Friday, December 3, 2010

சனியனுக்காக தூது

டே இன்னைக்கு என்னோட லவ்வ அவகிட்ட சொல்லபோறண்டா., நானும் காலேஜ் ஜாயின் பண்ண நாள்ல இருந்து ஒவொரு நாளும் அவகிட்ட காதல சொல்லனும் தான் முயற்சி செய்றேன். ஆனா அவள பாத்ததும் பீஸ்போன பல்பாட்டம் ஆகிடுறேன்.

மாச்சான் பொண்ணுங்க எப்பவும் பாக்க டியூப்லைட் மாதிரி பக்கத்துல நின்னு பாத்தா கண்ணு கூசத்தான் செய்யும்.ஆனா அந்த டியூப்லைட்டுக்கு வர கரன்ட்ட கட்பண்ணிட்டு பாரு அது எரியாது அப்ப நம்ம கண்ணு கூசாது. அது மாதிரி தான் மச்சான் அவளுங்களுக்கு நாம தான் இந்த ஜில்லாவுல பேரழகின்னு நெனப்பு அதுதான் கரண்ட்டு மாதிரி அந்த பீச புடுங்கு அப்பறம் நீ ப்ரீயா அவகூட பேசலாம்.

எப்புடிடா

அது ரொம்ப சிம்பிள் மச்சி ஒன்னு இல்ல அவ வரும் போது டெய்லியும் விஜய் போஸ்டர மாடு பாக்கற மாதிரி பாக்கறத நிறுத்து. அவளுக்கு முன்னாடி அவளோட friends
யாரவது ஒரு சப்ப பிகர சூப்பர்னு ஜொள்ளு விடறமாதிரி சொல்லு. அப்ப அவளுக்கு டாக்டர் படத்துக்கு Free டிக்கட் கெடச்சமாதிரி இருக்கும்.

சரி டா., நா இப்பவே போய்...

என்ன டாக்டர் படத்த திருட்டு சீடில பாக்கபோரியா.

அது இல்லடா அவ friendu சன்மதி எனக்கு க்ளோஸ் friendu அவகிட்ட நீ சொன்னத சொல்லி பர்மிசன் வாங்க போறேன் டா.

டே என்ன விஜய் படத்துக்கு பிளாக்குல டிக்கட் வாங்க போற மாதிரி சொல்ற. மச்சான் நீ போய் இது மாதிரி பண்ண போறதா சொன்ன அது அப்பறம் சந்தர்ப்பமே இல்லாம சண் நீயூஸ்ல பிலாஸ் ஆகிடும். அதனால யாருகிட்டயும் சொல்லாத நேரா களத்துல எறங்கு.

அப்ப சன்மதி என்ன பத்தி தப்பா நெனச்சா.

ஆமா இவுரு பெரிய புத்தரு.வில்லு படத்த விசிலடிச்சி பாத்த வீனாபோன நாய் தான நீ. சரி நாம இங்க நிப்போம் ஒன்னோட ஆளு எப்ப வருவா.

இன்னும் ஒரு பாத்து நிமிசத்துல லஞ்சுக்கு இங்க கேன்டீனுக்கு வருவாடா.

அப்ப பக்கத்துல அந்த சப்ப பிகர் சன்மதி வருமா.

டே அவ என்னோட friendu டா.

சரி விடு பாப்போம்.

டே மாம்ஸ் அங்க பார்ரா என்னோட ஆளும் அவளோட friendum வாராங்க.

சரி இதுல எது ஒன்னோட ஆளு.

அந்த black சுடிதார்ல வரவடா.

அப்ப அந்த மஞ்ச சுடி சன்மதியா சரி நீ இங்க ஒக்காந்து அவள பாக்காத மாதிரி சீன போடு நா இந்த பூவ கொண்டு போய் அந்த மஞ்ச சுடிகிட்ட குடுத்து அவரு உங்கள்ட தனியா பேசனும்னு ஒரு பிட்ட போடறேன்.அப்பறம் நீ வா. டாக்டர் மாதிரி அங்க வந்து பஞ்சு அடிச்ச மவனே நானே உன்ன எதுத்து இந்த இடை தேர்தல்ல நின்னு இருக்க ரெண்டு ஓட்டையும் வான்கிருவேன். அப்பறம் நீ தனியா ஒக்காந்து தான் டாக்டர் படம் பாக்கணும்.
சரி இங்க இரு வரேன்.

