Tuesday, April 12, 2011

வாங்க ஓட்டு போட போகலாம்

கவுண்டமணி : ஏண்டா கருவா மண்டையா எப்ப பாத்தாலும் எரும சானிய மூஞ்சில அப்பனமாதிரியே இருக்கியே என்றா ஆச்சு?



செந்தில் : அது ஒன்னும் இல்லன்ன, இன்னைக்கு தேர்தல் ஓட்டு போடா போகணும்

கவுண்டமணி : அதுக்கு ஏண்டா குமுட்டி அடுப்புல ஒக்காந்த கொரங்காட்டம் மூஞ்சிய வச்சுகிட்டு இருக்க, ஓ! ஒனக்கு எல்லாம் ஓட்டு உரிமை இருக்குன்னு பீல் பண்றியா?

செந்தில் : அது இல்லன்ன நம்மளையும் மதிச்சு நம்மள ஓட்டு போடா கூப்பட கூட்டம் கூட்டமா வராங்கன்னே

கவுண்டமணி : எங்கடா ஒர்த்தனையும் காணும்

செந்தில் : அங்க பாருன்னே



Dr.விஜய்:அண்ணா வணக்கமுங்ணா!!!

கவுண்டமணி : ஏண்டா இடிவிழுந்த எரும தலையா இவன் வரான்னு முன்னாடியே சொல்லி இருந்தின்னா கொரங்கோட்டர குச்சியோட வந்துருபன்ல

Dr.விஜய்:என்னங்ணா இன்னைக்கு என்ன நாள் இந்தியனா பொறந்த ஒவ்வொரு குடிமகனும் தன்னோட கடமைய செய்ய நமக்கு ஒரு சந்தர்பம் கொடுத்த நாள் வாங்கன்னா ஓட்டு போடா போகலாம் ஊழல் இல்லா ஆட்சிமலர வழிபன்னுவோம்

கவுண்டமணி : ஆமா இதுக்கு முன்னால நான்தா அடுத்த ஜனாதிபதின்றமாதிரி சொல்லிக்கிட்டு திரிஞ்சயே அது ஏன்னா ஆச்சு?

Dr.விஜய் : நமக்கும் பவர் இருக்குன்னு காட்ட வேணாமா?

கவுண்டமணி : நீ என்ன கரி அள்ளி கொட்ற ரயில் இஞ்சிநாடா பபுல்காம் மண்டையா!, ஹார்ஸ் பர்வரு அது இதுன்னு சொல்லிக்கிட்டு, ஒரு வாட்டி சவுண்டு விட்டதுக்கு ஒன்னோட சங்க புடிசுட்டானுங்க , அந்த கொள்ளகூட்டத்துக்கு பயந்து இந்த கொள்ளிவாய் பிசாசுகிட்ட சரண்டர் ஆகிட்ட இதுல நீ என்ன கூப்புடுரியா படுவா வந்தனா வாய்ல வயலின் வசிச்சுருவன் ஓடு...

கவுண்டமணி : அடுத்து யார்ரா



வடிவேலு:அண்ணனே ஒங்க ஓட்ட கலைஞர்க்கு போடுங்க அந்த சரக்கு பார்ட்டிக்கு வேணாம்முன்னே.

கவுண்டமணி : நீயாடா ஏண்டா கருவண்டு தலையா நடிகரதுல எதுவும் கெடைக்களுன்னு இங்க காசு கொடுத்து கை காட்ரவண கடிக்க வந்துட, சரி அப்பறம் நீ அடிவாங்கனவனுக்குதான் வலி தெரியும்ன்னு சொல்லுவ இங்க எம் பக்கத்துல நிக்கரவண விடவா நீ அடி வாங்கிட்ட போ போய் அடுத்து எப்ப எலக்சன் வரும் எவன் வாய புடுங்கலாம்ன்னு பாரு போ.

