Wednesday, October 13, 2010

சத்தியராஜ் சாப்ட்வேர் இஞ்சநியர் ஆனால்

மத்தியானம் 12 மணிக்கு கோயம்பேடு பஸ்ஸ்டாப்ல டரங்கு பொட்டியோட நம்மசத்தியராஜ் இறங்கராரு அப்ப ஒரு ஜீன்ஸ் போட்ட ஜிகுடி அந்தபக்கம போகுது அதபாத்து.

ஏனுங்கம்மணி இந்த CTS கம்பனி எங்கரிக்குங்க

CTS சா

அதானுங்க இந்த பொட்டிதட்டுர கம்பனிங்கோ

வாட் பொட்டிதட்டுர கம்பனியா?

அட அமாங்க இந்த சாப்டவேரோ , சாப்படாத வேரோனு சொல்லுவாங்கல்ல அதுங்கம்மணி.

ஓ சாப்ட்வேர் கம்பனியா அட்ரெஸ் இருக்கா.

ஆங் இருகுங்கம்மணி இந்த இந்த போன்ல இருகுங்.

CTS - வேளச்சேரி பிராஞ்.

சார் இது வேளச்சேரி - ல இருக்கு நீங்க பஸ்சுல போரதவிட பறக்கும் ட்ரைன்ல போங்க.

ஏனுங்கம்மணி ட்ரைன் பறகுமுங்களா.

இல்லசார் ப்ரிச்சு கட்டி இருக்கும் அதுல போகும்.

சரிங்கம்மணி வர்ட்டுங்களா.

சார் நீங்க எதுக்கு அந்த கம்பனிக்கு போரிங்க.

அதுங்கம்மணி நம்ம ஊரு கொயமுதுர்க்கு பக்கத்துல பொள்ளாச்சி நாம MCA அங்கதாமணி முடிச்சொமுங்க, அப்பறம் இந்த காலேஜ் கேம்ப்பசிண்டேர்வி இருக்குல்லம்மணி அதுல நம்மள செலக்ட் பன்னாங்கம்மணி, அதான் நாமளும் சேந்து பொட்டிதட்டுலாமுனு வந்துருக்கோனுங்க.

நீங்க சாப்ட்வேர் இஞ்சநியரா!.

சத்தியராஜ் அப்பறம் பீச்சுக்கு போய் எம்.ஜி.ஆர் , அண்ணா சமாதி எல்லாம்
பாத்துட்டு, அங்க பக்கத்துல ஒரு ரூம் எடுத்து தங்கிட்டு காலைல
ஆபீஸ் பறக்கும் டிரைன்ன புடிச்சி போறாரு அப்பபாத்து நம்ம தானை தலைவர் கவுண்டமணி அவர்பக்கதுல வந்து உக்காராறு.

ஹலொவ் மை நேம் இஸ் கவுண்டமணி உங்க பேரு.

நீங்க கொயமுதுருங்களா.

அட அமாங் நமக்குங்கன்னா.

அங்கதனானுங்க பொள்ளாச்சி நம்ம பேரு சத்தியராஜ்.

அட பொள்ளாச்சி ரொம்ப நேரிங்கிட்டிங்க., சரி எதுக்குனா இங்கவந்திங்.

அட கலப்ப புடிச்சா கட்டவண்டிதான் ஓட்டுனும்னு, நம்மபுள்ள கார் ஓட்ட வேணும்னு எங்க ஐயன் MCA படிக்கவச்சாருங்க, நாமு எதோ தட்டு தடுமாறி பிட்டு கிட்டுலாம் அடிச்சு பாசாயசுங்க அப்பறம் இந்த CTS கம்பனில நமக்கு ஒரு வேல கேடசுருக்குங்க,
அதான் போய் சேந்துக்கலாமுனு வந்துருகங்கன்னா.

என்ன கம்பனி சொன்னிங்க?

CTS - நோ!

எந்த ப்ராஞ்சுங்கனா.

வேளச்சேரி.,

அட நாமளும் அங்கதானுகங்கனா 1 வருசம்மா குப்பகொட்டிகிட்டு இருக்கோம்.

அப்டிங்கலான ரொம்ப வசதியா போச்சு,
அமங்கனா நம்ம மொதலாளி எப்படி சிடுமூஞ்சியா இல்ல.

அட இங்க மோதலாளிலாம் இல்லைங் நமக்கு மேல சில டபராதளையனுங்க இருப்பானுங்க அவனுக அப்ப அப்ப நம்ம மோதலாளிகிட்ட நம்மள பத்தி போட்டு குடுப்பானுங்க. அதுக்குதான் அவனுகங்க சம்பளம் வாங்கரானுங்க.

சரிங்க படிக்கறப்ப நமலசுத்தி சும்மா பச்ச பசேர்னு இருக்கும் இங்க எப்படிங்க்னா.

ம் இங்கயும் பச்ச, மஞ்ச , செவப்புன்னு கலர்கலரா திரயும்க என்ன அதுல சில ஜீன்ஸ் போட்ட ஜிகுடிங்க இருக்கும் சில சுடிதார் போட்ட சுந்தரிங்களும் இருக்கும்.

அப்ப நமக்கு ரொம்ப வசதியா போச்சுங்னா.

அட இதுதான வேனாங்கறது நம்மகிட்டியே குசும்ப காட்டர வாடி வா நம்ம ஊருல சைடு உட்டா பஞ்ஜாயதுல அத இத பேசி கரக்ட் பண்ணிரலாம் இங்க ஒன்ன ஓட ஓட உட்டு உடுகட்டுவாளுங்கடி.

நம்ம கேரக்டரியே புரிஞ்சிக மாட்ரிகிரியே!.

