Saturday, May 7, 2011

தூக்கத்தை கெடுத்த Hostel I [18+]

எச்சரிக்கை: ஹாரர் திரைப்படங்கள் பிடிக்காதவங்களும், பயந்த சுபாவம், இளகிய மனம் கொண்டவர்கள் அப்படியே அப்பீட்டு ஆகிக்குங்க படித்து விட்டு என்னை திட்டக்கூடாது.

பல பேய் படங்கள் ஹி ஹி-னு சிரிச்சு பாத்து என்ஜாய் பன்னிருகண் ஆனா ஒரு வருசத்துக்கு முன்னால பாத்த Hostel என்னை உண்மையில் மிரட்டியது.ஈவில் டெட் கூட என்னை இந்த அளவுக்கு பயமுறுத்தியது இல்லை. Hostel படத்த மறுபடியும் பாக்க சந்தர்ப்பம் கிடைத்தது முடியல.

பெரும்பாலும் horror படங்கள் சவுண்ட் எபக்ட்டும் காட்சிகளும் கொடூரமாக இருக்கும். தலை துண்டாக பறப்பது நெருப்பில் வாட்டப்பட்ட முகங்கள் என்று நம்மை அருவருக்க செய்யும். இந்த மாதிரி படம் ஒன்றும் பெரிதல்ல ஆனால் வாழ்க்கையில் இந்த மாதிரி சம்பவங்கள் நிகழ்வது சாத்தியமற்றது அபூர்வமானது.

ஆனால் இதில் நிகழ் கால மனிதர்கள் சாதரணமாக நாம் பார்க்கும் முகங்கள் செய்வதாக காட்டப்படும் காட்சிகள் நம்மை மிரட்டுகிறது. அன்பே சிவம் படத்தில் கமல் மாதவன்கிட்ட சொல்வாரே தீவரவாதிகள் என்ன மாதிரி கொடூரமான முகத்தோட இருக்கணும்ன்னு அவசியம் இல்ல உன்ன மாதிரி நீட்டா ஹன்ட்சமா இருக்கலாம். அந்த மாதிரி தான் இந்த படத்தில் பார்க்கும் மனிதர்கள் மிகவும் சாதாரண தொனியில் காட்டபடுவார்கள் ஆனால் அவர்கள் பண்ணும் செயல்கள் நம்மை அதிர்சிக்குல்லாக்கும்


Hotel 1இந்த படத்தோட கதை என்னன்னா மூன்று அமெரிக்க இளைஞர்கள் ஐரோப்பாவிற்கு சுற்றுலா வருகிறார்கள், அங்கே ஒரு பெண் ப்ரோக்கரின் தூண்டுதலால் ஸ்லோவேகியா செல்கிறார்கள், அங்கே மூவரில் ஒருவர் காணாமல் போய் விட அவரை தேடும் முயற்சியின் போது இன்னொருவரும் காணாமல் போக எஞ்சி இருக்கும் ஒருவர் என்ன ஆனார் என்பதே கதை.

இதிலென்னயா பயப்படுற மாதிரி இருக்குன்னு நினைக்காதீர்கள், இவ்வாறு கடத்தபடுகிறவர்களை ஒரு தனி அறையில் சிறைச்சாலை போன்று அடைக்கப்பட்டு இருப்பார்கள். அவர்களை உலகில் உள்ள பணக்கார சைக்கோகளுக்கு விலை பேசுவார்கள். பெட்டில் ஜெய்பவர்களுக்கு அந்த நபர் சொந்தம் அவர்களை என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம். என்ன வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் தான்.

ஒரு பெண்ணை கற்பழிக்க வேண்டுமா முழு பாதுகாப்புடன் செய்யலாம், ஒருத்தன் கை தனியா கால் தனியா எடுக்கனுமா நோ ப்ரோப்ளம், ஒருத்தன் வயித்துல என்னெல்லாம் இருக்குதுன்னு ஆராய்ச்சி பண்ணனுமா டூல்ஸ் தயாரா இருக்கு.

