Thursday, February 17, 2011

தனிமனித கோபம்

"ரஞ்சன் சோகமாக இருந்தான் இன்று அவன் காதலி விஜி விடுத்த கடைசி நாள், நாளை அவள் தன் சொந்த ஊரான கான்பூருகுக்கு புறப்பட போகிறாள்" .

“காலை 10.30 க்கு விமானம் புறப்படும் நேரம் , 10 மணி வரை யோசித்தவன் 10௦.5 க்கு தன் பைக்கை உதைத்தான் சென்னை நகர சாலைகள் நிரம்பி வழிந்தது, அனைத்தையும் சமாளித்து அவளை பார்க்க அந்த ஒரு நிமிட தழுவளுக்காக ஆவலுடன் வந்தான். 10.20 அவள் அங்கு இல்லை விமானம் புறப்பட 10 நிமிடங்கள் என்று சேதி சொல்லும் கிளியாக ஸ்பீக்கர் ஒலித்தது.”

“மிகுந்த ஏமாற்றத்துடன் வீடுவந்து சேர்ந்தான். அவனது மொபைல் ஒரு மெசேஜ் துப்பியது.”

“டியர் கடைசி வரைக்கும் பார்த்தன் நீ வரவே இல்ல நா கிளம்பிட்டன், நா மறுபடியும் உன்ன பாப்பனான்னு எனக்கு தெரியல எனிவே எங்கப்பா எனக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாரு எனக்கும் அவரோட Friend பையன் விஸ்வாவுக்கும் நெக்ஸ்ட் மந்த் 15 கண்பூர்ல ஹோட்டல் ராயல்ல ரிசப்சன் 16 மார்னிங் மேரேஜ், அன்னைக்கு ஒரு நிம்சத்துக்கு
முன்னால வந்தாலும் நா உன்கூட வந்துருவேன் அப்புடி இல்லன்னா நீ என்ன மறந்தர வேண்டியதுதான்”.

“சரி இப்ப என்ன பண்றது அவள மீட் பண்ணனும்னா நா கான்பூர் போகணும்., அவள பாத்தாலும் அவளோட அங்க இருந்து ஈஸ்கேப் ஆகறது கஷ்ட்டம் என்ன பண்ணலாம். சரி இப்ப யோசிக்கறதுக்கு நேரம் இல்ல நாளைக்கு எந்த விமானம் கான்பூர் போகுதுன்னு பாக்கணும்., online டிக்கெட் புக் பண்ணிட்டு பக்கத்துல இருக்க ATM -ல தேயவையான அளவு பணத்த எடுத்துகிட்டு மறாவது நாள் பிளைட்ல் கிளம்பினான்"

“ஆடுத்த மாதம் 16 தேதி, கல்யாணம் நடக்க தயாரானது. அப்போது அங்கு வந்த போலிஸ் அதிகாரிகள் கல்யாண பெண்ணை அரஸ்ட் பண்ண போவதாக கூறினார்கள்”.
"என்ன சார் எம் பொண்ணு எந்ததப்பும் பன்னல எதுக்காக"

"சார் உங்க பொண்ணுக்கு மெட்ராஸ்ல ஒரு லவ்வர் இருந்தானா"

"அதல்லாம் ஒன்னும் இல்ல சார்"

"இல்ல சார், ஒரு மாசத்துக்கு முன்ன ஒரு ப்ளைட்ல ஒரு பையன அரஸ்ட் பண்ணோம் அவன் உங்க பொண்ணோட சேந்து சென்னைல IT கம்பனில ஒர்க் பண்ணும் போது லவ் பண்ணா,அவங்க ரெண்டு பேரும் ஒரு ப்ரொஜெக்ட்ல ஒண்ணா வேல பாத்தாங்க அது என்ன வேலன்னா இண்டர்நெட்ல கனக்ட் ஆகிருக்க அத்தன கம்புயூட்டரும் ஒரே நிமிசத்துல கொலாப்ஸ் ஆகாரமாதிரி ஒரு ப்ராஜெக்ட் அத ஒரு வெளிநாட்டு கம்பனிக்கு வித்துருக்காங்க. இப்ப அந்த கம்பனி ஒரு டிமான்ட் பண்ணிருக்கு என்னன்னா இன்னும் ஒரு மாசத்துல இந்தியாவுல இருக்க அத்தன IT கம்பனியும் மூடணும் இல்லன்னா அந்த ப்ரோஜெக்ட்ட ரன் பண்ண போறதா சொல்றாங்க".



