Wednesday, October 27, 2010

கயிரு

இன்னைக்கு நான் முதல் தடவ office போரன். படிச்சு முடிச்சு முதல் முறை வேலைக்கு அதுவும் ஒரு கார்ப்ரேட் கம்பனிக்கு நினச்சு பாக்கவே ஒரு பயம் கலந்த சந்தோசம். என்ன ஒன்னு என்ன மாதிரி இன்னைக்கு மொத நாள் வரவங்கள பாக்கும் போது நாமளும்
ஜெயிச்சிட்டோம்னு உள்ளுக்குள்ள ஒரு சந்தோசம்.

எம் பேரு ராம்குமார், நாமக்கல் பக்கத்துல ஒரு சின்ன கிராமத்துல இருந்து சென்னை வரன்.மொத தடவ இந்த high speed வண்டிங்க, கலர்கலரா பொண்ணுங்க நான் பக்காத ஒரு தனி உலகம் என்னோட கண்ணு முன்னால. வாழ்க்கைல சில காஞ்ச பூமிய மட்டும் பாத்த எனக்கு, இங்க ஒரு பெரிய கண்ணாடி கட்டடத்துல சில் குளிர்ல குசன் சேர்ல ஒக்காந்து வேலபாக்குற பாக்கியம் என்னோட வம்சதுல எனக்கு கெடச்சது பெரிய புண்ணியம்.

ஷிவானி என்கூட வேல பாக்குர பொண்ணு "ரொம்ப அழகு"., புது சென்னை இந்த பெரிய ஹை கலாஸ் சொசைட்டி !., நுனிநாக்கு ஆங்கிலம்!, இது எல்லாம் என்ன அவலோட பேச விடாம தடுக்குது .

அப்பறம் அவளே வந்து பேசனா., அன்னைக்கு எப்பவும் போலதான் ஏசி ஓடுச்சு ஆனா என்னோட எடம் மட்டும் மைனஸ் டிகிரிக்கும் கீழ போய்டுச்சு., என்னோட இதயத்துல பெரிய இடி இடிக்கர சத்தமட்டும் கேட்டுகிட்டு இருந்துச்சு அதனால அவ என்ன பேசுநானு எனக்கு ஒன்னும் கேக்கல.

அவ என்னவிட்டு அவளோட எடத்துக்கு நடந்து போனா நா இங்க இருந்தாலும் என்ன அரியாமல் என்னோட கால் அவபின்னாடி போச்சு.,

அத பாத்த என்னோட டிஎல் என்ன கூப்டு அவனோட சொந்த கத சோக கத எல்லாம் சொல்லி என்ன அசிங்க படுத்த ஆரமிச்சான்.

அப்பவும் தலைக்கு மேல நெருப்பு எரிஞ்சாலும் ஐஸ்கட்டில ஒக்காந்த மாதிரி இருந்துச்சு ஏன்னா அவ நா திட்டு வாங்கறத பாத்து சிரிச்சா.

அப்பறம மதியம் lunch எல்லாரும் அவுங்க அவுங்க கொண்டு வந்தத கொறிக்க ஆரமிச்சாங்க., அவ அவளோட friends கூட ஒக்காந்து அவகொண்டு வந்த lunch box ஓபன் பண்ணா அது கூட அவலமாதிரி சின்னதா இருந்துச்சு., Box - ல இருந்து ஒரு முள் கரண்டியால நைலான் கயிரு மாதிரி எதோ எடுத்து சாப்ட ஆரமிச்சா.,
“ச்செ அதுவும் ரொம்ப அழகுதான்”.
அப்பறம் அந்த coke டின்ன குடிகரப்ப அது அவ உதட்ட கிளிசுடுமோன்ற பயமா எனக்கு இருந்துச்சு. அவள ரசிச்சதால அன்னைக்கு எனக்கு புவாவுக்கு உவா ஆச்சு. இருந்தும் எனக்கு புல் மீள்ஸ் சாப்ட திருப்தி.

அன்னைக்கு ஈவ்னிங் எல்லாரும் கெளம்பனாங்க அவளும் தான் அவ ஆபீஸ் விட்டு போர வரைக்கும் வெய்ட் பண்ணிட்டு இருந்தன்., அவ போனதுக்கு அப்பறம் என்னோட டிஎல் தனி ரூம் போய் அவரோட வேலைய பாக்க ஆரமிச்சாரு நா அவ ஒக்காந்து இருந்த எடத்துல போய் ஒரு நிமிசம் ஒக்காந்து கண்ணமூடி அந்த குசன்ல சான்ஜன்.அது எனக்கு எங்க ஊரு வக்க போர்ல படுத்து கண்ண மூடி தூங்கன மாதிரி இருந்துச்சு.

ரெண்டாவது நாள் ., அவகூட ஏதாவது பேசனும்னு நல்லா ட்ரஸ் பண்ணிக்கிட்டு போன ., அன்னைக்குன்னு பாத்து எல்லாரும் ஒரு மாதிரி மூஞ்ச உம்முன்னு வச்சுக்கிட்டு இருந்தாங்க எனக்கு ஒன்னும் புரியல சரின்னு என்னோட எடத்துல போய் அவ வந்துடாலானு பாத்தன். அவ எங்க டிஎல் ட எதோ பேசிகிட்டு இருந்தா.

அப்பறம் என்ன பாத்து வந்தா எனக்கு ஸ்வீட் கொடுத்தா எதுக்குன்னு கேட்டன் சொல்றன்னு சொல்லிட்டு சாமி கயிரு மாதிரி எதோ ஒன்ன என்னொட கைல கட்னா .,
“ஹாப்பி ரக்சாபந்தன் அண்ணா“-ன்னு அவ சொன்னா .,



எலெக்ட்ரிக் ட்ரைன்ல அடிபட்ட மாதிரி இருந்துச்சு.,

Sunday, October 24, 2010

மாம்ஸ்! ஐ மிஸ் யு டா.










இது எனக்கு இ-மெயில் அனுப்பன என் நண்பனின்(கணேஷ்) நினைவாக பகிர்கிரேன் .
Mams, I miss you da.

