Tuesday, July 28, 2015

பொன்னியின் செல்வன் - பாகம் I

கல்கி விக்ஸ்சுன்றத தான் 1400 பக்கத்துக்கு மேல சுத்தி சுத்தி எழுதி இருக்காரு

மொதல்ல இந்த கதைல வர கதாபாத்திரங்கள பாத்துருவோம்



Part - 1

கத நடக்கறப்ப சக்கரவர்த்தியா இருக்க நம்ம சுந்தர சோழருக்கு மூணு பிள்ளைகள்

1.ஆதித்த கரிகாலன் (அண்ணன்)
2.குந்தவை(அருள்மொழிவர்மன்னோட அக்கா)
3.அருள்மொழிவர்மன்(தம்பி)


ஆதித்த கரிகாலன் தன்னோட படை வீரனான வல்லவரையன் வந்தியத்தேவன் (நம்ம கதையோட ஹீரோ) ரெண்டு லட்டர் குடுத்து ஒன்னு அப்பாவுக்கு இன்னொன்னு அவரோட சிஸ்டருக்கும் கொடுத்துருன்னு சொல்லி அனுப்பி வைக்கறாரு.


வல்லவரையன் வந்தியத்தேவன்


அத எடுத்துகிட்டு நம்ம ஹீரோ வந்தியத்தேவன் குதிரைல காஞ்சில இருந்து தஞ்சாவூர்க்கு ஜிங் ஜக் ஜிங் ஜக்ன்னு போறான்

போகும் போது தஞ்சாவூர கட்டி காக்கற ஒரு கெழட்டு சிங்கத்த(பழுவேட்டரையார்) பத்தி கேள்வி படறான்.

அந்த சிங்கம் 24 டைம் சண்ட போட்டு 64 டைம் கடி வாங்கிருக்கு. ரொம்ப மோசமான பிராணி அது.


கெழட்டு சிங்கம்(பழுவேட்டரையார்)


அந்த சிங்கதோட பாதுகாப்புல தான் சுந்தர சோழர் house arrest ல இருக்காரு.

தஞ்சாவூர் போறதுக்கு முன்ன கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் கொஞ்சம் நேரம் ஸ்டே பண்ணிட்டு போலாம்ன்னு ஒரு எண்ணம், ஏன்னா வந்தியத்தேவன் friend அந்த நாட்டு ராஜாவோட பைய்யன்.

போற வழில ஆழ்வார்க்கடியான் நம்பி ன்னு ஒரு கேரக்டர் அது ஒரு பெருமாள் பைத்தியம், அது இவன் கிட்ட பழுவேட்டரையார் பொஞ்சாதிதான் என்னோட தங்கச்சி அவள பாக்க ஹெல்ப் பண்றியான்னு கேக்குது. அவன எப்புடியோ கலட்டி விட்டு நம்ம ஹீரோ Friend Palace க்கு போறான்.


ஆழ்வார்க்கடியான் நம்பி


Friend Palace முன்னாடி இருக்க சொல்ஜர்சோட சண்ட போடும் போது. ஹீரோவோட Friend(கந்தமாறான்) பிக்கப்பண்ணி உள்ள கூட்டி போறான். அன்னைக்கு நைட்டு ஒரு மீட்டிங் நடக்குது, அங்க Mr.கெழட்டு சிங்கம் தான் சீப் கெஸ்ட் அது தன்னோட புதுசா கல்யாணம் பண்ண பொஞ்சாதிய பொத்தனாப்பல கூட்டிட்டு வந்துருக்கு.

அந்த கூட்டத்துல கெழட்டு சிங்கம் ஒரு ஸ்பீச் குடுக்குது. இப்ப சக்கரவர்த்தியா இருக்க நம்ம சுந்தர சோழர் சீக்கிரம் புட்டுக்குவாறு. அவருக்கு அடுத்து யாரு டீமுக்கு(நாட்டுக்கு) கேப்டன்னு நாம முடிவு பண்ணனும்ன்னு டிஸ்கஸ் பண்றாரு. அங்க இருந்தவங்க பலர் கங்கூலிக்கு அடுத்து தோனி மாதிரி அப்பாவுக்கு அடுத்து பையன்(அருள்மொழிவர்மன்) தான்னு சொல்றாங்க. ஏன்னா இப்ப அவருதான் ஸ்ரீலங்கா போய் சிக்சர் அடிசுகிட்டு(அட போர் செஞ்சி நாட்ட புடிசுகிட்டு இருக்காறாம்) இருக்காருன்னு காரணம் சொல்றாங்க.


