ஒரு படத்த வில்லனுக்காக பாத்ததுன்னா அது இந்த படத்த தான். இதுல ஹீரோவ ஒரு டம்மி பீசு மாதிரி தான் கடைசி வரைக்கும் காட்டுவார்கள்
நாம பல பேட்மேன் சீரிஸ் படம் பாத்துருப்போம் இது பேட்மேன் சீரிஸ்ல கடைசியா வந்த படம் தி டார்க் நைட். நம்ம தமிழ் படத்துல எந்த ஒரு வில்லன்னும் சும்மா ஏய் ஏய்ன்னு கத்தி கத்தி நம்ம காத கிழிக்காம விட மாட்டானுங்க. இப்ப நம்ம டாக்டர் கூட வில்லனுக்கு நா கொரச்சலான்னு அவரும் ஒருபக்கம் dtts மிக்ஸ் பண்ணி சும்மா வாழு வாளுன்னு கத்திக்கிட்டு இருக்காறு விடுங்க அதல்லாம் நாமா பண்ண பாவம் அனுபவச்சுதான் ஆகணும்.சரி இந்த படத்த பத்தி பாப்போம்.
இந்த படத்தோட கத என்னென்னா கவுதம் சிட்டில நடக்கற பல அனியாயங்கள பேட்மேன் துணையோட போலிஸ் தடுக்குது. அங்கு புதிதாக உருவெடுத்திருக்கும் ஜோக்கர் என்னும் பைத்தியக்காரன் அந்த நகரத்தில் உள்ள சமூக விரோதிகளுக்கு உதவியாக பேட்மேனை அழிப்பதற்கு வருகிறான்.ஜோக்கர் பேட்மேனை கவுதம் சிட்டியை விட்டு போக வேண்டும் இல்லை என்றால் அந்த நகரத்தில் உள்ள மக்கள் பலரையும் கூட்டம் கூட்டமாக கொல்வேன் என்று மிரட்டுகிரான் அவனிடம் இருந்து மக்களை காப்பாற்றினாரா சமூக விரோதிகளை பிடித்தாரா என்பதுதான் படத்தின் கதை.
படம் ஒரு பேங் கொள்ளைல ஆரமிக்கும். முகமூடி அணிந்த சிலர் பல இடங்களில் இருந்து இனணந்து கொள்ளையடிக்க வருவார்கள். கொள்ளையடித்த பின் வந்தவர்களில் ஒருவன் மற்ற அனைவரயும் போட்டு தள்ளி கொண்டு இருப்பான் கடைசி ஒருவனை கொல்ல முயலும் பொழுது அவன் உசாராகி அவனை கொல்ல துப்பாக்கி எடுப்பான்.அப்ப அவன் கேப்பான் இந்த பேங்க கொள்ளையடிக்க ப்ளான் போட்டு கொடுத்த ஜோக்கர் எல்லாரையும் கொல்ல சொல்லிடான் இல்ல இப்ப ஒன்ன கொல்ல போறன் இந்த பணம் எல்லாம் எனக்குதான் என்று சொல்லுவான் அதற்க்கு அனைவரயும் போட்டு தள்ளியவன் சொல்லுவான் அடுத்தது போட்டு தள்ள சொன்னது ஒன்ன இல்ல டிரைவரன்னு சொல்லும் போது ஒரு பஸ் அந்த பேங்க்கதவ ஓடச்சுகிட்டு வந்து துப்பாக்கி நீட்டியவனை நசுக்கும். வண்டில இருந்து இறங்கி வந்த டிரைவர் ஹைய்யோ எவ்வளவு பணம் என வாய் பிளக்கும் போது அவனையும் போட்டு தள்ளுவான். அங்க இருக்கற பேங் அதிகாரி இந்த மாதிரி மனசாட்சி இல்லாம கொல்றியே உன்னையும் அந்த ஜோக்கர் கொல்ல போறான் போ என்று சொல்லும் போது அவனிடம் வந்து அது முடியாது அந்த ஜோக்கரே நான்தான் என்று சொல்லி அவன் வாயில் வெடிகுண்டு வைத்து வண்டியுடன் செல்வான் ஜோக்கர்.
அந்த நகரத்தில் பல சமூக விரோதிகள் அவர்கள் கொள்ளையடித்த பணத்தை நம்ம ராசா மாதிரி ஒரு பினாமி மூலம் ஹாங்காங்கு கடத்தி விடுவார்கள். அவைர்களிடம் வந்து ஜோக்கர் ஒங்க பணம் பரி போக போகுது அத தடுக்கணும் நா பேட்மேன போட்டு தல்லன்னும்ன்னு சொல்லுவான். அவனை முதலில் கிறுக்கன் என்று அனைவரும் விரட்டுவார்கள். அப்ப ஒருவன் ஒன்னைய இப்பவே கொல்ரன் பாக்குரியான்னு கிட்ட வருவான் அப்ப ஒரு பென்சில மேஜை மீது தலைகீழாக வைத்து ஜோக்கர் நா இந்த பென்சில மறையவைக்குரன் எல்லாரும் மேஜிக் பாருங்கன்னு சொல்லி வரவன மடக்கி அந்த பென்ச்சில்ல மூஞ்சியைவைத்து ஒரே அலுத்து ஆள் அம்பேல். அங்க இருந்து ஜோக்கர் எஸ்கேப்
பேட்மேன் அந்த ப்ரோகரை பிடித்துவிடுவார். அந்த சமூக விரோதிகள் ஜோக்கரை அழைத்து பேட்மேனை போட்டு தள்ள சொல்லுவார்கள் அதற்க்கு என்ன வேண்டும் என்று கேட்பார்காள் கொள்ளையடித்த பணத்தில் பாதி வேண்டும் என்று சொல்லவான் ஒத்துகொள்வார்கள். அந்த நகரத்தில் ஒரு பத்திரிக்கை நிருபர் அந்த சமூக விரோதிகளை பற்றி விவரம் சேகரிக்கும் பொழுது பேட்மேன் யார் என்பதை அறிந்துகொள்வார். நம்ம ஜோக்கர் பேட்மேன் யாரு யாரு என கேட்டு நகரத்தில் உள்ள ஒவ்வொருவராக கொல்வான். பேட்மேன் இந்த நகரத்தை விட்டு போக வேண்டும் என்று சொல்வான் ஜோக்கர். அதன் படி பேட்மேன் நான் யார் என்பதை அறிவிப்பதாக கூருவார். பேட்மேனை காப்பாற்ற அந்த தினத்தில் அந்த பத்திரிக்கை நிருபர் நான்தான் பேட்மேன் என்று அறிமுகபடுத்தி கொண்டு அங்க இருந்துகிலம்புவார்.
