Wednesday, May 18, 2011

கொல்லாமல் கொன்றுபுதைத்தாயே

திருச்சி சத்திரம் பஸ்டாப்ப மறக்க முடியாது, கைல காசு இல்லனாலும் மனசுல ஜெயிச்சுடுவோம்னு நம்பிகையோட இருந்த நாட்கள். ஜூலை 13, 2009 எஸ் அன்னைக்குதான் நா அவள முதல் முறை பார்த்தன், ஸ்ரீரங்கம் பஸ்க்காக நின்னுகிட்டு இருந்தா மஞ்சள் சுடிதார் அந்த கலருக்கு மேட்சிங்கா ஒரு பொட்டு, ரெண்டு சின்ன உஞ்ஜல் மாதிரி அவ காதுல தொங்கிட்டு இருந்த அந்த ஜிமுக்கி இப்ப நெனச்சாலும் மனசு கஷ்ட்டமா இருக்கு.



அவள பாத்ததும் எனக்கு அவளபத்தி தெரிஞ்சுகனும்ன்னு உள்ளுக்குள்ள ஓர் எண்ணம் ஓடிகிட்டு இருந்துச்சு, அவ பஸ்சுல ஏறனதும் அந்த பஸ்ல என் கால் என்ன அறியாம இரும்புல மாட்டன காந்தமா அவபின்னாடி என்ன இழுத்துகிட்டு போச்சு. இதுக்கு முன்னாடி பெருமால பாக்கறதுக்கு நா விருப்பபட்டு போனது இல்ல, என்ன பண்ண அவ அவர பாக்க போகும் போது கொள்ளையடிச்சுட்டு மாட்டன கைதி மாதிரி எதுவும் பேசாம அவ பின்னாடி போக வேண்டியதா இருந்துச்சு.

கூட்டத்துக்கு நடுவுல அவ அந்த பெருமாளுக்காக காத்து இருக்கும் போது நா அவளுக்காக அந்த மனித புழுக்களுக்கு நடுவில் புழுவாக நெளிஞ்சிக்கிட்டு இருந்தன், பெருமால பாத்த சந்தோசம் அவளுக்கு அவள பாத்த ஆனந்தம் எனக்கு, அவ அந்த கூட்டத்துல இருந்து மறைந்த போது இரண்டு கண்ணும் இருந்து நிரகுருடான நிலை எனக்கு.

என்னோட நிலைமை அப்ப சிவன பாக்க பெருமாள் இருக்கும் இடத்துல சுத்தன மாதிரி இருந்துச்சு, விடாமுயர்ச்சி விஸ்வரூப வெற்றிக்கு அடையாளம் அவள அந்த கூட்டத்துல மறுபடியும் காண முடிஞ்சது குவியமிலா ஒரு காட்சிப்பேழையாக. அப்ப அடிச்ச அந்த கோவில் மணி என்னோட வாழ்க்கைக்கு அடிச்ச ஆலையமணியா காதுல விழுந்துச்சு, மறுபடியும் அவள மிஸ்பண்ண கூடாதுன்னு அவகிட்ட போய் நா உன்ன காதலிக்கரன்னு சொல்ல ஒரு நொடி தைரியம் எப்படி எனக்கு வந்ததுன்னு ஆச்சரியமாத்தான் இருக்கு.

அவகிட்ட போய் எம் பேரு சிவான்னு சொல்ல வாய் எடுத்தேன் என்ன எங்கையோ இருந்து ஒரு குரல் டே சிவான்னு கொக்கரித்தது, இதுக்கு முன்னாடி அந்த கொடூரமான குரல் எனக்கு பல நாள் பழக்க பட்ட ஒன்றுதான். ஆமா என்னோட அப்பாவோட குரல். அய்யோ இந்த ஆள் இங்க எங்கடா வந்தான்னு நா பம்ப ஆரமிச்சா அவரு என்ன பாத்து பதறிபோய் வர மாதிரி இருந்துச்சு. சரி நாம இன்னைக்கு மாட்டனம்ன்னு முடிவு பண்ணி முழிச்சுகிட்டு இருந்தன்.

என் கிட்ட வந்த என்னோட அப்பா, டே இங்க என்ன டா பண்ற அதுவும் கோவில்ல. அதுவந்துபான்னு நா அரமிக்கரதுக்கு முன்னாடி. என்னோட அந்த தேவதை, அப்பா அம்மா வீட்டுல உங்களுக்காக கத்துகிட்டு இருக்காங்க இன்னிக்கு உங்க கல்யாண நாள் அதான் கோவில்க்கு வந்தன் சொன்னா.


டே தகப்பா என்ன கொன்னுடியேடா தகப்பான்னு கத்தனும் போல இருந்துச்சு.

"அதுக்கு எங்கப்பா, நீ போ மா உங்க அப்பா உங்க அண்ணனோட வீட்டுக்கு வராருன்னு உங்க அம்மாகிட்ட சொல்லு".

"அப்பா இவருதான் அண்ணனா, அண்ணா அப்பாவோட வீட்டுக்கு வாங்கன்னா, அம்மா உங்கள பாக்கனுன்னு ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்காங்கன்னு சொல்லிட்டு ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு சிறகடிச்சு பறந்தா".


கொஞ்சம் தூரம் போய் என்ன மறுபடியும் பாத்து அண்ணா வரும்போது எனக்கு பூ வாங்கிட்டு வாங்கண்ணான்னு சொன்னா பாருங்க, அப்ப தோனுச்சு என்ன கொல்லாமல் கொன்னு புதைச்சுடான்னு.

[மனசாட்சி] டே தகப்பா இது நியாயமாடா!




9 comments:

  1. மங்கிஸ்கா கிங்கிஸ்கா கிங்கிஸ்கா பாயாஸா...

    ReplyDelete
  2. //"ராஜா" said... 1
    மங்கிஸ்கா கிங்கிஸ்கா கிங்கிஸ்கா பாயாஸா...//

    தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே!!!

    ReplyDelete
  3. நல்லா இருக்குய்யா கதையும் தத்துவமும்!

    ReplyDelete
  4. oru nalla annannaa olungu mariyathaiyaa thangkachiyai enna maathiri oruthan kaiyil pidiththu kududa rajagopala...

    ReplyDelete
  5. அண்ணா அது நா இல்லைங்னா

    ReplyDelete
  6. ண்ணா! சூப்பருங்ண்ணா! :-)

    ReplyDelete
  7. கடைசி பஞ்சு சூப்பரு..

    ReplyDelete
  8. சொல்லாமல் கொன்று சென்றாளே

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...