Friday, November 12, 2010

என்னவளே! நீ எங்கு இருகிறாய்

கருநீல நிற அருவியாக உருண்டோடும்
உன் கூந்தல்.

வானவில்லை வலைக்க வந்த
உன் நெற்றி.

நெருப்பை உறையவைக்கும் குளிர்
உன் பேச்சு.

கனைகொண்ட கண்களையுடைய வில்லாக
உன் புருவம்.

என் கற்பை எரிக்கவந்த காட்டு தீ
உன் கண்கள்.

குட்டி குழந்தையின் சரி பாதி பின்னழகு
உன் கன்னம்.

அணுபிளவின் முன் உதாரனமான
உன் செவ்விதல்கள்.

வண்டுமொய்க்கும் தேனிக்களின் கூடான
உன் காதுமடல்கள்.

என் இதழ்கள் சறுக்கு விளையாட துடிக்கும்
உன் சங்குகழுத்து.

காட்டாறாய் என்னை கட்டி தழுவும்
உன் கரங்கள்.

என் ஒற்றை தலைக்கு இரட்டை தலையணையாக
உன் மார்புகள்.

தண்ணீர் திவலைகள் கொண்ட தாமரை இலையாக
உன் வயிரு.

மலை முகடுகளின் இடை செருகலான பல்லத்தாக்கு
உன் இடை.

இரண்டு சறுக்கு மரங்கள் ஒன்றாக கொண்ட
உன் கால்கள்.

என்னவளே ! நீ எங்கு இருகிறாய் …

5 comments:

  1. கொஞ்சம் வித்தியாசமா தான் வர்ணிச்சிருக்கீங்க,,,,

    ReplyDelete
  2. என்னவளே ! நீ எங்கு இருகிறாய் …

    //

    சீக்கிரம் கண்டு புடிங்க...

    ReplyDelete
  3. //வெறும்பய said...
    என்னவளே ! நீ எங்கு இருகிறாய் …

    சீக்கிரம் கண்டு புடிங்க... //


    கண்டு புடிக்கணும் எப்பன்னு தான் தெரியல

    ReplyDelete
  4. உங்க ஏக்கத்தை தீர்க்க சிக்கிரமே வந்துடுவாங்க

    ReplyDelete
  5. //குட்டி குழந்தையின் சரி பாதி பின்னழகு
    உன் கன்னம். //

    ரொம்ப நல்லா யோசிக்கிறீங்க.

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...