Tuesday, December 7, 2010

பணம் இருக்கா

இன்னைக்கு நான் குமார பாக்க போறன்டி.அவன பிரிஞ்சி இன்னியோட ஒரு வருஷம் ஆகுது கலேஜ் முடிச்சு அவனோட ஹாய் சொல்லிடு போனது அதுக்கு பிறகு இன்னும் அவன பாக்கவே இல்ல.

சரி விடு ரம்யா அவன் இப்ப எங்க இருப்பான்னு தெரியுமா.,

தெரியலடி நமக்கு கேம்பஸ்ல ஜாப் கெடச்சுடுச்சு பட் அவனுக்கு ஜாப் கெடச்சுதா இல்ல இன்னும் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கானான்னு தெரியல.

விடு என் கிட்ட அவனோட friend ராம் நம்பர் இருக்கு.,
வெய்ட்பன்னு நா பேசிட்டு வறேன்.

...
...
...

குமார் நீ எங்க இருக்க ., இப்ப எப்புடி இருக்க., நாம கடைசி நாள் பிரியும்போது நீ சொன்ன “பிரிவு வரும் ஆனா நிரந்தரம் கிடையாதுன்னு”,“காதல் ஒன்னா இருக்கறத விட பிரியும் போது தான் வலுப்படும்னு” சொன்ன.,அது உண்மதான் நீ போகும் போது கடைசியா ஒரு வருசம் என்ன தேடாத நா நல்ல நிலைமைல இருந்தா நிச்சயம் ஒன்ன சந்திக்க வருவன்னு சொல்லிட்டு போன அதுக்கு பிறகு ஒரு முறை கூட நீ போன் பண்ணல நானும் நீ சொன்ன காரணத்துக்காக ட்ரை பண்ணல, நீ நல்லா இருப்பன்னு எனக்கு நம்பிக்க இருக்க I Love You குமார். நீ எங்க இருந்தாலும் நா வருவேன் குமார் உனக்காக.

எ என்ன குமார பத்தி எதாவது நியூஸ் கெடச்சுதா அவன் எங்க இருகான்னு சொன்னானா.

இல்ல அவன அவன் கடைசியா கேரலாவுல கோவளம் பீச்சுல பாத்ததா சொன்னா.

எப்போ.

சரியா ஒரு மாசத்துக்கு முன்னாடி பட் அவன் ராம்கிட்ட சரியா பேசவே இல்லையாம்., ஆளும் ஒரு மாதிரி இருந்ததா சொன்னா.நாம போய் பாத்தாகனும்மா.

கண்டிபாடி அவன் எதாவது நல்ல வேலைலதான் இருப்பான்.

ஆனா அவன் அங்கதான் இருப்பான்னு எப்புடி சொல்ற.

எனக்கு எதோ ஒரு நம்பிக்க அவனபாக்கணும் டி.

சரி நமக்கு இந்த வீக் 4 டேஸ் லீவ் வருது நாம போலாம்.அதுக்குல்ல கெடைகலன்னா கண்டிப்பா வந்துடுடனும் வீணா ரிஸ்க் எடுக்க கூடாது.

சரி சனிகிழம காலைல கோவளம் போய்டலாம் ., நா ஒரு வண்டி ஏற்பாடு பன்றேன்.

....

சனிகிழமை காலை

கோவளம் ரொம்ப அழகான ஊர்தாண்டி., இந்த மலையும் கடலும் ஒன்னா இருக்குற அழகே அழகுடி அதுவும் இந்த தென்னமரம் சூப்பரான பீச்சுடி., ஏய் ரம்யா என்ன தூங்கிட்டியா!.

இல்லடி அவன நெனச்சிகிட்டு வந்ததால நீ என்ன சொன்னன்னு கேக்கல சாரி டி.

சரி நாம இப்ப என்ன பண்ணலாம்.

ஒரு ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்குவோம் டி அதுக்கப்பறம் பேசிகலாம் சரி வா.

...

இங்க ரூம் சீப்பு தாண்டி அது சரி அவன எப்புடி தேட போறோம்.

இங்க இருக்கற கைடு யார்கிட்டயாவது அவனோட போட்டோவ காட்டி அவனபத்தின விசயம் கிடைக்குதான்னு பாப்போம்.

அவன் போட்டோ வச்சுரிகியா.,

இருக்குடி என்னோட என்கூட அவனோட படம் எப்பவுமே இருக்கும் டி., இந்த டாலர் அவன் எனக்கு பிறந்தநாள் கிப்ட்டா கொடுத்தது., இத நானும் அவனும் எப்பவும் ஒன்னாருக்கனும்னு சொல்லி போட்டது. இதுல அவனோட போட்டோ இருக்குடி.

சரி இத பத்தரமா வை ஒரு மணி நேரம் போனதுக்கு பிறகு நாம கெளம்பலாம்.

...

hellow sir, we are comming from tamilnaadu ., u see this guy here .,

நீங்க தமிழா!., நானும் தாங்க பொழப்புக்காக வந்தது இவுரு யாருங்க ஒங்க சொந்தகாரங்களா.

