Monday, February 28, 2011

என் காதல் சொல்ல நேரம் இல்லைசில வருடங்கள் முன் நானும் கல்லூரி என்னும் கல்லறையை கடந்து வந்தவன்தான், சிலருக்கு சிலரோடு பழகும் பொழுது ஆனந்தமாக இருக்கும். எனக்காக எதையும் செய்யும் நண்பர்கள் வட்டம் ஆனால் அவளுக்காக எதையும் செய்யும் ஆர்வத்தில் நான்.

கடவுள் மனுஷனுக்கு மனசுன்னு ஒன்ன எதுக்கு படச்சான்னு எனக்கு அவள பாத்தபோழுது தான் புரிஞ்சுது, கல்லூரி ஒன்றாக படிக்க இடம் கொடுத்தாலும் நூலகம் மட்டுமே அவளை பல முறை பார்க்க இடம் கொடுத்தது, பாத்த உடனே அவள எனக்கு புடிச்சு போகல,அவள் பேச்சு எனக்கு எதோ என் கனவென்னும் கதவுகளுக்கு சாவியாக இருந்தது. அவளது பார்வை என் வழி தெரியா என் பாதைக்கு வெளிச்சமாக பட்டது.இருந்தும் அவள் உடன் நெருக்கமாக இருக்கும் என் நண்பர்கள் அவோளோடு பேசுவதற்கு துணை செய்த பொழுது பார்வை மட்டும் பரிமாறிய என் கண்கலுக்கு தைரியம் இருந்தது எனது வார்த்தைகளுக்கு வலுவில்லாமல் போனது. "ஹாய் என்ன பேச மாடிங்களா" என்னும் இந்த வார்த்தை தான் எனக்கு அவளிடம் கிடைத்த முதல் அச்சாரம்.பதில் சொல்ல தெரியா பறவையாக திரும்பினேன் சொல்லித்தரவும் ஆள் இல்லை.

கணினிகளை மட்டும் படிக்கவில்லை அவள் வார்த்தைகளையும் படிக்க துவங்கினேன்., விடுமுறை நாட்களை வீட்டில் இருந்தது என் உடல் மட்டும் தான் என் மனம் அவள் இருக்கும் இடம் தேடி அலைந்தது.

காலம் கடந்தது கல்லூரி முடியும் தருவாய் வந்தது. ஆவலுடன் அவளுக்கு நான் சொல்ல காத்திருந்த வார்த்தைகளை தட்டசுக்களாய் அவள் மின் அஞ்சலுக்கு தட்டியது என் கைகள். பதில் வர காத்திருந்தேன் வந்தது பதில் அல்ல அவள் மன ஓலை.

அன்று இரவே 250 ரூபாய் அரசுக்கு மொய்வைத்து டாஸ்மார்க் நண்பனால் அவளை என் மனம் என்னும் குப்பைதொட்டியில் இருந்து சுத்தம் செய்துவிட்டேன் ஆனாலும் என்றோ பார்த்த அந்த முகம் மறுபடியும் எட்டி பார்க்கிறது அதற்காக கவலைபடுவதர்க்கு என்ன இருக்கிறது எங்கே எனது நண்பன் என்று எண்ணி அவளை மறக்க வேண்டியதுதான்.

மறதி ஆண்டவன் கொடுத்த அற்புத வரம் அதர்க்கு கை கொடுக்கும் டாஸ்மார்க் நண்பன் என் கடவுள்

டிஸ்க்கி : இது என் நண்பனுடன் ஜல க்ரீடையில் இருக்கும் பொழுது அவன் புலம்பியது நமக்கு எங்க காதல் மோதல் எல்லாம் 100 kg பிகர பாத்ததும் பத்தடி தண்டித்தான ஓடறாங்க குண்டா இருக்கறது குஸ்ட்டமப்பா இது கஸ்ட்டமப்பா.

Sunday, February 27, 2011

ஆசை காதலியும் அன்பு தங்கையும்"ஹாய்ட மச்சான், என்ன இன்னைக்கு என்ன லீவா வேல எதுவும் இல்லையா?"

"மாம்ஸ் அவ இன்னைக்கு என்னோட ஒருநாள் சினிமாவுக்கு வரதா சொல்லிருக்கா"

"ஆள் தி பெஸ்ட் மச்சான் என்ன இன்னைக்கு அவளோடதானா என்ஜாய் டா"

************


சிறிது நிரம் போனது அவனை நோக்கி மஞ்சள் சுடிதாரில் சின்ன குழந்தை போல முழித்து கொண்டு வந்தால் விமலா

"ஹாய் ஜகன்!"

