"அப்பா எனக்கு வேல கெடச்சுடுச்சு, எங்க காலேஜ் கேம்பஸ் இண்டர்வியுல செலக்ட் ஆகிடன் பா"
"சரி எப்ப வந்து ஜாயின் பண்ண சொன்னாங்க"
"இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கு"
"சரி நீ உனக்கு தேவையானத எல்லாம் ரெடி பண்ணிக்கு, எந்த ஊர்ல கம்பனி இருக்கு"
"கோயமுத்தூர் பா"
"சரி விடு எனக்கு தெரிஞ்ச ஆளுங்க அங்க இருக்காங்க அவங்கள்ட்ட சொல்லி ஒனக்கு தங்க ஏற்பாடு பண்றன்"
*********"முதல் நாள் ராம் அலுவலகத்தில் நுழைகிறான்"
"சார் இது என்னோட அபாய்ன்மென்ட் ஆர்டர்"
"வாங்க ராம், உங்க டீம் லீடர் மிஸ்டர் செந்தில் போய் பாருங்க அவரு உங்கள பாத்துக்குவாரு"
"குட் மார்நிங் சார், ஐ ஆம் ராம்"
"சரி இந்த சீட்ல ஒக்காரு, ஒனக்கு இண்டர்வியு அப்ப கேட்ட ப்ரோக்ராம் ஞாபகம் இருக்கா"
"இருக்கு சார்"
"அத First வொர்க் அவுட் பண்ணி காட்டுங்க"
"முதல் நாள் அவர் சொன்னதை சரி வர முடிக்க முடியாமல் திணறினான் ராம், அவனுடன் படித்து அவனுடன் வேலையில் சேர்ந்தவர்கள் விரைவில் முடித்தனர், அவன் மதில் முதல் முறை நான் தோற்றுவிட்டேன் என்ற எண்ணம் மெல்ல படர ஆரம்பித்தது, ஒரு மாதம் அங்கு எவ்வாறு கோடிங் எழுத வேண்டும் என்று அனைவருக்கும் கற்று கொடுக்கப்பட்டது"
*********
"ஒருமாதம் அங்கு அவர்கள் திறனை பார்த்து அவர்களுக்கான டீம் பிரிக்கப்பட்டது, முதல் தரம் நேரடியாக கிளைன்ட் ப்ரொஜெக்டில் வேலை பார்க்கும் சந்தர்ப்பம், இரண்டாம் தரம் கிளைன்ட் ப்ரொஜெக்டில் வேலை பார்பவர்களுக்கு உதவும் குழு, முன்றாம் தரம் வேலை பார்க்கும் அலுவலகத்தின் உதவும் மென்பொருள் தயாரிக்கும் நிலை"
"ராமிற்கு கிடைத்தது மூன்றாம் தரம் இருந்தும் அவன் மனதில் நாம் சரிவர வேலை கற்றுக்கொள்ளவில்லை என்ற எண்ணம் இருந்ததால் அவனது நிலை கண்டு மனம் வருந்த வில்லை"
"ராமின் டீமுடன் ப்ராஜெக்ட் மேனேஜர் ஒரு கலந்துரையாடல் நடத்தினார், ஒரு புது ப்ராஜெக்ட் டிசைன் செய்யப்பட்டது, அதனை அனைவருக்கும் விளக்கப்பட்டது. ராமை அழைத்து அதில் ஒரு பகுதி வேலை பற்றி எடுத்து கூற சொன்னார்கள்"
"அவனால் மற்றவர் முன் பேசுவதர்க்கு தயங்கிய நிலையில் அவனை அனுப்பிவிட்டு அந்த வாய்ப்பை அடுத்தவருக்கு கொடுக்கப்பட்டது"
"ராமிற்கு அதில் ஒரு சிறு பகுதி மட்டும் கொடுக்கப்பட்டது, அவன் அதனை சரியாக முடித்த பிறகு அதனை ஒப்படைக்காமல் தனது டீமில் இருந்த மற்றவர்கள் வேலை மீது கவனம் இடம் மாறியது, அவர்களுக்கு உதவும் நோக்கில் அவர்களின் சிக்கல்களை ஆராய்ந்து அதற்க்கான திருத்த முயற்சிகளில் ஈடுபட்டான்,அவனோடு சேர்ந்து அவனது டீம் அவர்களுக்கு கொடுத்த வேலை முடிக்கப்பட்டது"
"மூன்று மாதம் ராமின் வேலை நன்றாக இருந்த காரணத்தினால் அவனை நேரடி கிளைன்ட் ப்ராஜெக்ட் டீமிர்க்கு மாற்றப்பட்டான்"
*********"சில நாள் அந்த டீம் அவன் வருகையை பார்த்து ஒட்டாமல் இருந்தனர்"
"அவனுக்கு ஒரு பது ப்ரோக்ராம் கொடுக்கப்பட்டது புது மென்பொருள் துணையுடன்"
