Saturday, May 28, 2011

நானும் எனது சரக்கும் [1]


இது ஒரு கலீஜ் பதிவு புடிக்காதவங்க அப்புடியே அப்பீட் ஆகிக்கலாம்., சரக்கடிச்சுட்டு சலம்பறத ரசிக்கறவங்க வாங்க பழகலாம்.

நமக்கு சரக்கடிக்கறது சக்கரபொங்கள் சாப்படரமாதிரி நம்ம அனுபவங்கள பத்தின பகுதிதான் இது. நா முதல் முதல்ல சரக்கடிக்க ஆரமிச்சது காலேஜ் ஜாயின் பண்ணி முதல் முறை டூர் போன போதுதான்.முதல் முறை கொடைக்கானல் சும்மா ஜிவ்வுன்னு குளுரு, பசங்க பாதி பேறு சரக்கடிக்க அமௌன்ட் கலக்ட்பன்னானுங்க, நம்ம பைய்யன் என் கிட்ட வந்து மச்சான் உனக்கு என்ன டா பீரா ஹாட்டான்னு கேட்டான்.மச்சி எனக்கு சரக்கடிச்சு பழக்கம் இல்லடான்னு அவன்கிட்ட சொன்ன. என்னைய ஏதோ ஏலியன பாக்கறமாதிரி ஒரு லுக்கு விட்டான் அத இன்ன வரைக்கும் மறக்க முடியாது. அப்பறம் அவன் ஒரு குரூப்ப கூட்டிகிட்டு வந்து மச்சி இது ஒன்னும் தப்பு இல்ல இப்ப அடிக்காம எப்ப நி அடிக்க போற சரி வா இன்னைக்கு நீ பஸ்ட்டுன்றதனால நீ பீர்ல இருந்து ஸ்டார்ட் பண்ணு. ரெண்டு ரூம் ஒவ்வொரு ரூம்ப்லையும் பத்து பத்து பேறு இதுல ஒரு ரூம் எக்ஸ்பீரியன்ஸ் இன்னொரு ரூம்ல எங்களமாதிரி அன்எக்ஸ்பீரியன்ஸ் ஆனா எங்களோட ரெண்டு எக்ஸ்பீரியன்ஸ்ச மட்டும் விட்டுடானுங்க.எங்க ரூம்ல வெறும் பீர் மட்டும் தான் நம்ம எக்ஸ்பீரியன்ஸ் எல்லாருக்கும் பீர பக்காவா கிளாஸ்ல ஊத்தி வச்சுட்டு ஒன்னு சொன்னான். எல்லாரும் அவங்க அவங்களோட கொலச்சாமிய நெனச்சு கும்புட்டு எடுத்து சியற்ஸ் சொல்லிட்டு அடிங்க. எம் பக்கத்துல இருந்த கிளாஸ் பஸ்ட்டு எடுக்கற நன்பன் என்கிட்ட ஒன்னு கேட்டான்.மச்சி இதுல தன்னிகழந்து அடிக்கலாமா இல்ல சோடா கலந்து அடிக்கலாமா. எனக்கும் அதே டவுட்டு தான் நம்ம எக்ஸ்பீரியன்ஸ் மச்சிகிட்ட கேலுடான்னு அவன திருப்பி விட்டன். அவன் அத கேட்ட ஒடனே. எங்கள பாத்து சரக்க யாரும் அடிக்காதிங்க நாங்க வரம்ன்னு சொல்லிட்டு நம்ம எக்ஸ்பீரியன்ஸ் ரெண்டு பேரும் இன்னொரு ரூம் போய்ட்டு தல்லாடிகிட்டு வந்தானுங்க. அவனுங்களோட அந்த மொத்த கும்பலும் வந்தது.

எங்க எல்லாத்தையும் சரக்குல கை வைக்க விடாம ஏதோ சீனியர் ஜுனியர ராகிங் பண்றமாதிரி எங்க எல்லாரையும் பாக்க வச்சு எங்க காசுல வங்கன பீர் அத்தனையும் ஒவ்வோருதனா சப்புகொட்டி குடிக்க ஆரமிச்சானுங்க.

நைட்டு 2 மணி வரைக்கும் எங்கள தூங்க விடல., அத்தன பேரும் மட்டையானதும் எங்க கூட இருந்த நல்ல பசங்க அத்தன பேரும் விட்டுது தொல்லன்னு தூங்க போய்ட்டானுங்க விடாது கருப்பு மாதிரி எனக்கு சரகடிச்சா என்ன பண்ணும்ன்னு தோனுச்சு. என்கிட்டே டவுட்டு கேட்ட கிளாஸ் பஸ்ட்ட தட்டி எழுப்பி அவன தயார் பண்ணி பீர் அடிக்க கணக்கு போட ஆரமிச்சோம். சரி வா பார்ல எவனாவது இருந்தான்னா ஆளுக்கு ஒரு பீர் வாங்கிட்டு வரலாம்ன்னு அவன கூட்டிகிட்டு போன.