இல்ல என்னோட கூட படிச்சவரு., அவர தேடிதான் வந்துருக்கோம்.

எனக்கு இந்த மொகத்த இதுக்கு முன்னாடி பாத்த மாதிரி தெரியல., சரி நீங்க ஒன்னு பண்ணுங்க ஹோட்டல் ஜான்ஸ் போங்க அங்க ரூம் நம்பர் 1024 - ல ஜீவான்னு நம்ம தமிழ் காரர்தான் இங்க 10 வருசமா கைடா இருக்காரு அவரு ஒங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாரு.,

சரி இந்தாங்க., சரி மா தேங்க்ஸ் கண்டுபுடிசுடிங்கன்னா அப்பறம் சாவகாசமா இங்க வாங்க நா இங்கதான் இருபேன்.

....

ரூம் நம்பர் 1024

சார் நாங்க தமிழ்நாடு ஒரு கைடு ஒங்களபத்தி சொன்னாரு இந்த டாலர்ல இருக்கறவரு என்னோட friendu இப்ப இங்க இருக்கறதா கேள்விபட்டோம்.இவர இதுக்கு முன்ன நீங்க இங்க பாத்துரிகிங்களா.

இவுரு பேரு என்ன குமார்.

இம் ஒரு வாரத்துக்கு முன்னாடி ஹோட்டல் கிம்ப்ஸ்ல பாத்தேன் ஆனா ஆளு தாடியோட இருந்தாரு.

சரி சார் ரொம்ப நன்றி.

ஒரு நிமிசம்மா!., ஒங்களுக்கு அவரு friendu மட்டும்தானா இல்ல.

எதுக்கு கேக்குரிங்க.

இல்ல அந்த ஹோட்டல் பாரினர்ஸ் தங்கறது அதுமட்டும் இல்லாம அங்க நம்ம ஆளுங்க ரூம் எடுக்கறது வேற விசத்துக்கு.

ஓகே சார் ரொம்ப நன்றி.நாங்க பாத்துக்குறோம்.

...

ஹோட்டல் கிம்ப்ஸ்

ஏண்டி அதுக்குல்ல வந்துட்ட அவுரு என்ன சொல்றாருன்னு கேட்டுட்டு வந்துருகல்லாமுள்ள.

இப்ப இருக்க ஒரே எண்ணம் அவன பாக்கறதுதான்., அங்க நின்னு கத கேக்க எனக்கு நேரம் இல்ல.

சரி நாம இந்த ஹோட்டல் ரேஸ்டோரன்ட்ல வெய்ட் பண்ணலாம் அவன் இங்க வந்தா நாம பாத்து கண்டு புடிச்சிடலாம்.

எக்ஸ்க்யூஸ் மீ!., உங்களபாத்தா பெரிய எடம்மாதிரி தெரியுது., ஒங்களுக்கு எதாவது பாரின் ஐடம் வேணுமா.

வாட்?.

ஓ ஒங்களுக்கு புரியலன்னு நெனைக்குறேன்., இந்த போடோஸ் பாருங்க எல்லாம் மென்சும் சூப்பரா இருப்பாங்க.,

ரம்யா இத பாருடி உன்னோட குமார்.,

ஓ இவுரு நம்ம பார்டிதான் பட் ஆள் கொஞ்சம் வீக்கு அட்ஜஸ் பண்ணிக்குங்க.

இப்ப இருவு எங்க சொல்லு... சொல்லு... சொல்லு!.,

எம்மா பதற்ற ரூம் நம்பர் 1057 - ல இருப்பாரு போ.,

நில்லுங்க நீங்க ரெண்டு பேருன்றதால 2000 பார்டிக்கு, மேட்டர் முடிஞ்சதும் எனக்கு 200 கமிசன். ஒரு 15 நிமிஷம் கழிச்சு போம்மா ஒரு பாரின் பார்ட்டி ஒன் ஹவருக்கு முன்னாலதான் போயிருக்கு.,

...

ரூம் நம்பர் 1057

மேடம் ஒரு பத்து நிமிஷம் இப்பதான் முடிஞ்சுது., பார்டிகிட்ட பேமன்ட் வாங்கிறேன் சொல்லுங்க.

குமார்., குமார்., என்ன தெரியல

ஓ நல்லா தெரியுதே ரம்யா அதுக்கு என்ன இப்ப.

நீயா இப்புடி.

“சோத்துக்கு வழி இல்லன்னா சு...” வேனா விடு.,
பணம் இருக்கா4 comments:

 1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.

  பதிவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசுப் போட்டி...

  ReplyDelete
 2. யார் அந்த கொடுத்து வைத்த குமார்... ஆளை காட்டுங்களேன்...

  ReplyDelete
 3. யோ அவனே பாவம் பணம் இல்லாம எதோ இப்பதான் செட்லாய்யிருக்கான் விடுயா( ம.தி.சுதா )

  ReplyDelete
 4. குமார் யாரு? விடுங்க கொடுத்து வச்சவர்

  ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...