Wednesday, July 29, 2015
பொன்னியின் செல்வன் - பாகம் II
Part II
இந்த பார்ட்ல ஒரு செம திம்சு கட்டைய இன்ட்ரோ பண்றாரு நம்ம கல்கி அது யாருன்னா பூங்குழலி .
இந்த பூங்குழலி யாருன்னா தஞ்சாவூருல நம்ம ஹீரோ ஒரு பைய்யன்(சேந்தன் அமுதன்) வீட்ல தங்கி இருந்தாரே அவனோட ஒரு தலை ராகம்.
இந்த திம்சு கட்ட ஒரு Ship Driver
நம்ம திம்சு கட்ட கோடிக்கரையில(இது ஒரு கடல் சார்ந்த இடம், இங்க இருந்து தான் இலங்கைக்கு போக முடியும்) தறிகெட்டு சுத்திகிட்டு இருக்கும். பொழுது போகலைனா யாருமே இல்லாத கடல் பக்கமா போய் நல்லா பாடும் அப்புடியே ஜிங்கு ஜிங்குன்னு குதிக்கும்.
நம்ம ஹீரோ இப்ப இலங்கை போயாகனும் அதுக்கு இந்த ரூட்ட கூகுள் மேப் வழியா கண்டுபுடிச்சு குதிரைல குதுலமா வரும் போது. நம்ம திம்சு கட்ட தனியாவர்த்தனம் பண்ணிக்கிட்டு இருந்துச்சு.
அத கேட்டதும் இது அது இல்லன்னு நெனசுகிட்டு. இந்த வெட கோழிய புடிச்சா இத வச்சு எப்புடியாவது இலங்கைக்கு போய் பெஸ்ட் பேட்ஸ்மேன(அருள் மொழிவர்மன) மீட் பண்ணிடலாம்ன்னு திங் பண்றான் நம்ம ஹீரோ. திம்சு கட்டைய புடிக்க ஓடும் போது ஒரு பொத குழி குள்ள சிக்கிகுறான் நம்ம ஹீரோ.
அங்க இருந்து அவன் எப்புடியோ எஸ்கேப் பண்ணி வெளிய கொண்டுவரா நம்ம திம்சு கட்டை. நம்ம ஹீரோ அவ கிட்ட நீதான சேந்தன் அமுதன் லவ்வர், நீ நல்லா பாடுவன்னு சொன்னா ஆனா இப்புடி நல்லா ஓடுவன்னு அவன் சொல்லல.
அதுக்கு நம்ம திம்சு கட்டை >> யாரு அந்த குருவி கூடு மண்டையனா அவன் சொன்னா நீ நம்பறதா, எனக்கு இங்க பல லவ்வர்ஸ் இருக்காங்க அத பாக்கணும்ன்னா நைட்டு எனக்கு பின்னாடி வந்து பாருன்னு சொல்றா.
சரி நா வந்த விசயத்த சொல்லிட்றன், நம்ம நாட்டு கேப்டன்(சுந்தர சோழர்) சீக்கு வந்து படுத்து கெடக்கார். அவருக்கு இலங்கைல இருந்து மருந்து வாங்கிட்டு வர போகணும் எனக்கு போக வழி சொல்லுவாயானு நம்ம ஹீரோ கேக்கறான்.
என்னோட வீட்டுக்கு கூட்டி போறன், எங்க அப்பா அதுக்கு வழி சொல்வாருன்னு சொல்லி வீட்டுக்கு கூட்டி போறா நம்ம திம்சு கட்டை. வீட்ல அவங்க அப்பா நம்ம ஹீரோவ பாத்து நேத்து தான ரெண்டு பேரு வந்து எதோ காரணத்துக்காக இலங்கை போகனும்ன்னு சொல்லி பணம் குடுத்தாங்க, அதனால என்னோட பைய்யன அவங்க கூட அனுப்பி வச்சுட்டன். இப்ப உன்ன கூட்டிட்டு போக இங்க யாருமே இல்லையே ஒரு படகு வேணா இருக்கு ஆனா அத ஓட்ட ஆள் இல்லையேன்னு சொல்றாரு.
நம்ம திம்சு கட்டை வீட்ட விட்டு வெளிய போனதும், கட்டையோட அப்பா இதோ பாரு என்னோட பொண்ணு நல்லா கடல்ல கொரங்கு பெடல் அடிப்பா அவளுக்கு தெரியாத வித்தையே இல்ல, அவள வேணா புடிசுகிட்டு போன்னு வழி சொல்றாரு. ஆனா அவ அசால்ட்டா ஒத்துக்க மாட்டா இன்னைக்கு நைட்டு தங்கிட்டு நாளைக்கு அவள சமாதன படுத்தி கூட்டிட்டு போன்னு சொல்லி தங்க வைக்குறாரு.