அருள்மொழிவர்மன்


அத கேட்ட நம்ம சிங்கம் சீறி பாஞ்சு அடுத்து நம்ம சக்கரவர்த்தியோட அண்ணன்(கண்டராதித்தர்) பைய்யன் மதுராந்தக சோழர் தான் கேப்டனா வரனும். அவன் தான் சிக்ஸ் அடிச்சு சீக்கிரம் அவுட்டாகாம கடைசி வரைக்கும் சிங்கிள் அடிச்சு டீம காப்பத்துவான்னு முடிவு பண்றாரு. இங்க ஒரு ட்விஸ்ட்டு சிங்கம் கூட்டிடு வந்தது தன்னோட பொஞ்சாதி இல்ல அதுல வந்தது சிங்கிள் சிங்கம் மதுராந்தக சோழர், சரி பெரிய தலையே சொல்லிடுச்சு இப்ப இருக்க கேப்டனுக்கு ஆப்பு வைக்க எல்லாரும் முடிவு பண்றாங்க.


மதுராந்தக சோழர்


இந்த டிஸ்க்கசன நம்ம ஹீரோ வந்தியதேவன் ஒளிஞ்சு இருந்து கேட்டுட்டு அடுத்த நாள் எப்புடியாவது இப்ப இருக்க கேப்டன்ட்ட(சுந்தர சோழருக்கு) சொல்லிடனும்ன்னு கெளம்பரான்.

அவன் போகும் போது வழில பாத்த ஆழ்வார்க்கடியான் நம்பி சந்திகிறான். அடுத்து யார் டீம் கேப்டனா வருவான்னு தெரியனுமா குடந்தைல குறி சொல்ற கோடங்கி ஒருத்தன் இருக்கான் அவன போய் பாருன்னு சொல்லி அனுப்பறான்

நம்ம ஹீரோ அங்க போகும் போது, ஆதித்த கரிகாலன் சிஸ்டர் குந்தவை அவளோட க்ளோஸ் Friend வானதிய கூட்டிட்டு குறி கேக்க வந்துருக்கு. குந்தவைக்கு என்ன எண்ணம்னா தன்னோட தம்பிய(அருள்மொழிவர்மன) வானதிக்கு செட் பண்ணி விடறது தான். அதனால இவளுக்கு வர புருஷன் எப்புடி பல வருஷம் புஸ்ட்டியா இருபானான்னு கேக்க வந்தா.அப்ப நம்ம ஹீரோ என்ட்ரி அங்க இருந்த குந்தவைய பாத்ததும்


குந்தவை- வானதி


அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு கண்ணேன்னு நம்ம ஹீரோ மைண்ட்ல ஏஆர் ரகுமான் டியூன் போடறாரு

கொஞ்ச நேரத்துல அத மறந்து வந்த விசயத்த கோடங்கி கிட்ட கேக்க, கோடாங்கி நம்ம ஹீரோ பார்வைல இருந்து பத்திரமா குந்தவையும் வானதியும் விபூதி குடுத்து எஸ்கேப் பண்றார்.இப்ப இருக்க கேப்டன் சீக்கிரம் புட்டுகுவாறு அவருக்கு அடுத்து அவர் பைய்யன் தான் அடுத்த கேப்டன்னு ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்குறாரு கோடாங்கி.

சரி எல்லாம் கேட்டாசுன்னு குதுரைய உருட்டிகிட்டு போற வழில ஒரு பல்லக்க பாக்குறாரு. அங்க ஒரு ட்விஸ்ட் அதுல வந்தது நம்ம கெழட்டு சிங்கத்தோட(பழுவேட்டரையார்) பொஞ்சாதி நந்தினி, லைட்டா இந்த கேரக்டர நியாபகம் வச்சுக்குங்க இது அப்புடியே படையப்பா நீலாம்பரி சாயல் அவ்ளோதான்.


நந்தினி


நந்திநிகிட்ட நம்ம ஹீரோ ஹெல்ப் கேக்கறாரு எப்புடியாவது தஞ்சாவூர் கோட்டைகுள்ள போய் கேப்டன்(சுந்தர சோழர) பாக்கணும்ன்னு. நந்தினி இவனால ஏதாவது காரியம் ஆகும்ன்னு முடிவு பண்ணி ஒரு பாஸ்வேர்ட்ட(முத்திரை மோதிரம்) குடுத்து இத வச்சு உள்ளவா. அங்க வந்து என்ன பாரு உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகனும்ன்னு சொல்லி அனுப்புது.