"என்ன இவ்வளவு நேரம் உனக்காக நா இங்க நிக்கரத பாத்த போலீஸ்காரன் எதோ கேச பாக்கறமாதிரி பாக்கறான்"

"உனக்கு என்ன நீ ஈசியா வந்துருவ, எனக்கு தான் எங்க அப்பாவ சமாளிக்கணும், அண்ணன சமாளிக்கணும்"

"சரி வா நேரம் ஆச்சு பைக்குல ஒக்காரு"

"கொஞ்சம் இரு, தன் சால்வையை எடுத்து முகத்தில் போட்டபடி ஏறினாள்"

"என்னடி மொகமூடி கொள்ளகாரி மாதிரி ச்சி எடு"

"யாராவது பாத்துட்டா"

"பாத்தா பாக்கட்டும் நா என்ன ஒன்ன கள்ள காதலா பண்றன்"

"அதுகில்ல எனக்கு தெரிஞ்சவங்க யாராவது பாத்து அப்பாட சொல்லிட்டா"

"வேல மிச்சம், நா எஸ் ஆகிடுவேன்"

"அசைய பாரு, உன்ன அதுக்குள்ள விட்ருவனா"

"ஆமா கனவுல விட்டு ஓட நெனச்சாலும், பீடி உசா தங்கச்சி மாதிரி 100 கிமீ ஸ்ப்பீடல எனக்கு முன்னால ஓடி பொய் அருவாளோட நிக்கர நெஜத்துல முடியுமா."

"சரி போ"

************


"என்னடா தேட்டர்ல ஒரு கூடத்தையும் காணோம்"

"கூட்டத வச்சு நீ என்ன கலக்சன் பண்ண போறியா உள்ள போனமா கார்னர் சீட்ல ஒக்காந்தன்மா ஜாலியா இருந்தமான்னு பாப்பியா"

"ரொம்ப பேசாத டிக்கட்ட எடு"

தூரத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது

"ஏய் விமலா இங்க என்ன டி பண்ற""அண்ணா அதுவந்து அதுவந்து"

"இவன் யாருடி"

"ஹாய்! நா ஜகன் நா இவளோட friendu ஒண்ணா வேல பாக்கறோம்"

"என்னடா இது யாருன்னு நெனச்ச என்னோட தங்கச்சி, ஏய் நீ மொதல்ல கெளம்புடி"

"நில்லுங்க பாஸ்"

"என்னடா நிக்கறது"

அவனை குத்துவதர்க்காக கையை ஓங்கினான்,தூரத்தில் இருந்து ஒரு பெண் குரல் கேட்டது.

"என்னங்க"

************


"சாந்தி நீ எங்க இங்க"

"அதுவந்துண்ணா இவரு என்னோட வேல பாக்கரவரு ஒருவருசமா நாங்க"

"சாரி ஜகன்!, மச்சான்னு தெரியாம கைய வச்சுடன், படம் பாக்க வந்திங்களா போங்க படம் சூப்பேரா இருக்கு ஈவினிங் பீச்சுல பாக்கலாம்"

"தங்கையுடையோன் காதலியின் அண்ணனுக்கு அஞ்சான்"

Wednesday, February 23, 2011

அரசியல்வாதிகல்னாலே தியாகிகல்தானே!

ஆயிரம் inquiriesராசா:- அதோ என் சிங்கங்கள் ஜாமீனோட வர்ராங்கள்ள..வர்ராங்கள்ள..(கருணாநிதியும் ஸ்டாலினும் , வருகிறார்கள்)

ராசா:- என்ன ஜாமீன் கெடச்சிடுச்சா.?

கருணாநிதி:- வாள மீன் இருக்குங்றான்...இறால் மீன் இருக்குங்றான்...

ஸ்டாலின் :- நெத்திலிமீன் இருக்குங்றான்...
சுறா மீன் கூட இருக்குங்றான்...

கருணாநிதி:- ஜாமீன் மட்டும் இல்லையாம்...

ஸ்டாலின் :- கடல்லயே இல்லையாம்...

ராசா:- அடப்பாவிங்களா உங்கள நம்பினதுக்கு இந்த கம்பிலேயே முட்டிகிட்டு தான் நான் சாகனும்...


இது மெயிலில் வந்தது அனுப்பிய நண்பனுக்கு நன்றி!.


Monday, February 21, 2011

உனக்காக காத்திருப்பேன்

இரவு கூட விடியல்தான்
நம்பிக்கை என்னும் கதிரவனாய் நீ வரும் பொழுது

கனவுகள் கூட நிஜம்தான்
அதில் உன் முகம் பார்வைக்கு வரும் பொழுது

பார்வை கூட பகைதான்
உன்னை பிரிந்து மற்றவர்களை பார்க்கும் பொழுது

சுவாசம் கூட சுமைதான்
உன்னை பிரித்து ஆக்சிஜனை மட்டும் நுகரும் பொழுது

கண்ணீர் கூட பரிசுதான்
ஒரு முறை அது உனக்காக வரும் பொழுது

தனிமை கூட இனிமைதான்
நீ மட்டும் துணைக்கு இருக்கும் பொழுது

பகைமை கூட நட்புதான்
உனக்காக என் கோபம் குறையும் பொழுது

திறமை கூட திரைதான்
உன் அழகுக்கு என் அறிவு அடிமையாகும் பொழுது

பாசம் கூட வேசம்தான்
நீ என் பக்கத்தில் இருக்கும் பொழுது
உனக்காக யாரையும் எதிர்ப்பேன்

உனக்காக யாரையும் அனைப்பேன்

நீ எப்பொழுது வருவாய் உனக்காக காத்திருப்பேன்.