Friday, October 22, 2010

சத்தியராஜ் சாப்ட்வேர் இஞ்சநியர் ஆனால் - 3

இது ஒரு தொடர் பதிவு முந்தய பதிவு படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துவிட்டு தொடரவும்.

விஜய் சத்தியராஜ்கிட்ட வந்து

புதுசா வந்துரிகிங்க, என்னபத்தி நா சொல்ரத விட எமாமா சொன்னதான் நல்லாருக்கும்.

மாமா! மாமா!

கக்கூசுல இருந்து நம்ம "பேரரசு" பிச்சுகிட்டு வராரு.

விஜய பத்தி பேரரசு ஸ்டார்ட் பண்றாரு.

இவரு பொட்டி தட்டரதுல - புலி.
மவுசு தேக்கரதுல - மயிலு.
மானிட்டர மொரைக்கரதுல - காள.
குதிச்சி! குதிச்சி! ப்ரோக்ராம் போடறதுல - குட்டி யாண.
டிபக் பண்றதுல - ட்ரகுலா.
டெஸ்டிங்க் - ல திமிங்கலம்.
நெட்ல சுடரதுல இவரு ஒரு சுறா.

சத்தியராஜ் இத கேட்டுட்டு கவுண்டமணிகிட்ட
ஆகமொத்ததில இவன்! மனுசனே இல்ல.

நாதான் அப்பவே சொல்லல இவன் ஒரு "அனுமார் தலையன்னு" இவனுங்க
குடும்பமே ஒரு கொரங்கு கூட்டம்!. இதுல இந்த "டபராவாயன் மாமான" எங்க புடிசானு தெரியல.

அது சரி இவன்கூடதான் இனிமே நாம குப்ப கொட்டனும், அதுவும் அந்த சைடு வாயன் டிஎல்ட நி எப்புடித்தான் தம் புடிக்கபோரியோ, ஆ ஊ நா அவன் வேர மலயேரிருவான், சரி இந்த கொரங்க அங்க குந்த சொல்லு ரொம்ப குதிசுதுன்ன கைல ஒரு வாழப்பழம் கொடு.

இவரு

டாய்! FM-ம ஆப் பண்ணு.

மூணு பெரும் கம்பனிக்கு போறாங்க.

நம்ம டிஎல் சத்தியராஜுக்கு ஒரு சின்ன ப்ரோக்ராம் கொடுக்குறாரு.
இவரு ஜாவா-ல கொட்ட எடுத்த புளியாசே சரியா முடிகராரு.அத பாத ரஜினி

"என்ன மா கண்ணு" பட்டய கெளப்புற

அதுலாம் ஒன்னும் இல்லிங் சார் எல்லாம் நம்ம கவுண்டர் அன்னங்ட
கத்துகிடதுங்

"அவசரமா அவுட்புட் வருனும்னு - காப்பியடிகரவனும்
சரியா அவுட்புட் வருனும்னு தானா - யோசிகரவனும்
நல்ல ப்ரோகிராமரா வந்ததா சரித்திரமே இல்ல".
ரஜினி சொல்லிடு போறாரு.

ரஜினி போனதுக்கு அப்பறம்.

கவுன்டமணிகிட்ட போய் சத்தியராஜு.

எனுங்ன இவரு காப்பி அடிகுனும்னு சொல்றாரா, இல்ல சொந்தமா போடணும்னு சொல்றாரா.

அவரு அப்படிதான் அவுட்புட் வரும்பாரு!! அனா வராதும்பாரு!! அத உடு எனக்கு இந்த கருமாந்தரம் புடிச்ச ப்ரோக்ராம் அவுட்புட் வரமாட்டுகுது
என்னனு பாரு

அட என்னங்கணா "System.out.println" அடிகரத்துக்கு பதிலா
"Simran.out.sakilaa.In" அடிச்சு வச்சுரிகிங்க.

oh! sorry maa . பக்கத்ல அந்த "அண்டா" அப்ப அப்ப நம்மள க்ராஸ் பண்ணுதா அதா வெரலு ஸ்லிப் ஆகிடுச்சு.

எனுங்னா இன்னைக்கு இங்க இருக்கற வாழபழத்த தனியா தள்ளிகிட்டு போலாமா.

அட நீ என்ன வெவகாரம் புடிச்ச ஆளா இருக்க, அதுவே இப்பதான் வாலு வாலுன்னு கத்தரத கொரசுகிட்டு என்னமோ பண்ணுது, அதுகுள்ள நி அத உரிச்சி தின்னுருவ போல இருக்கே.

ங்னா பழம் ரோம்பநேரம் சும்மா இருந்தா நாய் தூக்கிட்டு போய்டும்ங்னா

டாய்! இன்னைக்கு வேணா அப்பரம் பாத்துக்கலாம்.

கவுண்டமணி சொன்னத கேக்காம நம்ம சத்யராஜ் வழபழம் பக்கம் சாரி பானுபிரியா பக்கம் போனாரு.

ஏனுங்கம்மணி இது என்ன கொலாபுட்டா காதுக்கு வாய்க்கும் இப்டி ஒரு கணக்சனு

சார் வெயிட் ட மினிட் ., ஐ ம் சபீக் வித் கஸ்டமர். ஐ வில் பிங் யு
லேட்டர்-னு சொல்லுச்சு.

சத்தியராஜ் மறுபடியும் கவுண்டர்கிட்ட போய்.

எனுங்னா அது என்ன கஸ்டமர்கிட்ட கிட்ட எல்லாம் பேசுது.
அப்படினா நமக்கும் என்ன ரேட்டுன்னு கேட்டு சொல்லுங்னா.