நம்ம ஹீரோ அத நம்பி தஞ்சாவூர் போறான். வழில ஒரு நாள் தங்க வேணும்ன்னு ஒரு பைய்யண்ட(சேந்தன் அமுதன்) வாடகைக்கு வீடு கெடைக்குமான்னு நம்ம ஹீரோ கேக்கறான். அதுக்கு என்ன என்னோட ஹவுஸ்லையே ஸ்டே பண்ணிக்கு என்னோட deaf and dumb மம்மி இருக்கு உன்ன பாத்துகும்ன்னு சொல்றான்.

உனக்கு கல்யாணம் ஆச்சான்னு நம்ம ஹீரோ அந்த பையன்ட கேக்கறான். அதுக்கு அவன் என்னோட லவ்வர் எதோ கடல் பக்கம் படகோட்டிகிட்டு இருக்கா அவளதான் கட்டிகுவேன்னு சொல்றான். சரின்னு அன்னைக்கு நைட்டு அங்க தங்கிட்டு மறுநாள் தஞ்சை கோட்டைக்கு என்ட்ரி கொடுக்குறார் நம்ம ஹீரோ.

கோட்டைகுள்ள பாஸ்வேர்ட்ட(முத்திரை மொதிரத்த) வச்சு உள்ள போனதும். நம்ம கெழட்டு சிங்கத்தோட தம்பி சிங்கம்(சின்ன பழுவேட்டரையார்) வழி மறிக்குது. நம்ம ஹீரோ வந்த விசயத்த சொல்றான், கேப்டன(சுந்தர சோழர) பாக்கணும் வைஸ் கேப்டன்(ஆதித்த கரிகாலன்) மெசேஜ் குடுத்து விடுருக்காறு அத நா பாஸ் பண்ணனும்ன்னு.


சின்ன பழுவேட்டரையார்


சரி பாஸ்வேர்ட்ட(முத்திரை மொதிரம்) அண்ணன் கெழட்டு சிங்கம் தான் குடுத்து இருக்கும். இவன தடுத்தா பின்னாடி அது வந்து நம்மள கடிசுரும்ன்னு கேப்டன்ட(சுந்தர சோழர்ட) கூட்டிட்டு போய் விட்டுடுது இந்த இளம் சிங்கம்.

நம்ம ஹீரோ கொண்டுவந்த லட்டர்ல இருந்த மெசேஜ் என்னன்னா

(ஆதித்த கரிகாலன்) >> "யப்பா உனக்காக நா Gold Palace கட்டி வச்சுருக்கேன் நீ வந்து விழாவ சிறப்பிச்சுட்டு போகணும்ன்னு எழுதி இருக்கு ".


ஆதித்த கரிகாலன்


அதுக்கு நம்ம கேப்டன் நானே வயசாகி சீக்கு வந்த கோழி மாதிரி இருக்கன் பாப்போம்ன்னு சொல்லிட்டு, வந்தது வந்துட்ட ரெண்டு நாள் இங்க தங்கி இருந்து சாப்ட்டு போன்னு சொல்லி நம்ம ஹீரோவ கெட்ஸ் ஹவுஸ்ல தங்க வைக்குறாரு.

ஒரு மெசேஜ் பாஸ் பண்ணியாச்சு இன்னொன்னு ஆதித்த கரிகாலன் சிஸ்டருக்கு குடுக்கணும். அதுக்கு முன்ன நாம கோட்டைக்கு உள்ள வர பாஸ்வேர்ட் குடுத்த கெழட்டு சிங்கம் பொஞ்சாதிய பாத்து தேங்க்ஸ் சொல்லிட்டு போவம்ன்னு அவ இருக்க எடத்துக்கு எஸ்கேப் ஆகி நம்ம ஹீரோ போய் மீட் பண்றான்.

அவன பாத்து நந்தினி, நீ எதுக்கு வந்தன்னு கேக்கும் போது. ஆதித்த கரிகாலன் என்னைய கூப்ட்டு ரெண்டு லட்டர் குடுத்து ஒன்னு அவரோட அப்பாவுக்கு இன்னொன்னு அவரோட சிஸ்டருக்கும் கொடுத்துருன்னு சொன்னாரு அதான் வந்தேன் சொல்றான். கோட்டைகுள்ள வர உதவி தேவபட்டுச்சு வழில பாத்த உங்க அண்ணன்னு(ஆழ்வார்க்கடியான் நம்பி) உங்கள பாத்தா ஈசியா உள்ள போய்டலாம்ன்னு சொன்னா அதான் உங்கள புடிச்சன்னு சொன்னான்.

