Saturday, October 1, 2011

எனக்கு புடிக்காத டாக்டர் விஜய் படங்கள் - 3

துள்ளாத மனமும் துள்ளும்நம்ம டாக்டர் சிம்ரனுக்கு சிக்னல் கொடுத்த படம், டாக்டர் சார் என்ன இருந்தாலும் நீங்க இந்த படத்துல கக்கூஸ் மேல நின்னு சிம்ரனுக்கு சிக்னல் கொடுக்க கூடாது,அது சரி எப்புடி சார் உசுர கைல புடிச்சுகிட்டு தொங்கும் போதும் மூஞ்ஜில அப்புடி ஒரு பர்பார்மன்ஸ் ஸ்சப்பா முடியல, அப்பறம் ஒரு சீன் வருமே அம்மா செத்து போனத மறைக்க பாத்ரூம்ல கதறி கதறி அழுவிங்கலே இன்னும் கண்ணுகுல்லையே நிக்குதுங்க. இதுல கடைசீல நாளை நமதே எம்ஜியார் கணக்கா பாட்டு பாடி சிம்ரன பிக்கப் பண்றீங்க எனக்கு அத பாத்ததும் சிப்பு சிப்பா வருது அதுவும் உங்க வாய்ல போட்ட பீடா ஒழுகறது கூட தெரியாமா என்னா ஒரு எமோசன் முடியல

என்றென்றும் காதல்இப்புடி ஒரு படம் வந்துச்சான்னு கேட்டா நீங்க என்ன சொல்லுவிங்க டாக்டர், ஆனாலும் ரம்பாவுகாக இத நாங்க ராத்திரி பகலா கண்ணு முழிச்சி பாத்தமுங், இதுல என்னமோ ஒரு சீன்ல நெட்றிக்கண் படத்துல வர மாதிரி அந்த கூலிங்க கிளாஸ் சீன யூஸ் பண்ணி ரம்பாவா ஸ்விம்மிங்பூல்ல குதிக்க விடுவிங்கலே அடடடடா! அப்பறம் உங்களோட ஆஸ்தான நாயகரோட கடலை போடுவிங்கலே என்ன புரியலையா அனுமாரோடைங்னோ முடியல. அந்த அற்புத சீன பாக்கணும்ன்னு நெனைகரவங்க என்ன சொல்ல போங்க போய் பாருங்க.

http://www.youtube.com/watch?v=7pbVlyuNxHQ

நெஞ்சினிலேங்னா இது ஒங்க நைனா எடுத்த படம் தானுங், அது எப்புடிங்னா வெளிநாட்டுக்கு வேலைக்கு போவிங்கலாம் மும்பைல நீங்க பணம் கொடுத்தவரு உங்கள யாமாத்திருவாறு அங்க ஒரு தாதாவோட மிங்குலாவிங் அப்பறம் அம்மா அப்பாவுக்கு நெறையா பணம் அனுபிவிங் கடைசியா நீங்க ரவுடீன்னு தெரிஞ்சதும் உங்க குடும்பம் வெஷம் குடிச்சு செத்து போய்டும் சூப்பருங்னா,இதுக்கு இடைல இசாகோபிகரோட ஒரு இலவச காதல் வேற ஆனா ஒண்ணுங்ணா ரோஜாவோட ஒரு ஆட்டம் போட்ருபிங்க பாரு ம்ம்ம்போங்கண்ணா நீங்க எப்பவுமே இப்புடித்தான்.

மின்சார கண்ணாஎன்னங்கணா நீங்க எப்பபாத்தாலும் ரஜினி படத்துல இருந்து திருடிகிட்டே இருகிங் ஓ இது கே எஸ் ரவிகுமார் படமுங்களா, சரி சரி அப்பறம் இந்த படத்துல பிச்சகாரம் மாதிரி ஒரு சீன்ல போஸ் குடுத்துருபிங்கலே சூப்பருங்னா வோர்ல்டுலையே பிச்சகாரன் கெட்டப்பு பர்பக்ட்டா மேச்சாணுது ஒங்குளுக்கு மட்டும் தான்னா, இதுவும் ரம்பாவுகாகதான்னா பாத்ததுங்ணா அப்பறம் சைடுல குஸ்ப்பு அக்காவுகாவும் தானுங்.

கண்ணுக்குள் நிலவுஉங்க சினிமா ஹிஸ்டரிலையே கண்ணுல ஒத்திகரமாது நீங்க நடிச்சது இந்த படத்துலாதானுங், எனக்கு தெரிஞ்சி நீங்க இந்தப்படத்துல நடிகளைங்னா வாழ்ந்துருகிங்,அதுவும் உங்க காதலி இருக்கறமாதிரி நெனசுகிட்டு சாலிநிகிட்ட நடிச்சு காட்டுவிங்கலே மறக்க முடியுமா, உங்களுக்கு ஆஸ்கார் என்னங்கணா அம்பார்ஸ்டர் காரே குடுகலாம்ங்ணா

