Saturday, November 6, 2010
முதல் இரவு
என்னவளே, புதிதாய் பூத்த பூ வாடும் போது நீ பூத்தாய்
என்னை ஈர்த்தாய் நீ என்ன காந்தமா நான் என்ன இரும்பா.
உன்னை தொட நினைக்கும் கரங்கலகளை தொட விடாமல்
தொடர சொல்கிறாய் என்னை படர சொல்கிறாய்.
தேனிக்களின் கொடுக்கைதான் கடன் வாங்க வேண்டும்
பூவாகிய உன்னை தொடாமல் கொட்டி தேன் எடுக்க.
மீன்களின் செதில்களான உன் நகங்களில் கீ்றாதடி
என்னை உன் பசிக்கு இரையாக்காதடி
நாளை உன் பசிக்கு நான்தானடி விருந்து மிச்சம்வை.
என்னை மயங்கி கிறங்க வைத்தது எது
பூவில் வந்த வாசமா இல்லை உன்
புடவையில் வந்த சுவாசமா.
சொர்கத்தில் நரக வேதனை இந்த வேதனை தொடர
இரவுக்கு தடை போட வேண்டும் விடியலை தடுக்க.
Labels:
புலம்பல்
Subscribe to:
Post Comments (Atom)
கவிதை சூப்பர், இருந்தும் உங்களுடைய காதலுக்காக (முதலிரவுக்காக) விடியலைத் தடுக்க நினைப்பது அநியாயம்!! ஏனென்றால் எனது இணைய வலைப் பூவின் பெயர் “விடியல்” http://vidiyalmora.blogspot.com/
ReplyDeleteஎனது வோட்டு உங்களுக்கு உண்டு! தொடர்ந்து எழுதுங்கள்
நல்லாருக்குங்கோவ்!
ReplyDeleteநண்றிங் பன்னிக்குட்டி!!!
ReplyDeleteநன்றி செழியன்!
ReplyDeleteமிக அழகான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி எஸ்.கே!
ReplyDeleteநல்ல கவிதை...
ReplyDelete