இரவு கூட விடியல்தான்
நம்பிக்கை என்னும் கதிரவனாய் நீ வரும் பொழுது
கனவுகள் கூட நிஜம்தான்
அதில் உன் முகம் பார்வைக்கு வரும் பொழுது
பார்வை கூட பகைதான்
உன்னை பிரிந்து மற்றவர்களை பார்க்கும் பொழுது
சுவாசம் கூட சுமைதான்
உன்னை பிரித்து ஆக்சிஜனை மட்டும் நுகரும் பொழுது
கண்ணீர் கூட பரிசுதான்
ஒரு முறை அது உனக்காக வரும் பொழுது
தனிமை கூட இனிமைதான்
நீ மட்டும் துணைக்கு இருக்கும் பொழுது
பகைமை கூட நட்புதான்
உனக்காக என் கோபம் குறையும் பொழுது
திறமை கூட திரைதான்
உன் அழகுக்கு என் அறிவு அடிமையாகும் பொழுது
பாசம் கூட வேசம்தான்
நீ என் பக்கத்தில் இருக்கும் பொழுது
உனக்காக யாரையும் எதிர்ப்பேன்
உனக்காக யாரையும் அனைப்பேன்
நீ எப்பொழுது வருவாய் உனக்காக காத்திருப்பேன்.
ம்..நல்லாருக்கு முதல் வடை
ReplyDeleteஇது எல்லாம் நாம் இதை விட்டு பிரிந்திருக்கும் போதுதான். ஆனால் கைக்கு வந்துவிட்டால் நம்மை படுத்தும் பாடு இருக்கிறதே? ரொம்ப ஆபத்தானது இது. பல பேரின் நிம்மதியை கெடுத்தது இது
ReplyDelete//
ReplyDeleteபாலா said...
இது எல்லாம் நாம் இதை விட்டு பிரிந்திருக்கும் போதுதான். ஆனால் கைக்கு வந்துவிட்டால் நம்மை படுத்தும் பாடு இருக்கிறதே? ரொம்ப ஆபத்தானது இது. பல பேரின் நிம்மதியை கெடுத்தது இது
//
சரி தான் ஆனா இது தான் இன்று வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒன்று
என்ன குண்டு... திடீர்ன்னு சீரியசா இறங்கிட்டீங்க...
ReplyDeleteஅட்ராசக்க அட்ராசக்க ... அருமையான கற்பனை நண்பா
ReplyDeleteகவிதை நல்லா இருக்குது. Super!
ReplyDeleteபணம் 10ம் செய்யும்.
ReplyDeleteநன்றி Philosophy Prabhakaran ,"ராஜா" ,Chitra,சி.பி.செந்தில்குமார்.
ReplyDeleteபணம் பாதாளம் வரை பாயும்..
ReplyDeleteநல்ல கவிதை