டாய் "பண்ணி குட்டி தலையா!" அதுவே வெள்ளகாரனுகிட்ட ஒப்பாரி வக்காத கொரைய்யா குய்யோ,மொரையோனு கத்திகிட்டு இருக்கு
அது என்னமோ நைட்-ஷோ சிப்ட்டுக்கு ரேட் பெசரமாதிரி, என்ன நி வந்து அதுக்கு ஒரு டிக்கட் பிளாக்குல கெடைக்குமா - னு கேக்கர இது சரி இல்ல மகனே! கீழ ஓடர ஒயர எடுத்து வாயில உட்டுருவன் மூடிகிட்டு வேலைய பாரு.

அப்பரம் எல்லாரும் பொட்டி தட்ட ஆரமிக்கறாங்க.

-தொடரும்

கற்பனை செய்ய முடியாதது

இளகிய மனம் படைத்தவர்கள் முதல் வீடியோ பார்க்காதீர்கள்.







Wednesday, October 20, 2010

பார்த்தது - படித்தது - பிடித்தது

சிலருக்கும் நாவல் படிகரது பிடிக்கும்., நா படிசிக்கிட்டு இருக்குர தமிழ் நாவல் வலைபூ இது.


http://marancollects-tamilebooks.blogspot.com/


http://ramanichandrannovels.blogspot.com


சிலருக்கு அங்கிலம் சரியான பயிற்சி இல்லாததால டிகிரி முடிச்சும் கஸ்ட்டபட்டுகிட்டு இருக்காங்க.
இவங்க சரியான அடிப்படை அங்கிலம் தமிழ்ல கொடுத்துகிட்டு இருகாங்க இந்த வலைபூல.

http://aangilam.blogspot.com/


http://tamiltospokenenglish.blogspot.com


வலைபூ பத்தி அதிகமா தெரியாதவங்களுக்கு இவரு நெறைய விஷயம் கொடுக்றாரு பாத்துக்குங்க

http://vandhemadharam.blogspot.com/


பிளாஷ் கத்துக்க ஆசபடரவங்க இங்க போனா கண்டிப்பா கத்துகலாம்.

http://manamplus.blogspot.com/2010/07/blog-post_29.html


நா அதிகமா விளையாடுற பிளாஷ் கேம் சைட் இது.புடிச்சா நீங்களும் ஆரமிங்க.

http://www.g9g.com/


சிலர் மொக்கையா கவித எழுதணும்., ஜோக்ஸ் எழுதனும்னு ஆசைப்பட்டு அவங்க தன்னோட
வீர தீர பராக்ரம்மங்கல இங்க கொட்டிருகாங்க பாருங்க.

http://jilljuck.com/


இவரு போட்டோ போடரதுல எங்க படிச்சாருன்னு தெரியல.

http://opticaltrance.blogspot.com/


இவரு நிரைய பிட்டு mp3 தன்னோட ப்லோகுல ஒட்டிருக்காரு கேளுங்க.

http://radiospathy.blogspot.com/


தமிழ் படம் டிவி shows பாக்கணும்னு நினைக்கறவங்க இங்க போலாம்.

http://www.usertube.com/


http://www.tamilo.com/


கடைசியா எனக்கு பிடிச்ச ரீமிக்ஸ்

Tuesday, October 19, 2010

லைலாவை தேடி

இன்னைக்கு என்னோட பொறந்த நாள் அவள பாக்கலாம்னு அவ படிக்குர காலேஜ் போன அவள பாக்கரதுக்காக ரெண்டு மணி நேரம் காத்துகிட்டு இருந்தன். அவ வந்தா ப்ளூ சுடிதார்ல நெத்தி வச்ச போட்டு கை போட்ருந்த வளையல் கால்ல போட்ருந்த செருப்பு வரைக்கும ஒரே மேச்சிங்கா இருந்தது.
அவளுக்கு குடுக்கலாம்னு நா கொண்டு போன பூ என்ன பாத்து பூனு துப்பன மாதிரி இருந்துச்சு.ஏன்னா ஒரு பூவுக்கு மறுபடியும் பூவே குடுகிரியாடா மடயானு சொன்ன மாதிரி இருந்துச்சு.சரின்னு அத மரசுட்டன்.
லைலா என்னோட தேவதயோட பேரு. அவ லைலா தான் நா மஜுனுவானு தெரியலா.

ஹாய் கமல் இங்க என்ன பண்ற

இப்பதான் ஒன்னோட வீட்டுக்கு போன நீ இன்னும் வரலன்னு
சொன்னங்க உங்க அம்மா.அதான் இங்க வந்துட்டன் இன்னக்கு என்னோட பொறந்த நாள்.

ஓ சாரி டா எக்ஸாம் டென்ஸ்ல மரந்துடன். Happy Birth day to u.,சரி வா சினிமாக்கு போலாம்.

அவகூட பைக்குள போறது ஒரு தனி சொகம் அதுவும் இந்தசென்னை டிராபிக்ல சொல்லவே வேனாம். இன்னைக்கு எனக்கு பொறந்தநாள் கிபிட் இது தான்.

டே எந்த படத்துக்கு போலாம்.

எதாவது இங்கிலீஷ் படத்துக்கு போலாமா.

வேனான்டா எதாவது தமிழ் படத்துக்கு போலாம்.

சரின்னு சொல்லிடு சத்தியம் விண்ணைதாண்டி வருவாயா படத்துக்கு போக முடிவு பன்னி போனோம்.சத்தியம் டிக்கட் கெடைக்கல அங்க வந்த என்னோட பிரண்ட்ஸ் என்னபாத்துட்டு
பர்த்டே விஸ் பண்ண வந்தானுங்க.

டாய் மாமு Happy Birthday டா.

என்ன Bithday அதுவுமா ஒன்னோடா ஆள ஓடிகிட்டு வந்துடியா.

இல்லடா நா சொல்ல என்னோட தோளுல கை போட்டு அவ சொன்னா.
"ஆமா இவன் என் ஆளுதான் அதுல ஒனக்கு என்ன" பசங்க காண்டாய்டானுங்க.

சாரிங் சிஸ்டர் டே டிக்கட் கெடச்சுதா

இல்ல டா

இந்தா டிக்கட்டு நீங்க போங்க நாங்க பக்கத்துல ஒரு ஆக்சன் படம் ஓடுது அதுக்கு போரோம் இன்னைக்கு நைட்டு ட்ரீட்டு மாமு என்ஜோய்னு சொல்லிட்டு அவனுங்க போய்ட்டானுங்க.