அன்னைக்கு நைட்டு நம்ம ஹீரோ தூங்கும் போது, நம்ம திம்சு கட்டை தனியா கெளம்புது, நம்ம ஹீரோவோட 7th Sense எப்புடியோ முழிச்சுடுச்சு, அவ பின்னாடி நூல் புடிச்சாப்பல போறான். திம்சு ஒரு எடத்துல நின்னு வெறிக்க வெறிக்க பாக்குது. அத பாத்த நம்ம ஹீரோ அப்புடி என்ன பாக்கறான்னு திரும்பி பாக்கும் போது, எவனோ போகிக்கு டையர கொளுத்தி போட்டு இருக்கான். அது திகு திகுன்னு அங்க அங்க எரியுது, அத பாத்ததும் நம்ம ஹீரோ கருப்பு மண்ட ஓடு பத்தி எரியற மாதிரி பீல் பண்றான்.
அதுக்கு அப்பறம் நம்ம ஹீரோவோட 8th Sense எம்பி குதிச்சி, அது வெறும் சில்பான்ஸ் கில்பான்ஸ் வேலன்னு தெரிஞ்சுகிட்டு, அது என்னவோ இருந்துட்டு போகட்டும் நீ வான்னு திம்சு கட்டைய கூட்டிட்டு வீட்டுக்கு வந்துடுறாரு.
அப்ப நம்ம திம்சு கட்டை கரைல வச்சுருந்த ஹீரோவோட லட்டர் பேட தூக்கிட்டு ஓடுது.அத பாத்த நம்ம ஹீரோ கால்ல ராக்கட்ட பத்த வச்ச மாதிரி சுர்ருன்னு பறந்து கரைவந்து சேந்து, கட்டைய புடிக்க காட்டுத்தனமா ஓடுறாரு. ஏன்னா அந்த லட்டர் பேடுல தான் குந்தவை அருள்மொழி வர்மனுக்கு குடுத்த கடுதாசி இருந்துச்சு.
நம்ம திம்சு கொரங்கு பொறந்த அழகான கொரங்கா இருந்துருக்கும்,அது ஒரே ஜம்புல மரத்து மேல மங்கி மாதிரி தாவி ஒக்காந்துகுச்சு.
நம்ம ஹீரோ எதுக்கு என்னோட லட்டர் பேட தூக்கிட்டு வந்தன் கேக்கும் போது. அங்க பாரு உன்ன மாறுகால் மாறுகை வாங்க பழுவேட்டையார் கூட்டம் சுத்துது, உன்ன எஸ்கேப் பண்ணத்தான் இத பண்ணன்னு சொன்னிச்சு.
நம்ம ஹீரோ இந்த கடுதாசிய படிசுட்டியான்னு கேட்டான், அதுக்கு நீ அருள்மொழி வர்மரை பாக்க போறியா அப்ப நா உனக்கு ஹெல்ப் பண்றன். இன்னைக்கு நைட்டு மட்டும் யாருக்கும் தெரியாம நா ஒரு குகைய காட்றன் அங்க குத்த வச்சு உக்காரு. விடியும் போது உன்ன வந்து பிக்கப் பண்ணிகறன் சொல்லி ஒரு குகைய காமிச்சுது நம்ம திம்சு
விடிஞ்சதும் நம்ம திம்சு ஹீரோவ கூட்டிட்டு ஒரு படகுல இலங்கைய நோக்கி ஜேர்னிய ஸ்டார்ட் பண்றா.போகற வழில திம்சு ஹீரோ வச்சுருந்த லட்டர குடு நானே கொண்டுபோய் குடுக்கரன்னு சொல்வா, அத தப்பா புரிஞ்சுகிட்டு ஹீரோ கடல்ல குதிசுருவாறு. ஹீரோவ காப்பாத்தி படகுல போட்டுக்கிட்டு இலங்கை தீவு பக்கம் ஒரு குட்டி தீவு இருக்கும் அதுக்கு பேரு பூத தீவு அங்க ஹீரோவ எறக்கி விட்டு இங்க இருந்து சேர் ஆட்டோ வரும் அத புடிசுகிட்டு போய் சேருன்னு கலட்டி விட்டுவுடா.
இதுக்கு நடுவுல ஆழ்வார்காட்டியான் நம்பி சோழ அமைச்சர பாத்துடு. அவர் சொல்படி அருள்மொழிவர்மனை இலங்கைலையே இருக்கும் படி சொல்ல இலங்கை வந்து இருப்பான். அவன பாத்ததும் அவனோட மிங்கிள் ஆகி பெஸ்ட்டு பேட்ஸ்மேன் அருள்மொழி வர்மன தேடி போவான் நம்ம ஹீரோ.நடுவுல முதல் பேட்ஸ்மேன் கரிகாலன் Friend பார்த்திபனும் அங்க வந்துருப்பான். ஏன்னா அவனும் பெஸ்ட்டு பேட்ஸ்மேன பாத்து ஆதித்த கரிகாலன்ட கூட்டிட்டு போகதான் வந்துருபான்.