குஷிஉங்க அப்பா பண்ண உப தொழில மெயின் தொழிலா பக்தியோட பண்ண ஒரு மாமனிதர் எடுத்த படம் தானுங் இது அவுரு பேறு எண்ணங் எஸ் ஜே சூர்யா, அப்பறம் இந்த படத்துல அந்த இடுப்பு மேட்டறு சரி இப்பவாவது சொல்லுங்க்னா நீங்க அந்த பீர் பீப்பாய்யோட இடுப்ப பாத்திங்களா, அப்பறம் இன்னொரு டவுட்டுங்னா ஒரு பாட்டுல மும்தாஜோட ஆடுவிங்க்ள அதுளவருமே "ஜிகு ஜிகு" இதுக்கு அர்த்தம் எண்ணங்னா.என்ன இருந்தாலும் தமிழ் நாட்டு பசங்களுக்கு மூச்சு உடறத பத்தி முக்காமணி நேரம் பேசுநிங்கலே அது எதுக்குங்னா விடுங்க எப்புடியோ கதையே இல்லாத இந்த படத்த கண்டமேனிக்கு ஓட்டிடிங் என்ஜாய்.


பிரியமானவளே
இந்த படம் நீங்க பாரின் ரிடன்ஸ் எங்கள நம்ப சொல்றிங், அது என்னமோ சொன்னிங்களே எல்லோ ரோப் அதான் தாலி தாலி அது என்னதுன்னு தெரியாதுன்னு அப்புடி ஒரு பில்டப் கொடுபிங்கலே ச்சு ச்சு ச்சு இதல்லாம் நாங்க சின்னதம்பில சிணுங்க சிணுங்க பாத்தாசுங்னா , ஆனா இதுல ஒரு டீலிங் போடுவிங்க பாரு ஒன் இயர் அக்ரிமன்ட் கல்யாணம் புல்ரிகுதுங்னா, என்ன இருந்தாலும் இந்த படத்துல உங்களோட அந்த பொம்பள கெட்டப் சூப்பருங்னா நீங்க அந்த சீன்ல வரும் போது சிம்ரன் கூட எனக்கு சிருசாதான்னா தெரியுது என்னா ஒரு ஸ்டக்ச்சரு, அந்த ஸ்டக்ச்சரு நீங்களும் பாக்கனும்னா பாருங்க

http://www.youtube.com/watch?v=dohtTCUd6CQ

ப்ரண்ட்ஸ்இந்த படம் உங்க படம் இல்லைங்னா வடிவேலு படம் இதுல நீங்க ஒரு காமடி பீசுதான். என்ன இருந்தாலும் நீங்க கடைசி சீன்ல அந்த மாதிரி எங்கள பயமுருத்திருக கூடாதுங் உங்க மண்டைய பாத்துட்டு மஞ்சத்தண்ணி ஊதன ஆடு மாதிரி ஆயிடனுங், இந்த மாதிரி சில விபரீத முடிவெல்லாம் முன் கூட்டியே சொல்லிடுங் நாங்க கொஞ்சம் சுதாரிச்சுகுவோம்.

பத்ரிடாக்டர் சார் டாக்டர் சார் இதுல நீங்க பாக்சரா வெளங்கிரும். ஆனாலும் சிம்ரன் அக்காவோட தங்கச்சி சிக்குன்னு தான் இருக்கு என்ன மூஞ்சி சரியில்ல விடுங்க, இருந்தாலும் ஒரு சைடுல பூமிகாவ எங்க கண்ணுல காட்டினிங்க அதுக்காக ஒரு டாங்க்ஸ், லவ் சொல்லனும்னா பிரண்ட வச்சு ட்ரயல் பாக்க கூடாது சரியா,அப்பறம் ஒரு பாட்டுல லுங்கி கட்டிக்கிட்டு போர்டர் மாதிரி அட்விங்கலே சொப்பருங்னா.

ஷாஜகான்அது எப்புடிங்னா உண்மை காதல்னா உசுரையும் கொடுபிங்லா அய்யோ சொல்ல குள்ளயே புள்ளரிக்குதே, அது சரிங்ணா அது எப்புடிங்னா நீங்க லவ் பண்ணற பிகர நீங்களே மத்தவனுக்கு ரூட்டு போட்டு குடுகிரிங் என்ன ஷாஜகான்ன்னு பேறு வச்சதால பீலிங்கு எங்களால தான் தங்க முடியல, அது சரி கடைசி சீன்ல கண்ணத்துல அடிச்சுகிட்டு அழுவிங்கலே அடடடா தூள் அது எப்புடின்னா கண்ணுதண்ணி வராம அப்புடி ஒரு நடிப்பு இதுக்காக உங்களுக்கு அழுமூஞ்சி அரசன்னு பட்டம் குடுகலாம்ன்னா,அந்த வரலாற்று சிறப்பு மிக்க சீன நீங்களும் பாருங்க.

The perfect time for the perfect action is starts from 6:30
http://www.youtube.com/watch?v=IoKJcjRvyo0


டிஸ்க்கி : இதை யாரையும் நான் தொடர்பதிவுக்கு அழைக்க வில்லை நான் மட்டும் தொடருவேன் என்பதை தெரிவித்து கொள்கிரேன்.


No comments:

Post a Comment

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...