Sunday, March 20, 2011

அவள விடமாட்டேன்

"ரவி இன்னைக்கு நா அவள பாத்தே ஆகணும்டா நீ வரியாடா"

"டே சிவா நீயும் அவள விடாம தொரத்திகிட்டு தான் இருக்க ஆனா அவ ஒன்ன ஒரு வாட்டி கூட மதிச்சதே இல்ல இந்த மானம்கெட்ட பொழப்பு தேவதானா?"

"இல்ல டா இன்னைக்கு அவள நா சம்மதிக்க வச்சு காட்ரண்டா, இன்னைக்கு ஒன்னு அவ என்னோட பேச்ச கேட்டாகனும் இல்ல அவள..... நீ வா பாத்துக்கலாம்"

**********


"மச்சி எங்கடா அவ இன்னும் காணும், என்ன நீ வருவன்னு தெரிஞ்சி எஸ் ஆகிட்டாலா"

"வருவாடா, மவளே வரட்டும் அவள"

"மச்சி அங்க பாருடா அவ வராடா, டே என்ன டா எவனோ ஒரு பார்டிகார்டோட வராளாற்றுக்கு"

"எவன் வந்தா எனக்கு என்ன நீ இருடா நா போய்ட்டு வரன் எதுக்கும் வண்டிய ஸ்டார்ட் பண்ணி வை"

**********


"ஹாய், என்ன தெரியுதா"

"தெரியுது சொல்லுங்க"

"செல்வி இவன் யாரு, ஹே மிஸ்டர் என்ன தனியா வர பொண்ணுகிட்ட தகராறு பண்றியா"

"விடுங்க குமார், என்ன வேனும் சீக்கிரம் சொல்லு"

"உன்கிட்ட தனியா பேசனும்"

"குமார் நீங்க போங்க நா வரன்"

"பையன் ஏதாவது பம்பனான்னா மிஸ்டுகால் கொடு வந்து பிரிச்சு மேஞ்சர்றன்"

"ஒன்னும் ஆகாது நீங்க போங்க நா கொஞ்ச நேரத்துல வரன்"

**********


"அதுவந்து நா உன்ன ரொம்ப நாளா பாலோ பண்றன்"



"அதுதான் தெரியுமே, இப்ப என்ன 'ஐ லவ் யு' சொல்லனுமா"

"இல்ல உன்கூட படிகாரள விமலா அவள கரக்ட் பண்ணனும் அதுக்கு"

"அது சரி, அதுக்கு தான் குட்டி போட்ட பூனை மாதிரி என்ன சுத்தி சுத்தி வந்தியா"

"புள்ளையார கரட் பண்ணனும்னா மூஞ்சூற தான மொதல்ல கரட் பண்ணனும்"

"என்னது மூஞ்சூற..."

"சாரி! சாரி! நீ ஒரு பாலமா இருந்து அவகிட்ட என்னோட லவ்வ சொல்லகூடாதா? "

**********


"அவளும் உன்ன நெனச்சு உன்னோட friendu ரவி பின்னாடி இப்பவரைக்கும் சுத்திகிட்டு தான் இருக்கா இன்னிக்கு தான் உன்கிட்ட லவ் சொல்லலாம்ன்னு அவன் கிட்ட பிட்ட போட்டு கிட்டு இருக்கா திரும்பி பாரு"

"அந்த பக்கம் விமலா ரவியிடம் கெஞ்சி கொண்டு இருந்தால்"

கெடைகறது கெடைக்காம இருக்காது கெடைக்காம இருக்கறது கெடைக்காது


10 comments:

  1. நன்றி MANO நாஞ்சில் மனோ,தமிழ்வாசி - பிரகாஷ்!

    ReplyDelete
  2. போட்டு தாக்கு

    ReplyDelete
  3. எல்லாமே கலக்கல் ஜோக்ஸ்

    ReplyDelete
  4. ஓட்டு போட்டாச்சி

    ReplyDelete
  5. டும்...டும்...
    கிடைகிற வைத்து சந்தோசமாக இருக்கவேண்டும்...

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...