு அங்க இருந்து தப்பிகரதுக்கு ஒரு பேராசூட் ரெடி பன்னிருபாறு. கடைசி சமயத்துல அவரு மட்டும் அதுல எஸ் ஆகிடுவாரு.அந்த கூடத்துல இருந்து தப்பிக்கற சீன் ஹாலிவுட் படத்துகே உரிய செம த்ரில்லிங்கா இருக்கும்.

தப்பிச்சவங்கள புடிக்கறதுக்கு அந்த கூடத்தின் தலைவன் தொரத்துவான் எப்புடி தெரியுமா நம்ம டைடானிக் மாதிரி ஒரு பெரிய கப்பல் அதுல கூட்டத்தோட போவான். நீங்க நெனைக்கரமாதிரி கப்பல் சூப்பராலாம் இருக்காது ராபிச்சகாரன் பிச்ச எடுக்கற தட்டுமாதிரி இருக்கும் அந்த கப்பல். எஞ்சின்லாம் இருக்காது அதுல இருக்க அடிமைகளை கப்பலுக்கு அடியிள ஒக்கார வச்சு துடுப்பு போடா சொல்லுவாங்க.

இதுல நெறைய பைட் சீன்லாம் செம கலக்கலா இருக்கும். நம்ம ஹீரோ கையித்த புடிச்சுகிட்டு சும்மா குருவி பட விஜய் கணக்கா கப்பலுக்கு மேளையும் கீளையும் பறப்பாரு பாக்கவே சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்.

தப்பிச்சு போறப்ப பசிக்குமே அப்ப நம்ம ஹிரோ ஒரு கிரேட் சாகசம் பண்ணுவாரு. அது என்னாதுன்னா ஒரு பெரிய திமிங்கலம் அது வாய்குள்ள ஒரு கத்தியோட போய் கொடாஞ்சிகிட்டு வந்து ஒரு பார்ட்ட பிச்சு பிறை பண்ணி கொடுப்பாரு (மறுபடியும் சொல்றன் லாஜிக் பாக்க கூடாது).

கடைசியா இவங்க அந்த கூட்டத்துல மாட்டிகுவாங்க அப்ப அந்த சைண்டிஸ்ட் இவங்க இருக்கற பக்கமா பேராசூட்டுல வருவாரு இவங்க அதுல ஏறிருவாங்க. அந்த பைய்யன் தவறி மறுபடியும் தண்ணிக்குள்ள விழுந்துடுவான். அவன போட்டு தள்ள மோட்டார் போட்டுள மூணு பேறு அந்த பையன நோக்கி எதிர் எதிர் திசைல வந்து மோதரமாதிரி வருவாங்க. நம்ம ஹீரோ குஷி படத்துல நம்ம டாக்டர் மொட்டு ஒன்று மலர்ந்தது பாட்டுல காலுல கைத்த காட்டிகிட்டு குதிபாரே அது மாதிரி ஒரே ஜம்பு அந்த பையன சும்மா அல்வா மாதிரி அள்ளிகிட்டு வந்துருவாரு வரவனுங்க முட்டி மோதி வெடிச்சு பஸ்ப்பமாகிடுவானுங்க. அப்பறம் நம்ம ஹீரோ ஹிரோயின் எல்லாம் ஒரு வழியா தரை இருக்கற பகுதிக்கு வந்துடுவாங்க அவ்வளவுதான் படம்.

படத்தோட டைரக்டர் கெவின் ரெநால்ட்ஸ், கெவின் காஸ்ட்நர்(ஹீரோ)

சும்மா சொல்லகூடாது படத்துல கேமரா பட்டைய கெளப்பும்

படத்த பாக்கனும்னு ஆசபடரவங்களுக்கு அதன் சுட்டி
WaterWorld
Saturday, May 7, 2011

தூக்கத்தை கெடுத்த Hostel II [18+]

எச்சரிக்கை: ஹாரர் திரைப்படங்கள் பிடிக்காதவங்களும், பயந்த சுபாவம், இளகிய மனம் கொண்டவர்கள் அப்படியே அப்பீட்டு ஆகிக்குங்க படித்து விட்டு என்னை திட்டக்கூடாது.