Friday, February 18, 2011

விடியாத இரவுகள்

"ராம் நாளைக்கு நாம சென்னை போகணும் எல்லாம் தயாரா. சரியா சொல்லணும்னா நாளைக்கு தான் நம்மளோட கடைசி நாள் விடிஞ்சா சென்னைல ஒருத்தனும் உயிரோட இருக்ககூடாது. இது ஒரு மாசத்துக்கு முன்னால எடுத்த முடிவு".

"ரவி எதுக்கு கவலை படர நாளைக்கு காலைல 5 மணிக்கு கோயம்பேடு பஸ்டாப்ள இருப்போம் சரியா 6 மணிக்கு நா ஆண் பண்ணிரன்".

"சரி விநோகிட்ட புக்பண்ண சொன்ன வண்டி வந்துருச்சா, இன்னும் இல்ல அவன் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்னு சொன்னான்."

சரி வா போய் பாக்கலாம்

"இருவரும் சேலம் பஸ் டெப்போவுக்கு வந்தார்கள், அங்கு வினோ காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இழுத்து செல்லப்பட்டான்".

"ரவி அவன் மாட்டிகிட்டான் நாம கெளம்பலாம் இங்க இருந்தா நமக்கு ஆபத்து., அவர்கள் இருவரும் அன்று இரவே கொச்சின் எக்ஸ்ப்ரஸ் பிடித்து கேரளா தப்பி சென்றனர்".

"வினோ போலிஸ் அதிகாரிகளின் பிடியில் விசாரிக்கபட்டான். அவன் நடக்கபோகும் சம்பவங்களை அவர்களிடம் முழுவதும் சொல்லிவிட்டான்"

"அவர்கள் தங்கி இருந்த அறையை சோதனைசெய்தத்தில் ரவி மற்றும் ராமின் சதிதிட்டம் தெரியவந்தது. அன்று இரவே சென்னை காவலர்களின் கண்காணிப்பின் கீழ் வந்தது".

"மறு நாள் எந்த கலவரமும் நடக்கவில்லை. அந்த இருவரையும் பிடிக்கும் பனி கனேஷ் இடம் ஒப்படைக்க பட்டது".

"கனேஷ் தனது அசிஸ்டன்ட்ன் வசந்துடன் சேலம் சென்றார்".

"வசந்த் சீக்கிரமா நாம அவங்கள புடிசாகனும் இல்லனா சென்னைல பல உயிர்கள் இழக்க வேண்டியிருக்கும். இல்ல பாஸ் அவனுங்க நினைச்சிருந்தா கண்டிப்பா இன்னைக்கு காலைல அவங்க வேலைய காட்டிருக்கலாம், எனக்கு என்னவோ அவங்க தலைமரைவாய்டாங்கன்னு தோணுது".

"எது எப்புடி இருந்தாலும் கூடிய சீக்கிரம் புடிசாகனும்".

"சேலம் ரவி,ராம் தங்கிருந்த அறையை இருவரும் சோதனை செய்தனர்".

"பாஸ் நாம ஏன் அந்த வினோவ விசாரிக்க கூடாது., அவன் ஒரு கார் டீலர் அவனுக்கும் இந்த சதி திட்டத்தில் பங்கு இருக்கு அவன் நம்ம கைல இருக்கறது அவங்களுக்கு தெரியும் அவன கடைசியா பார்க்கலாம்.இப்ப தப்பிச்ச அந்த ரெண்டு பேர் தான் முக்கியம் சரி இங்க ஏதாவது தகவல்கிடைக்குதான்னு தேடு".

"பாஸ் இங்க ஒரு பொண்ணு போட்டோ இருக்கு."

"இந்த பொண்ணுக்கு அந்த பசங்களுக்கும் என்ன தொடர்புன்னு தெரியல, இந்த வீடு தனியா இருக்கு பக்கத்துல ஒரு அர கிலோமீட்டருக்கு யாரும் இல்ல இந்த வீட்ட புல்லா அலசியாச்சு இந்த போட்டோவ தவிர ஒன்னும் கிடைகள சரி அத பத்திரமா வை நாளைக்கு விசாரிப்போம்."

"மறாவது நாள் வினோவிடம் அந்த பெண்ணை பற்றி விசாரிக்க சென்றனர். எதிர்பாராத விதமாக அவன் இறந்து கிடந்தான்".

"இன்ஸ்பெக்டர் என்ன ஆச்சு".

"கனேஷ் நேத்து இவன் தனியாதான் இருந்தான் காவலுக்கு ரெண்டு காவலர்கள் இருந்தனர் இருந்தும் இவன் சூசைட் பண்ணிகிட்டான்னு தோணுது".

