Monday, May 23, 2011

இயந்திரதிர்க்கும் இதயம்உண்டு [Wall-E]

மனிதனுக்கு மட்டும் தான் உணர்ச்சிகள் உண்டு என்பதை அடித்து உடைத்து எங்களால் மனிதனின் அத்தனை உணர்வுகைளும் காட்ச்சிகளாக இயந்திரங்களுக்கு கொடுக்க முடியும் என்று நிருபிக்க பட்டது Pixar என்னும் நிறுவனத்தின் கால் பதிப்புக்கு பிறகுதான்.

Pixar-ன் பல படைப்புகளில் Wall - E இதுவும் ஒன்று, நம்ம தமிழ் படத்துல எந்திரனுக்கு உயிர் கொடுக்க சூப்பர் ஸ்டார் தேவ பட்டார், ஆனா எங்களுக்கு எந்த சூப்பர் ஸ்டாரும் தேவ இல்ல இங்க நாங்கதான் சூப்பர் ஸ்டார்ன்னு சொல்லாம சொல்றாங்க நம்ம Pixar.Wall - E கதை என்னான்னா இன்னும் பல வருடங்கள் கடந்த பின்னர் பூமி மனுசங்க வாழ்றதுக்கு தகுந்த இடம் இல்லன்னு வானத்துல ஒரு சேட்ளைட் ஷிப் உருவாக்கி மக்கள் எல்லாம் அந்த ஷிப்ல போய் தங்குகிறாகள், பூமி எண்பது ஒன்று இருபதையே மறந்து விடுகிறார்கள் . அப்ப பூமில இருக்கற குப்பைகளை சுத்தம் பண்ண மனுசனால் படைக்கப்பட்ட ஒரு ரோபாட்(Wall - E) மட்டும் அதனுடைய வேலையை செய்துகிட்டு இருக்கு. பல வருடம் கடந்த பின்னர் உலவுபாக்க அனுப்பி வைக்க பட்ட ஒரு ரோபாட் பூமிக்கு வருது அதன் பெயர் EVE . அதனை பார்த்ததும் நம்ம Wall - E தனக்கு ஒரு துணை கிடைத்ததாக எண்ணி அதனுடன் உறவாடும். Wall - E தனது நட்பின் அடையாளமாக EVE-க்கு பூமில விளைஞ்ச ஒரு செடிய கொடுத்ததும் EVE தான் தேடிவந்தது அதுதான் என்று தெரிந்து அதனை தன்னுள் மறைத்து தனது செயல்களை இழந்து ஜடம்மாக மாறும் மற்றும் மனிதர்களுக்கு அந்த செய்தியை அனுப்பும். அப்ப EVE-வை எடுத்து செல்ல விமானம் வருகிறது. Wall - E அந்த விமானத்துடன் செல்லும். Wall - E மனிதர்கள் கொண்டு சென்ற தனது துணையாக கருதும் EVE-வை மனிதர்கள் இடமிருந்து மீட்டதா மனிதர்கள் மறுபடியும் பூமிக்கு வந்தார்களா என்பதுதான் கதை.

EVE உடன் செல்லும் Wall - E அங்கு இப்பொழுதைய மனிதர்களை பார்க்கும் பொழுது ரொம்ப பரிதாபமாக இருக்கும்,ஏன் என்றால் அங்கு இருக்கும் அனைவரும் உடல் உழைப்பு இல்லாமல் குண்டாகியிருப்பாங்க. மனிதர்கள் தங்கியிருக்கும் அனைத்தும் இயந்திரமயமானது, அவர்கள் ஒரு வேலை கூட செய்ய தேவை இல்லை, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சோபா இருக்கும் எங்க போகுனும்னாலும் அது அந்த இடத்துக்கு பறந்தே கூட்டி செல்லும், குளிக்கறதுல இருந்து ட்ரஸ் மாத்தறது வரைக்கும் எல்லாமே இயந்திரத்தின் உதவியுடன்தான், அது மட்டும் இல்லாமல் எல்லா இயந்திரங்கள் கட்டுப்பாடும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் கீழ் செயல்படும்.