பேட்மேன் யார் என்பது தெரிந்ததும் ஜோக்கருக்கு பாதி பணத்தை அந்த சமூக கும்பல் குடுக்கும். அந்த பணத்தின் மேல் ப்ரோக்கரை ஒக்கராவச்சு சின்ன மல மாதிரி இருக்கும் அந்த பணத்த எரிப்பான். பணத்த எரிக்கரத பாத்து ஒருத்தன் கத்துவான் அப்ப எண்டா பணம் பணம்ன்னு அலைறிங்க இப்ப இந்த சிட்டுக்கு தேவ ஒரு நல்ல வில்லன் அது நான்தான் சொல்லி எல்லா சமூக விரோதிகளையும் போட்டு தள்ளுவான் ஜோக்கர்.
எதேச்சையாக ஜோக்கர் பேட்மேன் இடம் மாட்டி விடுவான் அவனை விடுவிக்க அவனது ஆட்கள் அந்த நிருபரையும் நிருபரின் காதலியையும் வேறு பகுதிக்கு கடத்தி பாம் வைத்து மிரட்டுவார்கள். நிருபரை காப்பாற்ற பேட்மேன் செல்லும் பொழுது போலிஸ் நிருபரின் காதலியை காப்பாற்ற செல்லும் தவறுதலாக நிருபரின் காதலி இறந்து விடுவார். நிருபர் பாதி வெந்த முகத்துடம் hospital ல இருப்பார். அந்த சமயத்தில் ஜோக்கர் தப்பிவிடுவான். ஜோக்கர் நிருபரை கடத்தி ஒன்னோட காதலியின் மரணத்துக்கு பேட்மேன் மற்றும் போலீஸ்தான் காரணம்ன்னு சொல்லி பழிவாங்க அவன தயார்படுத்தி அனுப்பிருவான்.
இறுதியாக போலீஸிடம் ஜோக்கர் நகரம் முழுவதும் பாம் வைத்திருபதாக கூற அந்த நகரத்தை விட்டு மக்களை கப்பல் மூலம் வேறு ஒரு நகரத்துக்கு மாற்றுவார்கள். அதுபோல் அந்த நகரத்தின் கைதிகள் அனைவரையும் வேறு ஒரு கப்பல் மூலம் மாற்றுவார்கள். ஜோக்கர் அந்த இரண்டு கப்பலிலும் பாம் வைத்து அதன் கண்ட்ரோல்களை கைதிகள் கப்பலில் நகரமக்களின் கண்ட்ரோல்லும், நகரமக்கள் கப்பலில் கைதிளின் கண்ட்ரோல்லும் கொடுத்து ஒரு கப்பலில் உள்ளவர்கள் மட்டும் தப்பிக்கலாம் முதலில் கண்ட்ரோலை ஆழுத்துபவர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு என்று அறிவிப்பான்
எந்த கப்பல் வெடித்தது என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
படத்தை இயக்கியது Christopher Nolan.
படத்தை பார்க்க விரும்பும் ஆர்வலர்களுக்கு அதன் சுட்டி
Dark Knight
//இப்ப நம்ம டாக்டர் கூட வில்லனுக்கு நா கொரச்சலான்னு அவரும் ஒருபக்கம் dtts மிக்ஸ் பண்ணி சும்மா வாழு வாளுன்னு கத்திக்கிட்டு இருக்காறு//
ReplyDeleteவிடுங்க பாஸ் அவரால முடிஞ்சது! அவர் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றாரு?
//படத்தை இயக்கியது Christopher Nolan//
ReplyDeleteம்ம்ம்...நோலன் இப்படியும் படம் எடுப்பார்!
//ஜீ... said... 2
ReplyDelete//படத்தை இயக்கியது Christopher Nolan//
ம்ம்ம்...நோலன் இப்படியும் படம் எடுப்பார்!
//
பின்ன மெமொண்டோ இன்செப்சென்ன்னு படம் எடுத்து கலக்கனவராச்சே
//அந்த நகரத்தில் பல சமூக விரோதிகள் அவர்கள் கொள்ளையடித்த பணத்தை நம்ம ராசா மாதிரி ஒரு பினாமி மூலம் ஹாங்காங்கு கடத்தி விடுவார்கள். //
ReplyDeletesuper ...
ரைட்டு....
ReplyDeleteநோலனின் ப்ரெஸ்டீஜ் பாத்தீங்களா பாஸ்? செம்ம!
ReplyDeletehttp://umajee.blogspot.com/2011/02/prestige.html