"என்ன பாஸ் இருந்த ஒரு விட்னசும் போச்சே, கவலை படாத இந்த போட்டோ இருக்கு இத வச்சு கண்டு புடிச்சரலாம்".

"சரி இந்த பொண்ணு போட்டோவ பத்திரிகைல விளம்ரம் கொடுத்து யாரு என்னனு கண்டு புடிக்க முடியுமா".

"வேணாம் பாஸ் ஓட்டர்ஸ் லிஸ்ட்ல கம்பார் பண்ணி நாமளே கண்டு புடிச்சரலாம். குட் வா பாப்போம்".

"பாஸ் ஓட்டர்ஸ் லிஸ்ட்ட பாத்ததுல இருந்து அவளோட முழு விவரமும் தெரிஞ்சுது, இந்த பொண்ணு பேறு ப்ரியா இவ சேலம் வைசியா காலேஜ்ல Msc physics பண்றா இவ அப்பா அம்மா இப்ப உயிரோட இல்ல அவளோட மாமா வீட்டுல தான் இருந்து படிக்குறா".

"சரி வா அந்த காலேஜ் பொய் விசாரிக்கலாம்".

"காலேஜ் வாசலில் அவர்களின் கார் நுழைந்தது".

"குட்மார்னிங் பிரின்சிபல் சார், என்னோட பேறு கனேஷ் இவரு என்னோட அசிஸ்டன்ட் நாங்க போலிஸ் ஸ்பெஷல் ப்ரான்ச்சுல இருந்து வரோம், இந்த பொண்ணு உங்க காலேஜ்ல Msc physics பண்றா இவ பேறு ப்ரியா இவள விசாரிக்கணும்".

"எதுக்குன்னு தெரிஞ்சில்கலாமா. ஒன்னும் இல்ல ஒரு சின்ன இன்வஸ்டிகேசன் இட்ஸ் சீக்ரட்".

"சரி அதுக்கு நீங்க அவங்க வீட்டுகே போய் விசாரிக்கலாமே, போனோம் இப்ப அவ காலேஜ் போயிருகறதா சொன்னாங்க அதான் இங்க வந்தோம்".

"சரி சார் எத விசாரிகறதா இருந்தாலும் காலேஜ் கேம்பஸ்ல வேணாம் ஸ்டூடன்ஸ் டிஸ்டர்ப் ஆகிருவாங்க சோ நீங்க அந்த பொண்ண அவங்க அங்குள் பர்மிசனோட உங்க எடத்துல வச்சு விசாரிசுக்குங்க".

"சரி அந்த பொண்ண கூட்டிகிட்டு போலாமா, அதுக்கு அவங்க அங்குள் பர்மிசன் வேனும். நோ ப்ரோப்லேம் சார் அவரும் எங்க கஸ்டடிலதான் இருக்காரு".

"ஓகே சார் நீங்க தாராளமா கூட்டிகிட்டு போகலாம்".

"ப்ரியாவும் அவளது மாமாவும் தனியரையில் விசாரிக்கப்பட்டனர்".

"இந்த பார் பிரியா ஒன்னோட போட்டோ ராம் ரவி வீட்டுல கெடச்சுது அவங்கள பத்தின விவரம் தெரியனும்., சொல்லு அவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்க உனக்கும் அவங்களுக்கும் என்ன சம்மந்தம்".

"அது வந்து சார் அவங்க என்னோட பிசிக்ஸ் ப்ரோஜெக்ட்டுக்கு ஹெல்ப் பண்ணாங்க , அந்த விதத்துல அவங்க எனக்கு பலக்கமானாங்க."

"சரி அவங்கள பத்தின வேற ஏதாவது விஷயம் தெரியுமா., பாஸ் என்ன பாஸ் பொண்ணு சும்மா ஜீரவுல மெதகுற ஜாமுன் மாதிரி இருக்கு அத போய் இந்த நொண்டு நொண்டுரிங்கலே.வசந்த் நீ கொஞ்சம் சும்மா இரு."

"நீ சொல்லு, சார் எனக்கு ரெண்டு மாசத்துக்கு முன்ன தான் பைனல் இயர் ப்ராஜெக்ட் முடிஞ்சுது, அப்பதான் இவங்க ரெண்டு பேரும் எனக்கு என்னோட ப்ரொபசர் ஜானகி முலியமா இன்ட்ரோ கெடச்சுது, அவங்க ரெண்டு பேரும் அவங்களோட ஓல்டு சுடூடன்ட்டாம். எனக்கு ஒரு வாரமாதான் அவங்களுக்கு தெரியும் அவ்ளவுதான் சார்".

"அப்ப எப்புடி உன்னோட போட்டோ அவங்க ரூம் போச்சு, இது என்ன சார் கேல்வி அவங்கள பாக்க போதும் பொது அங்க மிஸ் பண்ணிருக்கும். வசந்த்".