"5 நாட்கள் அதனை எவ்வாறு தொடங்குவது என்று தெரியாமல் திணறிகொண்டு இருந்தான்"
"அவனுக்கு ப்ராஜெக்ட் லீடரிடம் இருந்து அழைப்பு வந்தது"
"ராம் 5 நாளா அந்த ப்ரொஜெக்ட்ல இருக்கீங்க என்ன பண்றீங்க"
"சார் இது எனக்கு புதுசு எனக்கு டீம் லீடர் இத பத்தி வெளக்கமா சொல்ல மாற்றாரு"
"சரி நீங்க போங்க"
"ஒரு மணி நேரம் போன பிறகு அவனது டீம் லீடர் அவன் அருகில் வந்து அதனை விளக்கி விட்டு கோபத்துடன் சென்றார்"
"அன்றில் இருந்து அவனுக்கு மட்டும் கொடுக்கும் வேலையின் அளவு கூட்டப்பட்டது அதற்க்கான கொடுக்கப்பட்ட நேர அளவு குறைக்க பட்டது"
*********"ஒரு வாரம் போன பிறகு அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை நிலுவையில் இருந்ததை கண்டு அவன் அருகில் டீம் லீடர் வந்தார்"
"என்ன ராம் என்ன இன்னும் முடிகலையா"
"சார் இன்னும் டைம் வேனும், மினிமம் 5000 லைன்சுக்கு மேல கோடிங் போகுது 2 டேஸ் டைம் எக்ஸ்டன் பண்ணுங்க சார்"
"நீங்க ப்ரோக்ராம் பண்றதுல புலின்னு கேள்வி பட்டன்"
"சார் அதல்லாம் ஒன்னும் இல்ல சார் எதோ எனக்கும் கொஞ்சம் தெரியும்"
"ஓ அப்ப நீங்க ப்ரோக்ராமிங்க்ள புலி, என்ன கொட்ட எடுத்த புளியா இல்ல கொட்ட எடுக்காத புலியா?"
"அவனது இயலாமையை நினைத்து தலை கவிழ்ந்து நின்றான்"
*********"சில நாள் சென்ற பின் அவனது டீமில் அவன் அருகில் இருபவனின் வேலை நிலையை விமர்சித்து கொண்டு அவனது டீம் லீடர் அவனை நோக்கி, ராம் என் மூஞ்சிய உம்ன்னு வச்சுரிகிங்க டெய்லி ஒங்கள தான் திட்றன் இன்னைக்கு இவர திட்றன்ல பாத்து சிரிங்க சார் சிரிங்க"
"சார் மத்தவங்க கஷ்ட்ட படறத பாத்து சந்தோஷ படற ஆள் நா இல்ல சார்"
"அதற்க்கு மேல் எந்த வார்த்தையும் பேசவில்லை"
"அன்றில் இருந்து அவனுக்கு எந்த வேலையும் கொடுக்க பட வில்லை, சரியாக 10 நாள் போன பிறகு ப்ராஜெக்ட் லீடர் அவனை அழைத்தார்"
"கடந்த 4 மாசமா உங்களோட பர்பார்மன்ஸ் சரியில்ல உங்களோட லாஸ்ட் 10 டேஸ் அப்ட்டேட் ரொம்ப வீக், உங்க டீம்லீடர் நீங்க வேணாம்ன்னு ரிபோர்ட் கொடுத்துருக்காரு, அதனால் உங்கள இந்த வேலைல இருந்து அனுபறதா முடிவு பண்ணிருகோம் வி ஆர் சாரி, அக்கௌன்ட் டிபார்ட்மண்டல உங்களோட பேலன்ஸ் செட்டுல்மன்ட் தயாரா இருக்கு வாங்கிக்குங்க, சம்பாரிகரதுக்கு சாப்ட்வேர் ஜாப் தவிர நெறைய இருக்கு நீங்க கெளம்பலாம்"
*********"சரியாக 8 மாத வேலை அனுபவம்"
"அதனை தொடர்ந்து பல கம்பனிகளில் இன்டர்வியுவ் அட்டன் பண்ணினான் அவனது சிவியில் 8மாதம் அனுபவம் அவனது மதிப்பை குறைத்து காட்டியது எதற்க்காக வேலையை விட்டீர்கள் என்ற கேள்வி இன்றும் அவனை துரத்துகிறது"
வாழ்க்கையில் முதல் படி கடபவர்கள் தனக்கு மேல் உள்ளவர்களுக்கு அடங்கி போனால் தான் அடுத்த படிக்கு அடி எடுத்து வைக்க முடியுமா?
திறமை இருந்தும் பாதியில் வேலை இழந்தவர்களை தரகுரைவாகத்தான் மதிபிடுவார்களா? என்ன செய்வது