Wednesday, May 25, 2011

நெருப்பின் நரகம்

ரவீந்தர் வடபழனியில இருந்து பைக்குல அடையார் வந்தான். அவன் பின்னாடி அவனோட பக்கத்துக்கு வீட்டு பாட்டி உக்காந்து இருந்தது. பாட்டிக்கு உடம்புக்கு முடியல அதனால ஹாஸ்பிட்டல்ல காட்ட போனான். அங்க பாட்டிக்கு ஸ்கேன் எடுக்கணும் ஒரு 1 மணி நேரம் ஆகும்னு சொன்னங்க. ஒடனே வெளிய வந்து பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்து டி கடைல ஒரு தம்மு வாங்கி பத்த வச்சான். அப்ப வடபழனிக்கு போற பஸ் வந்தது அதுல நமீதா மாதிரி நச்சுனு ஒரு பொண்ணு நின்னுக்கிட்டு இருந்தா. அவள பாத்ததும் கைல உள்ள சிகரட்ட கீழ போட்டுட்டு பஸ்சுல ஏறினான், உடனே கண்டக்டர் அவன பாத்து வேகமா வந்தான், சார் இது லேடிஸ் ஒன்லி கீழ இறங்குங்க என்றான், ஒன்னும் புரியாம தலைள கைய வச்சுக்கிட்டு கீழ இறங்கினான்.

இறங்கினவன பாத்து பலபேர் சிரிச்சாங்க, உடனே அவ அவன பார்த்தா ஒரு நிமிசத்துல ரண்டு மின்னல் சேர்ந்து அவன தாக்கன மாதிரி இருந்துசு அவனுக்கு, அவனுக்கு என்ன பன்றதுன்னு புரியல உடனே அவன் அவள பாத்து "நான் உன்கிட்ட பேசனும்னு" வாயால சைகையில சொன்னான். அவளுக்கு ஒன்னும் புரியல உடனே கீழ இறங்கி வந்துட்டா, அவன் முன்னாடி வந்து நின்னா.

"என்ன சார் எதோ சொன்னிங்க".

"உங்கள பாத்ததும் மனசுக்கு புடிச்சுப்போச்சு அதனாள தான் லேடிஸ் பசுன்னுகூட பக்கமா ஏரிட்டேன் ரொம்ப அவமானமா போச்சு, எம் பேரு ரவிந்தர் கல்யாணம்னு பன்னா உன்னதான் பன்னனும் நினைக்குரன்".

"அட பாவி இப்பதான் என்ன பாத்த அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் போயிட்ட என்ன தைரியம் உனக்கு".

"தைரியம் தான் அதோட ஒரு குட்டி அதிஸ்ட்டமும் இருக்கு பின்ன நா வாயல சைகையிள சொன்னத புரிஞ்சிகிட்டல அப்பத்தான் முடிவு பண்ணின நீ தான் என்னோட
wife come lovernu ".

"சரி நி பாக்க அழகாத்தான் இருக்க பட் என்ன பத்தி நி கொஞ்சம் தெரிஞ்சிக்கோ, எம் பேரு அமுதா. நான் MCA பைனல் இயர் படிக்குரேன், நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு எனக்கு ஒரு ஆச இருக்கு கல்யாணம் பன்னா ஒரு பெரிய கம்பனில சாப்ட்வேர் இஞ்சநியர தான் கட்டிக்கணும் நினைக்குரேன், நீ என்ன பன்ற?".

"இப்ப வரைக்கும் சும்மாதான் இருக்கன், நீ சொல்லிட்டல இனிமேல் சாப்ட்வேர் இஞ்சநியரா ஆஹரதுதான் என் முதல் வேல".

"பிள்டப்ளாம் இருக்கட்டும் மொதல்ல சொல்லு நி என்ன படிச்சுருக்க".

"நா BE மெக்கானிக்கல்".

"மெக்கானிக்கல் படிச்சுட்டு சாப்ட்வேர் இஞ்சநியரா".

"ஏம்மா! படிச்சா அந்த வேலைக்கு தான் போகணும்னு எழுதி வச்சுருக்கா என்ன".

"அப்படிலாம் ஒன்னும் இல்ல, சரி இன்னும் ஒரு வருஷம் இருக்கு என்னோட படிப்பு முடிய அதுக்கு அப்பரமா பாக்கலாம்".

"சரி நான் எப்படி உன்ன contact பண்றது".

"amuthaa1984@gmail.com இது என்னோட மெயில் ID , சரி ஒரு வருஷம் பிறக்கு என்ன contact பன்னு நி சாப்ட்வேர் இஞ்சநியரா இருந்தா".

