Saturday, November 27, 2010

எனக்கு பிடித்த பத்து கமல் படங்கள்

நண்பர் பிலாசபி பிரபாகரன் என்னை ரயில் பதிவுக்கு அழைத்துள்ளார். எனக்கு புடிச்ச 10 கமல் படங்கள்.

கமல் நடிச்ச சீரியசான படங்களைகாட்டிலும் எனக்கு அவரோட கிச்சுகிச்சு மூட்டர படங்கள் தான் புடிக்கும்.அந்தவரிசையில்

1. மைக்கேல் மதன காம ராஜன்.



படம் தொடக்கத்துல இருந்து முடியற வரைக்கும் கமல் சிரிப்புல ராஜாங்கமே நடத்தி இருப்பாரு. படத்துல நாகேஸ்,மனோரம்மா, பீம்பாய் கலக்கிருப்பாங்க.
நாகேஸ் தன்னோட பொண்ணு கல்யாணத்துக்காக திருடிட்டு கமல்ட்ட தவிக்கிர சீன்.மனோரம்மா சிவராத்திரி பாட்டுல கமல கரக்ட்பன்ன ரூபிணிக்கு டியுசண் எடுக்கறது சீன் சூப்பரா இருக்கும். இதுல எனக்கு புடிச்ச வசனம் "பீம் பாய் பீம் பாய் அந்த லாக்கர்ள இருந்து 6 லட்சத எடுத்து இந்த அவினாசி மூஞ்சில விட்டெறி".நம்மளோட ஆள்டைம் கமல் படம் மைக்கேல் மதன காம ராஜன்.

2.அவ்வைசண்முகி



கமல் சிரிப்புல மட்டும் இல்லாம மேக்கப்புளையும்
பிரம்மிக்க வச்சுருப்பாறு. காதல் மன்னன் ஜெமினி மறுபடியும் காதல் மன்னன்னு நிருபிச்ச படம். புடிச்ச சீன் நாகேஸ் அவ்வைசண்முகிய ஜெமினிக்கு
விட்டுகொடுத்து லச்சகனக்கா பணத்த அமுக்குற சீன். அந்த மார்கட் பைட்டு. மணிவன்னன ஒவ்வொரு முறையும் மாடிப்படி ஏறும் போது இடிச்சிட்டு போற ஸ்ட்ராங்கான மாமியா கலக்குவாரு.எல்லா சீனுமே கலக்கலா இருக்கும்.

3.தெனாலி



இதுல சிங்கள தமிழ்ல பேசி சிரிக்கவசுருப்பாரு. ஜெயராம் நடிப்பு சூப்பரா இருக்கும். தேவயானிய கரக்ட்பன்ரத பாத்து ஜெயராம் துடிக்கற ஒவ்வொரு சீனும் அட்டகாசம்.
எனக்கு புடிச்ச சீன் ஜெயராம்ட்ட மோதல் முறைய "எல்லாம் பயமயம் எனக்கு எல்லாம் சிவமயம்" அந்த சீன்.மரத்துக்கு கீழ கமல், ஜோதிகா,தேவயானிய காப்பாத்தற சீன் ஜெயராம் துடிக்கறது எல்லாமே கலக்கலா இருக்கும்.

4.வசூல்ராஜா



அப்பாவ அவமானபடுத்தனால கோல்மால் செஞ்சு டாக்டராக முயற்ச்சி பண்ணும் கதாபாத்திரத்துல நல்லா நடிசுருப்பாறு. ஹிந்தி முன்னாபாய் விட வசூல்ராஜா கமல் ஆக்டிங் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு. ராகிங் சீன் செம கலக்கல். "அன்பே வெங்கடாசலம் இல்லயா" அன்பே சிவம் இல்ல அது போன படத்துல சொல்லியாச்சுல்ல. படம் புல்லா சிரிக்கவும் வச்சுருப்பாரு கடைசியா கண்கலங்க வசுருவாறு.


5. பஞ்ச தந்திரம்



பைலட்டா கமல் சிம்ரன் கூட சினுங்கன படம். குருந்தாடில கலக்கலா இருபாரு கமல்.
பர்த்துடே முடிஞ்சு சிம்ரன் வீட்டுல கொவைசரலாவோட லூட்டி அடிக்குற சீன சூபரா இருக்கும். டைமிங் காமடி கடைசி வரைக்கும் நச்சுன்னு இருக்கும். மறுபடியும்
கே.எஸ் ரவிக்குமாரோட கலைக்கன படம்.

6. சதிலீலாவதி



கோவைசரளாவோட சேந்து கொங்கு தமிழ்ல கலக்கிருப்பாரு. எந்த ஒரு ஹீரோவும் ஒரு காமடி நடிகைகூடஜோடியா நடிக்க
யோசிப்பாங்க எதபத்தியும் கவலைபடாம படம் புல்லா கலகிருப்பாறு. "மாருகோ மாருகோ மாருகோஈ அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகோஈ" பாட்டு நல்லாருக்கும்.கடைசி சீன் படத்துல கமல் நடிப்பு அட்டகாசமா இருக்கும்.


7.சிங்காரவேலன் .



குஸ்புவ கரக்ட்பன்ன கூட்டமா கும்மியடிச்ச படம். கவுண்டரு இதுல ட்ரம்ஸ் ப்ளேயர் காமடிலியும் அடி பட்டய கெளபிருப்பாறு. வடிவேலு இந்த படத்துக்கு பிறகுதான் பாபுலர் ஆனாரு. வெண்ணிறாடை மூர்த்தியோட ஹாஸ்பிட்டல் சீன் புல்லா கலக்கலா இருக்கும். மனோரம்மாவோடகிட்ட கமல் “நம்ப முடிய வில்லை, ஏன் ,சுமதி அம்மான்னு தான சொன்னுச்சு இங்க அக்காவே நிக்குதே”.