"இந்த விஷயம் எம் பொண்ணு பண்ணிருக்க மாட்டா"

"இல்ல சார் அந்த சென்னை கம்பெனி சீல் வச்சாச்சு அந்த பையனும் அப்ரூவ் ஆகிட்டான். ரியலி சாரி"

“மிகவும் பாதுகாப்பான அறையில் இருவரும் விசாரிக்கப்பட்டனர்”.

“சார் நாங்க அந்த ப்ரொஜெக்ட்ல வேல பாத்தது உண்மைதான் ஆனா எங்களுக்கு குடுக்கபட்டது போட்டி கம்பனி சிஸ்டம்ஸ் கொலாப்ஸ் பண்ணனும் சொல்லித்தான் கொடுத்தாங்க அது இந்த மாதிரி பின்விளைவுகள் வரும்னு நினைகள”.

“சரி இப்ப இத தடுக்கனும் என்ன பண்ணலாம்”.

“இதுக்கு ஒரே வழிதான் இருக்கு அந்த ப்ராஜெக்ட் ஒரு வைரஸ் ப்ரோக்ராம் எழுதி அந்த ப்ரோஜெக்ட்ட டெஸ்ட்ராய் பண்ணனும்”.

முடியுமா

“முடியும் பட் எங்களுக்கு சில நாள் அவகாசம் வேனும்”.

“இருவரும் தாங்கள் செய்த தவறுக்கு பொறுப்பேற்று, புதிய வைரஸ் ப்ரோக்ராமை எழுதி அதை அவர்களிடம் ஒப்படைதனர்”.

“அந்த குற்றம் நிறுத்தப்பட்டது. அந்த குற்றத்திற்காக அவர்கள் இருவருக்கும் மரணதண்டனை கொடுக்கப்பட்டது”.

“மரணதண்டனை நிறைவேற்றிய ஒரு மாதம் பிறகு அவர்கள் கொடுத்த வைரஸ் ப்ரோக்ராம் மாற்றம் கண்டு அவர்கள் செய்த முதல் ப்ராஜெக்ட் ரன் ஆனது”.

உலகம் இன்டர்நெட் என்ற கடலை இழந்தது.

ஒரு தனிமனித கோபம் எதை வேண்டுமானாலும் செய்யும்.


7 comments:

  1. உண்மை .. . காதலில் இருந்து ஒரு டச்... இது ஒரு நச்.. அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இவ்வளவு நல்லா கருத்துடன் எழுதுறீங்க..... இதை போல அடிக்கடி எழுதுங்க.... நல்லா திறமை இருக்குது... பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. உங்களிடம் இருந்து ஒரு வித்தியாசமான பதிவு... ரசித்தேன்...

    ReplyDelete
  4. நன்றி மதுரை சரவணன்!

    ReplyDelete
  5. நன்றி Chitra! உங்களிடம் இருந்து கருத்து வரும் என்று எதிர் பார்க்கவில்லை இனி நல்ல கருத்துக்களை முன் வைக்க முயற்ச்சி செய்கிரேன்.

    ReplyDelete
  6. அருமையா வித்தியாசமா இருக்கு வாழ்த்துக்கள் மக்கா.....
    உங்க போன் நம்பரை எனக்கு இமெயில் அனுப்புங்க....
    manaseytrmanasey525@gmail.com

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...