இன்னைக்கு யாரு மூஞ்சுல முழிச்சனு தெரியல எல்லாமே எனக்கு தானா நடக்குது.

படம் பாத்துட்டு பைக்குள போனோம்.

என்ன லைலா படம் புடிச்சிருக்கா

புடிச்சுருக்கு பட் க்ளைமாக்ஸ் புடிக்கல சூப்பரா லவ் பன்னிட்டு
கடசில பிரிஞ்சிடாங்கலே.

அமா நீ ஏன் பீல் பன்ர லைலா அது படம் தான

இல்லடா நேத்து என்னோட கூட படிக்கர விமலுக்கு பர்த்டே அப்ப அவன நா விஷ் பன்ன பதிலுக்கு எனக்கு அவன் தேங்க்ஸ் சொல்லுவான்னு பாத்தா என்ன ப்ரபோஸ் பன்னிடாண்டா எனக்கும் அவன ரொம்ப புடிக்கும்
நானும் ஓகே சொல்லிடேன்.

பைக் சடார்னு நிருத்திடன்.

என்ன என்ன ஆச்சு

ஒன்னும் இல்ல சொன்ன

அவல வீட்டுல விட்டுட்டு அவ வாசல்ல நின்னு மனசுல நெனச்சன்
"நானும் ஒரு நாள் முன்னால பொறந்துருக்க கூடாதா".

Saturday, October 16, 2010

தேவதையோட தேவதை

எம்பேரு ஆனந்த் நா bsc சேலத்துல முடிச்சுட்டு msc அப்ளை பண்ண திருச்சி சென்ஜோசப் போன. எனக்கு நல்லா நியாபகம் இருக்கு அன்னைக்கு காலேஜ் பஸ்ட்டே அதனால சீனிர்ஸ்லாம் ஜூனியர்ச வரவேர்துகிட்டு இருந்தாங்க.

சரினு அப்ளை பண்ணிட்டு ஆபீஸ் ரூம் விட்டு வெளிய வந்தன் அப்ப ஒரு பலமான காத்துல ஒரு லைட் sarry என்னோட மொகத்த மூடிச்சு.

வாழ்க்கைல எங்க அம்மாவோட பொடவ தவற ஒரு பொண்ணோட sarry என்னோட மொகத்துல பட்டது அன்னைக்குதான் i am interesting to realize my first manliness.

அன்னைக்கு அந்த sarry வழியா வந்த காத்த சுவாசிச்ச போது என்ன அறியாமலே என்னை அது பறக்க வச்சுது அந்த sarry விலகன
போது கைல சில புக்கு வச்சுக்கிட்டு தன்னோட முந்தானைய சரி பனிகிட்டு இருந்தா ., அவ பேரு மகா. எஸ் இவதான் நா காதலிக்க போற பொண்ணு.

அவபாக்கரதுகு அப்படி ஒரு அழகா இருப்பா., மனசுகுள்ள எங்க அப்பாவுக்கு தேங்க்ஸ் சொன்ன ஏன்னா நா first chose பண்ணது ஜமால் முகமது
காலேஜ் பட் அப்பாவுக்கு தெருஞ்ச friend மூலமா எனக்கு இங்க சீட்டு
கெடச்சுது .

சரி இந்த காலேஜ் தான் சேரபோரதால அவள பத்தி அன்னைக்கு நா சரியா விசாரிக்கலா.
மறு நாள் காலேஜ் போன எனக்கு காலேஜ் மொத நாள்ன்றத விட அவள பாக்கபோரம்ர சந்தோசம் தான் எனக்குள்ள அதிகமா இருந்துச்சு.

msc maths மொத நாள் நா கிளாஸ்ல கனவுல மிதந்துகிட்டு இருந்தன்.
அப்ப ஒரு maths ப்ரோபசர் வந்தாங்க அது வேர யாரும் இல்ல என்னோட மகா தான்.,

அப்ப என்னோட மனுசுல பலமா மணி அடிச்சுது அது காலேஜ் புல்லா கேட்டுச்சு ஏன்னா அப்பபாத்து கரெக்டா காலேஜ் first பெல்லும் அடிசுடாங்க.

மனசு பாரத்தோட உக்காந்து இருந்தன். கொஞ்சம் நேரம் போனதும் எனக்கு பக்கதுல மகா வந்தா.

Hellow sir

என்னா பேயடிச்ச மாதிரி ஒக்காந்து இருக்கீங்க.

மனசுக்குல்ல (இல்லடி பாவி நீ தான் பேயா வந்து அடிசுட்ட) இல்ல ஒடம்பு சரில்ல அதான்.

மொத நாளேவா.சரி பாடாத கவனிங்க.

அவ பாடம் எடுக்க ஆரமிச்சா.

என்னால அங்க ஒக்கார முடியல நா அங்க இருந்து ஒடனே கேளம்பிடன்.

கோஞ்ச தூரம் போனதுகப்பரம் ஒரு பொண்ணு என்ன கூபடரமாதிரி இருந்தது.

திரும்பி பார்தா அவதான் அனா வேர sarry ஒரு நிமிஷம் ஆடி போய்டன்.

hellow இந்த msc maths குரூப் எங்க இருக்கு.

நீங்க நீங்க maths ப்ரோபசர் தான.

இல்லை இப்பதான் மொத நாள் செரலாம்னு வரன் எம்பெரு மகா.

அப்போ அந்த maths ப்ரோபசர் யாரு.



ஓ அதுவா அது எங்க அம்மா அவுங்க இங்க தான் maths ப்ரோபசர் எனக்கு அவங்க தான் சீட் வாங்கி கொடுத்தாங்க பட் இதுக்கு முன்னாடி நா இந்த பக்கமே வந்ததில்ல.நீங்க இங்க வேல செய்ரிங்களா.