Hostel முதல் பாகத்தை பற்றி படிக்காதவர்களுக்கு
தூக்கத்தை கெடுத்த Hostel I [18+]

Hostel II


இதில் மூன்று பசங்களுக்கு பதிலாக மூன்று பெண்கள். இதிலும் ஒரு பெண் மட்டும் தப்பிப்பாள் கடைசியாக அவள் தப்பிக்கும் காட்சி கொடூரமாக இருந்தாலும் அதுதான் சரி என்று தோன்றும்.

முதல் படத்தினை போன்றே இவர்களும் ஒரு ஹோட்டலில் தங்குவார்கள். ஹோட்டல் பெயர் தான் Hostel . அவர்கள் மட்டும் அல்ல அந்த ஹோட்டலில் தங்கி இருக்கும் அனைவரையும் கடத்திவிடுவார்கள். அவர்களின் புகைப்படங்களை இன்டர்நெட்டில் பெட் வைப்பார்கள். பல சைக்கோக்கள் பலரை விலைக்கு வாங்குவார்கள்.

முதலில் மாட்டும் பெண்ணை ஒரு ரத்த வெறி பிடித்த ராட்சசியிடம் விடுவார்கள். அந்த பெண்ணை தலை கீழாக கட்டி ஒரு குளியல் அறை தொட்டி முன் தொங்க விடுவார்கள். வருபவளுக்கு குளிக்க வேண்டும் தண்ணீரில் அல்ல ரத்தத்தில். அந்த பெண்ணை அந்நியன் போஸ்டர்ல ஒரு ஆள் உயர கோடாரி வச்சுருக்க மாதிரி ஒரு ஸ்டில் இருக்குமே அந்த கோடாரிய வச்சு அவள செதில் செதில்லா வெட்டுவா அவ ஒடம்புல இருந்து கொட்ற ரத்ததுள குளிப்பா. கடைசியா அவ கழுத்த வெட்டும் போது ரத்தம் சவர் மாதிரி பீச்சி அடிக்கும் முடியல

ரெண்டாவதும் மூணாவது பெண்ணுகளும் ரெண்டு நண்பர்களிடம் மாட்டுவார்கள். அதில் இரண்டாவது பெண்ணை கொடுமை படுத்துபவன் ஒரு ஜாலிக்காக பண்ணுவதாக நினைத்துகொண்டு டைல் அறுக்கற எலக்ட்ரிக் ரம்பத்த அவ முகத்துக்கு நேரா நீட்டி விளையாடுவான். எதிபாராதா விதமாக உயிருக்காக துள்ளும் அவள் முகம் அதில் மாட்டும், முகத்தில் இருந்து அதை பிடுங்கும் போது அவனால் அவன் செய்தததை நினைத்து மனம் வருந்தி அந்த இடத்தை விட்டு போக முடிவெடுப்பான். ஏற்கனவே சொன்ன மாதிரி கொலை செய்யாதவர்களை போட்டு தள்ளுவார்கள் அதுவும் எப்படி இரண்டு வேட்டை நாய்கள் விட்டு கடித்து குதற அவன் உடலை பிஞ்ச ரொட்டி துண்டு மாதிரி கொண்டுபோறது பாக்க முடியல.

இந்த சிறைச்சாலையில் உள்ள பாதுகாவலர்கள் உடன் இருக்கும் அந்த இரு நாய்கள், இதை போல ஒரு பயங்கரமான நாயையும் நான் பார்த்தது இல்லை.

இரண்டாவது பெண்ணின் காதலன் ஒரு நரமாமிசம் தின்னும் ஜந்துவிடம் மாட்டுவான் அவனை படுக்க வைத்து அவன் துடை கறியை கத்தியால் அறுத்து அதை ஒரு டின்னர் டேபுல் முன் போய் கேண்டில் லைட் முன்னாள் அதை வைத்து ரசித்து சப்பிடுவது போல காட்டுவார்கள். Eaten Alive- ல கூட மனுசன தின்றவனுகள பாத்தா இவனுங்க திம்பானுங்கன்னு தோணும் ஆனா இவன பாத்தா எதோ படிச்சு முடிச்சு டாக்டர் பட்டம் வாங்கி பல வருஷம் வேலபாத்தமாதிரி நல்லாத்தான் இருப்பான் ஆனா அவன் பண்றத பாத்தாதான் கொமட்டிக்கிட்டு வரும்