.
.
.

ஹாய் இது அவரு கொடுத்தாரு அவுரு ஒங்கள்ட தனியா பேசனுமா.

அவன் என்னோட friendu தான், இது என்ன புதுசா இருக்கு நீ யாரு.

நான் அவனோட friendu.

சரி இவ என்னோட friendu நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருங்க நா என்னன்னு கேட்டுட்டு வந்தறேன்.

.
.
.

ஹாய் உங்க பேரு என்ன?

மஞ்சு., அவரு ஒங்களுக்கு எவ்வளவு நாலா தெரியும்.

இந்த பாலா போன காலேஜ் வந்து மொதநாளு
குருவி படத்துக்கு கூட்டிக்கிட்டு போய் என்ன கொன்னதுல இருந்து.நா அவனுக்கு அடிமை ஆகிடேன்.

என்னோட friendukku ஆவர ரொம்ப புடிக்கு. நேரத்த பாருங்க இன்னைக்கு தான் அவருகிட்ட என்ன பேசரதுக்காக கூட்டிகிட்டு வந்தா அதுக்குள்ள அவரே பிரப்போஸ் பண்ணிட்டாரு.

அடடா வாட போச்சே.

என்ன.

அது ஒன்னும் இல்லங்க விஜய் எலக்சன்ல நிக்காம முதல்வர் ஆனமாதிரி இருக்கு.

நீங்க அவருக்கு friendu., என்னோட friendukku ஒங்க frienda புடிச்சமாதிரி எனக்கும் உங்கள ரொம்ப புடிசுருக்குங்க I LOVE YOU.

மனசுக்குள்ள (ஐயோ., நண்பா என்ன மன்னிச்சுருடா).me too. எதாவது படத்துக்கு போலாமா.

கூட்டமே இல்லாத படத்துக்கா கூட்டிகிட்டு போங்க.

அப்ப கண்டிப்பா சுறா தான் வேர வழியே இல்ல.

ஹை., சுறா வா எனக்கு விஜய்னா ரொம்ப பிடிக்கும்.

ஐயோ., சனியன் சடபோட்டு பொட்டு வச்சு பூ வச்சு கூட வர பாக்குதே கடவுளே.

8 comments:

 1. ஃஃஃஃஃஅது ஒன்னும் இல்லங்க விஜய் எலக்சன்ல நிக்காம முதல்வர் ஆனமாதிரி இருக்கு.ஃஃஃ

  நடந்தாலும் நடக்கலாம்...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

  ReplyDelete
 2. ஃஃஃஃசனியன் சடபோட்டு பொட்டு வச்சு பூ வச்சு கூட வர பாக்குதே கடவுளேஃஃஃ

  சனிக்கிழமையில நல்லெண்ணவச்சு தோயலாமே.. ஹிஹிஹிஹி

  அட நம்மளுக்குத் தான் சுடு சோறா...

  ReplyDelete
 3. நன்றி நண்பா( ம.தி.சுதா ).,

  ReplyDelete
 4. பிகரோட சுரா படம் பாத்த அனுபவம் எப்படிங்கன்னா? நல்லா இருந்ததா? அடுத்த பதிவில் அதை பத்தி எழுதுவீங்களா?

  ReplyDelete
 5. நண்பா( "ராஜா" ) அது நா இல்ல

  ReplyDelete
 6. பாஸ் இன்னும் கொஞ்சம் பட்டி தட்டி டிங்கரின்க் பண்ணுனா இன்னும் நல்லாருக்கும். அப்புறம் டாகுடரே கொஞ்ச நாளைக்கு தள்ளி வைங்க.

  ReplyDelete
 7. :))

  நீங்க விஜயோட தீவிர ரசிகர் போல :))

  ReplyDelete
 8. சரிங்க நாகராஜசோழன் MA!.

  ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...