அங்க சுத்தி இங்க சுத்தி ஒரு சோழப்படை இருக்கும் எடத்துக்கு நம்ம ஹீரோவும் ஆழ்வார்காட்டியான் நம்பியும் சேந்தாங்க. அங்க இருக்கவங்க அவங்கள அருள்மொழி வர்மன்ட கூட்டிட்டு போகும் போது, நடுவுலையே ஹீரோவோட லட்டர ஒரு ஜிம்பாடி வந்து சண்ட போட்டு எடுத்துகிட்டு போய்டும், அது யாருன்னா அதுதான் நம்ம பெஸ்ட்டு பேட்ஸ்மேன் அருள்மொழிவர்மன்.
நம்ம ஹீரோவும், ஆதித்த கரிகாலன் Friend பார்த்திபனும் கொண்டுவந்தது ஒரே சேதி தான் இங்க இருந்து தமிழ்நாட்டுக்கு வரனும். ஆழ்வார்காட்டியான் நம்பி கொண்டுவந்த மெசேஜ் மட்டும் இங்கயே சிக்ஸ் அடிசுகிட்டு கெடக்கனும்ன்னு இருந்துச்சு, ஆனா "First impression is the best impression" சொல்வாங்க அதனால கைல மொதல்ல கெடச்ச மெசேஜ் என்னவோ நம்ம ஹீரோவோடது. தமிழ்நாட்டுக்கு போலாம்ன்னு முடிவு பண்ணுவார் நம்ம பெஸ்ட் பேட்ஸ்மேன். இதுக்கு நடுவுல நம்ம திம்சு தளபதியோட அங்க வந்து அருள்மொழி வர்மன சிறைபிடிக்க சக்கரவர்த்தி படை தமிழ்நாட்டு கரையோரம் நட்டுகிட்டு நிக்குதுன்னு சொல்லும்.
அத கேட்டதும் சக்கரவர்த்தியே(கேப்டனே) என்ன சந்தேக பட்டுட்டார். நா ஒடனே இங்க இருந்து வெளிநடப்பு செய்றன்னு சொல்லி அங்க இருந்து தமிழ்நாட்டு கரைல நிக்குற காண்டாமிருக படைல சரணடைய யானைய கும்கியாக்கி ஒட விடுவார் நம்ம அருள்மொழி வர்மன்.
அந்த வேகத்துக்கு கூட யாரும் வர முடியல. பார்த்திபன் நா வந்த புல்லட் போட் இருக்கு அத வச்சுக்கிட்டு நா மொதல்ல தமிழ்நாட்டுக்கு போய் இங்க நடந்தத என்னோட நண்பன் கரிகாலனுக்கு சொல்றன்னு சொல்லிட்டு கெளம்பிடுவாறு.
நம்ம ஹீரோ, ஆழ்வார்காட்டியான் நம்பி , சோழ தளபதி மூணு பேரும் இலங்கை கரையோறம் நிக்குற படக பாப்பாங்க அதுல எப்புடியோ நம்ம ஹீரோ மட்டும் ஏறி குதிச்சு பெஸ்ட் பேட்ஸ்மேன காப்பாத்த முயற்சிக்கும் போது. அந்த படகுல அல்ரெடி ரெண்டு பேர்(மந்திரவாதிகள்) அருள்மொழி வர்மன கொல்ல வந்தவங்கன்னு தெரியவரும். ஹீரோ அவங்க கிட்ட மாட்டிக்குவாறு.
நம்ம பெஸ்ட் பேட்ஸ்மேன் போன Elephant Flight ல நம்ம திம்சு கட்டை இருந்துச்சு, யான ஒரு கரையோரமா நின்னுச்சு. அங்க ஒரு கப்பல் ஒடஞ்சு போய் கரைதட்டி நின்னுச்சு. அது சக்கரவர்த்தி அனுப்பிய கப்பல்ன்னு தெரிஞ்சுது. சரி நா எப்புடியாவது தமிழ் நாட்டுக்கு போய் சேரனும். அதனால திம்சு கிட்ட என்ன நீதான் படகுல கூட்டிட்டு போகணும்ன்னு சத்தியம் வாங்கறாரு பெஸ்ட் பேட்ஸ்மேன்(அருள்மொழி வர்மன்).
இன்னைக்கு நைட்டு எப்புடி இங்க தங்கறதுன்னு யோசிக்கும் போது. ஒரு deaf and dumb பாட்டி அங்க இருந்துச்சு. அது இவங்க ரெண்டுபேருக்கும் வடசுட்டு குடுத்துச்சு அத பாத்ததும் அருள்மொழி வர்மனுக்கு அம்மா நியாபகம் வர ஆரமிச்சுது. நைட்டு தூங்கிட்டு காலைல எழுந்து பாத்தா பாட்டி பாய சுருட்டிகிட்டு ஓடிடுச்சு.
