Monday, February 28, 2011

என் காதல் சொல்ல நேரம் இல்லை



சில வருடங்கள் முன் நானும் கல்லூரி என்னும் கல்லறையை கடந்து வந்தவன்தான், சிலருக்கு சிலரோடு பழகும் பொழுது ஆனந்தமாக இருக்கும். எனக்காக எதையும் செய்யும் நண்பர்கள் வட்டம் ஆனால் அவளுக்காக எதையும் செய்யும் ஆர்வத்தில் நான்.

கடவுள் மனுஷனுக்கு மனசுன்னு ஒன்ன எதுக்கு படச்சான்னு எனக்கு அவள பாத்தபோழுது தான் புரிஞ்சுது, கல்லூரி ஒன்றாக படிக்க இடம் கொடுத்தாலும் நூலகம் மட்டுமே அவளை பல முறை பார்க்க இடம் கொடுத்தது, பாத்த உடனே அவள எனக்கு புடிச்சு போகல,அவள் பேச்சு எனக்கு எதோ என் கனவென்னும் கதவுகளுக்கு சாவியாக இருந்தது. அவளது பார்வை என் வழி தெரியா என் பாதைக்கு வெளிச்சமாக பட்டது.இருந்தும் அவள் உடன் நெருக்கமாக இருக்கும் என் நண்பர்கள் அவோளோடு பேசுவதற்கு துணை செய்த பொழுது பார்வை மட்டும் பரிமாறிய என் கண்கலுக்கு தைரியம் இருந்தது எனது வார்த்தைகளுக்கு வலுவில்லாமல் போனது. "ஹாய் என்ன பேச மாடிங்களா" என்னும் இந்த வார்த்தை தான் எனக்கு அவளிடம் கிடைத்த முதல் அச்சாரம்.பதில் சொல்ல தெரியா பறவையாக திரும்பினேன் சொல்லித்தரவும் ஆள் இல்லை.

கணினிகளை மட்டும் படிக்கவில்லை அவள் வார்த்தைகளையும் படிக்க துவங்கினேன்., விடுமுறை நாட்களை வீட்டில் இருந்தது என் உடல் மட்டும் தான் என் மனம் அவள் இருக்கும் இடம் தேடி அலைந்தது.

காலம் கடந்தது கல்லூரி முடியும் தருவாய் வந்தது. ஆவலுடன் அவளுக்கு நான் சொல்ல காத்திருந்த வார்த்தைகளை தட்டசுக்களாய் அவள் மின் அஞ்சலுக்கு தட்டியது என் கைகள். பதில் வர காத்திருந்தேன் வந்தது பதில் அல்ல அவள் மன ஓலை.

அன்று இரவே 250 ரூபாய் அரசுக்கு மொய்வைத்து டாஸ்மார்க் நண்பனால் அவளை என் மனம் என்னும் குப்பைதொட்டியில் இருந்து சுத்தம் செய்துவிட்டேன் ஆனாலும் என்றோ பார்த்த அந்த முகம் மறுபடியும் எட்டி பார்க்கிறது அதற்காக கவலைபடுவதர்க்கு என்ன இருக்கிறது எங்கே எனது நண்பன் என்று எண்ணி அவளை மறக்க வேண்டியதுதான்.

மறதி ஆண்டவன் கொடுத்த அற்புத வரம் அதர்க்கு கை கொடுக்கும் டாஸ்மார்க் நண்பன் என் கடவுள்

டிஸ்க்கி : இது என் நண்பனுடன் ஜல க்ரீடையில் இருக்கும் பொழுது அவன் புலம்பியது நமக்கு எங்க காதல் மோதல் எல்லாம் 100 kg பிகர பாத்ததும் பத்தடி தண்டித்தான ஓடறாங்க குண்டா இருக்கறது குஸ்ட்டமப்பா இது கஸ்ட்டமப்பா.

8 comments:

  1. நேரம் இப்பொழுது

    4:45

    ReplyDelete
  2. //டிஸ்க்கி : இது என் நண்பனுடன் ஜல க்ரீடையில் இருக்கும் பொழுது அவன் புலம்பியது நமக்கு எங்க காதல் மோதல் எல்லாம் 100 kg பிகர பாத்ததும் பத்தடி தண்டித்தான ஓடறாங்க குண்டா இருக்கறது குஸ்ட்டமப்பா இது கஸ்ட்டமப்பா

    அப்ப நண்பர்களுக்கிட்ட மேட்டரை கறக்க இதுதான் வழியா

    ReplyDelete
  3. ரெண்டு ரவுண்டு போனது பிறகு லைட்ட லவ் பத்தி பேச ஆரமிச்சா தானா சொல்லுவாங்க

    ReplyDelete
  4. காதலியை மறப்பதற்கு குடிக்கிறாரா? இல்லை, குடிப்பதற்கு இதை காரணமாக சொல்கிறாரா என்று தெரியலியே.

    ReplyDelete
  5. சிலர் குடிக்கறதுக்கு காரணம் தேடுவார்கள் பலர் குடிக்கும் பொழுது அவர்கள் மனதில் புதைந்த காரணங்கள் தன்னை அறியாமல் சொல்லுவார்கள் இதில் இரண்டாவது ரகம் இவர்,

    நாம இதுல எந்த ரகமும் இல்ல காசு போட்டு அடிச்சா ஒரு கோட்டர் இல்ல ஒரு ஹாப் யாரவது வங்கி கொடுத்தா சொல்லவே வேனாம் புல்லுதான் ஆனா நாமளும் மத்தவங்களுக்கு வாங்கி கொடுக்கும் பொது மத்தவங்க மட்டையாகரவரைக்கும் வாங்கி கொடுத்து அவங்க பொலம்பரத பாக்கறதுல இருக்க சொகமே தனி.

    ReplyDelete
  6. //டிஸ்க்கி : இது என் நண்பனுடன் ஜல க்ரீடையில் இருக்கும் பொழுது அவன் புலம்பியது நமக்கு எங்க காதல் மோதல் எல்லாம் 100 kg பிகர பாத்ததும் பத்தடி தண்டித்தான ஓடறாங்க குண்டா இருக்கறது குஸ்ட்டமப்பா இது கஸ்ட்டமப்பா.//

    மக்கா அதான் குண்டு'ன்னு நீரே பேர் வச்சிகிட்டீரோ....

    ReplyDelete
  7. //MANO நாஞ்சில் மனோ

    மக்கா அதான் குண்டு'ன்னு நீரே பேர் வச்சிகிட்டீரோ.... //

    ஆமாம் தல, சொல்லாததும் உண்மையே
    இதுல என்ன வெக்கம் இருக்கு.

    ReplyDelete
  8. அட்ரா அட்ரா அட்ரா ஓகே ஓகே

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...