"இல்லசார் ப்ராஜெக்ட் முடிஞ்சதும் என்னோட போட்டோ கேட்டாங்க எதுக்குன்னு கேட்டன், அவங்க பண்ண போற புது ப்ரோஜெக்ட்டுக்கு ஒரு மாடல் வேனும்ன்னு சொன்னங்க மொதல்ல நா தயங்கன என்னோட ப்ரொபசர் கம்பல் பண்ணாங்க அதனால தான் கொடுத்தன்".

"என்ன ப்ரோஜெக்ட்டுன்னு எதாவது விஷயம் சொன்னாங்களா."

"இல்ல சார்".

"சரி கடைசியா நீ எப்ப அவங்கள பாத்த."

"சரியா ஒரு மாசம் இருக்கும் சார்."

"இன்ஸ்பெக்டர் இந்த பொண்ண கஸ்ட்டடில வைங்க.வசந்த் வா போலாம்."

"நீங்க போங்க சார் நா இதோ வரன்."

"சார் இந்த பொண்ணுக்கு நீங்க மாமா தான, ஆமா."

"இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சா, இல்ல சார்"

"பிரியா உன் கிட்ட ஒன்னு கேட்டா தப்பா நெனச்சுக்க மாட்டியே"

"சார் எனக்கு ஏர்கனவே பாய் friend இருக்கான் சார்."

"அட அது இல்லமா ஒனக்கு சூசைட் பண்ணி பழக்கம் இருக்கா?".

"என்ன சார் இப்புடி கேக்குரிங்க."

"இல்ல இதுக்கு முன்ன ஒருத்தன் மாட்டுனான் அவன் இப்ப இல்ல அந்த லிஸ்டுல வந்துடுவியோன்னு ஒரு சின்ன கண்பியூசன் அதான் வர்ட்டா".

"பாஸ் இப்ப எங்க ப்ரொபசர் வீட்டுக்குத்தான, ஆமா சரி அவங்க பேரு என்ன சொன்னா.
ஜானகி சார், பிரின்ஸ்பாலுக்கு கால் பண்ணி அவங்க அட்ரஸ் வாங்கு".

"என்ன கெடச்சுதா,"

"பாஸ் அவங்க ஒரு வாரத்துக்கு முன்ன லீவ்ல அவங்க சொந்த உருக்கு போயிருகாங்கலாம் பக்கம் தான் ஏற்காடு."

"அட்ரஸ் சொன்னாங்களா."

" no 6, பிலோவர் கார்டன், ஸ்டெர்லிங் ஸ்ட்ரீட், ஏற்காடு பாஸ்.சரி வா போலாம்."

"அவர்களது கார் ப்ரொபசர் வீட்டை நெருங்கியது, வீட்டில் பந்தல் போடப்பட்டு இருந்தது."

"பாஸ் என்ன பாஸ் ஜானகி டிக்கெட் வாங்கிட்டாங்கலாற்றுக்கு, வாய மூடு."

"அங்கு நின்ன ஒரு பெரியவரை விசாரித்தனர். அன்று காலை ஜானகி ஹோர்ட் அட்டாக்கில் இறந்ததாக சொன்னார்."

"பாஸ் இப்ப என்ன பண்றது."

"ஒடனே நம்ம இன்ஸ்பெக்டருக்கு பொன் போட்டு ப்ரியாவ பத்தி விசாரி."

"பாஸ் பிரியா அவளோட அங்குள் ரெண்டு பேரும் சூசைட் பண்ணிகிட்டாங்கலாம் பாஸ். "

"என்ன பாஸ் இப்படி வருசையா ஒவ்வொரு விக்கட்டா விழுந்து கிட்டே இருக்கு."

"கொஞ்சம் பொறு நாம விசாரிக்க ஆரமிச்சதுல இருந்து நமக்கு கெடைக்கிற சாட்சிகள் ஒவ்வோருதரா சாகறாங்க, இது நிச்சயமா சூசைட் இல்ல."

"அப்பறம் யாரவது கோல செஞ்சுருபாங்கன்னு நினைகிரிங்களா, யாரு அந்த ராமும்,ரவியுமா. போங்க பாஸ் கெடச்ச ரெண்டு விட்னசும் நம்ம கஸ்ட்டடில உயிர் போயிருக்கு, இப்ப பாத்த ப்ரொபசர் ஹோர்ட்அட்டாக்னு சொல்றாங்க, அப்பறம் எப்புடி பாஸ்."

"சரி அந்த வினோவோட போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் கெடச்சுதா., இல்ல பாஸ்."

"அத மொதல்ல பாப்போம், அப்புடியே இப்ப செத்த அந்த பிரியா அவங்க மாமா பாடியும் போஸ்மார்ட்டம் பண்ண சொல்லி ஆடர் பண்ணு. ஓகே பாஸ்."

"கார் சேலம் அரசு மருத்துவ மனைக்கு சென்றது. குட் ஈவ்னிங் டாக்டர் நேத்து எங்க கஸ்ட்டடில இருந்த வினோன்ரவரோட போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா.""சார் இவரோட இதயத்துல இருந்து இந்த சிப்ப எடுத்தோம்., இது ஒரு வித ரிமோட் கண்ரோல்ல இயங்கிருக்கு. சரியா இவரு இறக்கர்துக்கு முன்ன இந்த சிப் இவரோட இதயத்துல ப்லாஸ்ட் ஆகிருக்கு அதனால தான் இவரோட உயிர் பிரிஞ்சிருக்கு."