சில மாதங்கள் போனது ரவீந்தர் வடபழனி NIIT - ல சேர்ந்து PGDCA பண்ண ஆரமிச்சான், 6 மாசம் அவன் அந்த கோர்ச முடிக்கரப்ப செண்டர்ல ஒரு job offer ஏர்ப்பாடு பன்னாங்க அதுல அவனும் கலந்துகிட்டான். அதுல பல பெரிய கம்பனிலாம் வந்துருந்துச்சு HCL , Infosys , wipro இன்னு பல கம்பனி ஏன்னா அது NIIT தொடங்கி 25 ஆவது ஆண்டு அதனால அதோட owner எல்லா கம்பனியோட பேசி அதர்க்கு ஏர்பாடு பன்னியிருக்காரு. அது அவனுக்கு கெடச்ச அதிஷ்டம்

அவன் BE படிச்சதால நல்ல மேக்ஸ் பவர் அவனுக்கு அதனால பஸ்ட் ரவுண்டுல சுலபமா செலக்ட் ஆஹிட்டான். செகண்ட் ரவுண்டு

ஒரு பெரிய ஏசி ரூம் அது அவனுக்கு புதுசு இல்ல ஆனா அந்த ரூம்ல நாலு பேரு கோட்டும் சூட்டுமா உக்காந்துருக்கும் போது அவனுக்கு சின்னதா ஒரு பயத்த உண்டாக்குச்சு. உள்ள போனான். பயோ டேட்டா பாத்துட்டு சில விஷயங்கள் அவன் படிச்சத பத்தி கேக்க ஆரமிச்சாங்க சாதரணமா பீட்டர் இங்க்ளிஷ்ள கத உட்டான். என்ன ஒரு வில்ல தனம் அவன் ரெண்டாவது ரவுண்டும் செலக்ட் ஆஹிட்டான்.

மூணாவது ரவுண்டு அதாங்க HR இந்த சொந்த கத சோக கதைல்லாம் கேப்பாங்கலே அந்த ரவுண்டுதான் போனான்.

வெள்ளையா பாக்க சும்மா அரபிய குதர கனக்க ஒரு பிகரு ஒக்காந்து இருந்துச்சு., அத பாத்ததும் அவனால கண்ட்ரோல் பன்ன முடியல என்னதான் லட்சிய வெறியோட ஒடனாலும் பசின்னு வந்தா சாப்ட்டு தான அஹனும்.

அவன பாத்து அது கத கேக்க ஆரமிச்சது.

"சொல்லுங்க ஒங்க native எது".

"இங்கதாங்க வடபழனி".

"மெக்கானிக்கல் படிச்சுட்டு எதுக்கு சாப்ட்வேர் choose பன்னிங்க".

"இல்லைங்க machine-ன கைல வேல வங்கறத விட brain-ல வேல வாங்கறது எனக்கு புடிச்சிருக்கு அதனாலதான் இந்த பீல்ட செலக்ட் பன்ன".

"சரி சாப்ட்வேர் கோர்ஸ் ஒரு ஆறு மாசமாத்தான் படிசுருக்கிங்க, கம்பனி இருக்கரது மதுரைல நீங்க அங்க வருவீங்களா".

"இல்ல நான் சென்னைல மட்டும் தான் வேல பாப்பேன், சொன்னவன் சடார்னு எழுந்தான்".

"ஒரு நிமிஷம், ட்ரைனிங் - ல மட்டும் அங்க இருங்க நீங்க நல்லா பர்பாம் பண்ணா உங்களுக்கு சென்னை கம்பனில டிரான்ஸ்பர் கொடுக்குரோம்".

"சரி என்னைக்கு வந்து join பன்னனும்".

இவன் கைல offer letter வாங்கிட்டு வெளிய வந்தான். அப்பத்தான் அமுதா அதே NIIT - ல project பண்றதுக்கு name register பன்னிகிட்டு இருந்தா.

அமுதாவ NIIT செண்டர்ல பாப்பான்னு அவன் நெனைக்கல, அவனுக்கு கெடச்ச அந்த job offera அவகிட்ட காட்டி I love you சொல்ல முடிவு பன்னி போனான். அமுதாவ பார்த்து ஹாய்னு சொன்னான். அமுதா அவன பார்த்ததும் ஒரு நிமிஷம் பிரீஸ் ஆஹி நின்னா. அப்பறம் NIIT ல வேல பாக்கற ஸ்டாப் Hellow மேடம்னு சொன்னதும் அவ கைல இருந்த அப்ளிகேசன அவங்க கிட்ட கொடுத்துட்டு இவன பார்த்து வந்தா.