மூன்றாவதா மாட்ன பெண்ணை அந்த இரண்டு நண்பர்களில் ஒருவன் முதலில் இந்த இடத்திர்க்கு தன் நண்பனின் தூண்டுதலால் தான் வந்தேன் எனக்கு இதில் இஷ்ட்டம் இல்லை என்று அவளிடன் சொல்லிக்கொண்டு இருப்பான். அவன் நண்பன் இறந்து அவனை கொண்டு செல்வதை அவனுக்கு தெரியபடுத்டுவார்கள். அதனை பார்த்த பின் கோவம் வந்து அரைகுறையாக நண்பன் விட்ட அந்த இரண்டாவது பெண்ணை கொன்றுவிட்டு அந்த மூன்றாவது பெண்ணை கொல்ல வருவான். அவளை முதலில் ரேப் பண்ண முயற்சி செய்வான் அவள் அவனை மடக்கி கட்டி போட்டு அவன் உடம்பில் கத்தி வைத்து மிரட்டுவாள். அந்த இடத்தின் தலைவன் அவளை விடுவிக்க வேண்டும் என்றால் அவன் கொடுத்த பணத்தை விட அதிகமாக கொடுக்க வேண்டும் என்று கூறுவான் அதற்க்கு சம்மதிப்பால். அது மட்டும் இல்லாமல் அவனை கொல்ல வேண்டும் அதற்கும் ஒத்துகொல்வாள். அவனை கொல்வது டெரராக இருக்கும்.

கடைசியாக அவளுக்கு பச்சை குத்தி அவளை விடுவிப்பார்கள். அவள் கடைசியாக தன் தோழிகளை கொன்றதுக்கு காரணமான அந்த ஒரு பெண் ப்ரோகரை தலையை துண்டிப்பதோடு படம் முடியும் அந்த வெட்டப்பட்ட தலையை புட்பால் மாதிரி அங்கு உள்ள சிறுவர்கள் விளையாடுவார்கள்.

ஆரம்பம் முதல் இரு படங்களிளும் பல A ரக காட்சிகள் படமுளுவதும் விரவிக்கிடக்கும்.


இந்த படத்தின் இயக்குனர் பெயர் Eli Roth

இந்த படத்தை தயாரித்தது, படு பயங்கர ஹாரர் படங்களை தயாரித்து புகழ் பெற்ற Lion Gates நிறுவனமே.

இந்த கதை நடப்பதாக காட்டப்படும் நாடு ஸ்லோவேகியா நாடு, இந்த படத்திற்கு ஸ்லோவேகியா நாடு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லையா என்று எனக்கு தெரியவில்லை, தெரிந்தவர்கள் கூறலாம்.

இவை எல்லாவற்றையும் விட கொடுமையான விஷயம் இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது தான்.

ஏற்கனவே இந்த படத்தை பார்த்தவர்களுக்கு என்னை போலவே பல அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன் . இரண்டு நாள் தூக்கம் வராமல் தவித்தவர்கள் கூட உண்டு.

பின் குறிப்பு: என்னோட எச்சரிக்கையையும் மீறி யாராவது இதை படித்து இதெல்லாம் ஒரு படமா என்று நினைத்து இருந்தாலோ, படத்தை பார்க்க விரும்பினாலோ அல்லது கடுப்பாகி இருந்தாலோ அதற்க்கு நான் பொறுப்பல்ல.

அப்படி பார்க்கும் ஆர்வலர்களுக்கு அந்த படத்தின் சுட்டி
Hostel II


தூக்கத்தை கெடுத்த Hostel I [18+]

எச்சரிக்கை: ஹாரர் திரைப்படங்கள் பிடிக்காதவங்களும், பயந்த சுபாவம், இளகிய மனம் கொண்டவர்கள் அப்படியே அப்பீட்டு ஆகிக்குங்க படித்து விட்டு என்னை திட்டக்கூடாது.

பல பேய் படங்கள் ஹி ஹி-னு சிரிச்சு பாத்து என்ஜாய் பன்னிருகண் ஆனா ஒரு வருசத்துக்கு முன்னால பாத்த Hostel என்னை உண்மையில் மிரட்டியது.ஈவில் டெட் கூட என்னை இந்த அளவுக்கு பயமுறுத்தியது இல்லை. Hostel படத்த மறுபடியும் பாக்க சந்தர்ப்பம் கிடைத்தது முடியல.

