Sunday, February 27, 2011

ஆசை காதலியும் அன்பு தங்கையும்



"ஹாய்ட மச்சான், என்ன இன்னைக்கு என்ன லீவா வேல எதுவும் இல்லையா?"

"மாம்ஸ் அவ இன்னைக்கு என்னோட ஒருநாள் சினிமாவுக்கு வரதா சொல்லிருக்கா"

"ஆள் தி பெஸ்ட் மச்சான் என்ன இன்னைக்கு அவளோடதானா என்ஜாய் டா"

************


சிறிது நிரம் போனது அவனை நோக்கி மஞ்சள் சுடிதாரில் சின்ன குழந்தை போல முழித்து கொண்டு வந்தால் விமலா

"ஹாய் ஜகன்!"

"என்ன இவ்வளவு நேரம் உனக்காக நா இங்க நிக்கரத பாத்த போலீஸ்காரன் எதோ கேச பாக்கறமாதிரி பாக்கறான்"

"உனக்கு என்ன நீ ஈசியா வந்துருவ, எனக்கு தான் எங்க அப்பாவ சமாளிக்கணும், அண்ணன சமாளிக்கணும்"

"சரி வா நேரம் ஆச்சு பைக்குல ஒக்காரு"

"கொஞ்சம் இரு, தன் சால்வையை எடுத்து முகத்தில் போட்டபடி ஏறினாள்"

"என்னடி மொகமூடி கொள்ளகாரி மாதிரி ச்சி எடு"

"யாராவது பாத்துட்டா"

"பாத்தா பாக்கட்டும் நா என்ன ஒன்ன கள்ள காதலா பண்றன்"

"அதுகில்ல எனக்கு தெரிஞ்சவங்க யாராவது பாத்து அப்பாட சொல்லிட்டா"

"வேல மிச்சம், நா எஸ் ஆகிடுவேன்"

"அசைய பாரு, உன்ன அதுக்குள்ள விட்ருவனா"

"ஆமா கனவுல விட்டு ஓட நெனச்சாலும், பீடி உசா தங்கச்சி மாதிரி 100 கிமீ ஸ்ப்பீடல எனக்கு முன்னால ஓடி பொய் அருவாளோட நிக்கர நெஜத்துல முடியுமா."

"சரி போ"

************


"என்னடா தேட்டர்ல ஒரு கூடத்தையும் காணோம்"

"கூட்டத வச்சு நீ என்ன கலக்சன் பண்ண போறியா உள்ள போனமா கார்னர் சீட்ல ஒக்காந்தன்மா ஜாலியா இருந்தமான்னு பாப்பியா"

"ரொம்ப பேசாத டிக்கட்ட எடு"

தூரத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது

"ஏய் விமலா இங்க என்ன டி பண்ற"



"அண்ணா அதுவந்து அதுவந்து"

"இவன் யாருடி"

"ஹாய்! நா ஜகன் நா இவளோட friendu ஒண்ணா வேல பாக்கறோம்"

"என்னடா இது யாருன்னு நெனச்ச என்னோட தங்கச்சி, ஏய் நீ மொதல்ல கெளம்புடி"

"நில்லுங்க பாஸ்"

"என்னடா நிக்கறது"

அவனை குத்துவதர்க்காக கையை ஓங்கினான்,தூரத்தில் இருந்து ஒரு பெண் குரல் கேட்டது.

"என்னங்க"

************


"சாந்தி நீ எங்க இங்க"

"அதுவந்துண்ணா இவரு என்னோட வேல பாக்கரவரு ஒருவருசமா நாங்க"

"சாரி ஜகன்!, மச்சான்னு தெரியாம கைய வச்சுடன், படம் பாக்க வந்திங்களா போங்க படம் சூப்பேரா இருக்கு ஈவினிங் பீச்சுல பாக்கலாம்"

"தங்கையுடையோன் காதலியின் அண்ணனுக்கு அஞ்சான்"

4 comments:

  1. ஆஹா முதல் இடம்

    ReplyDelete
  2. இந்த கதையில எனக்கு கொஞ்சம் உடன்பாடு இல்லை நண்பா ... ஏதோ லாஜிக் இடிக்கிதுண்ணு நெணைக்கிறேன் ...

    ReplyDelete
  3. என்ன என்று எனக்கு மெயிலில் தொடர்பு கொள்ளவும் "ராஜா" Email ID : s.rajagopal1984@gmail.com

    ReplyDelete
  4. இது கதையா உண்மை சம்பவமா....ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...