Saturday, July 9, 2011

சிங்கார சென்னையும் சாப்ட்வேர் வேலையும்

பஹரைன் விட்டு வந்தாச்சு, அம்மாவ பாத்தாச்சு அங்க சுத்தி இங்க சுத்தி திருப்பி அதே சாப்ட்வேர் அதே வேல சென்னைல. என்ன சென்னை பஸ்ல போறது ஒரு அலாதி சொகம் கலந்த சோகம்.வேல கெடச்சது அண்ணாநகர் ரூம் கெடச்சது வேலச்சேரி. ரூம்க்கும் ஆபிஸ்க்கும் பஸ்ல போய் என்னோட சின்ன ஒடம்ப கொரச்சடலாம்ன்னு முடிவு பண்ணிட்டன்.

பஹறைன்ல சம்பாரிச்சமோ இல்லையோ போனதுக்கு 20 kg உடம்பு ஏறனதுதான் மிச்சம். இப்ப ஜஸ்ட் 110 kg தான் cool, சும்மா சொல்லகூடாது தின்னுட்டு ஜாலியா காலைல இருந்து நைட் வரைக்கும் நெட்ல ஒக்காந்தரகறது ஒரு சொகம். எவ்வளவு நாளைக்குதான் அப்புடியே இருக்கறது. அப்பறம் அங்க இருந்த என்னோட பாஸ்ச விட பத்து மடங்கு குண்டாய்டுவன்னு பயம் வந்துடுச்சு. பஹரைன் பாஸ்சோட வெய்ட் ஜஸ்ட் 170 kg தான் cool. அதான் வந்தாச்சு வேல வாங்கியாச்சு. இப்ப நண்பர்களோட கும்முன்னு போகுது.கோடிங்கடிக்கறது கூட குதுகலமா இருக்கு ஆனா இந்த சென்னைல பஸ்சுல போறது எமன பக்கத்துல வச்சுகிட்டு பாடகட்டரமாதிரி இருக்கு. பஸ்சுதான் தொல்லபன்னுதுன்னு ட்ரைன்ல கிண்டி டு நுங்கம்பாக்கம் வரைக்கும் போக முடிவு பண்ணா போகும்போது ஒன்னும் தெரியல ஆனா வரும் போது கிண்டில இருந்து வேலச்சேரி ரூம்க்கு மறுபடியும் விடாது கருப்பு மாதிரி அதே பஸ்சு, பஸ்ல வரதுக்குள்ள தாவு தீந்து போகுது போங்க.இப்பதான் சென்னைல கிண்டிவழியா கோயம்பேடு வரைக்கும் புது ட்ரைன் ப்ராஜெக்ட் போகுது அதுக்காக ரோட்ட ரெண்டா வெட்டி வேல பாக்கறாங்க முடியல.இன்னும் இந்த சென்னை எவ்வளவுதான் சுருங்குமோ சென்னை சிங்கார சென்னையா இல்ல சின்ன சென்னையா தெரியலப்பா ஒரே பேஜாரா கீதுபா?.

ரொம்பநாள் கழிச்சு பதிவு இனிமே அடிகடி நெட் பக்கம் எட்டி பாக்கறது கஷ்ட்டம் முடிஞ்சவரைக்கும் வாரம் ஒரு முறை வந்து பாக்கரம் மக்கா....பாய்!9 comments:

 1. அடப்பாவி சென்னைக்கு போயிட்டியா? ம்ம்ம்.. எஞ்சாய்ய்ய்ய்............

  ReplyDelete
 2. அமாம் மாமு சவூதிஎப்புடி இருக்கு மன்னர் எப்புடி புதுசா ஏதாவது பன்னிருகாரா!

  ReplyDelete
 3. கிழிச்சானுங்க, மன்னர் என்னென்னமோ பண்றாரு, ஆனா எல்லாம் உள்ளூர்காரங்களுக்கு மட்டும்தானாம்........!

  ReplyDelete
 4. விடு மாம்ஸ் வயலுக்கு பாயற தண்ணி வாய்க்காவுல இருக்க புல்லுக்கு பாயாதா என்ன?

  ReplyDelete
 5. ஹஹஹஹா அதுவும் சரிதான்............

  ReplyDelete
 6. //ஆனா இந்த சென்னைல பஸ்சுல போறது எமன பக்கத்துல வச்சுகிட்டு பாடகட்டரமாதிரி இருக்கு//
  புதுசா இருக்கே பாஸ்! சூப்பர்! :-)

  ReplyDelete
 7. //முடிஞ்சவரைக்கும் வாரம் ஒரு முறை வந்து பாக்கரம் மக்கா....பாய்!//
  ok boss!

  ReplyDelete
 8. ஊருக்கு வந்த பின்னர், இடம் பெற்ற நிகழ்வுகளைச் சுவைபடத் தொகுத்திருக்கிறீங்க. சென்னை சுருங்குகிறது என்றால், அபிவிருத்தியில் புரட்சி செய்யப் போகிறது என நினைக்கிறேன். வெகு விரைவில் தாங்கள் மொனோ ரெயிலில் பயணம் செய்ய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. அட இன்னா பாஸ் நீங்க?
  நம்ம சைட்டுக்கு வாங்க!
  கருத்து சொல்லுங்க!!
  நல்லா பழகுவோம்!!!

  ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...