"அப்ப ஒரு 1 hr முன்ன வந்த பிரியான்ர பொண்ணோட ரிப்போர்ட், அவங்களதும் இதே மெதட் தான் அவங்க மாமாவோட ரிப்போர்ட்டும் இதேதான்."

"பாஸ் அப்ப அந்த ஜானகிகுக்கும் சேம் பிஞ்ச் போல இருக்கு."

"டாக்டர் இந்த சிப்ப இவங்க உடம்புல பிக்ஸ் பண்ண ஆப்பரேசன் ஏதாவது பண்ண அடையாளம் இருக்கா"

"சாரி சார், இத பண்ணவங்க வெரிகுட் சர்ஜரியன் அப்பறம் அவங்க பிளாஸ்டிக் சர்ஜரிலும்
ஸ்பெசெளிஸ்ட்டுன்னு நினைகுரேன், அவங்க ஆபரேட்அடையாளம் தெரியாத மாதிரி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிருக்காங்க."

"பாஸ் என்ன பாஸ் கெனறு வெட்ட பூதம் கெளம்பன மாதிரி இருக்கு, மொதல்ல பிசிக்ஸ்சு இப்ப பாலாஜி போக போக இங்கிலீஷ், தமிழ், மேக்ஸ்ன்னு எல்லாத்துக்கும் ஆள் வச்ருபானுங்கலாற்றுக்கு."

"டாக்டர் அந்த சிப்ப நா எடுத்துக்கலாமா. ஓ தாராளமா"

"வசந்த் இத நா சைன்ஸ் டிப்பார்ட்மென்ட்ல கொடுத்து இதோட மெதடாலஜி என்னன்னு பாக்கரன், நீ போய் அந்த ப்ரபசர் ஓல்டு ஸ்டூடன்ட் லிஸ்ட்ட செக் பண்ணி ராம்,ரவின்ர ஸ்டுடென்ட் லிஸ்ட்ட மட்டும் கொண்டு வா."

"ஒரு மணி நேரத்திர்கு பிறகு சைன்ஸ் டிப்பார்ட்மென்ட் ஸ்பெசலிஸ்ட்டுடன் கனேஷ் அந்த சிப்பை பற்றி விசாரித்தார்."

"சார் இந்த சிப் ஒரு அட்வான்ஸ் மெதட் சார்., இது gprs ல ஒர்க்காகுது அது மட்டும் இல்லாம இன்டர்நெட்டோட கனக்ட் ஆகுது. சோ இத எங்க இருந்து வேணாலும் ஆபரேட் பண்ணலாம், அது மட்டும் இல்லாம சிந்தடிக் ட்ரான்ஸ் மீட்டர் இருக்கறதால இதுல வாய்ஸ் டேட்டா கூட ட்ரான்ஸ்பர் பண்ண முடியும், ஐ திங்க் இது ஒரு ஸ்மால் ஸ்கேல் மைக் மாதிரி கூட யூஸ் பண்ணலாம்."

"ஓகே சார் தேங்க்ஸ்."

"வசந்த் கனேஷ்சை நோக்கி வந்தான்."

"பாஸ் அந்த ப்ரொபசர் ரொம்ப எங் பாஸ் அந்த காலேஜ்ல தான் Msc முடிச்சுருக்காங்க, அவங்க ப்ரொபசரா ஜாயின் பண்ணி கரக்ட்டா ரெண்டு வருஷம் தான் ஆகுது. இந்த பிரியா தான் இவங்களோட கடைசி செட், அவங்களோட மொதல் செட்ல இருந்த பசங்க லிஸ்ட்ல ராம்முன்ற ஒரு பேர் மட்டும் தான் இருந்தது., ராம பத்தி விசாரிச்சன் அவன் ஒரு பிசிக்ஸ் பைத்தியமாம் பாஸ் எப்பபாத்தாலும் புக்கும் கையுமாத்தான் இருப்பானாம் அது மட்டும் இல்ல அவன பத்தி முழுசா விசாரிச்சன் அவனுக்குன்னு எந்த சொந்தமும் இல்லையாம்., அவனோட ஒரே ஒரு friend மட்டும் தானாம் அது வேற யாரும் இல்ல பாஸ் அது ரவி தான் அவன் சேலம் விநாயகா மிசன் காலேஜ்ல டாக்டரேட் படிகரானாம் அது மட்டும் இல்ல அவன் பிளாஸ்டிக் சர்ஜரியும் எக்ஸ்ட்ராவா இண்டரஸ்ட் எடுத்து படிகரவனாம்.ரெண்டு பேரும் கோல்ட் மெடலிஸ்ட் பாஸ்."

"கிட்ட நெருங்கிட்டோம் வசந்த்."