பெரும்பாலும் horror படங்கள் சவுண்ட் எபக்ட்டும் காட்சிகளும் கொடூரமாக இருக்கும். தலை துண்டாக பறப்பது நெருப்பில் வாட்டப்பட்ட முகங்கள் என்று நம்மை அருவருக்க செய்யும். இந்த மாதிரி படம் ஒன்றும் பெரிதல்ல ஆனால் வாழ்க்கையில் இந்த மாதிரி சம்பவங்கள் நிகழ்வது சாத்தியமற்றது அபூர்வமானது.

ஆனால் இதில் நிகழ் கால மனிதர்கள் சாதரணமாக நாம் பார்க்கும் முகங்கள் செய்வதாக காட்டப்படும் காட்சிகள் நம்மை மிரட்டுகிறது. அன்பே சிவம் படத்தில் கமல் மாதவன்கிட்ட சொல்வாரே தீவரவாதிகள் என்ன மாதிரி கொடூரமான முகத்தோட இருக்கணும்ன்னு அவசியம் இல்ல உன்ன மாதிரி நீட்டா ஹன்ட்சமா இருக்கலாம். அந்த மாதிரி தான் இந்த படத்தில் பார்க்கும் மனிதர்கள் மிகவும் சாதாரண தொனியில் காட்டபடுவார்கள் ஆனால் அவர்கள் பண்ணும் செயல்கள் நம்மை அதிர்சிக்குல்லாக்கும்


Hotel 1இந்த படத்தோட கதை என்னன்னா மூன்று அமெரிக்க இளைஞர்கள் ஐரோப்பாவிற்கு சுற்றுலா வருகிறார்கள், அங்கே ஒரு பெண் ப்ரோக்கரின் தூண்டுதலால் ஸ்லோவேகியா செல்கிறார்கள், அங்கே மூவரில் ஒருவர் காணாமல் போய் விட அவரை தேடும் முயற்சியின் போது இன்னொருவரும் காணாமல் போக எஞ்சி இருக்கும் ஒருவர் என்ன ஆனார் என்பதே கதை.

இதிலென்னயா பயப்படுற மாதிரி இருக்குன்னு நினைக்காதீர்கள், இவ்வாறு கடத்தபடுகிறவர்களை ஒரு தனி அறையில் சிறைச்சாலை போன்று அடைக்கப்பட்டு இருப்பார்கள். அவர்களை உலகில் உள்ள பணக்கார சைக்கோகளுக்கு விலை பேசுவார்கள். பெட்டில் ஜெய்பவர்களுக்கு அந்த நபர் சொந்தம் அவர்களை என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம். என்ன வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் தான்.

ஒரு பெண்ணை கற்பழிக்க வேண்டுமா முழு பாதுகாப்புடன் செய்யலாம், ஒருத்தன் கை தனியா கால் தனியா எடுக்கனுமா நோ ப்ரோப்ளம், ஒருத்தன் வயித்துல என்னெல்லாம் இருக்குதுன்னு ஆராய்ச்சி பண்ணனுமா டூல்ஸ் தயாரா இருக்கு.

இதில் மாட்டும் ஒருவன் ஒரு பைத்தியகாறனிடம் மாட்டுவான் அவனுக்கு சிறுவயதில் ஒரு அறுவை சிகிச்சை நிபுனறாகவேண்டும் என்று கனவு அது அவனால் முடியாமல் போகிறது. அதற்காக இதில் மாட்டியவனை உயிருடன் அறுவை சிகிச்சை செய்து பார்க்க முடிவெடுப்பான். முதலில் அவன் கால் நரம்புகளை அறுத்து அவனை கட்டுக்கலில்
இருந்து விடுவிப்பான். கால் நரம்புகள் அறுபட்டதால் அவனால் ஓட முடியாது பின் நடப்பது எல்லாம் இளகிய மனம்படைதவர்கள் சத்தியமாக பார்க்க முடியாது.

இந்த இடத்திற்கு யார் பணம் கட்டி வந்தாலும் அவர்களுடைய சின்னத்தை பச்சை குத்தி கொள்ள வேண்டும், முக்கியமான நிபந்தனை யாரையாவது கொலை செய்தால் தான் வெளியே போக முடியும், இல்லை என்றால் அவரையே போட்டு தள்ளி விடுவார்கள். இது தான் அவர்கள் காண்ட்ராக்ட்.

டார்ச்சர் அறையில் டார்ச்சர் செய்வதற்கென்றே பல உபகரணங்கள் வைத்து இருப்பார்கள் அதை பார்த்தாலே அங்கே இருப்பவர் பயத்திலேயே செத்து போய் விடுவார் அந்த அளவுக்கு பயங்கரமாக இருக்கும்.