வந்தவன் பீர் வாங்க காசுக்கு என்னடா பண்றது அப்புடின்னு கேட்டான். சரின்னு மட்டையான ஒவ்வொருத்தன் பர்ஸ்சயும் சல்லடையா சலிச்சு அதுல இருந்து ஒரு 300 ரூபா தேத்துனோம். பாருக்கு போய் தூங்கிட்டு இருந்த ஒரு ஆள எழுப்பி பீர் இருக்கான்னு கேட்டோம் பீர் ஸ்டாக் இல்ல பான்னு சொல்லிட்டாரு. அண்ணா அண்ணா பசங்கல்லாம் எங்களுக்கு வாங்கனத எங்களுக்கு குடுக்காம அடிச்சுடாங்கன்னு சொல்லி கெஞ்சி கேட்டோம். அதுக்கு அவரு சரி ஒரு நூறு ரூபா எனக்கு குடுத்தா ரெண்டு பீர் ரெடி பண்ணி கொடுக்கரன்னு சொன்னாரு. சரின்ன்னு சொல்லிட்டு பீர் என்ன ரேட்டுன்னு கேட்டோம் 200 ரூபான்னு சொன்னாரு என்னன்னா ட்ரிபுள் மடங்கா சொல்றிங்கன்னு கேட்டதுக்கு நா போய் அடுத்த பார்ல வாங்கிட்டு வரணும். அடுத்த பார் இங்க இருந்து 10 கிலோ மீட்டர் இருக்கும் அப்புடின்னு பிட்ட போட்டாரு. சரின்னு சொல்லிட்டு எங்க கிட்ட இருந்த காசையும் சேத்து 500 ரூபா அவருக்கு கொடுத்தோம்.

ஒரு 1 ஹவர் கழிச்சு வாங்கன்னு சொல்லிட்டு அவரு போயிட்டாரு. 1 ஹவர் கழிச்சு வந்தவரு ரெண்டு பீர் பாட்ளோட வந்தாரு. சரின்னு சொல்லிட்டு அத வாங்கிட்டு போய் நானும் என்னோட நண்பனும் அடிக்க ஒக்காந்தோம். ஓப்பனற எடுத்து ஓபன் பண்ண ட்ரை பண்ண. ரெண்டு பீறும் ஓபன் ஆகி இருந்தது. சரி அவரே ஓபன் பண்ணி கொண்டு வந்துடாருன்னு சொல்லி கிலாஸ்ல ஊத்திட்டு என்னோட நன்பன பாத்தன். அவன் மறுபடியும் என் கிட்ட கேட்டான் மச்சி தண்ணி மிக்ஸ் பண்ணி அடிக்கலாமா சோடா மிக்ஸ் பண்ணி அடிக்கலாமாடான்னு. சரி மொத வாட்டி அடிக்கிறோம் ரொம்ப போத ஏறிடும்ன்னு சொல்லி நாங்களும் தண்ணி மிக்ஸ் பண்ணி அடிச்சோம்.
ஆனா மொத ரவுண்டு போகும் போதே எனக்கும் என்னோட நண்பனுக்கும் செம்ம காட்டமா இருந்தது. என்னடா கசக்குதுன்னு சொல்லிட்டு அவன பாத்தேன். பாதி பீர் அடிச்சதும் அவன் மட்டையாகிட்டன். சரி வாங்கனத வேஸ்ட் பன்னகூடாதுன்னு அதையும் சேத்து அடிச்சுட்டு படுத்தவன் தான் மறாவது நாள் நா எழுதிரிக்கவே இல்ல.

மறாவது நாள் நைட்டு தான் எழுந்திரிச்சேன். என்ன பாத்து என்னோட கிளாஸ் பஸ்ட்டு பிரண்டு என் கிட்ட வந்து மச்சி நேத்து நாம அடிச்சது பீர் இல்லடா குதரைக்கு ஊத்தர ரம்முடான்னு சொன்னா.நா அவன பாத்து சரி நடந்தது நடந்து போச்சு விடு பர்ஸ்ல இருந்து ஒரு 500 ரூபா எடுத்து அவன்கிட்ட கொடுத்தேன். அத பாத்துட்டு டே சாமி நா வரலடா சாமின்னு ஓடபாத்தான். அவன புடிச்சு நிறுத்தி டே நமக்காக ரெண்டு பீர் வாங்கிட்டு வரன்னு சொல்லி ரெண்டு புள் வாங்கிட்டு வந்தாரு நெனச்சு பாரு ஒரு புள்ளு 250 ரூபான்னாலும் 500 ரூபா வந்துருக்கும் அது மட்டும் இல்லாம 10௦ கிலோ மீட்டர் வரைக்கும் போயிட்டு வந்துருக்காரு அவரு பாவம்டா அவருகிட்ட இந்த பணத்த குடுத்துடு எனக்கு தலசுத்துது முடிஞ்சா ஒரு கட்டிங் கெடைக்குமான்னு கேட்டுட்டு வான்னு சொல்லிட்டு படுத்தேன்.

முதல் முறை முழு திருப்தியுடம் தூங்கினேன்.

5 comments:

 1. சரி வா இன்னைக்கு நீ பஸ்ட்டுன்றதனால நீ பீர்ல இருந்து ஸ்டார்ட் பண்ணு. ரெண்டு ரூம் ஒவ்வொரு ரூம்ப்லையும் பத்து பத்து பேறு இதுல ஒரு ரூம் எக்ஸ்பீரியன்ஸ் இன்னொரு ரூம்ல எங்களமாதிரி அன்எக்ஸ்பீரியன்ஸ் ஆனா எங்களோட ரெண்டு எக்ஸ்பீரியன்ஸ்ச மட்டும் விட்டுடானுங்க.//

  முதல் முறை அடிக்கப் பண்ணும் போது, மந்திரமா இதனைத் தான் சொல்லுவாங்க பாஸ், அப்புறமா மப்பு ஏறியதும் நாமளே நமக்குக் கற்றுக் கொடுத்தவனுக்கு இந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுப்போம்.

  ReplyDelete
 2. தண்ணி அடிப்பது பற்றிய பகிர்வை சுவை பட எழுதியுள்ளீர்கள்.

  ReplyDelete
 3. Aiyaiyo kaiellam nadunkuthe... Machchi oru quarter sollen.

  ReplyDelete
 4. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...