Saturday, May 7, 2011

தூக்கத்தை கெடுத்த Hostel II [18+]

எச்சரிக்கை: ஹாரர் திரைப்படங்கள் பிடிக்காதவங்களும், பயந்த சுபாவம், இளகிய மனம் கொண்டவர்கள் அப்படியே அப்பீட்டு ஆகிக்குங்க படித்து விட்டு என்னை திட்டக்கூடாது.

Hostel முதல் பாகத்தை பற்றி படிக்காதவர்களுக்கு
தூக்கத்தை கெடுத்த Hostel I [18+]

Hostel II


இதில் மூன்று பசங்களுக்கு பதிலாக மூன்று பெண்கள். இதிலும் ஒரு பெண் மட்டும் தப்பிப்பாள் கடைசியாக அவள் தப்பிக்கும் காட்சி கொடூரமாக இருந்தாலும் அதுதான் சரி என்று தோன்றும்.

முதல் படத்தினை போன்றே இவர்களும் ஒரு ஹோட்டலில் தங்குவார்கள். ஹோட்டல் பெயர் தான் Hostel . அவர்கள் மட்டும் அல்ல அந்த ஹோட்டலில் தங்கி இருக்கும் அனைவரையும் கடத்திவிடுவார்கள். அவர்களின் புகைப்படங்களை இன்டர்நெட்டில் பெட் வைப்பார்கள். பல சைக்கோக்கள் பலரை விலைக்கு வாங்குவார்கள்.

முதலில் மாட்டும் பெண்ணை ஒரு ரத்த வெறி பிடித்த ராட்சசியிடம் விடுவார்கள். அந்த பெண்ணை தலை கீழாக கட்டி ஒரு குளியல் அறை தொட்டி முன் தொங்க விடுவார்கள். வருபவளுக்கு குளிக்க வேண்டும் தண்ணீரில் அல்ல ரத்தத்தில். அந்த பெண்ணை அந்நியன் போஸ்டர்ல ஒரு ஆள் உயர கோடாரி வச்சுருக்க மாதிரி ஒரு ஸ்டில் இருக்குமே அந்த கோடாரிய வச்சு அவள செதில் செதில்லா வெட்டுவா அவ ஒடம்புல இருந்து கொட்ற ரத்ததுள குளிப்பா. கடைசியா அவ கழுத்த வெட்டும் போது ரத்தம் சவர் மாதிரி பீச்சி அடிக்கும் முடியல

ரெண்டாவதும் மூணாவது பெண்ணுகளும் ரெண்டு நண்பர்களிடம் மாட்டுவார்கள். அதில் இரண்டாவது பெண்ணை கொடுமை படுத்துபவன் ஒரு ஜாலிக்காக பண்ணுவதாக நினைத்துகொண்டு டைல் அறுக்கற எலக்ட்ரிக் ரம்பத்த அவ முகத்துக்கு நேரா நீட்டி விளையாடுவான். எதிபாராதா விதமாக உயிருக்காக துள்ளும் அவள் முகம் அதில் மாட்டும், முகத்தில் இருந்து அதை பிடுங்கும் போது அவனால் அவன் செய்தததை நினைத்து மனம் வருந்தி அந்த இடத்தை விட்டு போக முடிவெடுப்பான். ஏற்கனவே சொன்ன மாதிரி கொலை செய்யாதவர்களை போட்டு தள்ளுவார்கள் அதுவும் எப்படி இரண்டு வேட்டை நாய்கள் விட்டு கடித்து குதற அவன் உடலை பிஞ்ச ரொட்டி துண்டு மாதிரி கொண்டுபோறது பாக்க முடியல.

இந்த சிறைச்சாலையில் உள்ள பாதுகாவலர்கள் உடன் இருக்கும் அந்த இரு நாய்கள், இதை போல ஒரு பயங்கரமான நாயையும் நான் பார்த்தது இல்லை.

இரண்டாவது பெண்ணின் காதலன் ஒரு நரமாமிசம் தின்னும் ஜந்துவிடம் மாட்டுவான் அவனை படுக்க வைத்து அவன் துடை கறியை கத்தியால் அறுத்து அதை ஒரு டின்னர் டேபுல் முன் போய் கேண்டில் லைட் முன்னாள் அதை வைத்து ரசித்து சப்பிடுவது போல காட்டுவார்கள். Eaten Alive- ல கூட மனுசன தின்றவனுகள பாத்தா இவனுங்க திம்பானுங்கன்னு தோணும் ஆனா இவன பாத்தா எதோ படிச்சு முடிச்சு டாக்டர் பட்டம் வாங்கி பல வருஷம் வேலபாத்தமாதிரி நல்லாத்தான் இருப்பான் ஆனா அவன் பண்றத பாத்தாதான் கொமட்டிக்கிட்டு வரும்