சரி இன்னொரு லட்டர் இன்னும் இருக்கான்னு கேட்டு அத வங்கி படிச்ச நந்தினி, நீலாம்பரியா மாறி இத நீ எடுத்துகிட்டு போ உனக்கு பண்ண ஹெல்புக்கு எனக்கு அவ என்ன Reply பண்றாலோ அத எனக்கு cc போடு. இப்ப நீ அந்த மரத்தடியில போய் ஒளிஞ்சுக்கோ, இங்க இருந்து யாருக்கும் தெரியாம உன்ன எஸ்கேப் பண்றன்னு சொன்னா. அவனும் அத கேட்டு ஒரு மரத்துக்கு பின்னாடி போய் ஒளிஞ்சுகிட்டான்

அந்த நேரம் பாத்து நம்ம கெழட்டு சிங்கம் என்ட்ரி. அது வந்து தம்பி சிங்கத்த லைட்டா கடிச்சுட்டு( நா எவனுக்கும் பாஸ்வேர்ட் குடுக்கல நீ எப்புடி அவன உள்ள விட்டன்னு திட்டிட்டு), தன்னோட பொஞ்சாதிய பாக்க ஓடோடி வந்துச்சு.

கெழட்டு சிங்கம் வரதுக்குள்ள ஒரு மந்திரவாதி நந்தினிய பாக்க சைடு வங்கி வரான். அவன் வந்து என்ன சிங்கத்துக்கு பொஞ்சாதி ஆனதும் சிலுபிக்கிட்டு நிக்குரியா உன்ன அன்னைக்கே கொன்னுருக்கனும்ன்னு கொந்தளிக்கும் போது.


மந்திரவாதி


நந்தினி இந்த சோழ சாம்ராஜ டீமையே கூண்டோட போட்டு தள்ள தான் அந்த கெழட்டு சிங்கத்துக்கு செட் ஆனன் மூடிகிட்டு போடான்னு சொல்லிட்டு. வந்தது வந்த அங்க பாரு ஒருத்த மர கெளைய புடிச்சு மேஞ்சுகிட்டு இருக்கான் அவன் கூட்டு போய் வெளிய விடுன்னு சொல்றா.

அது எனக்கு தேவ இல்ல அந்த கெழட்டு சிங்கம் என்ன கடிக்கறதுகுள்ள நா எஸ்கேப் ஆகறன்னு சொல்லி, அவன் தப்பிச்சா போதும்ன்னு ஓடிபோறான்

அதுக்கு அப்பறம் கெழட்டு சிங்கம் வந்து நந்தினிய கொஞ்சிட்டு அது வேற வேல இருக்குன்னு வெளி ஊர் போய்டுது.

சரி இது வேலைக்கு ஆகாதுன்னு நம்ம ஹீரோ பாதால நுழைவாயில் வழியா எஸ்கேப் ஆகி வெளிய போகும் போது ஹீரோவோட Friend கந்தமாறன் முதுவுல குத்துப்பட்டு கெடக்கான். அவன தூக்கிட்டு போய் நம்ம ஹீரோ இதுக்கு முன்ன தங்கி இருந்த அந்த பைய்யன்(செந்தேல் அமுதன்) வீட்ல போட்டு. குந்தவைய பாக்க குதரைல கெளம்பிட்டான்.


கந்தமாறன்


இதுக்கு நடுவுல நம்ம ஹீரோ ஏதோ ராஜ துரோகம் பண்ண மாதிரி அவன புடிச்சு மறுகால் மாறுகை வாங்க சொல்லி. நம்ம கெழட்டு சிங்கத்தோட தம்பி சிங்கம் ஹீரோவ புடிக்க ஆள் அனுப்பறாரு. நம்ம ஹீரோவ புடிக்க வந்தவங்க ஹீரோவுக்கு பதிலா ஹீரோவோட Friend கந்தமாறனை லபக்குன்னு தூக்கிட்டு போய்டறாங்க.

குந்தவை பாக்க பழையாறை வரைக்கும் போன நம்ம ஹீரோ அங்கு வழியில் வந்த ஆழ்வார்க்கடியான் நம்பி ஹெல்போடு குந்தவைய மீட் பண்றான் நம்ம ஹீரோ

வந்த வேலை முடிஞ்சுதுன்னு லட்டர குடுத்துட்டு எஸ் ஆக பாக்கும் போது. அதுல ஆதித்த கரிகாலன் >> அப்பாவுக்கு ஆபத்து அடுத்த கேப்டனா மதுராந்தக சோழர கொண்டுவரதுக்காக நம்ம அப்பாவ போட போறங்கன்னு எழுதி இருந்துச்சு.

