Saturday, October 1, 2011

வேலா! வேலா! வேலா! வேலாயுதம்


[நல்வரவு யாருக்கு நமக்கா வெளங்கிரும்]


Dr.விஜய் : அதிரடி சரவெடி அடுத்து நா ரெடி!

"ராஜா" மக்கள் எல்லாம் ஓட்டு போட்டு ஓஞ்சு போய்ட்டாங்க இப்பதான் நாம அட்டாக்க ஆரமிக்கணும் ஒருத்தனையும் தூங்க விடகூடாது.

ஜெயம் ராஜா : விட்ருவமா பின்ன "சுறா" மாதிரி நீங்க இருக்கும் போது எனக்கு என்ன கவலை "சுனாமி" மாதிரி நாம மக்கள தாக்குவோம் கவலைய விடுங்க

Dr.விஜய் : நம்ம படத்துல புதுசா என்ன பண்ணலாம் சொல்லுங்க?


[சின்சியர் சிகாமணி முடியல]


ஜெயம் ராஜா : ஓபன் பண்ணனா நீங்க முருகனுக்கு முகூர்த்தம் பாக்குறிங்க.

Dr.விஜய் : எந்த முருகனுக்கு எடிட்டர் முருகனுக்கா!

ஜெயம் ராஜா : இல்ல பழனி மலை முருகனுக்கு


[அழகென்ற சொல்லுக்கு முருகா இது நியாயமா, இத பாக்க இன்னொரு கண்ணு கொடுயா]


Dr.விஜய் : என்னங்க நா என்ன புள்ளையாரா மாமா வேல பாக்க.

ஜெயம் ராஜா : கந்தனுக்கு காவடிதான் எடுக்கணுமா என்ன கனக்சன் பண்ணி கொடுக்க கூடாதா

Dr.விஜய் : சரி அப்ப இதுல ஓபநிங் சாங் இல்லையா?

ஜெயம் ராஜா : இருக்கு ஒத்தகால்ல ஒருமணி நேரம் விடாம ஆடுரிங்க, நீங்க ஆடுரத பாத்து முருகனே மூடு வந்து ஆடுறாரு அத நாம கிராபிக்ஸ் பண்ணிக்கலாம்.


[கால தூக்கிட்டா கலைஞர் ஆகிட முடியுமா]


ஜெயம் ராஜா : ஆடிகலச்சி போன ஒங்களுக்கு முருகன் மனுஷ ரூபத்துல வந்து கொட புடிக்கராறு அது தெரியாம அவருக்கு நீங்க "2016-ல நான்தான் தமிழ் நாட்டின் நிரந்தர முதல்வர் ஆகணும்ன்னு" எஸ்எம்எஸ் அனுப்புரிங்க


[கொட புடிச்சுகிட்டு போற அந்த புண்ணியவான் எந்த ஜென்மத்துல என்ன பாவம் பன்னனாரோ]


Dr.விஜய் : அதுக்கு அவரு என்ன ரிப்ளை பன்னனாறு!

ஜெயம் ராஜா : அங்கதான் அவரு ஒங்களுக்கு ஒரு ட்விஸ்ட்டு வைக்கறாரு, அது என்னாதுன்னா ஒங்க தங்கச்சியோட ஊர் ஊருக்கு போய் ஒங்க படத்த பாக்க சொல்லி பிச்ச எடுக்கணும்


[இந்த போட்டவ ப்ரேம் போட்டு மாட்டு பா அடுத்த எலக்சன்ல யூஸ் ஆகும்]


Dr.விஜய் : இது என்ன எனக்கு புதுசா என்னோட படம் பாக்க அரசியல்வாதி மாதிரி இலவசமே கொடுத்து பிச்ச எடுத்தவன் நான் சும்மா வாயால பிச்ச எடுக்கறது என்ன பெரிய விஷயம் அடுத்து.

ஜெயம் ராஜா : உங்களோட அந்த இன்னசன்ட்ட பாத்து பச்சக்குன்னு உம்மாகுடுக்கறாங்க குண்டு பொண்ணு ஹன்சிகா விருப்பம் இல்லனாலும் வந்தவரைக்கும் லாபம்ன்னு வாங்கி போட்டுகிருகிங்க.


[முத்தம் கொடுக்க வேற எடமே கெடைக்கலையா வாய டெட்டால் போட்டு கழுவு போ]


Dr.விஜய் : எதுக்கு?

ஜெயம் ராஜா : முருகனுக்கு அந்த முத்தத்த காணிக்கையா குடுக்கதான்

Dr.விஜய் : முருகனுக்கு முத்தமா!

ஜெயம் ராஜா : இதல்லாம் அவருக்கு புடிக்கும் என்ன அந்த பொண்ணு டைரக்டா கொடுத்தா இன்னும் சந்தோஷ பாடுவாரு நீங்க நோக்கியா மாதிரி Connecting People - லா இருக்கறது தான் அவருக்கு புடிக்குமான்னு தெரியல

Dr.விஜய் : கோவம் வந்து சூலாயதுத்துல சூரண போட்ட மாதிரி போடாம இருந்தா சரி


[சங்கூத போறதுக்கு என்ன ஒரு சந்தோசம் பாரு, தமிழ் நாட்டு மக்களே உங்களுக்கு ஊ! ஊ!]


ஜெயம் ராஜா : உங்க தங்கச்சி கெஞ்சி கெஞ்சி தொங்கி போனதால ஜெனிலியா வோட ரயில் ஏறி தமிழ் நாட்ட வளம் வந்து உங்க படத்த பாக்க சொல்லி பிச்ச எடுக்குரிங்க. முருகன் மயில் ஏறி போனாரு நீங்க ரயில் ஏறி போறீங்க எப்புடி!

Dr.விஜய் : என்ன அவரு பழத்துக்காக போனாரு நா என்னோட படத்துக்காக போறன் அதுவும் பிச்ச எடுக்க!

ஜெயம் ராஜா : விடுங்க சார் நம்ம படம் வந்தா போடுவாங்க மக்கள் ஓட்டு, உங்களுக்கு தான் 2016-ல முதல்வர் சீட்டு.

Dr.விஜய் : சிட்டுக்காக அலைஞ்சாலும் சில்பான்சா இருக்கலாம், சீட்டுக்காக அலைஞ்சா சிங்கியடிக்க வேண்டியதுதான்

முருகனுக்கு அரோகரா!!!
கந்தனுக்கு அரோகரா!!!
வேலனுக்கு அரோகரா!!!

தமிழ்நாட்டு மக்களுக்கு அரகர அரகர அரோகரா!!!


No comments:

Post a Comment

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...