இதில் மாட்டும் ஒருவன் ஒரு பைத்தியகாறனிடம் மாட்டுவான் அவனுக்கு சிறுவயதில் ஒரு அறுவை சிகிச்சை நிபுனறாகவேண்டும் என்று கனவு அது அவனால் முடியாமல் போகிறது. அதற்காக இதில் மாட்டியவனை உயிருடன் அறுவை சிகிச்சை செய்து பார்க்க முடிவெடுப்பான். முதலில் அவன் கால் நரம்புகளை அறுத்து அவனை கட்டுக்கலில்
இருந்து விடுவிப்பான். கால் நரம்புகள் அறுபட்டதால் அவனால் ஓட முடியாது பின் நடப்பது எல்லாம் இளகிய மனம்படைதவர்கள் சத்தியமாக பார்க்க முடியாது.

இந்த இடத்திற்கு யார் பணம் கட்டி வந்தாலும் அவர்களுடைய சின்னத்தை பச்சை குத்தி கொள்ள வேண்டும், முக்கியமான நிபந்தனை யாரையாவது கொலை செய்தால் தான் வெளியே போக முடியும், இல்லை என்றால் அவரையே போட்டு தள்ளி விடுவார்கள். இது தான் அவர்கள் காண்ட்ராக்ட்.

டார்ச்சர் அறையில் டார்ச்சர் செய்வதற்கென்றே பல உபகரணங்கள் வைத்து இருப்பார்கள் அதை பார்த்தாலே அங்கே இருப்பவர் பயத்திலேயே செத்து போய் விடுவார் அந்த அளவுக்கு பயங்கரமாக இருக்கும்.

மூன்றாவதாக மாட்டுபவன் மட்டும் தப்பிப்பதாக காட்டப்படும். அவன் ஒரு ஹிட்லர் நாசி படை வீரனிடம் மாட்டுவான் அவனை ஏமாற்றி தப்பிப்பான் தப்பிக்கும்போது அவன் ஒரு விரல் துண்டிக்கப்படும் அதை எடுத்துகொண்டு கொடூரமாக அறுக்கப்பட்டு சிதைக்கப்பட்ட உடல்களை எரிக்க எடுத்துசெல்லும் வண்டியில் பிணத்துடன் பிணமாக போவான் அப்பொழுது அந்த பாதையில் பார்க்கும் காட்சிகள் மிகவும் கொடியது.

இவ்வாறு இறந்தவர்களை எரிப்பதற்காக ஒருவன் இருப்பான் அவன் ஒரு கூன் முதுகு காரன். அவன் செயல்கள் அனைத்தும் கசாப்பு கடைகாரனை நமக்கு நினைவு படுத்தும். அவன் அசரும் சமயத்தில் அவனை கொன்றுவிட்டு திரும்புவான் அப்பொழுது அவன் நண்பனின் உடல் அந்த வண்டியில் கிழிக்கப்பட்ட மார்புடன் கிடக்கும்.

அவனை காத்துக்கொள்ள தப்பிக்கும் பொழுது ஒரு பெண் ஒரு படுபாதகனிடம் மாட்டி நரக வேதனை அனுபவைப்பாள். அந்த மனிதன் அந்த பெண்ணின் கண்களை வெல்டிங் பண்ண பயன்படுத்தும் நெருப்பை கொண்டு பிடுங்கி கொண்டு இருப்பான். அவனை கொன்றுவிட்டு அந்த பெண்ணை காப்பாற்றுவான் அப்பொழுது அந்த பெண்ணின் ஒரு கண் முழுவதுமாக பிடுங்காமல் அரைகுறையாக தொங்கிகொண்டு இருக்கும். அதனை துண்டிக்கும் பொழுது அதில் இருந்து என்னமோ வெளிவருவது போல காட்டுவார்கள் அதை நம் கண்களால் பார்க்க முடியாது . பின் அவளுடன் அவன் தப்பிப்பதாக படம் முடியும்.

இதன் தொடர்ச்சி Hostel II ஆக வந்தது அது இதனை விட இரண்டு மடங்கு கொடூரமானது-தூக்கத்தை கெடுத்த Hostel II [18+]


பின் குறிப்பு: என்னோட எச்சரிக்கையையும் மீறி யாராவது இதை படித்து இதெல்லாம் ஒரு படமா என்று நினைத்து இருந்தாலோ, படத்தை பார்க்க விரும்பினாலோ அல்லது கடுப்பாகி இருந்தாலோ அதற்க்கு நான் பொறுப்பல்ல.

அப்படி பார்க்கும் ஆர்வலர்களுக்கு அந்த படத்தின் சுட்டி
Hostel I


No comments:

Post a Comment

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...