இல்ல நானும் Msc maths தான் இன்னைக்குதான் நானும் First டே க்லாஸ் ரூம் left - ல இருக்கு.

nice meeting to u னு சொல்லிட்டு கை கொடுத்தா.

நானும் பசிக்கு பால் கேடச்ச பூன மாதிரி கைகொடுதுட்டு
அசுடு வழிஞ்சுகிட்டு அவபின்னாடி போன.

Thursday, October 14, 2010

எந்திரன் வால்-இ



















சத்தியராஜ் சாப்ட்வேர் இஞ்சநியர் ஆனால் - 2

இது ஒரு தொடர் பதிவு முந்தய பதிவு படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துவிட்டு தொடரவும்.

எப்படியோ நம்ம சத்தியராஜ் சாப்ட்வேர் கம்பெனில ஜாயின் பண்ணிட்டாரு., மோதனாளுன்றதுனால எந்த காட்டமும் இல்லாம ரூம் போயிட்டாரு. அடுத்தநாள் அதே ட்ரைன் அதே எடம்., நம்ம கவுண்டரும் கரக்ட்டா ஆஜர் ஆஹிட்டாரு.சத்தியராஜ் கவுண்டர பாத்து.

ங்னா குட்டுமார்நிங்க்னா.

ஆங் அண்ணனுக்கு எடம் எல்லாம் போட்டுருக்கு போல

ஏனுங்னா ஒங்களுக்கு இல்லாத எடமுங்கலா

சரி சரி ரொம்ப பம்பாதா விசயத்துக்கு வா

ங்னா நாம எப்படியோ இந்த பொழப்புக்கு வந்தாச்சு மொத நாளுன்றதுனால என்ன எல்லாரும் சைடு உட்டதோட சரிங்னா நாம யாரையும் கண்டுக்க
முடியலங்னா

ங்னா

என்ன

ங்னா ங்நோய்

என்னடா

ங்கனா நம்ம கம்பனில இருக்கற புள்ளைங்க பத்தி சொல்லுங்கனா

டாய் இந்த டகால்டிதான வேனான்றது

ஏனுங்கனா நாமல்லாம் ஒரே ஊரு,பங்காலிங்க இது கூட பண்ண கூடாதானா

ம் ரொம்பா நெஞ்ச நக்கிட்ட
இதுக்குதான் நம்மள மாதிரி டீமுக்கு ஒரு ஆலினால் அலகுராஜ வேனும்கறது .
சொல்றன் கேலு.

நம்ம கம்பனி வரண்டா கூட்டரதுக்கு ஒரு பொண்ணு.

ம்

கக்கூஸ் கழுவ ஒரு பொண்ணு.

ம்

வரவனுக்கு வணக்கம் போட ஒரு பொண்ணு.

ம்

அப்பறம் அப்படிக்கா உள்ளவந்தா நம்மள கணக்கு பண்ண ஒரு பொண்ணு.

அட அட அட வாசல்ல இருந்து இருக்கர எடம் வரைக்கும் போன்னுங்காலா போட்டுருக்கானே

டாய் பணகொட்ட தலையா
ஒன்னையும் என்னையும் போட்ட ஒரு நாய் உள்ள வரும்மா இல்ல நீயும் நானும்தான் உள்ள வருவமா ரப்பர் வாயா மூடிகிட்டு கேலு.

சரிங்ணா

இப்ப நி ஒக்காந்து இருக்கில்ல அதுக்கு எதுத்தாமாதிரி தண்ணி ஊத்திவக்கர அண்டா மாதிரி ஒன்னு அது தான் இங்க சீனியர் ப்ரோக்ராம்மர் அது பேரு குசுப்பு

என்னா பூ

குசுப்பு, அது படிச்சது அடிச்சது எல்லாம் பம்பாயில அங்க அது ஓவரா அடிச்சதால இங்க மாத்திட்டாங்க

எத அடிச்சாங்னா

பொட்டிதான்.அவங்களுக்கு அங்க செல கூட வச்சுருக்காங்க.

அப்படிங்லா

என்ன நொப்படிங்லா கேலு.
ஒனக்கு சைடுல ஒன்னு ஒக்காந்து இருக்கு பாத்தியா உரிச்சி வச்ச வாழபலம் மாதிரி

ஆமாங்க்னா வெள்ளதக்காளி மாதிரி ரெண்டு

டாய் எதையும் பாக்கலன்னு சொன்ன

அட பக்கதுல பாட்டி இருந்தாலே படுதுடுவேன் இத பாதா பண்ரூட்டி பலாப்பழம் மாரி இருக்கு.

ஓகே சரி இப்பவே நீ மவுச தேக்க ஆரமிசிட்ட அது பேரு பிரியா.,

ம்

வெரும் பிரியா இல்ல பானுப்பிரியா., அது தான் நம்ம கம்பனி கம்முயூனிகேட்டர்

கம்முயூனிகேட்டர்னா

அதாம்பா நம்ம வெல்லகாரங்க இருக்காங்கல்ல அவங்கலோட வாழு வாழுன்னு கத்தறது.

சரின்னா எல்லாம் சொன்னிங்க ஒங்கபக்கதுல ஒரு ட்ரம்மு இருக்கே அதபத்தி சொல்லவே இல்ல

டாய் பல்லினு நெனச்சி பாம்பு புத்துக்குள்ள கைய உடாத

அது தான் HR அது பேரு ஷகிலா.

HR - ன என்னங்ணா

அட ஒன்னையும் என்னையும் ஒன்னும் இல்லாத விஷயத்துக்காக ரூம் போட்டு ஒன்ற மணி நேரமா கதற கதற கசக்னாங்கல்ல அது இவங்க தான். அது இங்க வரும்போது 15 இன்ச் மானிட்டர் மாதிரி இருந்துச்சு ஆனா இப்ப 70 எம்எம் ஸ்க்ரீன் மாதிரி ஆயிடுச்சு.என்ன ஒன்னு மின்னைக்கு இப்ப படம் நல்லா காட்ராங்க.