மூன்றாவதாக மாட்டுபவன் மட்டும் தப்பிப்பதாக காட்டப்படும். அவன் ஒரு ஹிட்லர் நாசி படை வீரனிடம் மாட்டுவான் அவனை ஏமாற்றி தப்பிப்பான் தப்பிக்கும்போது அவன் ஒரு விரல் துண்டிக்கப்படும் அதை எடுத்துகொண்டு கொடூரமாக அறுக்கப்பட்டு சிதைக்கப்பட்ட உடல்களை எரிக்க எடுத்துசெல்லும் வண்டியில் பிணத்துடன் பிணமாக போவான் அப்பொழுது அந்த பாதையில் பார்க்கும் காட்சிகள் மிகவும் கொடியது.

இவ்வாறு இறந்தவர்களை எரிப்பதற்காக ஒருவன் இருப்பான் அவன் ஒரு கூன் முதுகு காரன். அவன் செயல்கள் அனைத்தும் கசாப்பு கடைகாரனை நமக்கு நினைவு படுத்தும். அவன் அசரும் சமயத்தில் அவனை கொன்றுவிட்டு திரும்புவான் அப்பொழுது அவன் நண்பனின் உடல் அந்த வண்டியில் கிழிக்கப்பட்ட மார்புடன் கிடக்கும்.

அவனை காத்துக்கொள்ள தப்பிக்கும் பொழுது ஒரு பெண் ஒரு படுபாதகனிடம் மாட்டி நரக வேதனை அனுபவைப்பாள். அந்த மனிதன் அந்த பெண்ணின் கண்களை வெல்டிங் பண்ண பயன்படுத்தும் நெருப்பை கொண்டு பிடுங்கி கொண்டு இருப்பான். அவனை கொன்றுவிட்டு அந்த பெண்ணை காப்பாற்றுவான் அப்பொழுது அந்த பெண்ணின் ஒரு கண் முழுவதுமாக பிடுங்காமல் அரைகுறையாக தொங்கிகொண்டு இருக்கும். அதனை துண்டிக்கும் பொழுது அதில் இருந்து என்னமோ வெளிவருவது போல காட்டுவார்கள் அதை நம் கண்களால் பார்க்க முடியாது . பின் அவளுடன் அவன் தப்பிப்பதாக படம் முடியும்.

இதன் தொடர்ச்சி Hostel II ஆக வந்தது அது இதனை விட இரண்டு மடங்கு கொடூரமானது-தூக்கத்தை கெடுத்த Hostel II [18+]


பின் குறிப்பு: என்னோட எச்சரிக்கையையும் மீறி யாராவது இதை படித்து இதெல்லாம் ஒரு படமா என்று நினைத்து இருந்தாலோ, படத்தை பார்க்க விரும்பினாலோ அல்லது கடுப்பாகி இருந்தாலோ அதற்க்கு நான் பொறுப்பல்ல.

அப்படி பார்க்கும் ஆர்வலர்களுக்கு அந்த படத்தின் சுட்டி
Hostel I


Monday, May 2, 2011

1,76,000 கோடி ரூபாய் நோட்டு


[இந்த மாதிரி ஒரே நோட்டா இருந்தா ஊழல் பண்ண எவ்வளவு சவ்கர்ய்மா இருக்கும் ]
[பணம் நம்மகிட்ட இருகரவரைக்கும் தான் நாம ராஜா அது மட்டும் இல்லன்னா நா கூஜா]
[பொறுமை கடலினும் பெரியது]

[விடாது கருப்பு, புலி உறுமுது புலி உறுமுது நிக்காம ஓடு! ஓடு! ஓடு!]
[புயலுக்கு பின் அமைதி, அமைதி ஆயிரம் வார்த்தைகள் சொல்லும்]
[இது மனித உரிமை மீறல், நாங்கள் வெளிநடப்பு செய்கிரோம்]
[2020-ல் இந்தியா வல்லரசாக எங்கள் அரசின் முதல் வெற்றி கனவுகள் தொடரும்]
[ஆட்டம் ஆரம்பமாகிடுச்சுடோய் இனிமேல் பாலுக்கு பால் பந்து சிக்சு போருன்னு பறக்கும் பாக்குறியா! பாக்குறியா! பாக்குறியா!]

.

Related Posts Plugin for WordPress, Blogger...