"என்ன NIIT யாராவது இங்க படிக்கராங்களா?".

"அதலாம் ஒன்னும் இல்ல நான் தான் இங்க படிக்க வந்தேன்".

"என்ன நான் சொன்னதுக்காக முயற்சி செய்றியா".

"இல்ல நி சொன்னத செஞ்சு முடிசுட்டன், இத பாரு என்னோட job offer letter".

"கொஞ்சம் பொரு நான் சொன்ன ஒருவருஷ டைம் முடியல".

"சரி கீழ கொஞ்சம் வரியா".

"எதுக்கு?".

"காபி சாப்டதான்".

"என்ன வேல கேடச்சுதுக்கு ட்ரீட்டா".

"அப்படிதான் வச்சுக்கு வரியா".

"அமுதா கைல இருந்த செல்போன் அடிச்சுது., அமுதா அத ஆன் பன்னி பேச ஆரமிச்சா
ஹாய் எங்க இருக்க ......... சரி கீழயே இருங்க நான் வரன்".

"எனக்காக கீழ என்னோட friends வெய்ட்பன்ராங்க அவங்களையும் கூட்டிட்டு போலாமா".

"புல்லையாருக்கே தேங்கா உடைக்குரேன் மூஞ்சூறுக்கு கொளுகட்டதான வா".

"டாய் ...."

"சாரிமா! வா போலாம்".

கீழ போனதும் பைக்குள நாலு பசங்க சும்மா MGR கணக்கா நின்னுகிட்டு இருந்தானுங்க,
அவனுங்கள பாத்து இவ ஹாய் ராம் , குமார் ,... சொல்லிட்டு அவங்க கிட்ட போனா.

இவன் நெருப்புல மாட்டுன எலி மாதிரி நின்னான்....

அமுதா அந்த நன்கு நண்பர்பகளையும் பார்த்துகிட்டு ஹாய் டானு கை ஆட்டிகிட்டு போனாள்.,

"என்னங்கடா இத்தனைபேரும் கூட்டமா?".

"உன்ன பிக்கப் பன்னத்தான் வந்தோம், அப்பறம் யாரு புதுசா நம்ம frienda?".

"இல்ல டா நான் சொன்னல்ல அந்த அடையார் பஸ் பார்ட்டி இது தான்".

"ஹலோவ் பாஸ் என்னபன்ரீங்க".

"இன்னைக்கு தான் சாப்ட்வேர் கம்பெனில வேல கெடச்சது".

"அட கையகொடுங்க பாஸ் எப்படியோ சொன்ன மாதிரி முடிசுட்டிங்க அப்பரம் டிரீட்டு?".

"வாங்க காபி சாப் போலாம்".

"அட இருங்க பாஸ் புதுசா வேல கெடசுருக்கு அதுமட்டுமா நம்ம அமுதாவ வேற கரக்ட் பண்ணிருக்கிங்க அப்பரம் என்ன இது சின்ன புள்ள தனமா, வாங்க பாஸ் பப்புக்கு போலாம்".

"இல்ல வேனாம்".

"என்ன அமுதா பால்குடிகிற புள்ளைய போய் கவுத்துட்ட நி சொல்லு அமுதா".

"என்ன வாங்க போலாம்".

அவளிடம் இருந்து அந்த வார்த்தை வரும் என்று அவன் நினைக்கவில்லை.







என்ன போலாமா என்று அமுதா அவனை அழைக்க பதில் எதுவும் சொல்லாமல் பைக்கை உதைதான்.அவனுக்கு முன்னதாக அந்த நான்கு நல்லவர்களும் பைக்கை முருக்கினார்கள்
அமுதா அவன் பின்னால் உட்கார்ந்து மகாபல்லிபுரம் ரெஸ்டாரன் ஒன்றுக்கு பறந்தார்கள்.

"என்ன அமுதா பேசறதுக்கு ஒரு வருஷம் டைம் சொன்ன இப்ப".

"அதவிடு நாம இப்ப எங்க போரம் தெரியும்மா".

"ரெஸ்டாரன் தான இல்ல பின்ன எங்க காட்டேஜ்க்கு".

"என்ன காட்டேஜா அமுதா நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்".

"பேசலாம் வா".