சரிங்ணா

இது எல்லாம் ஓகே நம்ம டபராதலயனுகள பத்தி சொல்லுங்ணா.

அவனுங்க என்ன பிசுகோத்து மண்டையனுங்க

ஒர்தர் பேரு விஜயகாந்து அவர்தான் நம்ம டீம் லீடருக்கு அடுத்த பெரிய ஆபிசர் இவருதான் இங்க சின்ன கவுண்டரு இவரு என்ன பண்றாருன்னா - டிபக்கிங்

அது என்னங்னா டிபக்கிங்

அட அது ஒன்னும் இல்லப்பா நாம வயகாட்டுல ஒளவு ஓட்டும் போது,
நாத்து நடும் போது கிட்டநின்னு சரியா செய்யிலான குத்தம் சொல்லுவமுள்ள அதுமாதிரி நாம நாள் பூரா ஒக்காந்து அடிக்கரத கரக்டா தப்பான்னு பாக்காமலே சொல்லிடுவாரு இவரு.

அடுத்தது நம்ம டீம் லீடருக்கு புடிச்சவன் அஜிதுகுமார்

இவன் இங்க - டிசைனர்.

எனுங்னா ஜாக்கட், பேண்டு, சட்டைலாம் தச்சி தருவாரானா.

அட அது இல்லப்பா நம்ம அண்டா குண்டா எல்லாத்துக்கும் இய்யம் பூசுவம்முள்ள.,அது மாதிரி இங்க நம்ம பொட்டில தேரியுதுள்ள பொட்டி பொட்டியா அதுக்கு எல்லாம் பெய்ன்ட் அடிக்கறது இவன் வேல. இவன்கிட்ட அதிகமா பேசாதா

எனுங்னா

இவன் எதுகேடுதாலும் அது அது அதுன்னு சொல்லுவான் நி எது அதுன்னு கேட்ட அதுக்கு ஒரு பக்கம் அதுமாதிரி கத சொல்லுவான்.

கடைசியா ஒருத்தன் இருக்கான் அவன்

கவுண்டமணி சொல்லும் போது நம்ம இளைய தளபதி வானத்துல சும்மா குருவி கணக்கா கில்லி மாதிரி எம்பி குதிச்சி ட்ரைன்ல வந்து லேன்டாகுராரு.

கவுண்டமணி சதியராஜிகிட்ட இப்ப நா சொல்ல வந்தது இவன பத்தி தான் அனுமார் தலையன் நம்ம டிபக்கர் சின்ன கவுண்டர் சப்போட்ல உள்ளவந்தவன் அடுத்த டீம் லீடர் ஆகணும்னு குதிசிக்கிட்டு இருக்கான்.

விஜய் கவுண்டர பாத்து

வணகுங்க்னா என்ன பெருசுகிட்ட சாரி புதுசுகிட்ட என்ன பத்தி சொல்லிடிங்க்லானா

இப்பதான் ஆரமிச்சன் வந்துட்டல்ல நீஏ சொல்லு.

-தொடரும்

Wednesday, October 13, 2010

மாற்றான் தோட்டத்து மெல்லிசையும் மனதை மயக்கும்











சத்தியராஜ் சாப்ட்வேர் இஞ்சநியர் ஆனால்

மத்தியானம் 12 மணிக்கு கோயம்பேடு பஸ்ஸ்டாப்ல டரங்கு பொட்டியோட நம்மசத்தியராஜ் இறங்கராரு அப்ப ஒரு ஜீன்ஸ் போட்ட ஜிகுடி அந்தபக்கம போகுது அதபாத்து.

ஏனுங்கம்மணி இந்த CTS கம்பனி எங்கரிக்குங்க

CTS சா

அதானுங்க இந்த பொட்டிதட்டுர கம்பனிங்கோ

வாட் பொட்டிதட்டுர கம்பனியா?

அட அமாங்க இந்த சாப்டவேரோ , சாப்படாத வேரோனு சொல்லுவாங்கல்ல அதுங்கம்மணி.

ஓ சாப்ட்வேர் கம்பனியா அட்ரெஸ் இருக்கா.

ஆங் இருகுங்கம்மணி இந்த இந்த போன்ல இருகுங்.

CTS - வேளச்சேரி பிராஞ்.

சார் இது வேளச்சேரி - ல இருக்கு நீங்க பஸ்சுல போரதவிட பறக்கும் ட்ரைன்ல போங்க.

ஏனுங்கம்மணி ட்ரைன் பறகுமுங்களா.

இல்லசார் ப்ரிச்சு கட்டி இருக்கும் அதுல போகும்.

சரிங்கம்மணி வர்ட்டுங்களா.

சார் நீங்க எதுக்கு அந்த கம்பனிக்கு போரிங்க.

அதுங்கம்மணி நம்ம ஊரு கொயமுதுர்க்கு பக்கத்துல பொள்ளாச்சி நாம MCA அங்கதாமணி முடிச்சொமுங்க, அப்பறம் இந்த காலேஜ் கேம்ப்பசிண்டேர்வி இருக்குல்லம்மணி அதுல நம்மள செலக்ட் பன்னாங்கம்மணி, அதான் நாமளும் சேந்து பொட்டிதட்டுலாமுனு வந்துருக்கோனுங்க.

நீங்க சாப்ட்வேர் இஞ்சநியரா!.

சத்தியராஜ் அப்பறம் பீச்சுக்கு போய் எம்.ஜி.ஆர் , அண்ணா சமாதி எல்லாம்
பாத்துட்டு, அங்க பக்கத்துல ஒரு ரூம் எடுத்து தங்கிட்டு காலைல
ஆபீஸ் பறக்கும் டிரைன்ன புடிச்சி போறாரு அப்பபாத்து நம்ம தானை தலைவர் கவுண்டமணி அவர்பக்கதுல வந்து உக்காராறு.

ஹலொவ் மை நேம் இஸ் கவுண்டமணி உங்க பேரு.

நீங்க கொயமுதுருங்களா.

அட அமாங் நமக்குங்கன்னா.

அங்கதனானுங்க பொள்ளாச்சி நம்ம பேரு சத்தியராஜ்.