அந்த நேரத்துல ஆழ்வார்காட்டியான் நம்பி , சோழ தளபதி அங்க வந்து பாஸ் எங்கள ஏன் இப்புடி சிங்கிளா கலட்டி விட்டு வந்திங்க. உங்களுக்கு எதோ ஆபத்துன்னு வந்தியதேவன். குருவி மாதிரி கரைல நின்னுகிட்டு இருந்த கப்பல பறந்து பாஞ்சு புடிச்சு போய்டான், ஆனா அதுல இருதது யதோ கொள்ள கூட்டமாட்றுக்கு. அவன இந்நேரம் கொன்னுருபாங்கன்னு அருள்மொழி வர்மன்ட்ட சொன்னாங்க.
"அய்யோ என்ன காப்பாத்த வந்த காட்டு பூச்சி கடல்ல கால்ராவந்த மாதிரி சிக்கிகிச்சே", அத எப்புடியாவது வல போட்டாவது புடிக்கணும் வாங்க போலாம்ன்னு சொல்லலும் போது. புல்லட் போட்ல போன பார்த்திபன் அங்க வந்தான்.
இதோ வந்துடான்ல என்னோட சிங்கம் வந்துட்டான்ல இப்ப பாருங்கடா, இன்னக்கு தெரியும்டா அந்த கட்ட தொரையா இந்த கைபுள்ளையான்னு கத்திகிட்டு புல்லட் போட்ல ஏறி விர்ருன்னு போறாரு நம்ம பெஸ்ட்டு பேட்ஸ்மேன் அருள்மொழிவர்மன்.
இந்த நேரத்துல நம்ம ஹீரோ எஸ்கேப் ஆகி கப்பல்ல இருந்த மந்திர வாதிகளை போட்டு தள்ள பாக்கறான். அதுக்குள்ள அவனுங்க Lifeboat வச்சு எஸ்கேப் ஆகிடறாங்க.
நம்ம ஹீரோ தனியா கப்பல்ல கடல பொறி சாப்டுகிட்டே டைம் வேஸ்ட் பண்றாரு. நைட் ஆகிடுச்சு இடி மழை வேற. ஒரு இடி கப்பல்ல விழுந்துச்சு.
கப்பல் தண்ணீல மூழ்கும் போது நம்ம பெஸ்ட்டு பேட்ஸ்மேன் இன்னொரு பக்கம் கப்பல்ல வந்துகிட்டு இருந்தாரு. சரி ஹீரோவ காப்பாத்த Lifeboat யூஸ் பண்ணி அவன் இருக்கும் எடத்துக்கு போயாகனும் வேற வலி இல்லன்னு சொல்லி அத யூஸ் பண்றாரு. ஒடஞ்ச கப்பல் டைட்டானிக் படத்துல வர கிளைமேக்ஸ் மாதிரி மூழ்கி ஒரு பெரிய அலைய உண்டு பண்ணிச்சு அது நம்ம பெஸ்ட்டு பேட்ஸ்மேன் அருள்மொழிவர்மன் வந்த Lifeboat ட காலி பண்ணிடுச்சு. இந்த நேரத்துல பார்த்திபன் கப்பல் காணாம போய்டுச்சு. சரி வேற வழி இல்லன்னு கப்பல்ல இருந்த படுதாவ புடிசுகிட்டு ஹாயா ஸ்விம் பண்ண ஆரமிச்சாங்க நம்ம ஹீரோவும் அருள்மொழி வர்மனும்.
கொஞ்ச நேரம் போனது இலங்கைல இருந்து நம்ம திம்சு கட்டை தனியா ஒரு சின்ன படகுல அந்த பக்கமா பாட்டு பாடிகிட்டு வந்துச்சு. அத பாத்ததும் நம்ம ஹீரோவுக்கு அல்வாவ பாத்த ஆனந்தம் அந்த படகுல எப்புடியோ எரிக்குறாங்க
இதோட ரெண்டாவது பார்ட் முடிஞ்சுது
அடுத்த பார்ட்டல நம்ம பெஸ்ட் பேட்ஸ்மேன் அருள்மொழி வர்மன் தமிழ்நாட்டுக்கு எப்புடி போனாரு அங்க போய் சக்கரவர்த்தியை பாத்து நா ஏதும் தப்பு பண்ணலன்னு சொன்னாரா இல்லையான்றது தான்.
சரி அடுத்த பார்ட்ட அப்பறம் சொல்றன்.
Subscribe to:
Post Comments (Atom)
சூப்பர் சூப்பர் :-)
ReplyDeleteamas32