அந்த நான்கு பேரையும் பின் தொடர்ந்து ரவீந்தர் பைக் பறந்தது.மணல் பங்கான அந்த ரோடு ஒரு தனி பாதை பிரிந்தது அதில் அந்த நான்கு நபர்களின் வண்டி நுழைய இவனது வண்டியும் அவர்களை பின்தொடர்ந்தது.ஒரு தனி பங்களா காட்சி அளித்தது.

"என்ன அமுதா இதானா".

"இதான் எப்படி இருக்கு".

"என்ன அமுதா நி இவ்வளவு பெரிய ஆளா".

"உங்க அப்பா என்ன பன்றாரு?".

"சொல்றன் வா...".

காட்டேஜ் கதவு திறந்தது.
"என்ன அமுதா இப்பவாவது சொல்லு உங்க அப்பா என்ன பண்றாரு?".

"சொல்றன் வா உள்ள போலாம்".

அந்த பெரிய காட்டேஜ நோக்கி உள்ள போனார்கள்.போனதும் உள்ள ஒரு 50 வயது பெரியவர் சும்மா கைல சாம்பெயின் உடன் ஜலக்ரீடைல இருந்தார்.அந்த நான்கு நல்லவர்களும் அவரை பார்த்து ஹாய் அங்குள் சொல்லி போனார்கள்.

"அங்குள் நம்ம அமுதா ஒரு பால்குடிக்கிற பப்பாவ கரக்ட்பன்னி கூட்டிகிட்டு வரா பாருங்க".

"அப்பா இது ரவீந்தர்".

"வாங்க தம்பி உக்காருங்க தம்பி என்ன பன்ரிங்க"

"இப்பதான் சாப்ட்வேர் கம்பனில வேலைக்கு சேர்ந்தேன்".

"சரி என்னோட பொண்ணு சொன்னத முடிசிடிங்க இப்ப நான்சொல்றத செய்வீங்களா?".

"சாரி சார் நான் ஒங்க பொண்ண மட்டும்தான் லவ் பன்றன்".

"அட அது இல்ல தம்பி நான்சொல்றத கேளுங்க".

எம் பேரு சண்முகசுந்தரம் நான் கோயம்புத்தூர்ல ஒரு மில் ஓனரா இருக்கேன்,
இது என்னோட ஒரே பொண்ணு அவ ஆசைக்கு நான்குருக்க வந்ததே இல்ல.
இப்ப அவ உன்ன ஆசபடுரா சரி ஆனா எனக்கு வரமாப்புள. ஒரு சாதாரண மாச கூலியா இருக்கறத நான் விரும்பல. நா ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஓப்பன் பண்றன் அதுக்கு நீங்கதான் MD. சரின்னு சொன்னா என்னோட பொண்ண உங்களுக்கு கொடுக்கறதுல எந்த வருத்தமும் இல்ல.

"ரவீந்தர், மஞ்ச தண்ணி ஊத்தன ஆடு மாதிரி தலை ஆட்டினான்".

-சுபம்.

ரிப்பீட்டு


8 comments:

  1. ரொம்பாஆஆஆஆஅ நீளமா இருக்கு ஹி ஹி ஹி

    ReplyDelete
  2. இருக்கட்டும் பொறுமையா ரெண்டு மூணு நாள் படிங்க அடுத்த பதிவு கொஞ்ஜம் லேட் ஆகும்.

    ReplyDelete
  3. நீளமா இருந்தாலும் நல்லாய் இருக்கு பாஸ்..
    தொடருங்க...
    படம்-சூப்பர் பொசிசன்!!அதனால ஒட்டு ரெண்டு போடுவம்

    ReplyDelete
  4. முன்னவீனத்துவத்தையும் பின்னவீனத்துவத்தையும் கலக்கி காக்டெயில் பாணியில ஒரு கதை எழுதி இருக்கீங்களே ...

    ReplyDelete
  5. என்னது முன்னவீனத்துவம் பின்னவீனத்துவத்தையுமா ஏதோ புரியாத வார்த்தையா இருக்கு கொஞ்சம் பயமா இருக்கு!

    ReplyDelete
  6. சுபம்? முடிச்சிடீங்களா பாஸ்! ஏதோ ஒரு த்ரில்லர் கதை மாதிரியே படு ஸ்பீடா போச்சு....நான் ஏதோ தொடர் கதைன்னு நினைச்சேன்!

    ReplyDelete
  7. இதுவே கொஞ்சம் பெருசா இருக்கு இதுல தொடர்கதை எழுதி தொல்ல பண்ணனுமான்னு நெனச்சுதான் முடிச்சுடன் ஜீ!

    ReplyDelete
  8. மாப்ள விடுகதையா இந்த வாழ்கை!

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...