8.அபூர்வ சகோதரர்கள்.



இன்னமும் கமலுக்கு ஒரு மயில் கல் இந்த படம். குள்ளகமலா நடிச்ச சில விஷயம் இன்னவரிக்கும் புதிராத்தான் இருக்கு. கால கட்டுனதுக்கு பிறகு ஒரு சில சீன்ல கால் மேல கால் போடறமாதிரி சில சீன இருக்கும் அது எப்புடி எடுத்தாங்க யாராது தெரிஞ்சா சொல்லுங்கபா. ஜனகராஜ் காமடி படம் புல்லா கலக்கலா இருக்கும் அதுவும் அந்த கான்ஸ்டபுள் டைலாக் "சார் நீங்க எங்கயோ போய்டிங்க சார்" மறக்கமுடியாதது. கடைசியா கவுதமிய கரக்ட் பன்ன படம்.

9.மகாராசன்.



இந்த படத்துல சென்னை தமிழ்ல பட்டைய கேளப்பிருப்பாறு. ஒரு சீன்ல ஊடு கட்டி டிஷ் வப்பாரு சூபரா இருக்கும். எனக்கு புடிச்ச சீன் கரிகடைல கவுண்டமணிகிட்ட ஒரு கோழி ரெண்டு கிலோ வெளக்கம் கொடுக்குறது "அந்த கோழி பெருசா இருக்கசோலோ உரிச்சது அதே கோழி சின்னவயசுல உரிச்சது இது ரெண்டும் ஒன்னுதான".

10.சிம்லா ஸ்பெஷல்.



சிம்லாவுல ஒரு குழுவா நாடகம் போட்டு அந்த வருமானத்தவச்சு நடிக்கிற எல்லாரோட தேவையும் பூர்த்தி செய்யனும்ன்னு போற படம்.
கடைசியா நம்புன நண்பனால எமாத்தப்படும் போது நல்ல நடிப்ப வெளிப்படுத்தி இருப்பாரு. நாடகம் போடற மாதிரி பல சீன் வரும் எல்லாமே கலக்கலா இருக்கும்.

இன்னும் பல படங்கள் கமலின் நகைசுவைகாகவே பாத்துருக்கேன்.
இருந்தாலும் கோட்டா 10 ன்னு சொல்லிட்டாங்க நிருதிக்கிரேன்.

என்ன ஒன்னு படம் நடிக்குற சாக்குல எல்லாரையும் கரக்ட்பண்ணிராறு இவுரு சகலகலா வல்லவன்தான்.


இதை தொடர்ந்து “எனக்கு பிடித்த பத்து கமல் படங்கள்” பதிவினை எழுதுவதற்கு நான் அழைப்பது(எழுதுவார்கள் என்ற நம்பிக்கையோடு).

பிலாசபி பிரபாகரன்
"ராஜா"
ம.தி.சுதா


15 comments:

  1. நல்ல தொகுப்பு!

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி நாஞ்சில் மனோ!

    ReplyDelete
  3. கடைசி இரண்டு படங்கள் மட்டும் நான் பார்த்ததில்லை... மற்ற அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன்...

    அதற்குள்ளாக அழைத்தால் எப்படி... ஒரு ரவுண்ட் சுற்றிவிட்டு வரட்டும் அதன்பிறகு நான் எழுதுகிறேன்...

    ReplyDelete
  4. சரி வரம் கொடுத்த தலைலதான கை வைக்க முடியும் பொருமையா எழுதுங்க "philosophy prabhakaran".

    ReplyDelete
  5. மைக்கல் மதன காமராஜன் எனக்கு ரொம்ப பிடித்தபடம் . நல்ல தொகுப்பு

    ReplyDelete
  6. நல்ல தொகுப்பு
    எல்லாமே அருமை...
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி நா.மணிவண்ணன் , ஆமினா !

    ReplyDelete
  8. சகோதரா கடைசிப் படம் மட்டும் தான் இன்னும் நான் பார்க்கல மற்ற படம் அனைத்தும் அத்துப்படி...

    ReplyDelete
  9. நானும் ஏதோ ஒரு பதிவனுண்ணு தொடர் பதிவிற்கழைத்தமைக்கு மிக்க நன்றி.... ஏற்கனவே ஒரு தொடர்பதிவிற்கு சபோதரர் ரஹும் கஹலி அழைத்திருந்தார் அதனால் 3 நாளின் பின் இதைத் தொடர்கிறேன் சகோதரா...

    ReplyDelete
  10. விடுங்க பாஸ்( ம.தி.சுதா ) நானும் பதிவரு நானும் பதிவருன்னு டெய்லி இன்ட்லில என்ட்ரி கொடுக்குரோம்.,கலக்கலா போடுங்க ஒங்க பதிவ

    ReplyDelete
  11. கமல் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் .. தொடர அழைத்தமைக்கு நன்றி நண்பா .. எழுதி விடுகிறேன்

    ReplyDelete
  12. நன்றி நண்பா "ராஜா" காத்திருகிரேன் எழுதுங்கள்.

    ReplyDelete
  13. இப்பதான் எனக்கு புரியுது "philosophy prabhakaran". ஏன் என்னை தொடர் பதிவுக்கு அழைத்தார் என்று ..
    ஹி ஹி . . .

    ❅கமல்ஹாசன் கோல்டன் ஹிட்ஸ் - 10❅

    http://rockzsrajesh.blogspot.com/2010/11/10-philosophy.html

    ReplyDelete
  14. நல்ல தொகுப்பு நண்பா . . .
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...