அட பொள்ளாச்சி ரொம்ப நேரிங்கிட்டிங்க., சரி எதுக்குனா இங்கவந்திங்.

அட கலப்ப புடிச்சா கட்டவண்டிதான் ஓட்டுனும்னு, நம்மபுள்ள கார் ஓட்ட வேணும்னு எங்க ஐயன் MCA படிக்கவச்சாருங்க, நாமு எதோ தட்டு தடுமாறி பிட்டு கிட்டுலாம் அடிச்சு பாசாயசுங்க அப்பறம் இந்த CTS கம்பனில நமக்கு ஒரு வேல கேடசுருக்குங்க,
அதான் போய் சேந்துக்கலாமுனு வந்துருகங்கன்னா.

என்ன கம்பனி சொன்னிங்க?

CTS - நோ!

எந்த ப்ராஞ்சுங்கனா.

வேளச்சேரி.,

அட நாமளும் அங்கதானுகங்கனா 1 வருசம்மா குப்பகொட்டிகிட்டு இருக்கோம்.

அப்டிங்கலான ரொம்ப வசதியா போச்சு,
அமங்கனா நம்ம மொதலாளி எப்படி சிடுமூஞ்சியா இல்ல.

அட இங்க மோதலாளிலாம் இல்லைங் நமக்கு மேல சில டபராதளையனுங்க இருப்பானுங்க அவனுக அப்ப அப்ப நம்ம மோதலாளிகிட்ட நம்மள பத்தி போட்டு குடுப்பானுங்க. அதுக்குதான் அவனுகங்க சம்பளம் வாங்கரானுங்க.

சரிங்க படிக்கறப்ப நமலசுத்தி சும்மா பச்ச பசேர்னு இருக்கும் இங்க எப்படிங்க்னா.

ம் இங்கயும் பச்ச, மஞ்ச , செவப்புன்னு கலர்கலரா திரயும்க என்ன அதுல சில ஜீன்ஸ் போட்ட ஜிகுடிங்க இருக்கும் சில சுடிதார் போட்ட சுந்தரிங்களும் இருக்கும்.

அப்ப நமக்கு ரொம்ப வசதியா போச்சுங்னா.

அட இதுதான வேனாங்கறது நம்மகிட்டியே குசும்ப காட்டர வாடி வா நம்ம ஊருல சைடு உட்டா பஞ்ஜாயதுல அத இத பேசி கரக்ட் பண்ணிரலாம் இங்க ஒன்ன ஓட ஓட உட்டு உடுகட்டுவாளுங்கடி.

நம்ம கேரக்டரியே புரிஞ்சிக மாட்ரிகிரியே!.

என்ன உன் கேரக்டுரு பெரிய பொடலங்கா கேரக்டுரு மூடிகிட்டு வா.

இந்த பாரு இப்பதான் புதுசா மெட்ராஸ் வரன்னு நேனைக்குரன் அதோ பார் பெருசா ஒரு கன்னாடி வச்ச கட்டடம் தெரியுதா அதுதான் டைடல் பார்க்.

ஏனுகங்னா கோட்டரடிசிட்டு டைட் ஆகார பார்க்.

ஐயோ ராமா! என்ன ஏன் இந்த கலிசல பசங்களோட கூட்டு சேர வைக்குற.

ராஜா, செல்லம்! இது கோட்டரடிசிட்டு குப்பரபடுக்குற பார்க் இல்ல, இப்ப நாம வெள்ளகாரனுக்குக்கு சலாம் போடா போரோமே அதுமாதிரி இதுவும் ஒரு வெள்ளகாரகூலிங்க வேலசெய்யுர எடம் என்ன ஒன்னு நம்மளமாதிரி நிறைய !!பச்சள புடிங்கிங்கல்லாம்!! இங்க திரிவானுங்க.

ஏதோ இவனுகளுக்கு பின்னால புதுசா மொலச்சமாதிரியும் நமக்கு, இப்பதான் மொலைக்கரமாதிரியும் ரொம்ப ஆடுவானுங்க கோஞ்சம் பாத்து நடந்துக்கு.

ட்ரைன் வேளச்சேரி வந்ததும் ரெண்டு பெரும் ஆட்டோ புடிச்சு கம்பெனிக்கு போறாங்க.
கம்பெனிக்கு உள்ள போனதும் கவுண்டமணி

இந்தபாரு நி இப்பதான் வர அந்த ரூம் போ ஒரு பஞ்சுமுட்டாய் தலையன் உக்காந்துருப்பான் அவன்கிட்ட நி கொண்டுவந்த எல்லாம் கொட்டிட்டு வா.

உள்ள ரகுவரன் ப்ராஜெக்ட் லீடரா உக்காந்து இருக்காரு

சார் குட்மார்நிங்

எஸ் எஸ் எஸ் வாங்க சத்தியராஜ், அப்பறம் சென்னை எப்படி நல்லாருக்கா அட்ரசெல்லாம் கரக்டா கண்டுபுடிச்சி வந்துடிங்க

சார் இது என்னோட அப்போயன்ட்மென்ட் ஆர்டர்.

ஐ நோ, ஐ நோ

சார்,சார்

ஐ நோ, ஐ நோ, ஐ நோ சத்தியராஜ்.

எனுங்சார் இத நீங்கதான எனக்கு குடுத்திங் இப்ப நீங்க இல்லன்ரிங்க.

ஹ ஹ ஹ இது நான் தான் குடுத்தன் “அது எனக்கு தெரியும்னு” இங்கிலிஷ்ல சொன்ன.

ஓ அப்படிங்களா நா தப்பா புரின்ச்சிகிடோமுங்க சரி என்னோட எடம் எதுன்னு
சொன்னிங்கன்னா பொழப்ப பாபமுங்க.