"சார் இன்ச்பெக்டர்ட இருந்து போன்."

"சொல்லுங்க சார் ரவி,ராம் பற்றிய முக்கியமான குளு கெடச்ருக்கு."

"சார் அவங்க ரெண்டு பேரும் இங்க வந்து சரண்டர் ஆகிட்டாங்க உங்கள்ட்ட தான் வாக்குமூலம் குடுக்கணும்ன்னு சொல்றாங்க நீங்க வர முடியுமா."

"என்ன வசந்த் நமக்கு வேல வைக்காம அவங்களே வந்து சரண்டர் ஆகிட்டான்கலாம், ச்ச ரொம்ப சாதாரணமா போச்சே. "

"பாஸ் வாங்க பாஸ் மொதல்ல அவங்கள பாப்போம்."

"ராம் ரவி இருவரையும் விசாரிக்க வந்தனர் அதற்குள் அவர்கள் இருவறும் இறந்து கிடந்தனர்."

"அவர்கள் இருதயத்திர்குள்ளும் ஒரு டேட்டா சிப் புதைக்க பட்டு இருந்தது.அதை ஆராய்ந்த பொது."

"சார் எம் பேரு ராம், இவன் என்னோட பிரண்ட் ரவி, நா ஒரு ப்ராஜெக்ட் பண்ண அது என்னன்னா இப்ப இருக்கற ஸ்மார்ட் டிவைஸ்ச விட பலமடங்கு சக்தி வாய்ந்த டேட்டா
டிரான்ஸ்பர் டிவைஸ், சார் நாங்க அதுக்கு அப்ரூவர் வாங்க சென்னை சைன்ஸ் ரிசர்ச் பவுண்டேசன் போனோம், எங்கள அலட்சிய படுத்திட்டாங்க அதனால நாங்க யாருன்னு காட்டணும்ன்னு தான் ஒரு சக்திவாய்ந்த காஸ்மிடிக் ரேஸ் உருவாக்கிணோம், அத சென்னை மக்கள் மீது பிரயோக படுத்தும் முடிவுடன் களத்தில் இறங்கினோம், அத என்னோட ப்ரபசரும் அவங்க எங்களுக்கு அறிமுக படுத்தன அவங்க ஸ்டுடென்ட் பிரியாவும் கண்டு புடிச்சிட்டாங்க, அதனால என்னோட பிரண்ட் ரவி துணை யோட அவங்க இதயத்துல நா புதுசா உருவாக்கன கில்லிங் சிப்ப ஆப்பரேட் பண்ணி வச்சு மெரட்டனோம், ஆனா நீங்க எங்கள கண்டு புடிசுடுவிங்கன்னு தெரிஞ்சதால நாங்களே சூசைட் பண்ணிகிட்டோம் எங்க ரகசியம் தெரிஞ்சதால அவர்களையும் கொன்னோம். எங்களோட சேர்ந்து அந்த ஆபத்தான காஸ்மிடிக் ரேஸ் அழிய போகுது எங்கள மண்ணிச்சுருங்க சார்."

எங்கள போல உள்ளவர்களின் அறிவை உபயோக படுத்தவில்லை என்றாலும் பரவா இல்லை உதாசின படுத்த வேண்டாம் நன்றி சார்.Thursday, February 17, 2011

தனிமனித கோபம்

"ரஞ்சன் சோகமாக இருந்தான் இன்று அவன் காதலி விஜி விடுத்த கடைசி நாள், நாளை அவள் தன் சொந்த ஊரான கான்பூருகுக்கு புறப்பட போகிறாள்" .

“காலை 10.30 க்கு விமானம் புறப்படும் நேரம் , 10 மணி வரை யோசித்தவன் 10௦.5 க்கு தன் பைக்கை உதைத்தான் சென்னை நகர சாலைகள் நிரம்பி வழிந்தது, அனைத்தையும் சமாளித்து அவளை பார்க்க அந்த ஒரு நிமிட தழுவளுக்காக ஆவலுடன் வந்தான். 10.20 அவள் அங்கு இல்லை விமானம் புறப்பட 10 நிமிடங்கள் என்று சேதி சொல்லும் கிளியாக ஸ்பீக்கர் ஒலித்தது.”

“மிகுந்த ஏமாற்றத்துடன் வீடுவந்து சேர்ந்தான். அவனது மொபைல் ஒரு மெசேஜ் துப்பியது.”

“டியர் கடைசி வரைக்கும் பார்த்தன் நீ வரவே இல்ல நா கிளம்பிட்டன், நா மறுபடியும் உன்ன பாப்பனான்னு எனக்கு தெரியல எனிவே எங்கப்பா எனக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாரு எனக்கும் அவரோட Friend பையன் விஸ்வாவுக்கும் நெக்ஸ்ட் மந்த் 15 கண்பூர்ல ஹோட்டல் ராயல்ல ரிசப்சன் 16 மார்னிங் மேரேஜ், அன்னைக்கு ஒரு நிம்சத்துக்கு
முன்னால வந்தாலும் நா உன்கூட வந்துருவேன் அப்புடி இல்லன்னா நீ என்ன மறந்தர வேண்டியதுதான்”.