கவுண்டமணி : அடுத்து யார்ரா



Dr.விஜயகாந்த் : வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் வாங்க எனக்கு ஓட்டு போடுங்க

கவுண்டமணி : ஒன்னதான் ஒரு பய மதிகலையே அப்பறம் எதுக்கு இந்த பில்டப்பு எல்லாம், சரி அத விடு சரக்கு வச்சுருக்கியா இந்த பன்னிக்குட்டிய அனுபரன் குடுத்துவுடு , பாட்லு வந்தா பார்லிமன்ட் ஒனக்கு போ

கவுண்டமணி : அடுத்து யார்ரா



சீமான் : வணக்கம் தோழரே , கைசின்னத்தை தவிர எந்த மொட்டை இழைக்கு வேனும்னாலும் வாக்கலிங்க நாம் தமிழன் மறந்து விடாதீர்கள்

கவுண்டமணி : நான் தமிழன் யார்ரா சொன்னது, அது சரி இவன எப்புடி நீ தமிழன்னு சொல்லலாம், ஆப்ரிக்க யானைக்கும் அண்டார்டிக்கா பண்ணிக்கும் கொலாப்ரேசன்ல பொறந்தவந்தான் இவன்.

செந்தில் : அண்ணணணணனே....

கவுண்டமணி : சரி விடு ஆபிரிக்க எரும, இந்த பாரு கையோ காலோ காசு கொடுகரவனுக்கு தான் இந்த கருமாந்தர புடிச்சவனுங்க ஓட்ட போடுவானுங்க சாரி ஓட்ட விப்பாணுங்க, இங்க மைக்கு புடிகரத விட்டுப்புட்டு பை நிறைய பணம் கொடுக்கற வழிய பாரு போ.

கவுண்டமணி : அடுத்து யார்ரா



கார்த்திக் : கல்லோ வங் ஓட் போடு போலும்.

கவுண்டமணி : டே நீயுமாடா, ஏம்பா ராசா இங்க ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு வாய் இருகரவனாலையே ஒழுங்கா அடுத்தவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியல இந்த ஓட்ட வாய வச்சுகிட்டு ஓட்டு போடா கூபடர , போ போய் தொகுதிய காணும் ஒன்னோட கட்சி கவுன்சிலாற காணும்ன்னு புகார் கொடு போ

கவுண்டமணி : அடுத்து யார்ரா



சரத்குமார் : ஹாய் கவுண்டமணி, வாங்க குடும்பத்தோட ஓட்டு போடா போகலாம்.

கவுண்டமணி : ஏனுங்னா இது நமக்கு எத்தனாவது குடும்பமுங், அது சரி குடும்பத்தோட கூழ் ஊத்த போறமாதிரி கும்ப கும்பலா போறீங்க அப்புடியாறு நிக்கறா, ஓ! மம்மி கிட்ட சொல்லி ரெண்டு சீட்டு வாங்கிடிங்க போங்க போய் ஒங்களுக்கு நீங்களாவது ஓட்டு போடுங்க அதையும் அந்த குடும்பம் போற்றபோகுது நா பொறுமையா வரனுங்க.

கவுண்டமணி : அடுத்து யார்ரா



சோ : இப்ப நா என்ன சொல்றன்னா வா ரெண்டு பெரும் சேந்து ஓட்டு போட்டு வந்துடுவோம், வரமாட்டியா!!!, கவுண்டமணி சார் இவர் வரமாற்றாறு என்னான்னு கேளுங்க.

கவுண்டமணி : ஏண்டா இரும்பு குண்டு தலையா ஒனக்கு வந்தா நீ போ அதுக்கு எதுக்கு இந்த கரிச்சட்டி மண்டையன தொணைக்கு கூப்படற நீ கெட்டது பத்தாதுன்னு வரவன் போறவன் எல்லாம் அடிவாங்க இழுத்து உடுரயா படு வா போ போய் மம்மிய மஜா பண்ணு.

கவுண்டமணி : அடுத்து யார்ரா



குஸ்ப்பு : என்ன சார் இங்க இருக்கீங்க வாங்க ஓட்டு போடா போகலாம்?

கவுண்டமணி : அம்மா கொலவிளக்கே! கலைஞர்ரோட குத்துவிளக்கே! நீங்க எப்புடி வேனும்னாலும் யாருக்கு வேனும்னாலும் ஒங்க ஓட்ட குத்தலாம் ஒங்க ஒடம்பு தாங்கும் எங்க ஒடம்பு தாங்காதும்மா போங்க கலைஞர காக்கா புடிங்க கட்சில மட்டும் இல்லாமா கலைஞர் குடும்பத்துலயும் நிரந்தர இடம் வாங்கிடலாம் போங்க.

