Wednesday, October 27, 2010

கயிரு

இன்னைக்கு நான் முதல் தடவ office போரன். படிச்சு முடிச்சு முதல் முறை வேலைக்கு அதுவும் ஒரு கார்ப்ரேட் கம்பனிக்கு நினச்சு பாக்கவே ஒரு பயம் கலந்த சந்தோசம். என்ன ஒன்னு என்ன மாதிரி இன்னைக்கு மொத நாள் வரவங்கள பாக்கும் போது நாமளும்
ஜெயிச்சிட்டோம்னு உள்ளுக்குள்ள ஒரு சந்தோசம்.

எம் பேரு ராம்குமார், நாமக்கல் பக்கத்துல ஒரு சின்ன கிராமத்துல இருந்து சென்னை வரன்.மொத தடவ இந்த high speed வண்டிங்க, கலர்கலரா பொண்ணுங்க நான் பக்காத ஒரு தனி உலகம் என்னோட கண்ணு முன்னால. வாழ்க்கைல சில காஞ்ச பூமிய மட்டும் பாத்த எனக்கு, இங்க ஒரு பெரிய கண்ணாடி கட்டடத்துல சில் குளிர்ல குசன் சேர்ல ஒக்காந்து வேலபாக்குற பாக்கியம் என்னோட வம்சதுல எனக்கு கெடச்சது பெரிய புண்ணியம்.

ஷிவானி என்கூட வேல பாக்குர பொண்ணு "ரொம்ப அழகு"., புது சென்னை இந்த பெரிய ஹை கலாஸ் சொசைட்டி !., நுனிநாக்கு ஆங்கிலம்!, இது எல்லாம் என்ன அவலோட பேச விடாம தடுக்குது .

அப்பறம் அவளே வந்து பேசனா., அன்னைக்கு எப்பவும் போலதான் ஏசி ஓடுச்சு ஆனா என்னோட எடம் மட்டும் மைனஸ் டிகிரிக்கும் கீழ போய்டுச்சு., என்னோட இதயத்துல பெரிய இடி இடிக்கர சத்தமட்டும் கேட்டுகிட்டு இருந்துச்சு அதனால அவ என்ன பேசுநானு எனக்கு ஒன்னும் கேக்கல.

அவ என்னவிட்டு அவளோட எடத்துக்கு நடந்து போனா நா இங்க இருந்தாலும் என்ன அரியாமல் என்னோட கால் அவபின்னாடி போச்சு.,

அத பாத்த என்னோட டிஎல் என்ன கூப்டு அவனோட சொந்த கத சோக கத எல்லாம் சொல்லி என்ன அசிங்க படுத்த ஆரமிச்சான்.

அப்பவும் தலைக்கு மேல நெருப்பு எரிஞ்சாலும் ஐஸ்கட்டில ஒக்காந்த மாதிரி இருந்துச்சு ஏன்னா அவ நா திட்டு வாங்கறத பாத்து சிரிச்சா.

அப்பறம மதியம் lunch எல்லாரும் அவுங்க அவுங்க கொண்டு வந்தத கொறிக்க ஆரமிச்சாங்க., அவ அவளோட friends கூட ஒக்காந்து அவகொண்டு வந்த lunch box ஓபன் பண்ணா அது கூட அவலமாதிரி சின்னதா இருந்துச்சு., Box - ல இருந்து ஒரு முள் கரண்டியால நைலான் கயிரு மாதிரி எதோ எடுத்து சாப்ட ஆரமிச்சா.,
“ச்செ அதுவும் ரொம்ப அழகுதான்”.
அப்பறம் அந்த coke டின்ன குடிகரப்ப அது அவ உதட்ட கிளிசுடுமோன்ற பயமா எனக்கு இருந்துச்சு. அவள ரசிச்சதால அன்னைக்கு எனக்கு புவாவுக்கு உவா ஆச்சு. இருந்தும் எனக்கு புல் மீள்ஸ் சாப்ட திருப்தி.

அன்னைக்கு ஈவ்னிங் எல்லாரும் கெளம்பனாங்க அவளும் தான் அவ ஆபீஸ் விட்டு போர வரைக்கும் வெய்ட் பண்ணிட்டு இருந்தன்., அவ போனதுக்கு அப்பறம் என்னோட டிஎல் தனி ரூம் போய் அவரோட வேலைய பாக்க ஆரமிச்சாரு நா அவ ஒக்காந்து இருந்த எடத்துல போய் ஒரு நிமிசம் ஒக்காந்து கண்ணமூடி அந்த குசன்ல சான்ஜன்.அது எனக்கு எங்க ஊரு வக்க போர்ல படுத்து கண்ண மூடி தூங்கன மாதிரி இருந்துச்சு.

ரெண்டாவது நாள் ., அவகூட ஏதாவது பேசனும்னு நல்லா ட்ரஸ் பண்ணிக்கிட்டு போன ., அன்னைக்குன்னு பாத்து எல்லாரும் ஒரு மாதிரி மூஞ்ச உம்முன்னு வச்சுக்கிட்டு இருந்தாங்க எனக்கு ஒன்னும் புரியல சரின்னு என்னோட எடத்துல போய் அவ வந்துடாலானு பாத்தன். அவ எங்க டிஎல் ட எதோ பேசிகிட்டு இருந்தா.

அப்பறம் என்ன பாத்து வந்தா எனக்கு ஸ்வீட் கொடுத்தா எதுக்குன்னு கேட்டன் சொல்றன்னு சொல்லிட்டு சாமி கயிரு மாதிரி எதோ ஒன்ன என்னொட கைல கட்னா .,
“ஹாப்பி ரக்சாபந்தன் அண்ணா“-ன்னு அவ சொன்னா .,எலெக்ட்ரிக் ட்ரைன்ல அடிபட்ட மாதிரி இருந்துச்சு.,

No comments:

Post a Comment

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...