பூமியில் இருந்து கொண்டுவரப்பட்ட EVE-வை ஷிப்பின் கேப்டனிடம் எடுத்து செல்லபட்டதும். அது எடுத்துவந்த அந்த செடியை பார்த்து இது எங்க இருந்து வந்ததுன்னு கேப்டன் கேட்கும்போது பூமின்னு கம்ப்யூட்டர் சொல்லும், பூமினா என்னன்னு நம்ம கேப்டன் கூகுள்ல தேடுவாறு அப்ப அது பூமிய பத்தன எல்லா விளக்கங்களையும் துப்பும் விடியோ வடிவில். சரி மறுபடியும் அங்க போகலாம்ன்னு முடிவெடுத்து இயந்திரங்களுக்கு ஆடர் கொடுப்பாரு கேப்டன், அப்பத்தான் நம்ம சூப்பர் கம்ப்யூட்டர் சூப்பரா ஆப்பு வைக்கும். உங்கள கட்டுபடுத்துவது நாங்க தான் எனக்கு நீ ஆடர் கொடுக்க முடியாதுன்னு கேப்டனை ஹவுஸ் அரஸ்ட் பண்ணிரும் சூப்பர் கம்ப்யூட்டர்.

கேப்டனின் நிலை கண்டு அவருக்கு Wall - E உதவும் பொழுது எதிர்பாராத விதமாக தனது உடல் பாகங்களை சிதைவடையும் சூழல் உண்டாகும். அப்பொழுது கேப்டன் முதல் முறையாக தன் இருகையில் இருந்து எழுந்து ஆட்டோமாடிக் சிஸ்டத்தை அணைக்கும் இடம் உணர்ச்சிமயமாக இருக்கும். மறுபடியும் கேப்டனின் உத்தரவின் படி பூமியை அடைந்ததும்.EVE Wall - Eக்கு அதன் உதிரிபாகங்களை அதன் இருப்பிடத்தில் இருந்து எடுத்து மாற்றும்.Wall - Eக்கு உயிர் வந்தவுடன் அது தனது பழைய வேலையான குப்பைகளை சுத்தம் செய்யபோகும்,Wall - E அதன் பழைய நியாபகங்களை இழந்து இருக்கும். Wall - Eக்கு திரும்ப பழைய நியாபகம் வந்ததா மனிதர்கள் பூமியில் என்ன செய்தார்கள் என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்


இந்த படத்தை பார்க்க நினைக்கும் ஆர்வளர்களுக்கு அதன் சுட்டி
Wall-E


இந்த படத்தை எடுத்த Pixar-ன் முழு விவரம் அக்கரைச்சீமை புகழ் ஹாலிவுட் பாலாவின் படைப்பு மின்புத்தகமாக Pixar Story.pdf

ஏனோ இப்பொழுது ஹாலிவுட் பாலா எழுதுவது இல்லை அவரின் எழுத்துக்கள் மிகவும் ரசனையான ஒன்று ஒரு நல்ல எழுத்தாளன் பதிவுலகை விட்டு சென்றது எனக்கு மட்டும் அல்ல அவரின் பல நண்பர்களுக்கும் இழப்புதான்.


3 comments:

  1. Wall - Eக்கு திரும்ப பழைய நியாபகம் வந்ததா மனிதர்கள் பூமியில் என்ன செய்தார்கள் என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்>>>>>

    குண்டு அண்ணே! இதுக்கு மேல நீங்க படம் பாக்கலியா... எங்கள பாக்கச் சொல்றிங்க...

    ReplyDelete
  2. //இதுக்கு மேல நீங்க படம் பாக்கலியா... எங்கள பாக்கச் சொல்றிங்க...//

    அட டைம் கெடச்சா பாரு இல்லனா மறுக்க ஒருக்கா டாக்டர் படம் பாரு!!!

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...