கவுண்டமணி : அடுத்து யார்ரா



நமிதா : மச்சான் வாங்கு நா ஓட்டு போடுது நீயும் வந்து ஓட்டு போடு

கவுண்டமணி : ஹாய் டார்லிங் நீ கூப்ட்டு நா வராம இருந்தா அப்பறம் அந்த ஓட்டுக்கு என்ன மரியாத வா டார்லிங் போடலாம்

நமிதா : எது போட நீ கூப்புடுது

கவுண்டமணி : ஓட்டத்தான் பின்ன எத போட முடியும் இம்மாம் பெரிய பஞ்சுமுடாய் ஓட்டு போட கூப்புடுது டோய்!

கலைஞரே நீங்க தப்பு பண்ணிடிங்க இந்த மாதிரி நாலு ஊருக்கு நமிதாவ அனுபிருந்திங்கன்னா மாநாடா மயிலாடான்னு கூடசேந்து நா ஆடன்னு ஆடிக்கிட்டு வந்து ஒங்களுக்கு காட்ற எடத்துல குத்திருபானுங்க போங்க நீங்க மிஸ் பண்ணிடிங்க அடுத்த தேர்த்தல்ல நீங்க இருபிங்களோ இல்லையோ இத நோட் பண்ணிக்குங்க

நா நா நா நமிதா நானும் இருக்கன் நீ பக்கம் வா
போ போ போ போலாமா பூலிங் பூத்த நோக்கி போலாமா


11 comments:

 1. எவன் இவன்லாம் ஓட்டு கேக்க வர்றா[ளு]நுங்கப்பா....

  ReplyDelete
 2. நம்ம நாட்டுல எவன் வேனும்னாலும் ஓட்டு கேக்க வரலாம், ராமனோட செருப்பு வச்சு நாடாண்ட நாடுதான நம்ம நாடு!

  ReplyDelete
 3. yen ajith kku ottu illaya....ohhhhhhh avan oru manusaneeee illayaaaa......avanaiyum mathingappa..........thala pona varumaaa....

  ReplyDelete
 4. ஹாய் டார்லிங் நீ கூப்ட்டு நா வராம இருந்தா அப்பறம் அந்த ஓட்டுக்கு என்ன மரியாத வா டார்லிங் போடலாம்

  நமிதா : எது போட நீ கூப்புடுது//

  ஏய்யா இப்படி அட்டகாசம் பண்றீங்க..;-))

  ReplyDelete
 5. என்னது அட்டகாசமா மானாட மயிலாடன்னு அது ஆடும்போது ஆன்னு அத பாத்துகிட்டு இருந்தத விடவா இது அட்டகாசம்

  ReplyDelete
 6. Yaruya athu anony po poi peroda vaa. Odu odu.

  Nanba nee kalakitta po. Naanlaam kushboo kooppitale poda poven(ootta sonnen) namithalam kooputta nalanji kuththu kuththuven athu solra sinnathukku

  ReplyDelete
 7. நமிதா கூப்ட்டு(ஓட்டு போட) வரலானா நமக்கு 18 வயசு ஆனதே எல்லாம் வேஸ்ட்டு

  ReplyDelete
 8. நமிதா : மச்சான் வாங்கு நா ஓட்டு போடுது நீயும் வந்து ஓட்டு போடு

  கவுண்டமணி : ஹாய் டார்லிங் நீ கூப்ட்டு நா வராம இருந்தா அப்பறம் அந்த ஓட்டுக்கு என்ன மரியாத வா டார்லிங் போடலாம்

  நமிதா : எது போட நீ கூப்புடுது

  கவுண்டமணி : ஓட்டத்தான் பின்ன எத போட முடியும் இம்மாம் பெரிய பஞ்சுமுடாய் ஓட்டு போட கூப்புடுது டோய்!


  he......he..........he........ kalakkal!

  ReplyDelete
 9. ஆக. எல்லாரும் பின்னாடியே போயி குத்துங்க, நான்
  வரல.

  ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...