மூன்றாவதா மாட்ன பெண்ணை அந்த இரண்டு நண்பர்களில் ஒருவன் முதலில் இந்த இடத்திர்க்கு தன் நண்பனின் தூண்டுதலால் தான் வந்தேன் எனக்கு இதில் இஷ்ட்டம் இல்லை என்று அவளிடன் சொல்லிக்கொண்டு இருப்பான். அவன் நண்பன் இறந்து அவனை கொண்டு செல்வதை அவனுக்கு தெரியபடுத்டுவார்கள். அதனை பார்த்த பின் கோவம் வந்து அரைகுறையாக நண்பன் விட்ட அந்த இரண்டாவது பெண்ணை கொன்றுவிட்டு அந்த மூன்றாவது பெண்ணை கொல்ல வருவான். அவளை முதலில் ரேப் பண்ண முயற்சி செய்வான் அவள் அவனை மடக்கி கட்டி போட்டு அவன் உடம்பில் கத்தி வைத்து மிரட்டுவாள். அந்த இடத்தின் தலைவன் அவளை விடுவிக்க வேண்டும் என்றால் அவன் கொடுத்த பணத்தை விட அதிகமாக கொடுக்க வேண்டும் என்று கூறுவான் அதற்க்கு சம்மதிப்பால். அது மட்டும் இல்லாமல் அவனை கொல்ல வேண்டும் அதற்கும் ஒத்துகொல்வாள். அவனை கொல்வது டெரராக இருக்கும்.

கடைசியாக அவளுக்கு பச்சை குத்தி அவளை விடுவிப்பார்கள். அவள் கடைசியாக தன் தோழிகளை கொன்றதுக்கு காரணமான அந்த ஒரு பெண் ப்ரோகரை தலையை துண்டிப்பதோடு படம் முடியும் அந்த வெட்டப்பட்ட தலையை புட்பால் மாதிரி அங்கு உள்ள சிறுவர்கள் விளையாடுவார்கள்.

ஆரம்பம் முதல் இரு படங்களிளும் பல A ரக காட்சிகள் படமுளுவதும் விரவிக்கிடக்கும்.


இந்த படத்தின் இயக்குனர் பெயர் Eli Roth

இந்த படத்தை தயாரித்தது, படு பயங்கர ஹாரர் படங்களை தயாரித்து புகழ் பெற்ற Lion Gates நிறுவனமே.

இந்த கதை நடப்பதாக காட்டப்படும் நாடு ஸ்லோவேகியா நாடு, இந்த படத்திற்கு ஸ்லோவேகியா நாடு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லையா என்று எனக்கு தெரியவில்லை, தெரிந்தவர்கள் கூறலாம்.

இவை எல்லாவற்றையும் விட கொடுமையான விஷயம் இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது தான்.

ஏற்கனவே இந்த படத்தை பார்த்தவர்களுக்கு என்னை போலவே பல அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன் . இரண்டு நாள் தூக்கம் வராமல் தவித்தவர்கள் கூட உண்டு.

பின் குறிப்பு: என்னோட எச்சரிக்கையையும் மீறி யாராவது இதை படித்து இதெல்லாம் ஒரு படமா என்று நினைத்து இருந்தாலோ, படத்தை பார்க்க விரும்பினாலோ அல்லது கடுப்பாகி இருந்தாலோ அதற்க்கு நான் பொறுப்பல்ல.

அப்படி பார்க்கும் ஆர்வலர்களுக்கு அந்த படத்தின் சுட்டி
Hostel II


14 comments:

 1. என்னப்பா இது இப்படி பயமுறுத்திட்டீங்க..?

  ReplyDelete
 2. சைக்கோத்தனத்தின் உச்சமா இருக்கு...இந்த படம் பார்க்குறவன்...ம்..என்ன சொல்ல

  ReplyDelete
 3. இந்த கதை நடப்பதாக காட்டப்படும் நாடு ஸ்லோவேகியா நாடு, இந்த படத்திற்கு ஸ்லோவேகியா நாடு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லையா என்று எனக்கு தெரியவில்லை, தெரிந்தவர்கள் கூறலாம்.//

  ஸ்லோவேகியா - அப்டீன்னு ஒரு நாடு இருந்தது தெரியும்! பட் அது எதிர்ச்சுதா இல்லையா னு தெரியல! ஹி.......ஹி......!!!!

  ReplyDelete
 4. யோவ் நாராயணா, தமிழ்மணம் ஓட்டு போட்டியாய்யா...

  ReplyDelete
 5. //MANO நாஞ்சில் மனோ said... 5 ஐயய்யோ.... // என்ன அலறுரீறு ஒன்ற பதிவில நீறு போட்ட மொத மேட்டரவிடவா இது பயங்கரமா இருக்கு

  ReplyDelete
 6. ஹாஸ்டல் சீரிஸ் படங்கள், ஹாரர் கேட்டகிரிலையே வராது. அது "டார்ச்சர் போர்ன்" கேட்டகிரிய சேர்ந்த படம். :p

  ReplyDelete
 7. it's a nice movie, if you can't enjoy it how u'll enjoy suraa................

  ReplyDelete
 8. //it's a nice movie, if you can't enjoy it how u'll enjoy suraa................ //

  ha ha i am accept...

  ReplyDelete
 9. இரண்டையும் மிகவம் ரசித்துப் பார்தேன்...நானும் ஒரு சைக்கோதான்...:))

  ReplyDelete
 10. பலருக்கும் இந்தமாதிரி ரத்தமும் சதையுமான படங்கள் புடிக்கும் போலத்தான் தெரிகிறது.

  நாஞ்சில் பிரதாப் வந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 11. நம்ம டாக்குடறு நடிச்ச படங்களை விடவா டெரரா இருக்கும்?

  ReplyDelete
 12. // "ராஜா" said... 13
  நம்ம டாக்குடறு நடிச்ச படங்களை விடவா டெரரா இருக்கும்? //

  அப்புடி சொல்ல முடியாது இருந்தாலும் நம்மள கொஞ்சம் மெரட்டிடுச்சு.

  ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...