அதுக்கு முன்னாடி உங்கள எல்லாருக்கும் அறிமுக படுத்துறன்
ரகுவரன் சத்தியராஜ கூடிகிட்டு பொய் எல்லார்கிட்டயும் அறிமுக படுத்துறாரு

டியர் பிரண்ட்ஸ் இவருதான் நம்ம கம்பனிக்கு புதுசா ஜாயின் பண்ண நியூ எம்ப்லாயி
சத்தியராஜ், இவங்க எல்லாரும் தான் நம்ம டீம்

கவுண்டமணி ரகுவரன பார்த்து மனசுக்குள்ள (இப்படிதான் ஒரு வருசத்துக்கு முன்னாடி என்ன காட்டி சொன்ன இப்ப இவனா வாடி வா மஞ்சத்தண்ணி ஊத்திடான்ல இனி நி பலியாடுதான்).

ரகுவரன் சத்தியராஜிடம் இதபாருங்க இதுதான் ஒங்களோட சீட்டு., இதோ இவருதான் உங்களோட டிஎல்

ஹாய் சத்தியராஜ் அப்படின்னு கை கொடுத்தாரு நம்ம சுப்பர் ஸ்டார்.,

அவர பார்த்துட்டு நம்ம சத்தியராஜ்
எனுகசார் நீங்க என்ன சாமியாரா இப்புடி தாடி கீடிலாம் வச்சி பயமுருதிரிங்க.

ரகுவரன் சத்தியராஜிடம் இல்லபா இவரு ஒரு பத்து வருசம்மா ஒரு ப்ராஜெக்ட்ல பிசியா இருகுக்காரு அதனால தான்

சரி ஓகேமா நா என்ற வேலய பாக்குரன் வரட்டுங்களானு
சொல்லிடு அவரோட எடத்துல போய் ஒக்காருராரு.

- தொடரும்

Tuesday, October 12, 2010

சில சின்ன விஷயம் நம்மை ஆச்சிரியப்படுத்தும்













அழிவை நோக்கி விடியல்

காலை 8 மணி இருக்கும், சுந்தர் வடபழனி பஸ் ஸ்டாப்ல நின்னுக்கிட்டு இருந்தான், அவன் எப்பவம் போற பஸ்ல கூட்டம் கொஞ்சம் கம்மி தான் அதனால சீட்டு ஈசியா கேடசிடுச்சு, அவன் ஒரு நடிகை கிட்ட சமயகாரனா இருக்கான்., அந்த நடிகை வீடு வந்தது, எப்பவும் போல வீட்டுக்கு போனான். மெயின் ஹால்ல பட மொதலாலிகளோட தன்னோட அடுத்த படத்த பத்தி பேசிகிட்டு இருந்தா அந்த நடிகை அத பார்த்ததும் குனிஞ்சி ஒரு வணக்கம்
போட்டுட்டு போய்ட்டான்.

தயாரிப்பாளர்கள் நடிகையிடம்

மேடம் இந்தப்படத்துல நீங்க ஒரு பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆடனும் பரவாயில்லயா

அதுக்கு என்ன நெஜத்துல நெரைய குத்து பாத்தாச்சு படத்துலதான சரிங்க ஒரு கண்டிசன்

என்ன மேடம்

காஸ்ட்டியும் எவ்வவளவு கம்மியாகுதோ அவ்வளவுக்கு அவ்வளவு ரேட் ஜாஸ்தியாகும்

பரவாயில்ல மேடம்

சரி நாங்க கெளம்பட்டுமா மேடம்
ஓகே வாங்க.

சுந்தர்
என்னம்மா

இன்னைக்கு சூட்டிங் இல்ல நி மதியானம் என்னோட ஒரு பங்சனுக்கு வா
சரிங்கமா

மதியம் 12 மணி வண்டி தயாரானது

அம்மா எதாவது சாப்படுரிங்களா௦௦
இல்ல கெளம்பலாம்
சரிம்மா

வண்டி பெசன்ட் நகர் போனது என்ன சுந்தர் என்ன உங்க அம்மா பரவாயில்லையா

இல்லாம ஹோஸ்பிட்டல்ல சேத்து இருக்கோம் இன்னைக்கு ஒரு நாள் தான் டைம் இருக்கு
நாளைக்கு பணம் கட்டனும் நீங்கதான் ஏர்பாடு பன்றன்னு சொன்னிங்க அதான் பதட்டம் இல்லாம இருக்கம்மா

ம் அதுக்குதான் போரோம் எங்கம்மா அதான் காலைல சொன்னல பங்சன்னு

கார் ஒரு பங்களாவை நோக்கி போனது
சுந்தார் வா போலாம்

அந்த பங்களாவில் பல கோடிஸ்வர வீட்டு பசங்க சும்மா தண்ணி தம்முன்னு மப்புல இருந்தாங்க அதபார்ததும்

அம்மா என்னம்மா இங்ககூட்டிடு வந்துரிக்கிங்க
சொல்றன் வா

ஒரு தனிரூமுக்கு போனார்கள்

நடிகை சுந்தரை பார்த்து சுந்தர் இந்தரூம்ல பாத்ரூம் இருக்கு குளிச்சுட்டு வா அப்பறம் இங்க நல்ல சட்ட எல்லாம் இருக்கு அதுல ஒன்னு போட்டுக்கோ அப்பறம் இங்க இருக்க மேக்கப்,பர்பியும் எல்லாம் யூஸ் பண்ணிக்கோ

எதுக்கும்மா

இங்க பாரு சுந்தர் போதைக்காக பொனத்த கூட உடாதா மனுசங்க தான் இங்க இருக்காங்க
பணத்துக்காக நாம அலையுறோம் இவுங்க உடம்புக்காக அலையுறாங்க
நாம பணத்துக்காக நம்ம உடம்ப குடுக்கபோறோம்.
இன்னும் கொஞ்ச நேரதுல ஒரு பணக்கார பொண்ணு ஒன்ன கூடிட்டு போகவருவா
அவலோட போ அவசொல்றமாதிரி செய் பாக்கலாம் பாய்.



அம்மாவின் உயிர் காக்க தன்மானத்தை இழக்க துணிந்தான் - சுந்தர்.

.

Related Posts Plugin for WordPress, Blogger...