அத படிச்சதும் இவன்தான் நமக்கு கிடைத்த அடிமை இவனை விடகூடாதுன்னு குந்தவை முடிவு பண்ணி ஒரு லட்டர் எழுதி அருள்மொழிவர்மனை உடனே இங்க கூட்டிட்டு வான்னு சொல்லி ஹீரோ கைல லட்டர குடுத்து இலங்கைக்கு அவன பார்சல் பண்றா.

இதுக்கு நடுவுல குந்தவைக்கும் நம்ம ஹீரோவுக்கும் "அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்" கதை எல்லாம் நடந்துச்சு விடுங்க

சும்மா எப்புடி ஹீரோவா அனுப்பறது ஏதாவது காரணம் வேணாமா. அப்பாவுக்கு சீக்கு அவருக்கு மருந்துவாங்க இலங்கைக்கு டாக்டர் பைய்யன ஹிரோவோட துனைக்கு அனுப்பி வைக்கறாங்க நம்ம குந்தவை

இங்க இந்த அமுளி துமுளி நடக்கும் போது லட்டர் போட்ட நம்ம மொத பேட்ஸ்மேன் ஆதித்த கரிகாலன். ஹீரோ ஒரு ஸ்பை அவன மாறுகால் மாறுகை வாங்க போறங்கன்னு தெரிஞ்சதும் சூடாகறாறு

அத பாத்த அவனோட தாத்தா, இப்ப நீ அந்த கெழட்டு சிங்கத்த கடிக்க போனின்னா. உங்கப்பா மண்டைய போட்ருவான் அதனால நீ உன்னோட பெஸ்ட் பேட்ஸ்மேன(அருள்மொழி வர்மன்ன) இங்க கூட்டிட்டுவா அதுக்கு அப்பறம் நீ போன்னு அட்வைஸ் பண்றாரு.

சரி அல்ரெடி ஒருத்தன அனுபியாச்சுன்னு அதனால கைல இருக்க இன்னொரு அடிமை Friend பார்த்திபன்ன அனுப்ப முடிவு பண்றாங்க . அவன் அந்த கெழட்டு சிங்கம் பொஞ்சாதிதான் இதுக்கு காரணம் அவள் போடணும்ன்னு கூவும் போது. நம்ம மொத பேட்ஸ்மேன் ஆதித்த கரிகாலன் பிளாஷ் பேக் ஓபன் பண்றார்.


பார்த்திபன்


அந்த கெழட்டு சிங்கம் பொஞ்சாதி நந்தினி தான் நம்ம மொத பேட்ஸ்மேன் ஆதித்த கரிகாலன் X-Lover. பல வருசத்துக்கு முன்ன எதிரி டீமோட கேப்டன் விக்கட்ட(பாண்டிய மன்னன் வீரபாண்டியனை​) எடுக்க போகும் போது. நம்ம ஆளோட X-Lover தான் எதிர் டீம் கேப்டன்(வீரபாண்டியன்) செட்டபுன்னு தெரிய வருது. அவளும் வந்து என்னோட செல்லத்த விட்டுடுங்க , என்னோட அமுல் பேபிய விட்டுடுங்கன்னு கெஞ்சி பாத்தா. கடுப்பான நம்ம மொத பேட்ஸ்மேன் ஆதித்த கரிகாலன் கைல இருந்த பால வீரபாண்டியன் நடு மண்டையில போட்டு விக்கட்ட அழகா தூக்கிட்டுவாறு. அதுக்கு அப்பறம் சரி போனா போகுது கழுத அவளுக்கு வாழ்க்க குடுப்பம்ன்னு தேடனா. அந்த நந்தினி நைசா நழுவி கெழட்டு சிங்கத்துகிட்ட செட் ஆகிடும்.


வீரபாண்டியன்


இதான் மொத பார்ட்டு கத, நம்ம ஹீரோ இலங்கை போனான்னா பெஸ்ட் பேட்ஸ்மேன் அருள்மொழிவர்மன பாத்தானான்றதுதான் ரெண்டாவது பார்ட்

இதுக்கே நாக்கு தள்ளுது, சரி அடுத்த பார்ட்ட அப்பறம் சொல்றன்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...