“சரி இப்ப என்ன பண்றது அவள மீட் பண்ணனும்னா நா கான்பூர் போகணும்., அவள பாத்தாலும் அவளோட அங்க இருந்து ஈஸ்கேப் ஆகறது கஷ்ட்டம் என்ன பண்ணலாம். சரி இப்ப யோசிக்கறதுக்கு நேரம் இல்ல நாளைக்கு எந்த விமானம் கான்பூர் போகுதுன்னு பாக்கணும்., online டிக்கெட் புக் பண்ணிட்டு பக்கத்துல இருக்க ATM -ல தேயவையான அளவு பணத்த எடுத்துகிட்டு மறாவது நாள் பிளைட்ல் கிளம்பினான்"

“ஆடுத்த மாதம் 16 தேதி, கல்யாணம் நடக்க தயாரானது. அப்போது அங்கு வந்த போலிஸ் அதிகாரிகள் கல்யாண பெண்ணை அரஸ்ட் பண்ண போவதாக கூறினார்கள்”.
"என்ன சார் எம் பொண்ணு எந்ததப்பும் பன்னல எதுக்காக"

"சார் உங்க பொண்ணுக்கு மெட்ராஸ்ல ஒரு லவ்வர் இருந்தானா"

"அதல்லாம் ஒன்னும் இல்ல சார்"

"இல்ல சார், ஒரு மாசத்துக்கு முன்ன ஒரு ப்ளைட்ல ஒரு பையன அரஸ்ட் பண்ணோம் அவன் உங்க பொண்ணோட சேந்து சென்னைல IT கம்பனில ஒர்க் பண்ணும் போது லவ் பண்ணா,அவங்க ரெண்டு பேரும் ஒரு ப்ரொஜெக்ட்ல ஒண்ணா வேல பாத்தாங்க அது என்ன வேலன்னா இண்டர்நெட்ல கனக்ட் ஆகிருக்க அத்தன கம்புயூட்டரும் ஒரே நிமிசத்துல கொலாப்ஸ் ஆகாரமாதிரி ஒரு ப்ராஜெக்ட் அத ஒரு வெளிநாட்டு கம்பனிக்கு வித்துருக்காங்க. இப்ப அந்த கம்பனி ஒரு டிமான்ட் பண்ணிருக்கு என்னன்னா இன்னும் ஒரு மாசத்துல இந்தியாவுல இருக்க அத்தன IT கம்பனியும் மூடணும் இல்லன்னா அந்த ப்ரோஜெக்ட்ட ரன் பண்ண போறதா சொல்றாங்க"."இந்த விஷயம் எம் பொண்ணு பண்ணிருக்க மாட்டா"

"இல்ல சார் அந்த சென்னை கம்பெனி சீல் வச்சாச்சு அந்த பையனும் அப்ரூவ் ஆகிட்டான். ரியலி சாரி"

“மிகவும் பாதுகாப்பான அறையில் இருவரும் விசாரிக்கப்பட்டனர்”.

“சார் நாங்க அந்த ப்ரொஜெக்ட்ல வேல பாத்தது உண்மைதான் ஆனா எங்களுக்கு குடுக்கபட்டது போட்டி கம்பனி சிஸ்டம்ஸ் கொலாப்ஸ் பண்ணனும் சொல்லித்தான் கொடுத்தாங்க அது இந்த மாதிரி பின்விளைவுகள் வரும்னு நினைகள”.

“சரி இப்ப இத தடுக்கனும் என்ன பண்ணலாம்”.

“இதுக்கு ஒரே வழிதான் இருக்கு அந்த ப்ராஜெக்ட் ஒரு வைரஸ் ப்ரோக்ராம் எழுதி அந்த ப்ரோஜெக்ட்ட டெஸ்ட்ராய் பண்ணனும்”.

முடியுமா

“முடியும் பட் எங்களுக்கு சில நாள் அவகாசம் வேனும்”.

“இருவரும் தாங்கள் செய்த தவறுக்கு பொறுப்பேற்று, புதிய வைரஸ் ப்ரோக்ராமை எழுதி அதை அவர்களிடம் ஒப்படைதனர்”.

“அந்த குற்றம் நிறுத்தப்பட்டது. அந்த குற்றத்திற்காக அவர்கள் இருவருக்கும் மரணதண்டனை கொடுக்கப்பட்டது”.

“மரணதண்டனை நிறைவேற்றிய ஒரு மாதம் பிறகு அவர்கள் கொடுத்த வைரஸ் ப்ரோக்ராம் மாற்றம் கண்டு அவர்கள் செய்த முதல் ப்ராஜெக்ட் ரன் ஆனது”.

உலகம் இன்டர்நெட் என்ற கடலை இழந்தது.

ஒரு தனிமனித கோபம் எதை வேண்டுமானாலும் செய்யும்.


.

Related Posts Plugin for WordPress, Blogger...