என்ன உன் கேரக்டுரு பெரிய பொடலங்கா கேரக்டுரு மூடிகிட்டு வா.

இந்த பாரு இப்பதான் புதுசா மெட்ராஸ் வரன்னு நேனைக்குரன் அதோ பார் பெருசா ஒரு கன்னாடி வச்ச கட்டடம் தெரியுதா அதுதான் டைடல் பார்க்.

ஏனுகங்னா கோட்டரடிசிட்டு டைட் ஆகார பார்க்.

ஐயோ ராமா! என்ன ஏன் இந்த கலிசல பசங்களோட கூட்டு சேர வைக்குற.

ராஜா, செல்லம்! இது கோட்டரடிசிட்டு குப்பரபடுக்குற பார்க் இல்ல, இப்ப நாம வெள்ளகாரனுக்குக்கு சலாம் போடா போரோமே அதுமாதிரி இதுவும் ஒரு வெள்ளகாரகூலிங்க வேலசெய்யுர எடம் என்ன ஒன்னு நம்மளமாதிரி நிறைய !!பச்சள புடிங்கிங்கல்லாம்!! இங்க திரிவானுங்க.

ஏதோ இவனுகளுக்கு பின்னால புதுசா மொலச்சமாதிரியும் நமக்கு, இப்பதான் மொலைக்கரமாதிரியும் ரொம்ப ஆடுவானுங்க கோஞ்சம் பாத்து நடந்துக்கு.

ட்ரைன் வேளச்சேரி வந்ததும் ரெண்டு பெரும் ஆட்டோ புடிச்சு கம்பெனிக்கு போறாங்க.
கம்பெனிக்கு உள்ள போனதும் கவுண்டமணி

இந்தபாரு நி இப்பதான் வர அந்த ரூம் போ ஒரு பஞ்சுமுட்டாய் தலையன் உக்காந்துருப்பான் அவன்கிட்ட நி கொண்டுவந்த எல்லாம் கொட்டிட்டு வா.

உள்ள ரகுவரன் ப்ராஜெக்ட் லீடரா உக்காந்து இருக்காரு

சார் குட்மார்நிங்

எஸ் எஸ் எஸ் வாங்க சத்தியராஜ், அப்பறம் சென்னை எப்படி நல்லாருக்கா அட்ரசெல்லாம் கரக்டா கண்டுபுடிச்சி வந்துடிங்க

சார் இது என்னோட அப்போயன்ட்மென்ட் ஆர்டர்.

ஐ நோ, ஐ நோ

சார்,சார்

ஐ நோ, ஐ நோ, ஐ நோ சத்தியராஜ்.

எனுங்சார் இத நீங்கதான எனக்கு குடுத்திங் இப்ப நீங்க இல்லன்ரிங்க.

ஹ ஹ ஹ இது நான் தான் குடுத்தன் “அது எனக்கு தெரியும்னு” இங்கிலிஷ்ல சொன்ன.

ஓ அப்படிங்களா நா தப்பா புரின்ச்சிகிடோமுங்க சரி என்னோட எடம் எதுன்னு
சொன்னிங்கன்னா பொழப்ப பாபமுங்க.

அதுக்கு முன்னாடி உங்கள எல்லாருக்கும் அறிமுக படுத்துறன்
ரகுவரன் சத்தியராஜ கூடிகிட்டு பொய் எல்லார்கிட்டயும் அறிமுக படுத்துறாரு

டியர் பிரண்ட்ஸ் இவருதான் நம்ம கம்பனிக்கு புதுசா ஜாயின் பண்ண நியூ எம்ப்லாயி
சத்தியராஜ், இவங்க எல்லாரும் தான் நம்ம டீம்

கவுண்டமணி ரகுவரன பார்த்து மனசுக்குள்ள (இப்படிதான் ஒரு வருசத்துக்கு முன்னாடி என்ன காட்டி சொன்ன இப்ப இவனா வாடி வா மஞ்சத்தண்ணி ஊத்திடான்ல இனி நி பலியாடுதான்).

ரகுவரன் சத்தியராஜிடம் இதபாருங்க இதுதான் ஒங்களோட சீட்டு., இதோ இவருதான் உங்களோட டிஎல்

ஹாய் சத்தியராஜ் அப்படின்னு கை கொடுத்தாரு நம்ம சுப்பர் ஸ்டார்.,

அவர பார்த்துட்டு நம்ம சத்தியராஜ்
எனுகசார் நீங்க என்ன சாமியாரா இப்புடி தாடி கீடிலாம் வச்சி பயமுருதிரிங்க.

ரகுவரன் சத்தியராஜிடம் இல்லபா இவரு ஒரு பத்து வருசம்மா ஒரு ப்ராஜெக்ட்ல பிசியா இருகுக்காரு அதனால தான்

சரி ஓகேமா நா என்ற வேலய பாக்குரன் வரட்டுங்களானு
சொல்லிடு அவரோட எடத்துல போய் ஒக்காருராரு.

- தொடரும்

8 comments:

 1. புடிச்சிருந்ததுன்ன ஓட்டு போடுரிங்களோ இல்லையோ ஒரு கமான்ட் போடலாமுள்ள நீங்க யாருன்னு நாமும் தேரிந்சிகுவோமில்ல

  ReplyDelete
 2. செம கலக்கல்...தொடருங்கள்

  ReplyDelete
 3. நண்பா அப்படியே punctuation, எழுத்துப்பிழைகளையும் கவனியுங்கள்.

  ReplyDelete
 4. திருத்த முயற்ச்சி செய்கிரேன் நன்றி
  நாகராஜசோழன் MA!

  ReplyDelete
 5. ஒரு சினிமா பார்த்ததுபோல் ரசித்தேன். அருமை !

  ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...